திருக்குறள்

12/08/2013

7அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, வரும் செப்டம்பர்25-ஆம் தேதி தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சென்னைமன்றோ சிலையிலிருந்து கோட்டையை நோக்கி பேரணி

7அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சென்னைமன்றோ சிலையிலிருந்து கோட்டையை நோக்கி பேரணி நடத்தப்படஉள்ளதாக உலக கல்வி அமைப்பின் துணைத் தலைவரும், அகில இந்திய பொதுச்செயலருமான சு. ஈசுவரன் தெரிவித்தார். 

ஆசிரியர் கூட்டணியின் தொடர் மறியல் போராட்ட ஆயத்த விளக்கக் கூட்டத்தில்சிறப்புரையாற்ற வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

மத்திய அரசு6-ஆவது ஊதியக் குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ள ஊதியம்போல் தமிழ்நாடு அரசும், இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.இந்த ஊதியக் குழுவில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து சலுகைகளையும் 1.1.2006 ஆம் தேதி முதல் வழங்க வேண்டும். 
ஏற்கனவே 2ஆண்டுகள் கல்வியியல் கல்வி கற்று ஆசிரியராகத் தேர்வு பெற்றவர்களுக்கு மீண்டும்தகுதித் தேர்வு என்பது தேவையற்றது. எனவே ஆசிரியர் தகுதித் தேர்வைஉடனடியாக ரத்து செய்து, வேலை வாய்ப்பக முன்னுரிமைப்படி ஆசிரியர்நியமனங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.
நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் போது நடுநிலைப் பள்ளித் தலைமைஆசிரியர்களை தலைமை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்,பங்களிப்புஓய்வூதியத் திட்டத்தை முற்றிலும் ரத்து செய்திட வேண்டும், பகுதிநேரதொழில்கல்வி சிறப்பாசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக நிலை உயர்த்திடவேண்டும்,என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணிநடத்தப்படும்.

No comments:

Post a Comment