திருக்குறள்

15/08/2013

அரிய லூர் மாவட்டம் அரியலூர் ஒன்றியம் அரசு பள்ளியின் சுவர்கள் சேதம் நேரில் சென்று கலெக்டர் ஆய்வு

அரிய லூர் மாவட்டம் அரியலூர் ஒன்றியம் கோப்பிலியன்குடிகாடில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் சுவர்கள் சேதமடைந்துள்ளதை கலெக்டர் சரவணவேல்ராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பள்ளியின் சுவர்களை உடனடியாக சீரமைக்க எத்தனை நாட்கள் ஆகும், எவ்வளவு செலவாகும் என ஒன்றிய பொறியாளர் கமலகண்ணனிடம், கலெக்டர் கேட்டறிந்தார். பின்னர் பள்ளி தலைமை ஆசிரியரிடம், மாணவர்களின் கல்வி எவ்விதத்திலும் பாதிக்காத வகையில் சீரமைப்பு பணிகள் முடியும் வரை பள்ளியை தற்காலிகமாக வேறு ஒரு இடத்தில் செயல்படுவதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும் பள்ளி கட்டட சீரமைப்பு பணிகள் முடிவடையும் வரை மாணவ, மாணவிகள் கட்டடங்களுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டாம் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார். பள்ளி தற்போது இயங்கி வரும் இடத்திற்கு அருகில் பள்ளிக்கு வேறு இடம் தேர்வு செய்யுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மழை காலத்திற்குள் பள்ளி கட்டட பணிகளை முடிக்குமாறு பொறியாளருக்கு கலெக்டர் சரவணவேல்ராஜ் உத்தரவிட்டார். ஆய்வின்போது, தாசில்தார் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்

No comments:

Post a Comment