திருக்குறள்

01/05/2014

பள்ளிகளுக்கு விடுமுறை : மீண்டும் ஜூன் 2ஆம் தேதி திறப்பு

கோடை விடுமுறை விடப்பட்டுள்ள பள்ளிகள் மீண்டும் வரும் ஜூன் மாதம் 2ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் அரசு உயர்நிலைப்பள்ளிகள், அரசு மேல்நிலைப்பள்ளிகள் அனைத்துக்கும் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடக்கப்பள்ளிகளுக்கு மட்டும் நாளை (வியாழக்கிழமை) மே 1ஆம் தேதி முதல் விடுமுறை விடப்பட உள்ளது.

விடுமுறைக்கு பின்னர் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் அனைத்தும் ஜூன் மாதம் 2ஆம் தேதி திறக்கப்படுகின்றன. அப்போது 1-வது வகுப்பு முதல் பிளஸ்-2 வரை (11-வது வகுப்பு தவிர) அனைத்து வகுப்புகளும் அன்றைய தினம் தொடங்கப்பட உள்ளன.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு மே 23ஆம் தேதி வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. தேர்வு முடிவு வந்த அன்றே மதிப்பெண்ணை இணையதளத்தில் ஜெராக்ஸ் எடுத்து விடலாம். அதைக்கொண்டு பிளஸ்-1 சேரும் பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம்.

மாணவர் சேர்க்கை முடிந்து ஜூன் மாதம் 16ஆம் தேதி பிளஸ்-1 வகுப்புகள் தொடங்குகின்றன. சில பள்ளிகளில் ஜூன் மாதம் முழுவதும் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை நடந்து கொண்டே இருக்கும். கோடை விடுமுறைக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கும் அன்றே அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் பாடப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. மேலும் 2 செட் சீருடைகளும் வழங்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment