பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியல் ஆன்- லைனில் பதிவு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. தவறுகள் ஏற்படாமல் இருக்க தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 14 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். இதன்படி பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 30.09.1999 க்கு முன் பிறந்தவர்களுக்கு மட்டுமே 14 வயது நிறைவு பெறும்.
இந்த தேதிக்கு பின்னர் பிறந்தவர்களுக்கு மட்டுமே ஆன்- லைனில் பதிவு செய்ய சாப்ட்வேர் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கு பின் பிறந்தவர்கள் பெயரை பட்டியலில் சேர்க்க முடியாத நிலை உள்ளது. 01.10.1999 முதல் 31.12.1999 வரை பிறந்தவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள மாவட்ட கல்வி அலுவலர்களிடம், சிறப்பு அனுமதி பெற்று தேர்வு எழுதலாம், என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
அதற்கு பின்பு பிறந்தவர்கள் பள்ளிக்கல்வி இயக்குனரிடம் அனுமதி பெற வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த வயதுடைய மாணவர்கள், பள்ளிக்கல்வி இயக்குனரகம் சென்று அனுமதி பெறுவதற்கு, சென்னைக்கு அலைய வேண்டிய நிலை உள்ளது. பல பள்ளிகளில் பள்ளி மாற்று சான்றிதழில் உள்ள தேதியை வைத்து ஆசிரியர்கள் பதிவு செய்கின்றனர்.
இதில் அந்த மாணவர் பிற்காலத்தில் பணிக்கு செல்லும் போது பிறப்பு சான்றிதழில் ஒரு தேதியும், மதிப்பெண் சான்றிதழில் வேறு தேதியும் பதிவு செய்யப்பட்டிருப்பதால், சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
No comments:
Post a Comment