திருக்குறள்

05/03/2014

போஸ்ட் ஆபீஸ் டெபாசிட்டுகளுக்கு வட்டி உயர்வு

தபால் நிலையங்களில் சிறுசேமிப்பு கணக்கு மற்றும் வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்கள், ஒவ்வொரு நிதியாண்டும் ஷியாமளா கோபிநாத் கமிட்டியின் பரிந்துரைகளின் அடிப்படையில் மாற்றியமைக்கப்படுகின்றன.


அந்த வகையில் 2014-15ம் நிதியாண்டுக்கான சில டெபாசிட்டுகளுக்கு வட்டி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசு இன்று அறிவித்துள்ளது. இந்த வட்டி உயர்வு ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.


இதன்படி, ஒரு வருட வைப்பு நிதிக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 8.2 சதவீத வட்டி, இனி 8.4 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். 2 ஆண்டு மற்றும் 3 ஆண்டு வைப்பு நிதியும் 8.4 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. 5 வருட வைப்பு நிதிக்கான வட்டி 8.4 சதவீதத்தில் இருந்து 8.5 சதவீதமாக உயர்த்தப்படும். வருங்கால வைப்பு நிதி (8.7) உள்ளிட்ட பிற சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் (4 சதவீதம்) எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.



மார்ச் 7-ல் அரசு ஊழியர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள்


அரியலூர் மாவட்ட அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் மார்ச் 7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், அரியலூர் மாவட்ட விளையாட்டுப் பிரிவின் சார்பில் அரியலூர் மாவட்டத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது. 7-ம் தேதி தடகள விளையாட்டுப் போட்டிகளும், 8-ம் தேதி குழு விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறும். 100, 200,800 மீ. ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், கூடைப் பந்து, கால்பந்து, டென்னிஸ், கபடி, மேஜை பந்து, உள்ளிட்ட போட்டிகள் நடைபெறும்.அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசுத் துறை அலுவலகங்களில் பணிபுரியும் மாநில அரசு ஊழியர்கள் இப்போட்டிகளில் கலந்து கொள்ளலாம். காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையில் பணிபுரிபவர்கள் காவலர்கள் தவிர பிற அலுவலக உதவியாளர்கள் பங்கேற்கலாம். போட்டிகளில் கலந்து கொள்ளும் ஊழியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு அளிக்கப்படும். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் ஊழியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள ஊழியர்கள் தங்கள் துறை அலுவலகத் தலைவரிடம் அனுமதிக் கடிதம் பெற்று போட்டிகள் நடைபெறும் விளையாட்டு மைதானத்துக்கு மார்ச் 7-ம் தேதி காலை 10 மணிக்கு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9940341499 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment