திருக்குறள்
23/05/2014
பகுதி நேர ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் கோரும் உரிமை கிடையாது என உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
பல்வேறு துறைகளில் பகுதி நேர, தாற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில ஊழியர்களாக நியமிக்கப்பட்ட 50 பேரை நிரந்தரம் செய்து தனி நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து, அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்களை விசாரித்த நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது.
உத்தரவு விவரம்:
தமிழக அரசு துறைகளில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் முழு நேர தினசரிக்கூலிகளாக 2006 ஜன.1-க்கு முன்பு 10 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்களை நிரந்தரம் செய்து தமிழக அரசு 2006-ல் உத்தரவிட்டது. இந்த சலுகையை தங்களுக்கும் வழங்குமாறு பகுதி நேர ஊழியர்கள் 50 பேர் உயர்நீதிமன்றத்தை அணுகினர். அவர்களுக்கு சாதகமாக தனிநீதிபதிகள் உத்தரவுகளை பிறப்பித்து உள்ளனர். அரசு உத்தரவு பகுதி நேர ஊழியர்களுக்கும் பொருந்தும் என உத்தரவுகளை பிறப்பித்தது தவறானது.
பள்ளிக்கல்வித்துறையில் பகுதிநேர துப்புறவு ஊழியர்களாக நியமிக்கப்பட்டவர்கள் பணி நிரந்தரம் கோரிய வழக்கில்,
கடந்த பிப்.21-ல் உச்சநீதிமன்றம் சட்ட விதியை தெளிவு படுத்தியது.
பணி நிரந்தர உரிமை கோரும் ஊழியர்கள் பணிநியமன விதிகளின் படி நியமிக்கப்படவில்லை. காலியாக உள்ள பணிகளில், இவ்வாறு பகுதி நேர ஊழியர்களை நியமிப்பது, அப்பணிகளைச் செய்யும் தகுதியுடையவர்களுக்கு அநீதி இழைப்பதாகும்.
அதே சமயம், பகுதி நேர ஊழியர்களுக்கு நிரந்தரம் செய்ய சட்டபூர்வ உரிமை இல்லாததால், இரக்க உணர்வு அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய முடியாது.
எனவே, பணி நிரந்தரம் கோர பகுதிநேர ஊழியர்களுக்கு சட்டபூர்வ உரிமை கிடையாது என உச்சநீதிமன்றம் குறிóப்பிட்டு உள்ளது.
உத்தரவு வெளியாகும் முன்பு, 2013 ஜூன் 27-ல் தமிழகஅரசு மேலும் ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதிóல், 2006 ஜன.1-க்கு பிறகு நியமிக்கப்பட்டு 10 ஆண்டுகள் பணியாற்றிய முழுநேர ஊழியர்களாக இருந்தாலும் பணி நிரந்தரம் பெற தகுதி கிடையாது என கூறப்பட்டுள்ளது.
எனவே, பகுதி நேர ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து தனி நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன என உத்தரவில் குறிப்பிடப்பட்டது.
இவ்வழக்கில், தனிநீதிபதிகளின் உத்தரவுகள் அடிப்படைõயில் பணி நிரந்தரம் செய்யப்பட்ட ஊழியர்களை அரசு தொந்தரவு செய்யாது என்ற அரசு கூடுதல் வழக்குரைஞரின் உறுதிமொழியை நீதிபதிகள் பதிவு செய்தனர்.
ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா
கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை திறக்கும் தேதியை ஒத்தி வைக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அரசு கோரிக்கை வைத்துள்ளது. ஆனால், குறிப்பிட்ட நாளில் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் நந்தகுமார் கூறியதாவது:கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. தனியார் பள்ளிகளை பொறுத்தவரை மாணவர் சேர்க்கை நடக்க வேண்டியுள்ளது.
பிளஸ் 1 வகுப்பில் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு வேண்டிய புத்தகங்கள் வந்து சேரவில்லை, கோடை வெயிலின் தாக்கமும் அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டது போல இந்த ஆண்டும் ஒத்தி வைக்குமாறு மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனர் பிச்சையிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். அரசு பரிசீலனை செய்து 9ம் தேதிக்கு பள்ளிகளை திறக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு நந்தகுமார் தெரிவித்தார். இது குறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா கூறுகையில், ஏற்கெனவே அறிவித்தபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.
பி.எட்., எம்.எட். படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக உயர்கிறது
இளநிலை ஆசிரியர் கல்வியியல் படிப்பான பி.எட்., மற்றும் முதுநிலை படிப்பான எம்.எட். ஆகிய படிப்புகளின் காலத்தை இரண்டு ஆண்டுகளாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) தலைவர் சந்தோஷ் பாண்டா கூறினார். சென்னையில் திங்கள்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் அவர் அளித்த பேட்டி: பள்ளி ஆசிரியர் ஆக வேண்டுமானால், ஓராண்டு படித்தால் போதும் என்ற நிலை உள்ளது. மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கவும், சிறப்பாக பயிற்றுவிக்கவும் இந்த ஓராண்டு படிப்பு நிச்சயம் போதாது
. எனவே, பி.எட். மற்றும் எம்.எட். படிப்புகளின் படிப்பு காலத்தை 2 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு என்.சி.டி.இ. சார்பில் பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அனுமதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, வருகின்ற 2015-16 கல்வியாண்டு முதல் இரண்டாண்டு பி.எட்., இரண்டாண்டு எம்.எட். படிப்புகளைக் தொடங்க கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்படும் அதே நேரம், இந்த புதிய மாற்றத்தை பின்பற்ற மாநில கல்வி நிறுவங்களுக்கு போதிய கால அவகாசம் அளிக்கப்படும் என்றார் அவர்.
இதன்படி, ஓரிரு ஆண்டுகளில் பி.எட். மற்றும் எம்.எட். படிப்புகளின் படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக உயரப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு ஊழியர் விடுமுறை நாட்களை குறைக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு
அரசு ஊழியர்கள் விடுமுறை நாட்களை குறைக்க கோரிய வழக்கில் உத்தரவை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.திருச்சி, வயலு£ரை சேர்ந்தவர் இளமுகில். ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொது நல மனு:அரசு ஊழியர்களுக்கு குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்திக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதோடு சனி மற்றும்
ஞாயிற்று கிழமைகளில் வார விடுமுறையாக 104 நாட்களும், மத்திய, மாநில அரசு விடுமுறை, மருத்துவ விடுப்பு உள்ளிட்ட 164 நாட்கள் விடுமுறையாக கிடைக்கிறது. ஆண்டில் 196 நாட்கள் மட்டுமே வேலை பார்க்கின்றனர். பள்ளிகளில் 230 நாட்கள் வரை வேலைபார்க்கிறார்கள்.இதோடு தேர்தல் காலங்களில் தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.
இதனால் பொதுமக்களின் மனுக்கள் அரசு அலுவலகங்களில் ஆண்டுகணக்கில் தேங்குகின்றன. அரசு ஊழியர்களால் மக்கள் பணியாற்ற முடியாமல் போகிறது. சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பது மேற்கத்திய நாடுகளின் வழக்கம். அங்கு மக்களும் குறைவு, மக்கள் பிரச்னையும் குறைவு. இதனால் உடனுக்குடன் பிரச்னைகள் தீர்க்கப்படும்.பட்டா மனுக்கள் லட்சக்கணக்கில் நிலுவையில் உள்ளன. ஓட்டுநர் உரிமம், கட்டிட வரைபட அனுமதி, மின்சார இணைப்புகள், ஓய்வூதியம், கருணை வேலை மனுக்கள் உள்ளிட்டவை ஆண்டு கணக்கில் நிலுவையில் உள்ளன. மத்திய ஊதிய குழு கடந்த 24.3.2008ல் ஓர் அறிக்கையை அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. அதில், தேசிய விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் அரசு அலுவலகங்கள் திறந்திருக்க வேண்டும். அரசிதழில் வெளியிடப்பட்ட விடுமுறை நாட்களை குறைக்க வேண்டும். விழாக்காலங்களில் மற்ற மதத்தினரும், விருப்பமுள்ளவர்களும் பணிக்கு வரலாம் என்று கூறியுள்ளனர்.
இந்த பரிந்துரைகளை அமல்படுத்தவில்லை.சனிக்கிழமையை வேலை நாளாக அறிவிக்க வேண்டும். அப்படி செய்தால் மக்கள் குறைகளை விரைவாக தீர்க்க முடியும். இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தேன். எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்களை குறைந்தது 2 நாளாகவும், அதிகபட்சம் 8 நாளாகவும் மாற்ற வேண்டும். அரசிதழில் வெளியிட்ட 18 நாள் விடுமுறையை ரத்து செய்ய வேண்டும். ஞாயிறு மற்றும் தேசிய விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் அரசு அலுவலகங்கள் திறந்திருக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு நேற்று நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.வைத்தியநாதன் பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
பள்ளி மாணவர்களுக்கு கடந்தாண்டு வழங்கிய பஸ் பாஸ் ஆகஸ்ட் வரை செல்லுபடியாகும்
நடப்பு கல்வியாண்டு தொடங்கி 3 மாத காலத்திற்கு கடந்தாண்டு பயன்படுத்தப்பட்ட பழைய பஸ் பாஸ் செல்லுபடியாகும் என போக்குவரத்து கழகங்களுக்கு அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த பஸ் பாஸ்கள் பள்ளிகள் திறக்கப்பட்டு 2 மாதங்கள் கழித்துதான் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலை யை தவிர்க்கும் வகை யில், நடப்பு கல்வியாண்டிற்கான இலவச பஸ் பாஸ் முன்கூட்டியே வழங்கிட பள்ளி கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டு வந்தது.
இதற்காக பஸ் பாஸ் தேவை பட்டியலை ஒவ்வொரு பள்ளியும் முன்கூட்டியே தயாரித்து போக்குவரத்து கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தேவை பட்டியல் தயாரித்து பஸ் பாஸ்கள் அச்சடித்து மீண்டும் மாணவர்களுக்கு வழங்க காலதாமதம் ஏற்படும் என்பதால் கடந்த ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பஸ் பாஸ் 3 மாத காலத்திற்கு செல்லுபடியாகும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பள்ளி மாணவர்களுக்கு கடந்த கல்வியா ண்டில் வழங்கப்பட்ட இலவச பஸ் பாஸ் நடப்பு கல்வியாண்டில் ஆகஸ்ட் வரை 3 மாத காலத்திற்கு பயன்படுத்திக்கொள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது.கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பழைய பஸ் பாஸ் வைத்துள்ள மாணவர்களை அரசு பஸ்கள் ஏற்றி செல்ல வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், பழைய பஸ் பாஸ் காணாமல் போயிருந்தால், பள்ளி சீருடையில் மாணவர்கள் இருந்தால் அந்த மாணவர்களை அரசு பஸ்கள் கட்டாயம் ஏற்றி செல்ல வேண்டும். பஸ் பாஸ் இல்லை என்பதற்காக எக்காரணம் கொண்டும் மாணவர்களை ஏற்றாமல் பஸ்கள் செல்லக்கூடாது என்று போக்குவரத்து கழகங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது என்றனர்.
18/05/2014
15/05/2014
ஆசிரியர்களின் கவனக் குறைவால் 3-ஆம் வகுப்பு மாணவன் இறப்பு
ஆசிரியர்களின் கவனக் குறைவால் பள்ளி அருகே உள்ள குட்டையில்விழுந்து இறந்த பள்ளி மாணவன் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடுவழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு தாலுக்காவில் உள்ள கருநிலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கே.வீரராகவன். இவரது மகன் பிரசாந்த் (8) அங்கு உள்ள அரசுநடுநிலைப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த 2009-ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 25-ஆம் தேதி பள்ளிக்குச் சென்றபிரசாந்த் வீடு திரும்பவில்லை. பள்ளியில் சென்று ஆசிரியர்களிடம்கேட்ட போது அவர்களுக்கும் தெரியவில்லை. அவனுடன் இருந்த மற்றமாணவர்களை விசாரித்தபோது, பகல் 12 மணி வரைவகுப்பறையில்தான் இருந்தான் எனத் தெரிவித்துள்ளனர். அவர்கள் அதன்பிறகு பிரசாந்த்தை பார்க்கவில்லை.
ஆனால், வகுப்பறையில் பிரசாந்த்தின் பை இருந்தது. அவனுடையகால்சட்டை பள்ளியிலிருந்து 25 அடி தூரத்தில் உள்ள குட்டையின்அருகே கிடந்தது. அந்தக் குளம் 22 அடி ஆழம் கொண்டது.
பிரசாந்த் ஒருவேளை குட்டையில் விழுந்திருப்பானோ என்ற நோக்கத்தில்குட்டையில் தேடும்போது, பிரசாந்த் மற்றும் விக்னேஷ் ஆகியோரின்உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
பிரசாந்த் வகுப்பாசிரியர் விடுமுறையில் இருந்ததால், அந்த வகுப்புபொறுப்பாளராக மற்றொரு ஆசிரியர் நியமிக்கப்பட்டிருந்தார்.
அவரும் வகுப்பறையில் இல்லை. அவர்களின் கவனக்குறைவால்தான்இந்தச் சம்பவம் நடந்துள்ளது.அதனால், ஆசிரியர்களின் குறைபாடு காரணமாக எனது மகன்இறந்துள்ளான். எனவே, எனது மகன் இறப்புக்கு இழப்பீடாக ரூ. 5 லட்சம்வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரி பிரசாந்த்தின் தந்தை வீரராகவன்உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி எம்.வேணுகோபால் முன்பு விசாரணை நடந்தது.விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: பள்ளியில் கழிவறைபோன்ற அடிப்படை வசதிகள் இல்லை. அதனால் மாணவர்கள்பள்ளிநேரங்களில் வெளியே சென்று இயற்கை உபாதைகளை கழிக்கவேண்டிய நிலை இருந்துள்ளது.
இதன் காரணமாகவே மூன்றாம் வகுப்பு படித்த 8 வயது மாணவன்பிரசாந்த்தும், இரண்டாம் வகுப்பு படித்த விக்னேஷும் வெளியில் சென்றுஇயற்கை உபாதைகளை கழித்து விட்டு, குட்டையை பயன்படுத்தியபோதுதவறி விழுந்து இறந்துள்ளனர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக, காட்டாங்குளத்தூர் உதவி தொடக்கக் கல்வி அதிகாரிவிசாரணை செய்து, மாணவர்கள் இறப்பு ஆசிரியர்களின் கவனக்குறைவால் நடந்துள்ளது எனக் கண்டறிந்துள்ளார்.அதனால், அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் இரண்டு உதவிஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளார்.மேலும், அவர்களை வேறு பள்ளிக்கு பணியிட மாற்றமும் செய்துள்ளார்.இதற்கு ஆசிரியர்கள் மட்டும் பொறுப்பாக முடியாது, அரசும்தான்பொறுப்பு.
பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததால்தான் மாணவர்கள்பள்ளியை விட்டு வெளியில் சென்றுள்ளனர்.
எனவே, மாணவன் பிரசாந்த்தின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ. 5லட்சத்தை, எட்டு வாரங்களுக்குள் அரசு வழங்க வேண்டும் எனஉத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த கல்வி அதிகாரியின் குடும்ப ஓய்வூதியத்தை 2 மனைவிகளுக்கும் சமமாக வழங்க ஐகோர்ட் உத்தரவு
கன்னியாகுமரியைச் சேர்ந்த, மறைந்த ஓய்வு பெற்ற முதன்மைக் கல்விஅலுவலரின், 2 மனைவி களுக்கும் சமமாக பங்கிட்டு, குடும்பஓய்வூதியப் பலன்கள் வழங்க வேண்டும், என அரசுக்கு, மதுரைஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
கீழ்கல்குறிச்சியை சேர்ந்த விசாலாட்சியம்மா தாக்கல் செய்த மனு எனதுகணவர் ஸ்தாணு நாதன் தம்பிக்கும், எனக்கும் 1958 ல், திருமணம்நடந்தது. எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். என்னைகைவிட்ட அவர், 1965ல், வசந்தகுமாரி தங்கச்சியை திருமணம்செய்தார். அவருக்கு 3 ஆண் குழந்தைகள் பிறந்தனர். ஸ்தாணு நாதன்தம்பி முதன்மைக் கல்வி அலுவலராக பணிபுரிந்து, ஓய்வு பெற்றார்.அவர், 2012 ல் இறந்தார்.
குடும்ப ஓய்வூதியப் பலன்கள் கோரி, கன்னியாகுமரி மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர், சென்னை "அக்கவுன்டன்ட் ஜெனரல்'அலுவலகத்திற்கு விண்ணப்பித்தேன். அவர்கள், "குடும்ப ஓய்வூதியம்பெறுவதற்கு வாரிசுதாரராக, வசந்தகுமாரி தங்கச்சியை ஸ்தாணு நாதன்தம்பி நியமித்துள்ளார்,' என, நிராகரித்தனர். என்னிடம், அவர்சட்டப்பூர்வமாக விவாகரத்து கோரவில்லை. 2 வது மனைவியைவாரிசுதாரராக நியமிக்க முடியாது. எனக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கஉத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி ஆர்.மகாதேவன்முன் மனு விசாரணைக்கு வந்தது. வசந்தகுமாரி தங்கச்சியின்தரப்பில்," ஸ்தாணு நாதன் தம்பியை திருமணம் செய்து, அவருடன் 47ஆண்டுகள் குடும்பம் நடத்தியுள்ளேன். கடைசிவரை, அவரைபராமரித்தேன். குடும்ப ஓய்வூதியம் பெற எனக்கு தகுதி உண்டு,' எனவலியுறுத்தப்பட்டது. நீதிபதி: பெண்களை குடும்ப வன்முறையிலிருந்துபாதுகாக்கும் சட்டப்படி, ஒரே வீட்டில் ஆணும், பெண்ணும் சேர்ந்துவாழ்ந்தாலும், திருமணம் செய்து அல்லது விருப்பத்தின் அடிப்படையில்இருவரும் சேர்ந்து வாழ்ந்தாலும், அதை குடும்பமாகத் தான் கருதவேண்டும். மனைவியாக வசந்தகுமாரி 47 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார்.அதனால் தான், அவரை வாரிசுதாரராக ஸ்தாணு நாதன் தம்பிநியமித்துள்ளார்.
சட்டப்படி மனைவியாக இருந்தாலும், அல்லது ஆணும், பெண்ணும்சேர்ந்து வாழ்ந்தாலும், பராமரிப்புத் தொகை வழங்க வேண்டும்.வருவாய் ஈட்டும் கணவர் இறந்து விட்டால், குடும்பம் நல்லநிலையில்வாழ்வதற்காகத் தான், குடும்ப ஓய்வூதியத் திட்டம் ஏற்படுத்தப்பட்டது.இவ்வழக்கின் சூழ்நிலை வேறு. விசாலாட்சியம்மா மற்றும் வசந்தகுமாரிதங்கச்சிக்கு சமமாக பங்கிட்டு, குடும்ப ஓய்வூதியப் பலன்களை வழங்கவேண்டும். இதில் ஒருவர் முதலில் இறந்துவிட்டால், உயிருடன்உள்ளவருக்கு முழுத் தொகையையும், அரசு வழங்க வேண்டும்,என்றார்.
புதிதாக சேர்ந்த அரசு ஊழியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல்
தமிழக அரசு ஊழியர்களுக்கு,பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், கடந்த 2003ஏப்ரல் மாதம் முதல் அமலில் உள்ளது. இந்த ஆண்டிற்கு பிறகு,பணியில் சேர்ந்துள்ள அரசு ஊழியர்கள், மற்றும் பணி வரன் முறைபெறாத அரசுஊழியர்கள், சென்னையில் உள்ள தகவல் தொகுப்பு மையத்தில்,ஊழியர் பெயரில், பங்களிப்பு ஓய்வூதிய திட்ட எண், பெற்றிருக்கவேண்டும். இந்த எண் பெறவில்லை என்றால், புதிய பென்ஷன்திட்டத்திற்காக, அடிப்படை சம்பளத்தில் இருந்து, பணம் பிடித்தம்செய்ய முடியாது.
எனவே, இந்த எண் பெறாத அரசு ஊழியர்களுக்கு, ஜூன் மாதம் முதல்சம்பளம், நிறுத்தி வைக்க வேண்டும், என நிதித் துறை பென்ஷன்பிரிவில் இருந்து, அனைத்து கருவூல அலுவலகங்களுக்குஅனுப்பியுள்ள, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,இதில் கருணை அடிப்படையில், பணிக்கு சேர்ந்தவர்கள் குறித்து, எந்தவிதக் குறிப்புகளும் இல்லை. எனவே, பங்களிப்பு ஓய்வூதிய திட்ட எண்பெறாத, அரசு ஊழியர்களுக்கு ஜூன் மாதம் முதல் சம்பளம்கிடைக்காது.
அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் ,உலகக் கல்வி கழகத் துணைத்தலைவர் திரு சு.ஈசுவரன் அவர்ளிடம் ஆசிபெறும் அரியலூர் மாவட்டப் புதிய பொறுப்பாளர்கள்
அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர்
,உலகக் கல்வி கழகத் துணைத்தலைவர் திரு சு.ஈசுவரன் அவர்ளிடம் ஆசிபெறும் அரியலூர் மாவட்டப் புதிய பொறுப்பாளர்கள் மாவட்டத்தலைவர் திரு. சு.பாலசுப்ரமணியன்,மாவட்டச்செயலாளர் திரு. இ.எழில்,மாவட்ட பொருளாளர் திரு. பா.மார்ட்டின் ஆரோக்கியராஜ் மற்றும் பிற உறுப்பினர்கள் உடன் மாநிலதுணைச்செயளாளர்& பெரம்பலூர் மாவட்டச் செயளாளர் திரு ஈ.ராஜேந்திரன் பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர்கள்
14/05/2014
பள்ளி மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் -விண்ணப்ப படிவம்
|
S.NO | FILE NAME | DOWNLOAD |
1 | Application Form | Click Here |
2 | Instruction | Click Here |
3 | Soft Copy Format | Click Here |
4 | Delivery Challan | Click Here |
தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு வாரத்தின் முதல் சனிக்கிழமை அன்று விடுமுறை அளிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு
தொடக்கக் கல்வித்துறையின் கீழ் உள்ள தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் குறைகளைப்போக்கும் வண்ணம் உதவித்தொடக்கக்கல்வி அலுவலகங்களில் குறைகேட்பு முகாம் மாதத்தின் முதல் சனிக்கிழமைகளில் நடத்தப்படுகிறது.கடந்தாண்டில் அந்த சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கியதால், குறைத்தீர் முகாமில் ஆசிரியர்களால் கலந்துகொண்டு தங்கள் குறைகளை தீர்க்கக்கோரிமனு அளிக்க இயலவில்லை. இதனால் வரும் கல்வியாண்டில் மாதத்தின் முதல் சனிக்கிழமை விடுமுறை நாளாக அமையுமாறு நாட்காட்டி (year plan) தயாரித்து அளிக்க வேண்டும் என கூட்டணி மூலம் கோரிக்கை வைக்கப்பட்டது,மாதத்தின் முதல் சனிக்கிழமைகள் விடுமுறை நாளாக அமையுமாறு மாற்றியமைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்தார்.
தமிழ்நாடு முழுவதும் பள்ளி வேன்–பஸ்களில் பாதுகாப்பு அம்சம் ஆய்வு
மே 11–கோடை கால விடுமுறைக்கு பிறகு ஜூன் 3–ந்தேதி பள்ளிக் கூடங்கள் திறக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் பள்ளி கல்லூரிகளில் மொத்தம் 36,389 வேன்–பஸ்கள் உள்ளன.இந்த வாகனங்கள் விபத்தில் சிக்காமல் இருக்க முன் கூட்டியே பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்ய அரசு உத்தர விட்டுள்ளது.இதையொட்டி போக்குவரத்து துறை அதிகாரிகள் 33 குழுக்களை நியமித்து பள்ளி கூடங்களுக்கு சென்று பஸ், வேன்களை ஆய்வு செய்து வருகின்றனர்.வாகனங்களில் அவசரகால கதவு, ஜன்னல்கள், படிகள், தீயணைப்பு கருவிகள் முதல் உதவிப் பெட்டி, ஹேண்ட் பிரேக், வேகக்கட்டுப்பாட்டு கருவி உள்பட 18 அம்சங்கள் கண்டிப்பாக இருக்கிறதா? என்று சோதனை செய்கின்றனர்.இவை இல்லாத பஸ்களில் கண்டிப்பாக அவற்றை பொருத்தவும் உத்தரவிட்டுள்ளனர்.சோதனையின் போது வாகனங்களில் குறைபாடுகள் கண்டு பிடிக்கப்பட்டால் தகுதி சான்று அளிக்கப்படாது என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழித்திறன் இலவச பயிற்சி அடுத்த மாதம் நடைபெறுகிறது
தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆங்கிலத்தில் மொழித்திறன் பயிற்சி அடுத்தமாதம் அளிக்கப்பட உள்ளது.
பேச்சாற்றல் இல்லை
தாய் மொழி அவசியம் தேவை தான். ஆனால் பி.இ. மற்றும் பி.ஏ., பி.காம் உள்ளிட்ட கலை அறிவியல் படிப்புகளை படித்தவர்கள் கற்ற பாடத்தை ஆங்கில மொழியில் சொல்லத்தெரிந்தால்தான் அவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம் இருக்கும்.
ஆனால் பாடத்தை நன்றாக தெரிந்து வைத்திருந்தும், கற்றதை ஆங்கில மொழியில் சொல்லத்தெரியாமல். (பேச்சாற்றல் இல்லாமல்) இருக்கும் பலர் வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கிறார்கள்.
அத்தகையவர்களுக்கு ஆங்கில மொழித்திறன் பயிற்சி அளிப்பது குறித்து இந்திய ஆங்கில மொழி ஆசிரியர்கள் அமைப்பு செயலாளர் பேராசிரியர் கே.இளங்கோ கூறியதாவது:-
ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி
இந்திய ஆங்கிலமொழி ஆசிரியர் அமைப்பும், சென்னை வடக்கு ரோட்டரி சங்கமும் சேர்ந்து அரசு பள்ளிகளில் பணியாற்றும் 300 ஆசிரியர்களுக்கு முதல் கட்டமாக ஆங்கிலத்தில் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம். மொத்தம் 5 நாட்கள் இந்த பயிற்சி அடுத்த மாதம் (ஜூன் மாதம்) அளிக்கப்படும்.
கூடிய மட்டும் அந்த ஆசிரியர்களுக்கு விடுமுறை நாட்களில் தான் பயிற்சி அளிக்கப்படும். கவனித்தல், பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகிய தலைப்புகளில் பயிற்சி கொடுக்கப்பட இருக்கிறது. அவர்களுக்கு வகுப்பு எடுப்பவர்கள் ஏற்கனவே பெரிய நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள்தான்.
இந்த பயிற்சி நடைமுறைக்கு ஏற்புடையதாகவும், ஆங்கில மொழித்திறனை ஊக்குவிப்பதாகவும் இருக்கும். பயிற்சி சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஹோலிகிராஸ் மெட்ரிகுலேசன் பள்ளியில் அளிக்கப்பட உள்ளது. பயிற்சி பெற விரும்புபவர்கள் 9444257308 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளவேண்டும்.
ஏராளமான மாணவர்கள் பெயில்
அண்ணா பல்கலைக்கழகம் பி.இ. படிக்கும் முதல் பருவத்தேர்வு முடிவை சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. அதில் அதிர்ச்சி தரும் தகவலாக 56 என்ஜினீயரிங் கல்லூரிகளைச்சேர்ந்த அனைத்து மாணவர்களும் ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெறவில்லை.
எனவே இப்போது ஆங்கில பயிற்சி உடனடித்தேவை என்பதால் முதல் முதலாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு முழுவதும் இந்த பயிற்சி கொண்டு செல்லப்படும்.
அடுத்த கட்டமாக சென்னையில் பயிற்சி அளிப்பதை வீடியோ கான்பரன்சிங் மூலம் கிராமங்களில் உள்ள ஆசிரியர்களும் பயிற்சி பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது
12/05/2014
அரியலூர் மாவட்டத்தேர்தல் 12.05.2014 இன்று நடைப்பெற்றது.தேர்தல் ஆணையாளராக மாநிலதுணைச்செயளாளர் மற்றும் பெரம்பலூர் மாவட்டச் செயளாளர் ஈ.ராஜேந்திரன் வருகை புரிந்தார். மாவட்டத்தலைவர் திரு. சு.பாலசுப்ரமணியன்,மாவட்டச்செயலாளர் திரு. இ.எழில்,மாவட்ட பொருளாளர் திரு. பா.மார்ட்டின் ஆரோக்கியராஜ் தேர்தல் மற்றும் பிற உறுப்பினர்கள் வாக்குப்பதிவு மூலம் தாே்வு செய்யப்பட்டனர்
09/05/2014
கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா? என்பதை அறிய...
கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா? எந்த நாளில்சம்பளம்வரவு வைக்கப்படும் போன்ற தகவகல்களை நீங்களே இணையத்தில்தெரிந்து கொள்ளலாம்.
1. www.treasury.tn.gov.in/Public/ ecstokenno.aspx என்றதளத்திற்குச் செல்லவும்.
2. உங்களது மாவட்டத்தினைத் தெரிவு செய்யவும்.
3. Sub treasury ஐத் தெரிவு செய்யவும்.
4. Select branch என்னும் பகுதிக்கு அருகில் உள்ள கட்டத்தில் உங்கள்வங்கியின் MICR code ஐப் பதிவு செய்யவும்.(உங்கள் காசோலைப்புத்தகத்தில் பார்த்தால் தெரியும்)
5. உங்கள் வங்கிக் கணக்கு எண்ணைப் பதிவு செய்யுங்கள்.
அவ்வளவு தான் நண்பர்களே! எந்த தேதியில் உங்கள் அலுவலர்கருவூலத்தில் ஊதியப்பட்டியலைச் சமர்பித்தார், எந்த தேதியில் அதுகாசாக்கப்படும் என அறியலாம்.
மேலும் கடந்த காலத்தில் நீங்கள் பெற்ற ஊதிய விபரங்களையும் அறியமுடியும்
ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு : மாணவரை சிறப்பு இல்லத்தில் வைக்க உத்தரவு
தனியார் பள்ளி ஆசிரியை கொலை வழக்கில், கைதான, ஒன்பதாம் வகுப்பு மாணவனை, இரண்டு ஆண்டுகளுக்கு, செங்கல்பட்டு, அரசு சிறப்பு இல்லத்தில் வைக்குமாறு, இளைஞர் நீதிக்குழுமம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, பாரிமுனையில் உள்ள, ஆங்கிலோ இந்தியன் பள்ளியில், ஆசிரியையாக பணியாற்றியவர் உமா மகேஸ்வரி. கடந்த, 2012, பிப்.,9ம் தேதி, வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, உமா மகேஸ்வரியை, மாணவன் ஒருவன் கத்தியால் குத்தினான்; உமா மகேஸ்வரி இறந்தார். சம்பவத்தில் பிடிபட்ட மாணவனை, போலீசில் ஒப்படைத்தனர்.
புரசைவாக்கத்தில் உள்ள, சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கை, சென்னையில் உள்ள, இளைஞர் நீதிக் குழுமத்தின் தலைவரான லட்சுமி ரமேஷ் தலைமையிலான, மூன்று பேர் அமர்வு, விசாரித்தது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மாணவனை, இரண்டு ஆண்டுகளுக்கு, செங்கல்பட்டு, அரசு சிறப்பு இல்லத்தில் வைக்குமாறு, இளைஞர் நீதிக் குழுமம் நேற்று உத்தரவிட்டது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு, அனுபவம் வாய்ந்த உளவியல் ஆலோசகர்கள் மூலம், உளவியல் ரீதியான உதவியை வழங்கும்; யோகா, தியானம், கவுன்சிலிங்கில், மாணவன் ஈடுபடலாம்; அவ்வப்போது, மாணவனின் பெற்றோர் சென்று, பார்த்துக் கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டது.
நீதிபதி அறிவுரை : தீர்ப்பு கூறப்பட்ட போது, சம்பந்தப்பட்ட மாணவன், அவனது பெற்றோரை அழைத்த நீதிபதி, மாணவனுக்கு அறிவுரை கூறினார். அப்போது, அவர் கூறியதாவது:
தற்போது விதிக்கப்பட்டுள்ள, இரண்டு ஆண்டு என்பது தண்டனை அல்ல. உன்னை மேம்படுத்திக் கொள்ள கொடுக்கப்பட்ட வாய்ப்பு. சிறப்பு இல்லத்தில், தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். மன ரீதியான கவுன்சிலிங் வழங்கப்படும். அதை பயன்படுத்திக் கொண்டு நல்ல மனிதனாக வரவேண்டும்.
இவ்வாறு, நீதிபதி அறிவுரை கூறினார். தீர்ப்பளிக்கப்படும் நாள் என்பதால், மாணவனின் பெற்றோர், உமா மகேஸ்வரியின் குடும்பத்தார், அவருடன் பணியாற்றிய ஆசிரியர்கள், இளைஞர் நீதிக்குழும வளாகத்தில் குழுமியிருந்தனர். உமா மகேஸ்வரியின் தாயார் அமிர்தம் அம்மாள் கூறுகையில், "" அந்த பையன் தெரியாமல் செய்து விட்டான்; அவன் நல்லா இருக்கணும்,'' என்றார்.
உமா மகேஸ்வரியின் கணவர் ரவிசங்கர் கூறுகையில், ""மாணவன், தண்டிக்கப்பட வேண்டும் என்பது, எங்கள் விருப்பம் அல்ல. வருங்காலத்தில், இது போன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது. உமா மகேஸ்வரியின் மறைவால், எங்கள் குடும்பமே பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை வேறு யாருக்கும் வரக்கூடாது,'' என்றார்.
போலீசார் கெடுபிடி : இளைஞர் நீதிக் குழும வளாகத்தில், பத்திரிகையாளர்கள் குவிந்தனர். இதில், கேமரா குழுவினரை, வளாகத்தை விட்டு வௌ?யேற்றிய போலீசார், நிருபர்களிடமும் கெடுபிடி காட்டினர்.
பின், மாணவனின் பெயர், அடையாளம் போன்றவற்றை வௌ?யிடக்கூடாது என்ற நிபந்தனையோடு, நிருபர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தீர்ப்பு அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், செங்கல்பட்டு, அரசு சிறப்பு இல்லத்துக்கு மாணவன் அனுப்பப்பட்டான்.
தமிழ் நாட்டில் 32 மாவட்டங்களின் சுற்றுலா தலங்கள், மாவட்ட வாரியாக சுற்றுலா தலங்கள்.
தமிழ் நாட்டில் 32 மாவட்டங்களின் சுற்றுலா தலங்கள், மாவட்ட வாரியாக சுற்றுலா தலங்கள்......CLICK HERE
ALAGAPPA UNIVERSITY-B.ED PROGRAMME IN DISTANCE EDUCATION -
CLICK HERE-B.Ed Programme in Distance Education - Application Form and Prospectus Important Dates
Application Forms are issued from
|
07 – 04 - 2014
|
Last date for the issue and receipt of filled in Application Forms
|
09 – 05 - 2014
|
Date of Entrance Examination
|
17 – 05 - 2014
|
மத்திய அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு
மத்திய அரசின், 50 லட்சம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு, சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பின் படி, குழந்தைகள் கல்விச் செலவை திருப்பிக் கொடுக்கும் ஆண்டு உச்ச வரம்பு, இது வரை, 12 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இனிமேல், 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மாற்று திறனாளி பெண் ஊழியரின், குழந்தை பராமரிப்பு, மாதச் செலவுத்தொகை, 1,000 ரூபாயிலிருந்து, 1,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
அது போல், ஊழியர்களின், மாற்றுத் திறனாளி குழந்தையின் கல்விச் செலவுத் தொகையை திருப்பி கொடுப்பதற்கான ஆண்டு உச்சவரம்பு தொகை, 24 ஆயிரம் ரூபாயிலிருந்து, 36 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஜனவரியில், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி, 100 சதவீதமாக உயர்த்தப் பட்டது குறிப்பிடத்தக்கது. லோக்சபா தேர்தல், இறுதிகட்டத்தை நெருங்க, இன்னும், நான்கு நாட்களே உள்ள நிலையில், மத்திய அரசின், பணியாளர் நலத்துறை மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, தேர்தல் நடத்தை விதிமுறை களுக்கு எதிரானது என, எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்துள்ளன.
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மார்ச் 2014...இன்று காலை 10.00க்கு வெளியீடு
Government of Tamil Nadu
Directorate of Government Examinations
HSC Examination Results - March 2013 The results were made available at the following websites on 09/05/2013 by 10:00 Hrs
Directorate of Government Examinations
HSC Examination Results - March 2013 The results were made available at the following websites on 09/05/2013 by 10:00 Hrs
Candidate has to provide his Registration No and Date of birth in DD/MM/YYYY format to see the result
http://tnresults.nic.in |
http://dge1.tn.nic.in |
http://dge2.tn.nic.in |
http://dge3.tn.nic.in ( WAP Compatible ) |
Result by SMS : Send "tnboard<blank>regno,date_of_birth" to : 09282232585 (or) +919282232585
(date_of_birth in DD/MM/YYYY format only )
(date_of_birth in DD/MM/YYYY format only )
Example: Send “tnboard 123456,01/04/1995” to 09282232585 where six digit Regno is ‘123456’ and DOB is ‘01/04/1995’
மே 6: கல்வியாளர் மரியா - நினைவு தின சிறப்பு பகிர்வு
மரியா மாண்டிசோரி : குழந்தைகள் பள்ளிக்கு போவதற்கு ஏன் எக்கச்சக்கமாக பயப்படுகிறார்கள் என்று நாம் யோசித்து இருக்கிறோமா ? பள்ளிகள் குழந்தைகளை பயமுறுத்துகிற விஷயமாகவே பெரும்பாலும் இருக்கிறது. ஆனால்,கல்விக்கூடங்கள் குழந்தைகள் ஆனந்தமாக வந்து சேர்ந்து கற்றுத்தேர்கிற இடமாக மாற்ற முடியும் என்று நிரூபித்தவர் மரியா மாண்டிசோரி. மருத்துவப்படிப்பு படிக்கப்போனார் அவர்.
அங்கே அவரைப்பெண் என்பதால் இழிவாக நடத்தினார்கள். பாடங்களை சொல்லித்தரக்கூட ஆசிரியர்கள் மறுத்தார்கள். விலங்குகளை அறுக்கிற பொழுது தனியாக ஒரு அறையில் விட்டு அறுக்க வைத்தார்கள். மனம் வெறுத்தார் அவர். இருந்தாலும் மருத்துவப்பட்டம் பெற்று வெளியே வந்தார். உளவியலில் தன்னுடைய ஆர்வத்தை செலுத்தினார்.
கல்வி சார்ந்த இத்தாலியில் ஐம்பது ஏழைப்பிள்ளைகளுக்கு கண்காணிப்பாளராக அவர் ஆனார்.. பிள்ளைகளை மிரட்டுவதோ,அடிப்பதோ பிடிக்காத அன்பான நபர் அவர். அங்கே இருந்த பிள்ளைகளின் பொழுதை எப்படி உற்சாகம் நிறைந்ததாக ஆக்குவது என்று அவர் யோசித்தார்.
நோட்டு புத்தகங்களுக்கு பதில் பொம்மைகளை அவர்களின் கையில் கொடுத்தார். எழுத்துக்களை சொல்லித்தருவதற்கு முன்னர் அவற்றை உணர்கிற வகையில் பொருட்களை காட்டினார். வீட்டில் குழந்தைகள் வேலையே செய்ய விடக்கூடாது என்று இருந்த பொழுது எளிய செயல்களை செய்ய வைத்து பிள்ளைகளை சுறுசுறுப்பாக வைத்துக்கொண்டார்.
மாணவர்கள் ஆசிரியர்களை கவனிக்க வைக்க நாம் முயலக்கூடாது,ஆசிரியர் மாணவரை கவனித்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னவர் அப்படியே பிள்ளைகளை நடத்தினார். வண்ண அட்டைகள்,ஒலி எழுப்பும்கருவிகள்,ஓவியங்கள்,வண்ணத்தாள்கள், புட்டிகள் என்று குழந்தைகளின் கற்றலை வண்ணமயமானதாக இந்த வகுப்புகள் மாற்றின. அவரின் கல்விமுறையில் படித்து சாதித்தவர்கள் தான் கூகுள் மற்றும் அமேசான் நிறுவனர்கள் ஆகியோர் இவரின் கல்விமுறையில் படித்தவர்களே. இன்று உலகம் முழுக்க இருபத்தி இரண்டாயிரம் பள்ளிகள்,நூற்றி பத்து நாடுகள் என்று விரிந்திருக்கும் அவரின் கனவு குழந்தைகளுக்கானது இன்று உலகம் முழுக்க இருபத்தி இரண்டாயிரம் பள்ளிகள்,நூற்றி பத்து நாடுகள் என்று விரிந்திருக்கும் அவரின் கனவு குழந்தைகளுக்கானது இல்லையா?
தமிழகம் ஏழை மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு: தனியார் பள்ளிகள் சம்மதம்
நடப்பு கல்வியாண்டு சேர்க்கையில் 25% ஏழை மாணவர்களுக்கு வழங்க தனியார் பள்ளிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. ஏழை மாணவர்களை சேர்க்க மே 18ம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் மாநில மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் பிச்சை பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த, கடந்த 2 வருடங்களாக நிதியுதவி அளிக்காததால், பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர் எடுத்துரைத்தனர். மேலும் அரசு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகை கிடைக்காததால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக விளக்கம் அளித்த மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர், மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியை இதுவரை வழங்கவில்லை என்று தெரிவித்தார். இருப்பினும் இந்த திட்டத்திற்கு வேண்டிய நிலுவைத் தொகை 3 மாதங்களில் வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். இதனால் ஏழை மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீட்டை தனியார் பள்ளிகள் தொடர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில், நடப்பு கல்வியாண்டு சேர்க்கையில் 25 விழுக்காட்டை ஏழை மாணவர்களுக்கு வழங்க தனியார் பள்ளிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. இதையடுத்து சுயநிதி பள்ளிகளில் ஏழை மாணவரை சேர்க்க மே 18ம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் அந்தந்த பள்ளியில் மட்டுமின்றி கல்வித்துறை அலுவலகத்திலும் விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஆக்கம் அகாடமியில் தமிழ்க்குடில் அறக்கட்டளை சார்பில் ‘ஆங்கிலம் எளிதில் கற்கலாம்’ நூல் வெளியீட்டு விழா
ஜெயங்கொண்டம் தமிழ்குடில் அறக்கட்டளையின் நிறுவனர் ரவிசங்கர் தலைமையில் நடைபெற்றது.ஆக்கம் அகாடமி இயக்குநர் பழனிவேல் வரவேற்றார். ஜெயங்கொண்டம் சார்பு நீதிபதி செம்மல் புத்தகத்தை வெளியிட்டார். அதனை டாக்டர் தமிழ்பித்த ஆதீனம் பெற்றுக் கொண்டு பேசுகையில் நூல் ஆசிரியர் ராஜா மிகவும் எளிமையான முறையில் இந்த புத்தகத்தை மிகவும் சிறப்பான முறையில் அனைத்து கீழ்த்தட்டு மாணவ, மாணவியர்களும் எளியமுறையில் பயன் பெறும் அளவிற்கு தயாரித்துள்ளார்.நீதிபதி செம்மல், தமிழ்பித்த ஆதீனம், ராஜமாணிக்கம் ஆகியோர் நூல் ஆசிரியர் ராஜாவை வாழ்த்தி பேசினார்கள். நிறைவாக வக்கீல் கவுதமன் நன்றி கூறினார்.
வேட்பாளர்களை விட நோட்டாவில் அதிக வாக்குகள் பதிவாகியிருந் தால் 2–வது இடம் பிடித்த வேட்பாளர் வெற்றி பெற்ற வராக அறிவிக்கப்படுவார்-பிரவீன்குமார்
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–தமிழ்நாடு முழுவதும் கடந்த மாதம் 24–ந் தேதி பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 16–ந் தேதி எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு கோவையில் இன்று பயிற்சி நடைபெற்றது.தேர்தல் தொடர்பாக இது வரை 3 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் 1200 வழக்குகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள வழக்குகளுக்கு வருகிற 16–ந் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.இதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தேர்தல் பிரசாரத்தின்போது ரூ.10 லட்சத்துக்குறைவான பணம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தால் பணத்துக்கு உரியவர்கள் அதற்கான கணக்கை தேர்தல் ஆணையத்திடம் காண்பித்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம். ரூ.10 லட்சத்துக்கு மேல் பணம் இருந்தால் அது வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். அவர்கள் அதற்கான ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். தேர்தல் செலவுகள் தொடர்பான கணக்கை வாக்கு எண்ணிக்கை முடிந்த 30 நாட்களுக்குள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும்.அந்த கணக்கில் ஏதாவது முறைகேடுகள் இருந்தால் அவர்கள் வெற்றி பெற்றவராக இருந்தாலும் அவர்களது வெற்றி தகுதி நீக்கம் செய்யப்படும். மேலும் தேர்தலில் நிற்க தடை விதிக்கப்படும்.சிவகங்கையில் கடந்த முறை மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது போல் இந்த முறை ஏற்படாமல் இருக்க ஒவ்வொரு சுற்றின் போதும் ஏஜென்டுகளிடம் கையெழுத்து பெறப்படும். அதன்பின்னரே அடுத்த சுற்று தொடங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.பின்னர் அவரிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:–கேள்வி:–வாக்கு எண்ணிக்கை இணையதளத்தில் ஒளிபரப்பப்படுமா?பதில்: வாக்கு எண்ணிக்கையை இணையதளத்தில் ஒளிபரப்புவதில் சட்டச்சிக்கல் நிறைய உள்ளன. எனவே வாக்கு எண்ணிக்கையை இணைய தளத்தில் ஒளிபரப்புவது சாத்திய மில்லை.கேள்வி : தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்படுமா?பதில்:– தேர்தல் முடிவுகள் வழக்கத்தை விட தாமதமாக தான் அறிவிக்கப்படும். கடந்த முறையை விட 25 சதவீதம் வாக்குச் சாவடிகள் அதிகமாக உள்ளது. அதேபோல் வேட்பாளர்களும் அதிக அளவில் உள்ளனர். இதன் காரணமாக ரவுண்டுகள் அதிகம் இருக்கும், எனவே வழக்கத்தை விட 1முதல் 2 மணி நேரம் தாமதம் ஏற்படும்.கேள்வி:– 144 தடை உத்தரவின் பயன் என்ன?பதில்:– பணப்பட்டு வாடாவை தவிர்க்கவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 2 நாட்களில் ரூ.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 83 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த தடை உத்தரவு மிகுந்த பயன் அளிக்கும் வகையில் இருந்தது.கேள்வி : நோட்டாவில் அதிக வாக்குகள் பதிவாகியிருந்தால் அங்கு முடிவு எப்படி அறிவிக்கப்படும்?பதில் :–வேட்பாளர்களை விட நோட்டாவில் அதிக வாக்குகள் பதிவாகியிருந் தால் 2–வது இடம் பிடித்த வேட்பாளர் வெற்றி பெற்ற வராக அறிவிக்கப்படுவார்.கேள்வி:– 90 சதவீத வாக்குகள் பெற்ற வாக்குச் சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்தப்படுமா?பதில்: பல்லடம், சூலூரில் 90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இங்கு மறு வாக்கு பதிவு நடத்த சாத்தியமில்லை. ஏதேனும் புகார்கள் வந்தால் பரிசீலிக்கப்படும்.கேள்வி : நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?பதில் : நான் ஓய்வு பெற இன்னும் 7 வருடங்கள் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
01/05/2014
ஆசிரியர்களே உங்கள் பதவி ஊயர்வு, பணிமாறுதல் கையூட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளதா?
கையூட்டு கொடுத்து பணி மாறுதல் பெற நினைக்கும் ஆசிரியர்களுக்கு வின் எச்சரிக்கை அறிவிப்பு
ஏற்கனவே இலஞ்ச ஒழிப்பு காவல் துறையில் கொடுத்த புகார் ( 1000 கோடி நிர்வாக பணி மாறுதல் ஊழல் ) வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது . அதன் பேரில் தற்போது அனைத்து கல்வித்துறை அலுவலங்களிலும் 2006 முதல் 2011 வரை கையூட்டு கொடுத்து பணி மாறுதல் பெற்றவர்கள் விபரம் சேகரிக்கப்படுகிறது ..
தயவு செய்து இனிமேல் கையூட்டு கொடுத்து பணி மாறுதல் பெற வேண்டாம்-எச்சரிக்கை
அரசு ஊழியர் ஜிபிஎப் வட்டி 8.7% ஆக நீடிக்கும்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பொது வருங்கால வைப்பு நிதியின் (ஜி.பி.எஃப்) வட்டி விகிதம் இந்த ஆண்டும் 8.7 சதவீதமாகவே இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் செலவினங்கள் துறைச் செயலாளர் உதயச்சந்திரன் திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவு: பொது வருங் கால வைப்பு நிதியின் வட்டியை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி, அதன் பயனாளி களுக்கு, பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 8.7 சதவீதமாகத் தொடரும். 2014-15 நிதியாண் டிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த ஜி.பி.எஃப் வட்டி விகிதம் இந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
பள்ளிகளுக்கு விடுமுறை : மீண்டும் ஜூன் 2ஆம் தேதி திறப்பு
கோடை விடுமுறை விடப்பட்டுள்ள பள்ளிகள் மீண்டும் வரும் ஜூன் மாதம் 2ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் அரசு உயர்நிலைப்பள்ளிகள், அரசு மேல்நிலைப்பள்ளிகள் அனைத்துக்கும் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடக்கப்பள்ளிகளுக்கு மட்டும் நாளை (வியாழக்கிழமை) மே 1ஆம் தேதி முதல் விடுமுறை விடப்பட உள்ளது.
விடுமுறைக்கு பின்னர் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் அனைத்தும் ஜூன் மாதம் 2ஆம் தேதி திறக்கப்படுகின்றன. அப்போது 1-வது வகுப்பு முதல் பிளஸ்-2 வரை (11-வது வகுப்பு தவிர) அனைத்து வகுப்புகளும் அன்றைய தினம் தொடங்கப்பட உள்ளன.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு மே 23ஆம் தேதி வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. தேர்வு முடிவு வந்த அன்றே மதிப்பெண்ணை இணையதளத்தில் ஜெராக்ஸ் எடுத்து விடலாம். அதைக்கொண்டு பிளஸ்-1 சேரும் பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம்.
மாணவர் சேர்க்கை முடிந்து ஜூன் மாதம் 16ஆம் தேதி பிளஸ்-1 வகுப்புகள் தொடங்குகின்றன. சில பள்ளிகளில் ஜூன் மாதம் முழுவதும் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை நடந்து கொண்டே இருக்கும். கோடை விடுமுறைக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கும் அன்றே அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் பாடப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. மேலும் 2 செட் சீருடைகளும் வழங்கப்பட உள்ளது.
கல்வித் தகுதியை தமிழ் வழியில் படித்திருந்தால் பணியில் சலுகை: ஐகோர்ட் கிளை உத்தரவு
தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் சட்டப்படி, ஒரு பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை, தமிழ் வழியில் படித்திருந்தால் போதுமானது. முதுகலை பட்டம் தமிழ் வழியிலும், இளங்கலை படிப்பை ஆங்கில வழியில் முடித்திருந்தாலும், ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது,' என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
கமுதி நீராவியை சேர்ந்த மாரியம்மாள், ஏற்கனவே தாக்கல் செய்த மனு: தமிழ் வழியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, எம்.காம்.,- பி.எட்., தேர்ச்சியடைந்தேன். ஆங்கில வழியில் பி.காம்., தேர்ச்சியடைந்தேன். முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்காக, 2012--13ல் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நடத்திய தேர்வில் பங்கேற்றேன். 'கட்-ஆப்' மதிப்பெண் 92. எனக்கு 102 மதிப்பெண் கிடைத்தது. டி.ஆர்.பி., தரப்பில், 'நீங்கள் முதுகலை (எம்.காம்.,) தமிழ் வழியிலும், இளங்கலை (பி.காம்.,) ஆங்கில வழியிலும் படித்துள்ளதால், பணி நியமனம் வழங்க முடியாது,' என நிராகரித்தனர். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் பணி வழங்க உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார். தனி நீதிபதி: தமிழ் வழியில் படித்தவர்களுக்கான சிறப்புச் சலுகையை, மனுதாரருக்கு வழங்க வேண்டும். முதுகலை பட்டம் தமிழ் வழியிலும், இளங்கலை படிப்பை ஆங்கில வழியில் முடித்திருந்தாலும், மனுதாரரின் பிற தகுதிகள் திருப்தி அளிக்கும்பட்சத்தில், அவருக்கு டி.ஆர்.பி., பணி வழங்க வேண்டும், என்றார். இதை எதிர்த்து அகிலா உட்பட 6 பேர்,' தனி நீதிபதியின் உத்தரவுப்படி ஏற்கனவே, தேர்வு செய்யப்பட்டவர்களின், ஒட்டுமொத்த பட்டியலையும் டி.ஆர்.பி., மாற்றியமைத்தது. இதில், மாரியம்மாளின் பெயரை சேர்த்து வெளியிட்டது. இதனால் ஏற்கனவே, தேர்வு பெற்ற எங்களது பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டது. எங்களுக்கு பணி கிடைக்கவில்லை. தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,' என மேல்முறையீடு செய்தனர். நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி கொண்ட பெஞ்ச் முன், மனு விசாரணைக்கு வந்தது. அரசு சிறப்பு வக்கீல் சண்முகநாதன், மாரியம்மாள் சார்பில் வக்கீல் ஐசக்மோகன்லால் ஆஜராகினர்.
நீதிபதிகள்:
தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் சட்டத்தை, அரசு 2010 ல் அமல்படுத்தியது. அதன்படி, ஒரு பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை, தமிழ் வழியில் படித்திருந்தால் போதுமானது. இவ்வழக்கைப் பொருத்தவரை, முதல் வகுப்பிலிருந்து பட்ட மேற்படிப்பு மற்றும் பி.எட்.,வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே, சலுகை வழங்குவதா? அல்லது பட்டமேற் படிப்பு, பி.எட்., மட்டும் தமிழ் வழியியல் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதா? என தீர்மானிக்க வேண்டியுள்ளது. இவ்வழக்கில், ஆசிரியர் பணிக்கு தகுதியாக, மாரியம்மாள் தமிழ் வழியில் எம்.காம்.,மற்றும் பி.எட்., படித்துள்ளார். சட்டம் அமலாவதற்கு முன் பலர் தமிழ், ஆங்கில வழியில் படித்திருக்கலாம். அமலானபின், தமிழ் வழி கல்விக்கு மாறியிருக்கலாம். இவ்வாறு தமிழ் வழிக்கு மாறி, படித்ததால் பணி வழங்க முடியாது என கூற முடியாது. தனி நீதிபதியின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது, என்றனர்.
கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் ஒன்றாம் வகுப்பில் இருந்துதான் கல்வி கட்டணம் கிடைக்கும்
மும்பையில், கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பில் இருந்து தான் கல்விக்கட்டணம் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் ஒவ்வொரு பள்ளியும் 25 சதவீத இடங்களை அரசுக்கு ஒதுக்கவேண்டும். இந்த இடங்களை அரசு நிர்வாகம் நிரப்பும். தற்போது மும்பையில் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் ஆன்லைனில் நிரப்பப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் நர்சரியிலேயே சேர்க்கப்பட்டு விடுகின்றனர். ஆனால் மாநில துவக்க கல்வி இயக்குனர் மகாவீர் மானே இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில், கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பில் இருந்து தான் கல்வி கட்டணம் பள்ளிகளுக்கு அரசால் வழங்கப்படும்.
நர்சரி, ஜூனியர் கேஜி, சீனியர் கேஜி வகுப்புகளுக்கு பள்ளிகள் இலவசமாக கல்வி கற்றுக்கொடுக்கவேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவுக்கு கல்வி நிறுவனங்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு எப்படி தங்களால் இலவச கல்வி கொடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக மிகப்பெரிய கல்வி நிறுவனம் ஒன்றின் தலைவர் கூறுகையில், இந்த ஆண்டு கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் 46 மாணவர்களை சேர்த்துள்ளோம்.
இதில் ஒரு குழந்தைக்கு ஆண்டுக்கு 22 ஆயிரம் கட்டணம் வசூலிக்கிறோம். ஆனால் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு 10.12 லட்சம் ரூபாய் செலவு பிடிக்கும். இதை எப்படி பள்ளிகள் தங்களது சொந்த பணத்தில் இருந்து போட முடியும். அரசு ஆரம்பத்தில் இருந்தே கல்வி கட்டணத்தை கொடுக்கவேண்டும் என்று தெரிவித்தார். இது குறித்து மகாவீர் மானேயிடம் கேட்டதற்கு, கல்வி நிறுவனங்களின் கவலை குறித்து மாநில கல்வி செயலாளருடன் பேசி முடிவு செய்யப்பட இருக்கிறது.
மாநில அரசிடம் இது தொடர்பாக விளக்கம் கோரப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே முன்னதாக மானேயை சில தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் சந்தித்து கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்களிடம் 9 ஆயிரம் நன்கொடையும், 6 ஆயிரம் கல்வி கட்டணமும் கேட்பதாக புகார் செய்தனர். அவர்களின் புகாரை தொடர்ந்தே புதிய உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. வரும் 28ம் தேதி வரை ஆன்லைனில் அட்மிஷன் தொடர்ந்து நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரட்டைப் பட்டம் -உச்ச நீதிமன்றத்தில் மனுதாரராக ஆஜராக போவதில்லை என மூன்று வருட பட்டப்படிப்பு ஒருங்கணைபாளர் அதிரடியாக அறிவிப்பு
உச்ச நீதிமன்றத்தில் மனுதாரராக ஆஜராக போவதில்லை என மூன்று வருட பட்டப்படிப்பு ஒருங்கணைபாளர் தெரிவித்துள்ளனர்.மூன்று வருட பட்டப்படிப்பு படித்தவர்கள் போதுமான அளவிற்கு ஒத்துழைப்பு
கொடுக்காததால் உடனடியாக விலகுகிறோம் என தெரிவித்து உள்ளனர்.உச்சநீதிமன்றத்தில் எந்த விதமான தீர்ப்பு வந்தாலும் அதனை இன்முகத்துடன் வரவேற்றுகின்றோம் .மேலும் இவ்வழக்கு தொடர்பாக இனி எங்களை தொடர்பு கொள்ள வேண்டாம் எனவும் இதுவரை ஒத்துழைப்பு நல்கிய நல் இதயங்களுக்கு நன்றியும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று தெரிவித்துள்ளனர்.
புதிய வெயிடேஜ் முறை அறிமுகம் - TNTET மூலம் ஆசிரியர் பணி தேர்விற்கு-நீதிமன்றம் உத்தரவு புதிய வெயிடேஜ் முறை அறிமுகம்
Paper II க்கு வெயிடேஜ் மதிப்பெண் கண்டுபிடிப்பது எப்படி?
மாதிரி வழிமுறை
12 ஆம் வகுப்பில் 84% எனில் அதற்கு வெயிட்டேஜ் 8.4.
இளநிலைப் பட்டப்படிப்பில் 58% எனில் 58/100 * 15 = 8.7.
பி . எட். இல் 71% எனில் 71/100 * 15 = 10.65
TNTET இல் 90 எனில் 90/150 * 60 = 36.
எனவே மொத்தமாக.. 63.75
Paper I க்கு வெயிடேஜ் மதிப்பெண் கண்டுபிடிப்பது எப்படி ?
மாதிரி வழி முறை
(+2 % mark * 15)/100+(dted % mark *25)/100+(TNTET mark*60)/150= உங்கள் வெயிடேஜ்.
இடை நீக்கம் ஆன அரசு ஊழியருக்கும் அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு
சம்பளம் பெறாத அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு சமீபத்தில் அகவிலைப்படியை உயர்த்தியது. ஆனால் ஊழியக் குழுவின் பரிந்துரையில் முரண்பாடு உள்ளவர்கள், ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானவர்கள், பணியின்போதே இடை நீக்கம் செய்யப்பட்டவர்கள் ஆகியோருக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படாமல் இருந்தது. இதுபோன்ற காரணங்களால் சம்பளம் பெறாதவர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை அரசு தற்போது அறிவித்துள்ளது. தமிழக நிதித்துறை செயலாளர் இதற்கான உத்தரவை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஒய்வூதியதாரர்கள் அகவிலைப்படி 90 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தப்பட்டது. ஆனால் ஊதியம் பெறுபவர்களுக்கு மட்டுமே இது பொருந்துவதாக இருந்தது. இப்போது சம்பளம் பெறாதவர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதால் ஜனவரி 1ம் தேதியில் இருந்து கணக்கிட்டு அவர்களும் அகவிலைப்படி உயர்வு பெறுகிறார்கள். இதன்மூலம் அவர்களுடைய மொத்த சம்பளம் அகவிலைப் படியையும் சேர்த்து 183 சதவீதத்தில் இருந்து 200 சதவீதம் ஆகிறது. அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், பள்ளி அலுவலகங்கள், உள்ளாட்சி மன்ற அலுவலகங்கள், பல்கலைக்கழக மானிய குழு அரசு மற்றும் மானியம் பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள், சத்துணவு திட்ட அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சமையல் உதவியாளர்கள், பஞ்சாயத்து உதவியாளர்கள், கிளார்க்குகள் ஆகியோருக்கும் இந்த அகவிலைப்படி உயர்வு பெருந்தும் என்று தமிழக அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு உத்தரவு வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி துவக்கம்
தமிழகம் முழுவதும் முப்பருவ கல்வி 2012 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முப்பருவ கல்வி முறை தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட்டது. முப்பருவ கல்வி முறை தமிழ்கல்வி முறையில் தான் செயல்பட்டு வருகிறது. இந்த கல்வி ஆண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் முப்பருவ கல்வி முறையில் ஆங்கில வழிக்கல்வி திட்டத்தை கட்டாயமாக செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏழை மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் 2013ம் ஆண்டு ஆங்கிலவழி முப்பருவ கல்வி திட்டம் தமிழகம் முழுவதும் கொண்டுவரப்பட்டது
. அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் தனியார் பள்ளிகளில் கட்டண கொள்ளையில் இருந்து ஏழை மக்களை பாதுகாக்க முடியும். அரசு பள்ளிகளில் நடுநிலைப்பள்ளியில் ஆங்கில வழி கல்வியை அரசு கொண்டு வந்ததால் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க தொடங்கும். இத்திட்டத்தில் முதல் பருவத்தேர்வு, இரண்டாம் பருவத்தேர்வு, மூன்றாம் பருவத்தேர்வு என்று மூன்று பருவத்தேர்வுகள் நடத்தப்படும் என்று தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக, 8ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
தேர்வுத்துறை இயக் குனர், தேவராஜன் அறிவிப்பு: இன்றைய தேதியில், 12 வயது, 6 மாதங்களை பூர்த்தி செய்தவர்கள், நேரடியாக, 8ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். www.tndge.in என்ற இணையதளத்தில் தெரிவித்துள்ள, சிறப்பு மையங்களுக்கு, நேரில் சென்று, விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணம், 125 ரூபாய், விண்ணப்ப கட்டணம், 50 ரூபாய் செலுத்த வேண்டும். முழுமையான விவரங்களுக்கு, தேர்வுத் துறை இணையதளத்தை பார்க்கலாம். இவ்வாறு, அவர் கூறி உள்ளார்.
புகையிலை நிறுவனங்களின் போட்டிகளில் பங்கேற்க, பரிசுகளைப் பெற பள்ளிகளுக்குத் தடை
புகையிலை நிறுவனங்கள் அளிக்கும் பரிசுப் பொருள்களைப் பள்ளிகள் பெறுவதற்கு தடை விதித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களை புகையிலை பழக்கத்தில் இருந்து காக்க, கல்வி நிறுவனங்களைச் சுற்றிலும் ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு புகையிலைப் பொருள்களை விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
செல்வாக்கு மிக்க உள்ளூர் புகையிலை நிறுவனங்கள் சில தங்கள் பகுதியிலுள்ள பள்ளிகளில் நடைபெறும் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழாக்களுக்குத் தேவையான பரிசுப் பொருள்களை வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளன.
இந்நிலையில், புகையிலை நிறுவனங்கள் வழங்கும் பரிசுப் பொருள்களைப் பள்ளிகள் பெறுவதற்கும் கல்வித்துறை தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு தொடக்கக் கல்வித்துறை இயக்குநர், அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
புகையிலை நிறுவனங்களால் பள்ளிகளில் போட்டிகள் நடத்தப்படுவதையும், அந்நிறுவனங்களால் வழங்கப்படும் பரிசுப் பொருள்களையும் பள்ளிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மேலும் புகையிலை நிறுவனங்களால் நடத்தப்படும் மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான போட்டிகளிலும் மாணவர்கள் பங்கு பெற அனுமதிக்க கூடாது. இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)