திருக்குறள்

12/08/2013

"ஒயிட்னர்" போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்; கண்காணிப்பு அவசியம்

பெரியகுளம்: தேனி மாவட்டத்தில், மாணவர்கள் சிலர் "ஒயிட்னர்" போதைக்கு அடிமையாகி உள்ளனர். பெற்றோர், ஆசிரியர், போலீசார் கண்காணித்து இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேனி மாவட்டத்தில் ஜெனரல் ஸ்டோர், மளிகைக் கடைகளில் "ஒயிட்னர்" விற்கப்படுகின்றது. 30 மி.லி., பாட்டில் 35 ரூபாய். பேனாவில் எழுதப்படும் தவறான எழுத்துக்களை அழிப்பதற்கு "ஒயிட்னர்" பயன்படுத்தப்படுகிறது. தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் "ஒயிட்னரை" போதைக்காக பயன்படுத்தப்படுத்தி வருகின்றனர்.

"ஒயிட்னர்" பாட்டில் மூடியை கழற்றிவிட்டு, பத்து நிமிடம் மூக்கால் நுகர்ந்து பார்கின்றனர். சிலர், குடிநீரில் கலந்து குடிக்கின்றனர். இதனால் ஒரு மணி நேரம் வரை போதையில் இருக்கின்றனர். இவர்கள், பெரியகுளம் வராகநதி கரையோரப்பகுதிகளில், கும்பலாக நின்று கொண்டு ஒயிட்னரை பயன்படுத்துகின்றனர்.

அலுவலக பயன்பாட்டிற்கு வாங்குவதை விட மாணவர்கள், போதைக்காக வாங்குவது அதிகரித்துள்ளது. இதை பயன்படுத்தி, சில கடைக்காரர்கள் ஒயிட்னரை, இரு மடங்கு விலைக்கு விற்கின்றனர்.
மாணவர்கள் ஒயிட்னரை பயன்படுத்துகிறார்களா, என ஆசிரியர்கள் கண்காணித்து, பெற்றோர்களிடம் கூற வேண்டும். ஒயிட்னர் போதையால் மூளையில் ரத்தக்குழாய்கள் பலகினமாகிவிடும். ஞாபகசக்தியை இழக்க நேரிடும், தொடர்ந்து உபயோகப்படுத்தினால் உயிருக்கே ஆபத்தாக முடியும், என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

பாதை மாறும் போதை மாணவர்களை, பெற்றோர், ஆசிரியர்கள், காவல்துறையினர் கண்காணித்து இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

No comments:

Post a Comment