திருக்குறள்

14/08/2013

அரியலூர் மாவட்டத்தில் முதல்வரின் சிறப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் சரவணவேல்ராஜ்.

அரியலூர் மாவட்டத்தில் முதல்வரின் சிறப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் சரவணவேல்ராஜ்.இதுகுறித்து திங்கள்கிழமை அவர் மேலும் தெரிவித்தது:சென்னையில் தமிழக முதல்வர் தலைமையில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, சிட்கோ தொழிற்பேட்டை அமைப்பது,சிமென்ட் ஆலையருகே கனரக வாகனங்கள் செல்லும் சாலைகளை செப்பனிடுவது உள்ளிட்ட 7 பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.அந்தத் திட்டப் பணிகளுக்குரிய நிலம் கையகப்படுத்துவது உள்ளிட்ட பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும். முதல்வரின் சிறப்புத் திட்டங்களான தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம், விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம்,ஆடு வழங்கும் திட்டம் உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.அரியலூர் அருகேயுள்ள நாகமங்கலம் பள்ளியைச் சீரமைக்கவும்,அரியலூர் பேருந்து நிலையத்தில் உள்ள மின் விளக்குகளைச் சீரமைக்கவும், செட்டி ஏரி பூங்கா, நீச்சல் குளத்தைச் சீரமைக்கவும் விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.அரியலூர் மாவட்ட, நகர வள்ர்ச்சிக்கு அரசின் சார்பில் சிற்ப்பு நிதியைப் பெற்று வளர்ச்சிப் பணிகளில் தீவிரக் கவனம் செலுத்தப்படும் என்றார் ஆட்சியர்.பேட்டியின்போது மாவட்ட வருவாய் அலுவலர் கருப்பசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) முஸ்தபா கமால்பாட்சா, செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் அன்பழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment