சுதந்திர தினத்தை முன்னிட்டு, அரியலூர் மாவட்ட சதுரங்க கழகத்தின் சார்பில் மாவட்ட அளவிலான குழந்தைகள் மற்றும் பொது பிரிவுகளில் முதலாம் ஆண்டு சதுரங்க போட்டி கள் நடந்தது. அரியலூர் மாண்ட்போர்ட் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் போட்டி கள் தொடங்கியது. தொடர்ந்து இரண்டாம் நாளாக நேற்றும் போட்டி கள் நடைபெற்றது. 11, 15, 17 வயதிற்கு கீழூள்ளவர்கள் மற்றும் பொது என 4 பிரிவுகளில் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக லீக் முறையில் போட்டிகள் நடந்தது. இதில், பொது பிரிவில் 16 பேரும், 11 வயதிற்கு உட்பட்ட பிரிவில் 36 பேர், 15 வயதிற்கு உட்பட்ட பிரிவில் 67 பேர், 17 வயதிற்கு உட்பட்ட பிரிவில் 26 பேர் என மொத்தம் 145 பேர் பங்கேற்று விளையாடினர். முதன்மை நடுவராக ஆம்ரோஸ், துணை நடுவர்களாக வெங்கடேசன், ஜெய்சங்கர், புகழேந்தி, சாரதி, நீலமேகம் ஆகியோர் போட்டிகளை நடத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்று மாலை நடந்தது. அரியலூர் மாவட்ட சதுரங்க கழக செயலாளர் ஜெய்சங்கர் வரவேற்றார். ரோட்டரி சங்க தலைவர் கார்த்திக் தலைமை வகித்து, பரிசுகள் வழங்கினார். ஈரோ கிட்ஸ் பள்ளி இயக்குநர் கலியமூர்த்தி, நகராட்சி முன்னாள் கவுன்சிலர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுப்பிரிவில் சுப்ரமணியன் முதல் பரிசையும், இரண்டாம் பரிசை கார்த்திராஜ், மூன்றாம் பரிசு மது ஆகியோர் பெற்றனர். 11 வயதுக்கு கீழ் உள்ள ஆண் கள் பிரிவில், அரியலூர் மாண்ட்போர்ட் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாண வன் அன்சிலிம் பிளாவியன் முதல் பரிசும், அதே பள்ளி மாணவன் தமிழ்செல்வன் மூன்றாம் பரிசும் பெற்றனர். உதயநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவன் விக்னேஷ் இரண்டாம் பரிசு பெற்றார். 15வயது பிரிவில் ராயம்புரம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவன் ஆனந்தகுமார் முதல் பரிசு, அரியலூர் மாண்ட்போர்ட் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவன் இந்திரஜித் இரண்டாம் பரிசு, உதயநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவன் விமல்ராஜ் மூன்றாம் பரிசு. 17 வயது பிரிவில் ஜெயங்கொண்டம் அரசு மேல் நிலைப் பள்ளி மாணவன் தாமோதரன் முதல் பரிசு, அரியலூர் மாண்ட்போர்ட் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவன் அருண்பிரசாத் இரண்டாம் பரிசு, அரியலூர் அரசு மேல் நிலைப் பள்ளி மாணவன் கருப்பையன் மூன்றாம் பரிசு பெற்றனர். பெண்களுக்கான 11வயது பிரிவில் ராயம்புரம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி திலகவதி முதல்பரிசு, ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி அனுபிரியா இரண்டாம் பரிசு, அதே பள்ளி மாணவி அனுஷியா மூன்றாம் பரிசு பெற்றனர். 15 வயது பிரிவில் ராயம்புரம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி திவ்யா முதல் பரிசு, ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவி கிருத்திகா இரண்டாம் பரிசு, ரெட்டிபாளையம் ஆதித்யா பிர்லா பொதுப்பள்ளி மாணவி சந்தோஷினி மூன்றாம் பரிசு பெற்றனர். 17வயது பிரிவில் கோடாளிகருப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சர்மிளா முதல் பரிசு, ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக். மேல் நிலைப் பள்ளி மாணவி நிவேதிதா இரண்டாம் பரிசு பெற்றனர். போட்டிகளில் பங்கேற்ற அனை வருக்கும் பங்களிப்பு சான்றி தழ் வழங்கப்பட்டது. அரிய லூர் மாவட்ட சதுரங்க கழக தலைவர் வெங்கடே சன், பொருளாளர் ராஜா ராமன் ஆகியோர் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
No comments:
Post a Comment