திருக்குறள்

30/12/2013

பான் கார்டு' பெறுவதற்கு இனி "ஆதார்' தகுந்த ஆவணமாகிறது

பான் கார்டு' பெறுவதற்கு, முகவரி மற்றும் அடையாளத்தை நிரூபிப்பதற்கு, ஆதார் கார்டு தகுந்த ஆவணமாக ஏற்கப்படும் என,வருமான வரித்துறை அறிவித்துள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல்செய்வதற்கு, "பான்' என்ற நிரந்தர கணக்கு எண், வருமான வரித்துறையால் அளிக்கப்படுகிறது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்களும், இதை வாங்கி வைத்துக்கொள்ள தடையில்லை.

பான் கார்டு பெறுவதற்கு விண்ணப்பிப்பவர், தன் அடையாளம் மற்றும் முகவரியை உறுதி செய்வதற்கு, தாக்கல் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் என்ன என்ன என்பதை, வருமான வரி"த்துறை பட்டியலிட்டுள்ளது. இதில், குடும்ப அட்டை,வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் உட்பட,ஆவணங்கள் இடம்பெற்றுள்ளன. இதில், "ஆதார் அடையாள அட்டையும், இனிமேல், முகவரி மற்றும் அடையாளத்தை நிரூபிப்பதற்கான, ஆவணமாக ஏற்கப்படும்' என, மத்திய நேரடி வரிகள் வாரியம், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது. ஆதார் அடையாள அட்டையில், 12 இலக்க அடையாள எண் குறிப்பிடப்பட்டு இருக்கும். இதை மத்திய அரசின், "இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையமைப்பு'வழங்குகிறது. இதை பயன்படுத்தி, 10 இலக்க எண் உள்ள, பான் கார்டு பெற முடியும். சமீபத்தில், ரிசர்வ் பாங்க், வங்கி கணக்கு துவக்குவதற்கு, ஆதார் கார்டு தகுந்த ஆதாரமாக ஏற்கப்படும் என,அறிவித்து இருந்தது.

No comments:

Post a Comment