பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட 5 பொதுத்துறை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அளிக்க கட்டணம் வசூலிப்பதாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துமூலம் அளித்த பதிலில் அவர் தெரிவித்ததாவது:பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து கிடைத்த தகவலின்படி, ஐ.டி.பி.ஐ. வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, விஜயா வங்கி, பாட்டியாலா ஸ்டேட் வங்கி ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அளிக்க இப்போது கட்டணம் வசூலிக்கின்றன.ரிசர்வ் வங்கி கடந்த 2011ஆம் மாண்டு மார்ச் மாதத்தில், வாடிக்கையாளர்களின் அனைத்து பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாகவும் எஸ்எம்எஸ் தகவல்களை அனுப்புமாறு வங்கிகளை அறிவுறுத்தியது. எனினும், இந்தத் தகவல்களை வழங்குவதற்கு கட்டணம் வசூலிப்பதற்கு எந்த நெறிமுறைகளையும் தான் வெளியிடவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வங்கிகள் இவ்வாறு கட்டணம் வசூலிப்பதை வாபஸ் பெறுவது குறித்து அரசு பரிசீலிக்கவில்லை. வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் தனது செல்போன் எண்ணை வழங்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. செல்போன் எண்ணைக் கொடுத்து, எஸ்எம்எஸ் மூலம் தகவல் வேண்டும் என்று வாடிக்கையாளர் விரும்பும்போது அவருக்கு தகவல்கள் அனுப்பப்படுகின்றன என்று சிதம்பரம் தனது பதிலில் தெரிவித்தார்.
No comments:
Post a Comment