திருக்குறள்
23/07/2014
19/07/2014
20.07.2014 நாளை நீயா? நானா? "அரசுப்பள்ளிகள், தனியார் பள்ளிகள்" - நிகழ்ச்சி விஜய் டிவியில்
20.07.2014
நாளை
விஜய் டிவியின்
நீயா? நானா?
நிகழ்ச்சியின்தலைப்பு
"அரசுப்பள்ளிகள், தனியார் பள்ளிகள்"
நிகழ்ச்சிஅனைவரும் காணுங்கள்
இளங்கலை பட்டம் முடித்தவர்கள் ஒரே கல்வியாண்டில் இரண்டு பட்டங்களைப் படிக்க முடியாது- தொடக்கக்கல்வித் துறையின் RTI Letter.
RTI-யின் பதில் ஏற்படுத்திய நம்பிக்கையின்மை:
இளங்கலை பட்டம் பெற்றவர்கள்
ஒரே கல்வியாண்டில் இரண்டு பட்டங்களை, வெவ்வேறு
பல்கலைக்கழகங்களில் ,வெவ்வேறு தேர்வு கால அட்டவணையில்
(நேரத்தில்) தேர்வு எழுதி முடித்திருந்தால் அதை பணிப்பதிவேட்டில்
பதிவு செய்து, பணப்பயன் மற்றும் பதவி உயர்வு வழங்கப்படும் என்றும்
பள்ளிக்கல்வித்துறை பலருக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்
மூலம் பதில் அளித்துள்ளது..
ஆனால்,தொடக்கக்கல்வித் துறையோஒரே கல்வியாண்டில் இரண்டு
பட்டங்களை படிக்க முடியாது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்
மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளது..
ஏன் இந்த முரண்பாடு..?
இது RTI-ல் கொடுக்கப்பட்ட தவறான தகவலினால் ஏற்பட்ட முரண்பாடா...?
இல்லை,இரு துறையிலும் உள்ள வேறுபட்ட விதிமுறையினால் ஏற்பட்ட
முரண்பாடா..?
எது உண்மை...தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கிடைத்த இந்த
முரண்பாடான தகவலினால் RTI-ல் வழங்கப்படும் தகவல்களின் மீதும்
ஆசிரியர்களின் மத்தியில் நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளது..
இதில் நமக்கு ஒரு தெளிவு பிறக்க நாம் நீதிமன்றத்தை நாடவேண்டிய
கட்டாயத்திற்க்குத் தள்ளப்பட்டுள்ளோம்
பள்ளிக்கூடங்களில் முதலுதவி பெட்டி, தீயணைப்பு சாதனம் இருக்க வேண்டும்; தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை சுற்றறிக்கை
பள்ளிக்கூடங்களில் முதலுதவி பெட்டி, தீயணைப்பு சாதனங்கள் தயார் நிலையில் சரியாக இருக்க வேண்டும் என்று அனைத்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் சுற்றறிக்கை விடுத்துள்ளார்.
தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை
தமிழக பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுபடி பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் அனைத்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
* மழைக்காலங்களில் இடி, மின்னல் ஆகியவற்றின் போது மாணவர்களோ அல்லது ஆசிரியர்களோ மரத்தின் அடியில் நிற்கக்கூடாது என்று அறிவுரை வழங்க வேண்டும்.
* பள்ளிக்கூட வளாகத்தில் உள்ள மதில் சுவர்கள் போதிய அளவுக்கு உயரமாக உள்ளதா என்பதை பார்த்து உயரம் இல்லாவிட்டால் உயரமான அளவுக்கு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* பள்ளிக்கூடங்களில் கட்டிடங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இடிந்து விழும் நிலையில் இருந்தால் தகவல் தெரிவித்துவிட்டு அதை பாதுகாப்பாக அகற்ற வேண்டும்.
முதலுதவி பெட்டி
* பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் அல்லது ஆசிரியர்கள் ஏதாவது கீழே விழுந்தாலோ அல்லது ஏதாவது காயம் ஏற்பட்டாலோ அவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும். எனவே அனைத்து பள்ளிகளிலும் முதலுதவி செய்யும் வகையில் மருத்துவ பொருட்கள் அடங்கிய முதலுதவி பெட்டி இருக்க வேண்டும்.
* அதுபோல ஏதாவது தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு படையினர் வருமுன்னதாக உடனடியாக தீயை அணைக்க தீயணைப்பு சாதனங்கள் எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும்.
* விளையாட்டு நேரத்தின்போது ஈட்டி எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பொருட்களை கவனமாக பாதுகாப்பாக கையாள வேண்டும்.
* பள்ளிக்கூடங்களின் அருகில் வேகத்தடை இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வேகத்தடை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
புதர்களை அகற்ற வேண்டும்
* பள்ளிக்கூடங்கள் அல்லது பள்ளிக்கூடங்களின் அருகில் புதர்கள் ஏதாவது இருந்தால் அவற்றை அகற்ற ஏற்பாடு செய்ய வேண்டும்.
* பள்ளிக்கூட வளாகத்தை சுத்தமாகவும். பாதுகாப்பாகவும் வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் பி.எட்., மாணவர் சேர்க்கை
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பதிவாளர் (பொறுப்பு) தமிழ்ச்செல்வம் தெரிவித்துள்ளதாவது: இப்பல்கலையில் பி.எட்., (2 ஆண்டுகள்) பட்டப் படிப்பில் காலி இடங்களுக்கு, தற்போது மாணவர் சேர்க்கை நடக்கிறது. தகுதியுள்ளோர், www.msuniv.ac.in மூலம் தகவல் அறிக்கை மற்றும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கட்டணமாக ரூ.650க்கு கேட்பு வரைவோலை இணைத்து 31.7.2014க்குள் விண்ணப்பங்கள் அனுப்பி வைக்க வேண்டும்.
பி.எட்., படிப்பு ஓராண்டு தான் உயர்கல்வி அமைச்சர் தகவல்.
தமிழகத்தில், பி.எட்., படிப்பு காலம் ஓராண்டுதான்; மாற்றமில்லை,'' என, உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்தார்.சட்டசபையில், பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறை மானிய கோரிக்கை விவாதம்:
ம.ம.க., ஜவாஹிருல்லா:
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில், தேர்வு செய்யப்படுபவர்கள் பட்டியல் வெளிப்படையாக, இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும்.
அமைச்சர் பழனியப்பன்: துணைவேந்தர் நியமனம் என்பது, உரிய குழுக்கள் அமைத்து தான் தேர்வு செய்யப்படுகிறது. பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.,) விதிமுறைப்படி தான், நியமிக்கப்படுகின்றனர். இதில் ஒளிவு மறைவு என்பது இல்லை.
பார்வர்டு பிளாக், கதிரவன்: தமிழகத்தில், பி.எட்., படிப்பு, இரண்டாண்டாக மாற்றப்படுவதாக கூறப்படுகிறது. எனவே, டி.இ.டி., தேர்வு எழுத வேண்டுமா?
பழனியப்பன்:
மத்திய ஆசிரியர் கல்வி வாரியம், பி.எட்., படிப்பை, இரண்டு ஆண்டு படிப்பாக மாற்றுவது தொடர்பான ஆலோசனையை தெரிவித்துள்ளது. மத்திய அரசோ, மாநில அரசோ, இதை அமல்படுத்தவில்லை. தமிழகத்தில், பி.எட்., படிப்பு ஓராண்டு மட்டும் தான். இவ்வாறு விவாதம் நடந்தது.
வருமான வரி கணக்கை இணையத்தில் தாக்கல் செய்வது எப்படி?
இணையத்தை நாம் பல செயல்களுக்குப் பல வழிகளில் பயன்படுத்துகிறோம். இணையத்தில் மூலம் நமது வருமான வரிக் கணக்கை எப்படி தாக்கல் செய்வது (Efiling of income tax returns) என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய இணைப்பு: https://incometaxindiaefiling.gov.in/
1. முதலில் தளத்திற்குச் சென்று உங்களுக்கு என்று ஒரு கணக்கு உருவாக்கிக் கொள்ளுங்கள்.
தளத்தில் வலது பக்கத்தில் இருக்கும் Login என்கிற பகுதியில் இருக்கும் Register என்பதைச் சொடுக்குங்கள்.
அடுத்து வரும் பக்கத்தில், உங்களது PAN எண்ணை இடுங்கள் (உங்களது PAN எண் தான் உங்களின் கணக்கு! (user id) )
அடுத்து வரும் பக்கத்தில், உங்கள் விவரங்களை உள்ளிடுங்கள்.உங்கள் PAN CARD விண்ணப்பப்படிவத்தில் கொடுத்தது போலத் தான் உங்கள் பெயர் இருக்க வேண்டும். கூடவே, மின்னஞ்சல் முகவரியும் அவசியம்.
உங்களிடம் எண்முறை சான்றிதழ் (Digital Cerificate) இருந்தால், அதனையும் பதிவு செய்யவும் (pfx file/ USB token)
செய்து முடித்த பின், உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரும். அதில் சென்று இணைப்பைச் சொடுக்கவும்.
உங்கள் கணக்கிற்குள் உள்நுழையுங்கள்
மேலே உள்ள Downloads --> AY 2012-13 என்பதில் செல்லுங்கள்
தகுந்த படிவத்தைத் தரவிறக்கிக் கொள்ளுங்கள் (Excel Utility) . அருகில் இருக்கும் உதவிக் கோப்பையும் (Help Manual) ஐயும் தரவிறக்கிக் கொள்ளுங்கள்!குறிப்பு: நீங்கள் செய்யப்போவது தனிநபர் தாக்கல் (Individual) என்றால், மேலே கூறியதைச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
கீழே இருக்கும் இணைப்பைச் சொடுக்கி அவற்றைத் தரவிறக்கலாம்.
விண்ணப்பப் படிவம்:ITR-1
உதவிக் கோப்பு (ITR-I Help Manual)3. விண்ணப்பப் படிவத்தை நிரப்புங்கள்.
இந்த Spread Sheet (Excel) படிவத்தில்Macro கள் மூலம் பல செயல்கள் நடப்பதால், Macro களைச் செயல்பாட்டில் (Enable Macro) வைக்கவும்.
படிவத்தில் உள்ள தொடர்புடைய பச்சை நிறக்கட்டங்களை மட்டும் நிரப்பவும்.
ஒவ்வொரு பக்கத்தையும் (Sheet) நிரப்பிய பின்னர் Validate என்பதனைச் சொடுக்கி எதுவும் விடுபட்டிருக்கிறதா என்று சரி பார்க்கவும்.
அதன் பின், அடுத்த பக்கம் (Sheet) செல்லவும்.
அனைத்தையும் உள்ளிட்ட பின்னர், முதல் பக்கம் வரவும்.
"Calculate Tax" என்பதனைச் சொடுக்கினால், படிவம் முழுதும் நிரப்பப்பட்டு விடும்.
அதன் பின், Generate XML என்பதனைச் சொடுக்கவும்
வரும் புதிய பக்கத்தில் "Save XML" என்பதனைச் சொடுக்கவும்
இப்போது உங்கள் தாக்கல் படிவத்தின் XML வடிவம் உங்கள் கணிணியில் இருக்கும்.4. நிரப்பிய படிவத்தைத் தளத்தில் பதிவேற்றுங்கள்
உங்கள் கணக்கிற்குள் உள்நுழையுங்கள்
வரும் பக்கத்தில், தகுந்த படிவ எண்ணைத் தேர்வு செய்யவும்.
உங்களிடம் எண்முறை சான்றிதழ் (Digital Cerificate) இருந்தால், "Do you want to digitally Sign the file" என்பதில் Yes கொடுக்கவும். இல்லையேல், "No" கொடுக்கவும்.
Digital Certificate இருப்பவர்கள் (Yes கொடுத்தவர்கள்) தொடர்புடையதைத் தேர்வு செய்யவும்.
வரும் பக்கத்தில், உங்கள் கணிணியில் சேமிக்கப்பட்ட XML கோப்பைப் பதிவேற்றுங்கள்.
தற்போது நீங்கள் உங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்து விட்டீர்கள்!!5. ஒப்புகை (Acknowledgement) பெறுங்கள்
இருங்க.. கடமை முடிந்து விட்டது எனக் கிளம்பாதீங்க!!
எண்முறை சான்றிதழ் (Digital Cerificate) கொடுத்தவர்கள் ஒப்புகை படிவத்தை (Acknowledgement Form) சேமித்து/ அச்சிட்டு வைத்துக் கொள்ளுங்கள்
மற்றவர்கள் வந்த ஒப்புகை படிவத்தை (ITR-V) அச்சிட்டு, கீழ்காணும் முகவரிக்கு (120 நாட்களுக்குள்) அனுப்புங்கள். [அஞ்சல்/ விரைவு அஞ்சல் (Speed Post) மட்டுமே!]முகவரி:
Income Tax Department – CPC,
Post Bag No - 1, Electronic City Post Office,
Bengaluru - 560100, Karnataka
அனுப்புபவர்கள் ஒப்புகைப் படிவத்தில் கையொப்பம் இட மறந்து விடாதீர்கள்!!
நீங்கள் தாக்கல் செய்த உடன் வரும் பக்கத்திலேயே, ஒப்புகைப் படிவத்தின் இணைப்பு இருக்கும். தவற விட்டவர்கள், உங்கள் கணக்கில் மேல் தத்தலில் உள்ள My Accounts--> My Returns சென்று தரவிறக்கிக் கொள்ளலாம்.
ஒப்புகைப் படிவம் கடவுச்சொல் கொண்டு பாதுகாக்கப்பட்டது.
கடவுச்சொல்: உங்கள் PAN எண் பிறந்த நாள்
(இடையில் Space வராது)
என்ன நண்பர்களே, இனி எளிதாக உங்கள் வருமான வரிக்கணக்கைத் தாக்கல் செய்து விடலாம் தானே
2. வருமான வரி தாக்கல் படிவத்தைத் தரவிறக்குங்கள்
17/07/2014
தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் வருங்கால வைப்பு நிதி கணக்குகளை தணிக்கை செய்து 2013-14 வரை கணக்குத்தாள்கள் வழங்குவது சார்ந்து மாவட்டங்களிலுள்ள AEEO / AAEEO மற்றும் தணிக்கைத்துறை உதவி இயக்குநர்கள் / ஆய்வாளர்கள் கூட்டமர்வு 18.07.2014 அன்று தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு
TRB-தொடக்கக் கல்வித்துறை காலிபணியிடவிவரம்-பள்ளிக்கல்வித்துறையில் உள்ள காலிபணியிட விவரம்
தொடக்கக் கல்வித்துறை காலிபணியிடவிவரம்-TRB
பத்து மாணவர்களுக்கு குறைவான தொடக்க பள்ளிகள் : இழுத்து மூட அரசு யோசனை
அரசு பள்ளிகளில், பத்து மாணவர்களுக்கு குறைவாக உள்ள ஆயிரத்து 268 பள்ளிகள், இழுத்து மூடப்படும் என்ற நிலை அரசின் பரிசீலனையில் உள்ளது. தமிழக அரசு, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச உணவு, புத்தகம், நோட்டு, சீருடை, சைக்கிள், 'லேப்-டாப்,' 'பஸ்பாஸ்' என 14 வகையான இலவச நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. கல்வித்துறைக்காக ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்கிறது.
இருந்தும், அரசு துவக்க பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது, மிக சொற்பமாகவே உள்ளது.பெரும்பாலான பள்ளிகளில், ஒரு சில மாணவர்களே சேர்ந்துள்ளனர். காரணம், முறையான கல்வி முறை இல்லாததே காரணம் என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் எழுந்துள்ளது. இது மட்டுமின்றி, பெற்றோர்களின் ஆங்கில வழி கல்வி மோகமும் காரணமாகிறது. வரைமுறை இல்லாமல், போதிய உள் கட்டமைப்பு வசதி இல்லாத நிலையில், ஆங்கில நர்சரி பள்ளிகள் துவங்க அரசு அனுமதி அளிக்கிறது. அரசு பள்ளிகள் குறைய இதுவும் ஒரு காரணமாககும்.இதனால், நடப்பு கல்வி ஆண்டில், தமிழக அளவில், இதே எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள, ஆயிரத்து 268 பள்ளிகள் மூடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பள்ளிகளில் உள்ள மாணவர்களை, அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள். வரும் காலங்களிலாவது, முறையான பாட வகுப்புகளை நடைமுறைபடுத்தி, மாணவர் சேர்க்கையை கூடுதலாக்க அரசு நிர்வாகம் முன்வர வேண்டும். இல்லையேல். அடுத்தடுத்து இதேபோல் பள்ளிகள் மூடப்படும் நிலை தான் தமிழகத்தில் ஏற்படும்
புதிய ஆசியர்களுக்கான நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா விரைவில் வழங்குவார்; அமைச்சர் வீரமணி தகவல்
ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் தேர்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பற்றிய அறிவிக்கை சில நாட்களுக்கு முன்பு வெளிடப்பட்டது... இதேப்போல் இடைநிலை ஆசிரியர் அறிவிக்கை சில தினங்களில் வெளியிடப்பட்டு விரைவில் புதிய ஆசியர்களுக்கான நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா வழங்குவார் என அமைச்சர் வீரமணி தெரிவித்தார்.
கல்வித்துறையும் இதற்க்கான முயற்சிகளில் முழு அளவில் ஈடுப்பட்டுள்ளது. பள்ளிகளில் காலிப்பணியிடம் விவரங்களை சேகரித்து வருகிறது. இன்னும் சில வாரங்களில் புதிய ஆசிரியர் பணி ஆணை வழங்கும் விழா நடைபெறும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
5லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால், அந்நபரின் வரிக் கணக்கை எலெக்ட்ரானிக் முறையில் (இ-ஃபைலிங்) தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயம்
மாதச் சம்பளக்காரர்கள் முடிந்த 2013-14-ம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு (இன்கம் டாக்ஸ் ரிட்டர்ன்) விவரத்தை தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31, 2014. இதற்கு இன்னும் 14 நாட்கள்தான் இருக்கின்றன. கடைசி வாரத்தில் ரிட்டர்ன் தாக்கல் செய்துகொள்ளலாம் என்று இருந்துவிட்டு, அவசரமாக வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது தவறுகள் ஏற்படக்கூடும். இதைத் தவிர்க்க இப்போதே களமிறங்கிவிடுங்கள்.
வருமான வரிக் கணக்கை எப்படி தாக்கல் செய்ய வேண்டும், எந்த மாதிரியான விஷயங்களையெல்லாம் கவனிக்க வேண்டும் என சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் கோபால் கிருஷ்ண ராஜுவிடம் கேட்டோம். அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.
''மாத சம்பளத்தில் பிடிக்கப்படும் பிஎஃப் தொகை மற்றும் லைஃப் இன்ஷூரன்ஸ் பிரீமியம், வீட்டுக் கடனுக்கான அசல் மற்றும் வட்டி, பிள்ளைகளின் கல்விச் செலவு உள்ளிட்ட வரிச் சலுகைகளைக் கழித்ததுபோக, மீதி உள்ள தொகைக்கு வரி கட்ட வேண்டும். இந்த முதலீடு, செலவு, வரிச் சலுகை பெற்ற விவரம், வரி கட்டிய விவரத்தை வருமான வரித் துறைக்கு தெரிவிப்பதுதான் வரிக் கணக்கு தாக்கல்' என்று அடிப்படை விளக்கம் சொன்னவர், யாரெல்லாம் வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பதைப் பட்டியலிட்டுக் காட்டினார்.
யாரெல்லாம் வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்?
நிதியாண்டில் வங்கிச் சேமிப்புக் கணக்கு மூலம் 10,000 ரூபாய்க்குமேல் வட்டி வருமானம் கிடைத்திருந்தால்.
ஒரு நிதியாண்டில் இரண்டு கம்பெனிகளில் பணிபுரிந்தவர்கள்.
சம்பளம் தவிர, இதர வருமானம் உள்ளவர்கள்.
நிதியாண்டில் ஒருவரின் ஆண்டு நிகர வருமானம் (மொத்த வருமானத்தில் வரிச் சலுகைகள் எல்லாம் கழித்தது போக உள்ள தொகை) ரூ.2 லட்சத்தைத் தாண்டும்போது.
60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் ஆண்டு நிகர வருமானம் ரூ.2.5 லட்சத்தைத் தாண்டும்போது.
80 வயதுக்கு மேற்பட்ட மிகவும் மூத்த குடிமக்களின் ஆண்டு நிகர வருமானம் ரூ.5 லட்சத்தைத் தாண்டும் போது.
கூடுதலாக வருமான வரி பிடிக்கப்பட்டு ரீஃபண்ட் பெற வேண்டியிருந்தால்.
பங்குகள், மியூச்சுவல் யூனிட்கள், சொத்து விற்றது மூலம் மூலதன ஆதாயம் கிடைத்திருந்தால்.
மூலதன ஆதாய இழப்பு ஏற்பட்டு, அதனை அடுத்துவரும் ஆண்டுகளில் ஈடுகட்ட திட்டமிட்டிருந்தால்...
மேலே கூறப்பட்டுள்ள நிலையில் இருப்பவர்கள் அனைவருமே அவசியம் டாக்ஸ் ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். அடுத்து, வரி தாக்கல் செய்வதற்காக யார், எந்தப் படிவத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
யாருக்கு என்ன படிவம்..!
'நம்மில் பெரும்பாலானோருக்கு யார் எந்தப் படிவத்தில் வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்கிற குழப்பம் இருக்கிறது. அதைத் தவிர்க்கும் விதமாக அதை விரிவாகத் தந்திருக்கிறோம்.
ஐடிஆர் 1 (சஹஜ்)
சம்பளம் அல்லது ஓய்வூதியம்.
ஒரு வீட்டிலிருந்து வாடகை வருமானம் வருதல்.
வட்டி வருமானம்.
வரி விலக்கு பெற்ற வருமானம் நிதியாண்டில் 5,000 ரூபாய்க்குமேல் இருக்கக் கூடாது.
வெளிநாட்டில் சொத்து இருக்கக் கூடாது.
குறிப்பு: ஐடிஆர் 1 - படிவத்தில் முதல்முறையாக வீட்டுக் கடன் வாங்குபவர் களுக்கு, 80இஇ பிரிவின் கீழ் வரிச் சலுகை பெற தனியாக இடம் விடப்பட்டிருக்கிறது. வீட்டுக் கடன் ஏப்ரல் 1, 2013 மற்றும் மார்ச் 31, 2014-க்கு இடையில் வாங்கப் பட்டிருக்கிறது எனில், பிரிவு 24-ன் கீழ் வழக்கமாகப் பெறும் வட்டிக்கான வரிச் சலுகை 1.5 லட்சம் ரூபாய் போக, கூடுதலாக 80இஇ-ன் கீழ் 1 லட்சம் ரூபாய் வரிச் சலுகை கிடைக்கும். இதைப் பெற வீட்டின் மதிப்பு 40 லட்சம் ரூபாய்க்குள்ளும், கடன் தொகை ரூ.25 லட்சத்துக்குள்ளும் இருக்க வேண்டும்.
ஐடிஆர் 2
சம்பளம் அல்லது ஓய்வூதியம்.
ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளிலிருந்து வாடகை வருமானம்.
மூலதன ஆதாயங்கள்.
மூலதன இழப்பை அடுத்த ஆண்டுகளுக்குக் கொண்டு செல்லுதல்.
வட்டி வருமானம்.
வெளிநாட்டில் சொத்து இருந்தால்.
பிசினஸ் வருமானம் இருக்கக் கூடாது.
குறிப்பு: பிரிவு 10-ன் கீழ் பெறும் வீட்டு வாடகை படி (ஹெச்ஆர்ஏ), விடுமுறை சுற்றுலா படி (எல்டிஏ) போன்றவற்றைத் தனித் தனியாகக் குறிப்பிட்டுக் காட்ட வேண்டும். இதேபோல், பங்கு மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட் விற்பனை, சொத்து விற்பனை மூலமான மூலதன ஆதாயத்தையும் தனித் தனியாகக் குறிப்பிட வேண்டும். மேலும், மூலதன ஆதாய வரியைத் தவிர்க்க 80இசி-ன் கீழ் முதலீடு செய்யும் (என்ஹெச்ஏஐ/ஆர்இசி) மூலதன ஆதாய பாண்டுகள் விவரத்தையும் குறிப்பிட வேண்டும்.
ஐடிஆர் 3
கூட்டு நிறுவனத்தில் பங்குதாரர் களாக இருப்பவர்கள்.
வட்டி, சம்பளம், போனஸ், கமிஷன் / ஊக்கத்தொகை போன்ற வருமானம் உள்ளவர்கள்.
ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளிலிருந்து வாடகை வருதல்.
மூலதன இழப்பை அடுத்த ஆண்டுகளுக்குக் கொண்டு செல்லுதல்.
ஐடிஆர் 4
தனி உரிமையாளர் பிசினஸ்.
வியாபாரம் அல்லது நிபுணத்துவம் (டாக்டர், வக்கீல், ஆடிட்டர் போன்றவர்கள்) மூலம் வருமானம் வருதல்.
இதர வருமானம்.
கமிஷன்.
ஐடிஆர் 4 எஸ் (சுகம்)
ஒப்பந்தக்காரர்கள், சரக்குப் போக்குவரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள், குறிப்பாக கணக்கு வழக்கு பராமரிக்காமல் லாபத்தில் 8% வரி கட்டி வருபவர்கள். இவர்களின் பிசினஸ் டேர்னோவர் ரூ.1 கோடிக்குள் இருக்க வேண்டும்.
வரி விலக்கு பெற்ற வருமானம் நிதியாண்டில் 5,000 ரூபாய்க்குமேல் இருக்கக் கூடாது.
ஊக வணிகம் (ஸ்பெக்குலேஷன்) மூலம் வருமானம் பெற்றிருக்கக் கூடாது.
ஐடிஆர் V (ITR- V Form)
இது வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதை உறுதி செய்யும் படிவம்.(Verification Form)
வருமான வரி அலுவலகத்தில் நேரில் சென்று வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுக்கவேண்டும். அதில் அலுவலக முத்திரை பதித்துத் தருவார்கள்.வரிக் கணக்கு தாக்கலை உரிய காலத்தில் செய்துவிட்டால், உங்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது!
ஒருவரின் வரிக்கு உட்பட்ட வருமானம் 5 லட்சம் ரூபாய்க்குமேல் இருந்தால், அவர் வரிக் கணக்கை எலெக்ட்ரானிக் முறையில்
(இ-ஃபைலிங்) தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயம்.
14/07/2014
அனுமதி பெறாமல் படிப்பு:முதுகலை ஆசிரியர்களுக்கு சிக்கல்
கல்வித் துறை அதிகாரிகளின் அனுமதி பெறாமல், எம்.பில்., படிக்கும், முதுகலை ஆசிரியர்கள் குறித்த, பெயர் பட்டியலை அனுப்பும்படி, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள், கல்வித் துறை அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல், எம்.பில்., படித்து வருகின்றனர். இதை, இவர்களது பணி பதிவேட்டில் சேர்ப்பதிலும், அடிப்படை சம்பளத்தில், 3 சதவீதம் உயர்த்துவதிலும் சிக்கல் உள்ளது.புகாரை அடுத்து, இவர்களது பெயர் பட்டியலை தயாரித்து அனுப்பும்படி, தொழிற்கல்வி இயக்குனர் தர்ம ராஜேந்திரன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.
உத்தரவில், 'முதுகலை ஆசிரியராக பணிபுரிபவர் எம்.பில்., படிக்க வேண்டுமானால், அவர் பணிபுரியும் பள்ளியின் தலைமை ஆசிரியர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். முறையான அனுமதி பெறாமல், எம்.பில்., படிப்பவர்களின் பெயர் பட்டியலை தயாரித்து அனுப்ப வேண்டும். அவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
13/07/2014
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள்-ஜூலை 15- கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடிட அரசாணை 97 நாள் -12.07.2014 & தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை
பள்ளிக்கல்வி - 2014ம் ஆண்டில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் ஜுலை 15ஐ கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட அரசு அனுமதித்து உத்தரவு. மாவட்டந்தோறும் சிறந்த மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.100000/-ம், உயர்நிலைப் பள்ளிக்கு ரூ.75000/-ம், நடுநிலைப் பள்ளிக்கு ரூ.50000/-ம், தொடக்கப் பள்ளிக்கு ரூ.25000/-ம் வழங்க அரசு உத்தரவு
காமராஜர் வாழ்வில் ஏற்பட்ட சுவையான அனுபவங்கள்: கல்வி வளர்ச்சி நாளில் மாணவர்களுக்கு சொல்ல உதவும்(மிகவும் பயனுள்ள 66 பக்க புத்தகம்)
Subscribe to:
Posts (Atom)