திருக்குறள்

01/05/2014

புகையிலை நிறுவனங்களின் போட்டிகளில் பங்கேற்க, பரிசுகளைப் பெற பள்ளிகளுக்குத் தடை

புகையிலை நிறுவனங்கள் அளிக்கும் பரிசுப் பொருள்களைப் பள்ளிகள் பெறுவதற்கு தடை விதித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


மாணவர்களை புகையிலை பழக்கத்தில் இருந்து காக்க, கல்வி நிறுவனங்களைச் சுற்றிலும் ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு புகையிலைப் பொருள்களை விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

செல்வாக்கு மிக்க உள்ளூர் புகையிலை நிறுவனங்கள் சில தங்கள் பகுதியிலுள்ள பள்ளிகளில் நடைபெறும் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழாக்களுக்குத் தேவையான பரிசுப் பொருள்களை வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளன.

இந்நிலையில், புகையிலை நிறுவனங்கள் வழங்கும் பரிசுப் பொருள்களைப் பள்ளிகள் பெறுவதற்கும் கல்வித்துறை தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு தொடக்கக் கல்வித்துறை இயக்குநர், அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

புகையிலை நிறுவனங்களால் பள்ளிகளில் போட்டிகள் நடத்தப்படுவதையும், அந்நிறுவனங்களால் வழங்கப்படும் பரிசுப் பொருள்களையும் பள்ளிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மேலும் புகையிலை நிறுவனங்களால் நடத்தப்படும் மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான போட்டிகளிலும் மாணவர்கள் பங்கு பெற அனுமதிக்க கூடாது. இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment