திருக்குறள்

05/03/2014

மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் ஏப்ரல் 24-ஆம் தேதி வாக்குப்பதிவு

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 7-ஆம் தேதி தொடங்கி 9 கட்டங்களாக நடைபெறும் என டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் அறிவித்தார்.
தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
9 கட்ட தேர்தல்:
ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. பின்னர் ஏப்ரல் 9, 10, 12, 17, 24, 30 ஆகிய தேதிகளிலும். மே மாதத்தில் 7 மற்றும் 12 ஆகிய தேதிகளிலும் அடுத்தடுத்த கட்ட தேர்தல் நடைபெறுகிறது. மே 12.ல் கடைசி கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஏப்ரல் 7-ஆம் தேதி நடைபெறும் முதல் கட்ட தேர்தலில் 2 மாநிலங்களில் 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தலில் 5 மாநிலங்களில் 7 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஏப்ரல் 10-ஆம் தேதி நடைபெறும் மூன்றாம் கட்ட தேர்தலில் 14 மாநிலங்களில் 92 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஏப்ரல் 12- ஆம் தேதி நடைபெறும் நான்காம் கட்ட தேர்தலில் மொத்தம் 3 மாநிலங்களில் 5 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஏப்ரல் 17-ஆம் தேதி நடைபெறும் ஐந்தாம் கட்ட தேர்தலில் யூனியன் பிரதேசங்களிலும் 13 மாநிலங்களில் உள்ள 122 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறும் ஆறாம் கட்ட தேர்தலில் தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெறும் ஏழாம் கட்ட தேர்தலில் 9 மாநிலங்களில் 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மே 7-ஆம் தேதி நடைபெறும் எட்டாவது கட்ட தேர்தலில் 7 மாநிலங்களில் 64 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மே 12-ஆம் தேதி நடைபெறும் 9-வது மற்றும் கடைசி கட்ட தேர்தலில் 3 மாநிலங்களில் 41 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தமிழகத்தில் ஏப்ரல் 24 வாக்குப்பதிவு:
9 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் ஏப்ரல் 24-ஆம் தேதி 6-வது கட்ட தேர்தலின் போது வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
சிறப்பு முகாம்:
முன்னதாக, வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள மார்ச் 9-ஆம் தேதி நாடு முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறும், அன்று புதிய வாக்காளர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் வி.எஸ். சம்பத் தெரிவித்தார்.
வாக்கு எண்ணிக்கை:
மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நாடு முழுவதும் மே 16-ஆம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் அறிவித்தார்.
தேர்தல் ஆணையர் முக்கிய அறிவிப்புகள்:
*வரும் மக்களவை தேர்தலில், நாடு முழுவதும் 9 லட்சத்து 30,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் இது கடந்த ஆண்டை விட 12% அதிகமாகும்.
*வாக்குச்சாவடிகளுக்கு அருகில் குடிதண்ணீர், மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்தள பாதை போன்ற அடிப்படை வசதிகள் அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.
*தேர்தலில், வேட்பாளர்களை நிராகரிக்கும் 'நோட்டா' வசதி வரும் மக்களவைத் தேர்தலில் அமல் படுத்தப்படும்.
*தேர்தலில் குளறுபடிகளை தவிர்க்க புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டு முதல் முறையாக வழங்கப்படும்.

No comments:

Post a Comment