திருக்குறள்

12/08/2013

அரியலூர் மாவட்ட விளையாட்டு வீரர்கள் ஊக்கத்தொகை பெற அழைப்பு

அரியலூர் மாவட்டத்தில் 2013,2014ம் கல்வி யாண்டில் தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரி, பல் கலைக் கழகங்களில் பயிலும் தகுதியுடைய விளையாட்டு வீரர், வீராங்கனைகள் ஊக்க உதவித் தொகை பெற வரும் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் செல்வகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரியலூர் மாவட்டத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி, கல்லூரி, பல்கலை. விளை யாட்டு வீரர்கள் விளை யாட்டு ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம். ஊக்க உதவித் தொகையாக உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி விளையாட்டு வீரர்களுக்கு ரூ.10,000, கல்லூரி, பல்கலைக்கழக விளை யாட்டு வீரர்களுக்கு ரூ.13,000 வழங்கப்பட உள்ளது. 1.7.2012 முதல் 30.6.2013 வரையிலான கால கட்டத்தில் விளையாட்டுத் துறையில் வெற்றிகளை பெற்று தகுதியும், திறனுமுடைய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மேலும், இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தேசிய அளவிலான பள்ளி விளையாட்டுக் குழுமம், அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கழகங்கள், இந்திய விளையாட்டு குழுமம் நடத்தும் போட்டிகள், அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இதற்கு, அரியலூர் மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் இருந்து உரிய விண்ணப்பத் தொகை யினை செலுத்தி விண்ணப்பம் பெற்றுக் கொள்ள லாம். இணையதளம் மூலம் பெறப்படும் விண்ணப்பத்தினை, விண்ணப்ப விலையான ரூ.10ஐ உறுப்பினர் செயலர், தமிழ் நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையம், சென்னை என்ற பெயரில் அஞ்சல் ஆணையாகவோ அல்லது வங்கி வரைவோலையாகவோ பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிடையாக வரும் 31ம் தேதிக்குள் அரியலூர் மாவட்ட விளையாட்டு அலுவலரிடம், தக்க அசல் சான்றிதழ், நகல் ஆகியவற்றுடன் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04329,294395 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment