திருக்குறள்

27/06/2014

ஊதியம் - தனி ஊதியம் - சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி 1.8.1992 முதல் 1.9.1998 வரை உள்ள STENO-TYPIST, GRADE-III 5% தனி ஊதியமாக வழங்க உத்தரவு

தொடக்கக் கல்வி - பொது மாறுதல் - 2014ம் ஆண்டுக்கான இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான இணையதள வழி மாவட்ட மாறுதல் கலந்தாய்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்த அறிவுரைகள்; மாவட்ட மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் தவிர இதர ஆசிரியர்கள் யாரேனும் கலந்தாய்வு மையத்தில் இருந்தால் அவ்வாசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இயக்குனர் உத்தரவு

26/06/2014

TNTET அரசின் புது யோசனை விரைவில் அறிவிப்பு வர வாய்ப்பு உள்ளதாம்-UG TRB EXAM FOR TET PASS CANDITATES(TNTET 50% + UG TRB 50% )

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான CV முடிந்தவுடன் விரைவில் FINAL MARK/WEIGHTAGE LIST ( NOT SELECTION LIST) – TRB இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது. அதன் பின்னர் காலியிடங்களின் எண்ணிக்கையுடன் போட்டி தேர்வுக்கான தேர்வாணைய விளம்பரம் வெளியிடப்படும். TET PASS செய்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி ஆனவர்கள். B.A/B.Sc MAJOR பாடத்திட்டம் 110 மதிப்பெண்கள், கல்வியியல் 30 மதிப்பெண்கள், பொது அறிவு 10 மதிப்பெண்கள் கொண்டதாக UG TRB போட்டித்தேர்வு நடைபெறும். UG TRB தேர்வுக்கான பாடத்திட்டம் இணையதளத்தில் உள்ளது. DOWNLOAD செய்து கொள்ளலாம். இப்போட்டித்தேர்வுக்கு 50% WEIGHTAGE வழங்கப்பட்டு ஏற்கனவே நிர்ணயிக்கப் பட்ட WEIGHATE யையும் கணக்கில் கொண்டு FINAL SELECTION LIST முடிவு செய்யப்பட்டு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். CTET / KENDRIYA VIDYALAYA/ NAVODAYA VIDYALAYA நியமனத்தில் மத்திய அரசு பின்பற்றும் முறையைப் பின்பற்றி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.என TRB யில் உயர் பதவியில் உள்ள கல்விக்குரலின் பார்வையாளர் ஒருவர் கூறியுள்ளார்

TET CASE FOR AGAINST NEW GO soon

மதுரை: இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின் போது'வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யும்அரசாணையை ரத்து செய்ய தாக்கலான வழக்கில், அரசுக்குநோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.புதுக்கோட்டை பிரபாகர் தாக்கல் செய்தமனு: எம்.எஸ்.சி.,- எம்.எட்., படித்துள்ளேன். தனியார் பள்ளியில்பட்டதாரி ஆசிரியராக பணிபுரிகிறேன். ஆசிரியர் தகுதித் தேர்வில்(2013) 84 மதிப்பெண் பெற்றேன். பள்ளிக் கல்வித்துறை,' இடைநிலைஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின் போது பிளஸ்2 மதிப்பெண்ணிற்கு 10, பட்டப்படிப்பு 15, பி.எட்.,15, ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு (டீ.இ.டீ.,) 60 என மொத்தம் 100 'வெயிட்டேஜ்' மதிப்பெண்அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்,' என மே 30 ல் உத்தரவிட்டது.இதனால், 10 ஆண்டுகளுக்கு முன் பிளஸ் 2 தேர்ச்சியடைந்தவர்கள்பாதிக்கப்படுவர். பிளஸ் 2 பாடத்திட்டத்தில் அவ்வப்போது மாற்றம்செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 வில் பல்வேறு பாடப் பிரிவுகள்உள்ளன. மதிப்பெண் வழங்கும் முறையில் வேறுபாடு உள்ளது.உயிரியல், தொழிற்கல்வி பாடப் பிரிவுகளில், மாணவர்களுக்குசெய்முறைத் தேர்வு மதிப்பெண் வழங்கப்படுகிறது. பொருளாதாரம்,வணிகவியல் பாடப் பிரிவுகளில் செய்முறைத் தேர்வு இல்லை.பட்டப் படிப்புகளுக்கு பல்வேறு பல்கலைகளில், மதிப்பெண்கணக்கிடுவதில் வெவ்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகிறது.தன்னாட்சிக் கல்லூரிகளிலும் இதே நிலை தான். பி.எட்., செய்முறைத்தேர்விற்கு மதிப்பெண் வழங்குவதில், ஒவ்வொரு பல்கலையிலும்வெவ்வேறு நடைமுறைகள் உள்ளன. முதுகலை பட்டதாரி ஆசிரியர்நியமனத்தின்போது, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு முன்னுரிமை,கற்பித்தல் அனுபவத்திற்கு 'வெயிட்டேஜ்' மதிப்பெண்வழங்கப்படுகிறது. ஆனால் இடைநிலை மற்றும் பட்டதாரிஆசிரியர்கள் நியமனத்தில், இந்நடைமுறை பின்பற்றப்படுவதில்லை.பாரபட்சம் காட்டப்படுகிறது. பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவைரத்து செய்ய வேண்டும். இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்நியமனத்தில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு முன்னுரிமை,கற்பித்தல் அனுபவ அடிப்படையில் 'வெயிட்டேஜ்' மதிப்பெண்வழங்கி, நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும், எனகுறிப்பிட்டார். பள்ளிக் கல்வி செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரியசெயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி கே.ரவிச்சந்திரபாபுஉத்தரவிட்டார்.

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் ஆசிரியர் மாணவர் விகிதம்

பாரதியார் பல்கலை: எம்.பில், பி.எச்டி, படிப்புக்கான சேர்க்கை

கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில், எம்.பில், பி.எச்டி.,(முழுநேர/பகுதிநேர) படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பாரதியார் பல்கலைக்கழகத் துறைகளிலும், படலகலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளிலும் கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் உதகமண்டலம்)மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களிலும் அனுமதிக்கப்பட்ட எம்.பில், பி.எச்டி படிப்புக்கு மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் CET நுழைவுத்தேர்வு ஜூலை 6ம் நடத்தப்படுகிறது.

இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். www.b-u.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 31ம் தேதி மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

திருச்சியை இரண்டாக பிரித்து ஸ்ரீரங்கம் மாவட்டம் உதயமாகிறது: 30ம் தேதி முதல்வர் அறிவிப்பு?

திருச்சி மாவட்டம் 2 ஆக பிரிக்கப்பட்டு ஸ்ரீரங்கத்தை தலைமையிடமாகக்கொண்ட தனி மாவட்ட அறிவிப்பை 30ம் தேதி முதல்வர் ஜெயலலிதா வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தனி சமஸ்தானமாக இருந்த புதுக்கோட்டை பகுதி கடந்த 1974ம் ஆண்டு திருச்சியில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் திருச்சி, கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய பகுதிகள் மட்டும் திருச்சி மாவட்டமாக இருந்து வந்தது.அத்தகைய சூழ்நிலையில் தான் திருச்சி மாவட்டத்தை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது.இந்த நிலையில் நிர்வாகக் காரணங்களுக்காக கடந்த 1995ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி திருச்சி மாவட்டம் 3 ஆக பிரிக்கப்பட்டு கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பெரம்பலூர் மாவட்டம் 2 ஆக பிரிக்கப்பட்டு அரியலூர் மாவட்டம் உருவானது. இந்த நிலையில் கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் ஜெயலலிதா தனது தொகுதிக்கு தேசிய சட்டபள்ளி, மகளிர் தோட்டக்கலை கல்லூரி, காகித ஆலை உள்ளிட்ட திட்டங்களை அறிவித்து வருகிறார். தற்போது 30ம் தேதி திருச்சி வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார். அன்றைய தினம் திருச்சிக்கான ஒருங்கிணைந்த பஸ்நிலையம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வரும் யாத்திரிகர்கள் தங்குவதற்கான யாத்திரிக நிவாஸ் உள்ளிட்டவைகளை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியின் போது ஸ்ரீரங்கத்தை தலைமையிடமாகக்கொண்ட புதிய மாவட்டம் குறித்த அறிவிப்பையும் முதல்வர் வெளியிடுவார் எனதகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், லால்குடி, துறையூர் பகுதிகளை உள்ளிட்டக்கிய வகையில் இந்த மாவட்டம் இருக்கும் என்றும், திருச்சி மாவட்டம் திருச்சி, திருவெறும்பூர் மற்றும் மணப்பாறை பகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் இதற்கான பணிகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மாவட்டங்கள் எண்ணிக்கை 33 ஆக உயரும் தற்போது திருச்சி மாவட்டம் 4403.83 சதுர கிமீ பரப்பளவு கொண்டதாகவும் மக்கள் தொகை சுமார் 27,13,858 ஆகவும் உள்ளது. இதில் ஆண்கள் 13,47,863, பெண்கள் 13,65,995 ஆகும். ஸ்ரீரங்கம் புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் பட்சத்தில் தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணி க்கை 33 ஆக உயரும்.

2013-14ம் நிதியாண்டு முதல் ஜிபிஎப் ஆண்டறிக்கை: இணைய தளத்தில் மட்டும் பெற சந்தாதாரர்களுக்கு அறிவுறுத்தல்

நடப்பு நிதியாண்டு முதல், பொது வருங்கால வைப்பு நிதிக்கான(ஜிபிஎப்) ஆண்டு கணக்கு அறிக்கையை சந்தாதாரர்கள், மாநில கணக்காயர் அலுவலக இணையதளத்தின் மூலம் மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என துணை மாநில கணக்காயர்(நிதி) வர்ஷினி அருண் தெரிவித்துள்ளார். இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக அரசு ஊழியர்களுக்கான 2013-14- ஆம் நிதியாண்டின் ஜிபிஎப் கணக்கு அறிக்கை, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு (டி.டி.ஓ.) ஜூலை இரண்டாம் வாரத்திலிருந்து அனுப்பப்பட உள்ளது. ஜிபிஎப் சந்தாதாரர்கள், கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி எந்த அலுவலகத்தில் பணியாற்றினார்களோ, அந்த அலுவலக டி.டி.ஓ.விடம் தங்களின் ஆண்டு கணக்கு அறிக்கையைப் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், 2013 -14 -ஆம் ஆண்டு முதல், ஜிபிஎப் சந்தாதாரர்கள் தங்கள் ஆண்டு கணக்கு அறிக்கையின் நகலை மாநில கணக்காயர் அலுவலக இணையதளத்தில் (www.agae.tn.nic.in) பதிவிறக்கம் செய்துக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆண்டு அறிக்கை நகல்கள் இனி மாநில கணக்காயர் அலுவலகத்தில் வழங்கப்படமாட்டாது. மேலும் நடப்பு நிதியாண்டு முதல், ஜிபிஎப் ஆண்டு கணக்கு அறிக்கையை சந்தாதாரர்கள் இணையதளத்தின் மூலம் மட்டுமே பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மா.க.ஆ.ப.நி - அரசு / அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்களுக்கு இரு நாட்கள் "அகமேற்பார்வை பயிற்சி" மாவட்ட அளவில் ஜுலை 8 முதல் ஜுலை 19 வ்ரை நடைபெறவுள்ளது.

பள்ளிக்கல்வி - அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகள் - 2014-15ம் கல்வியாண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - பணி நிரவல் / பொது மாறுதல் / பதவி உயர்வு கலந்தாய்வு - கால அட்டவணை சார்பு

21/06/2014


பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பணிநிரவல் செய்தல் தொடர்பான அரசாணை

30.06.2014க்குள் அனைத்து அரசு/ நிதியுதவி பள்ளிகளிலும் மழை நீர் சேகரிப்பு அமைப்பு அமைக்க தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு


புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனடைய ஜூன் 30க்குள் விண்ணப்பிக்கவும்

பொதுத்துறை வங்கி திட்டம் மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழ்நாடுஅரசு ஓய்வூதியதாரர்கள் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்பயனடைய தங்களது விவரங்களை ஜூன் 30ம் தேதிக்குள் உரியபடிவத்தில் அளிக்க வேண்டும். இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பு:1.7.2014 முதல்ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்- 2014நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதற்காக விண்ணப்பங்களைஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் பெறும்வங்கிக் கிளைகளிலிருந்து பெற்றுக்கொள்ளாம். அல்லதுwww.tn.gov.in, www.tn.gov.inkaruvoolam என்ற இணையத்திலிருந்துபதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பொதுத்துறை வங்கி திட்டம்மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், குடும்பஓய்வூதியதாரர்கள் (ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம்,கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள் தவிர) பூர்த்திசெய்யப்பட்ட படிவங்களை புகைப்படம் (துணைவருடன் உள்ளபுகைப்படம்) மற்றும் துணைவரின் பிறந்த தேதிக்கான ஆவணநகலுடன், தொடர்புடைய வங்கிக் கிளைகளில் நேரடியாக அல்லதுபிறநபர் மூலமாக அளிக்க வேண்டும். சரிபார்த்தலுக்குப் பின்னர்படிவத்தின் நகலை வங்கி அலுவலரின் கையொப்பத்துடன் திரும்பபெற்றுக்கொள்ளலாம்

ஒரே இடத்தில் 3ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு கட்டாய இடமாறுதல்; அனைவருக்கும் கல்வி இயக்கம் அதிரடி



தொடக்கக் கல்வி - உலக சுகாதார நாள் "04.04.2014" - "சிறிய கடி பெரிய அச்சுறுத்தல்" சிறு உயிரினம் மூலம் ஏற்படும் திசையன் எலும்பு நோய் (Vector Bone Disease) வருமுன் பாதுகாத்தல் சார்பாக இயக்குனர் அறிவுரைகள் வழங்கி உத்தரவு



சனிக்கிழமை பள்ளி வேலைநாள்- முழு நாள் செயல்படவேண்டுமா? தகவல் அறியும் சட்டப்படி கேட்கப்பட்டகேள்விக்கு மதுரை மாவட்டதொடக்கக்கல்வி அலுவலகத்தின் பதில்


31.07 க்குள் 5 வயது பூர்த்தியடையாத மாணவனை முதல் வகுப்பில் சேர்க்க தவிர்ப்பாணை கிடையாது- தொடக்கக்கல்வி இணை இயக்குனர் அவர்களின் (த.அ.உ)பதில்


தொடக்கக் கல்வி - பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட தேசிய கொடிகள் பயன்படுத்துவது சார்பாக இயக்குனரின் வழிக்காட்டுதல்கள்


தொடக்கக் கல்வி - உச்சநீதிமன்ற உத்தரவின் படி HIVஆல் பாதிக்கப்பட்ட குழந்தைகளை எந்தவித வேறுபாடின்றி நடத்திட உத்தரவு


கல்வி மேம்பாட்டில் 7வது இடத்தில்தமிழ்நாடு

கல்வி மேம்பாடு நிலைப் பாட்டில் உள்ள முதல் 5நகரங் களில் தில்லி இடம் பெறவில் லை. இந்த பட்டியலில் புதுச் சேரி முதலிடத்தை பெற்று இருக்கிறது. உத்தரப்பிரதேசம் மிக மோசமான நிலையை அடைந்துள்ளது.
இடிஐ எனப்படும் ஆரம் பக் கல்வி பட்டியலில் புதுச் சேரி 0.762 புள்ளியுடன் முத லிடத்தில் இருக்கிறது. உத்த ரப்பிரதேசம் 0.462 புள்ளியு டன் கடைசி நிலையில் இருக் கிறது. பயன்பாடு, உள்கட்ட மைப்பு ஆசிரியர்கள் மற்றும் அந்த பள்ளிகளின் பயனாளி கள் ஆகிய 4 உப பிரிவுகள் அடிப்படையில் தரப்பட்டியல் நிர்ணயிக்க ப்படுகின்றன. இந் தியாவின் ஆரம்பக் கல்வி நிலை என்பது குறித்து 2013-14ம் ஆண்டிற்கான முன் னேற்றம் குறித்த விவரத்தை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இசட் இரானி வெளியிட்ட அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டிருந்தது.லட்சத்தீவு, சிக்கிம், இமா சலப்பிரதேசம் மற்றும் கர்நா டகம் ஆகியவை ஆரம்ப கல்வி நிலையில் 2வது, 3வது, 4வது இடத்தை பெற்று இருக் கின்றன.நாட்டின் ஆரம்ப கல்வி தர பட்டியலில் தில்லி 6வது இடத்தை பெற்று இருக்கிறது.

அதனையடுத்த 7வதுஇடத் தில்தமிழ்நாடும்அதனைத்தொ டர்ந்து குஜராத்தும் உள்ளன.மாணவர்கள் மற்றும் ஆசி ரியர்கள் விகிதாச்சாரத்தில் சிக்கிம் மற்றும் லட்சத்தீவு ஆகியவை முதலிடத்தில் இருக்கின்றன. அங்கு 9 மாண வர்களுக்கு ஒரு ஆசிரியர் என்றவிகிதத்தில்இருக்கிறது.மாணவர்கள் ஆசிரியர்கள் விகிதாசாரத்தில் பீகார் மிகவும் பின் தங்கி இருக்கிறது. அங்கு 51 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாசாரம் உள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத் தில் 39மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாசாரம் இருக்கிறது. 2012-13 மற்றும் 2011-12ம் ஆண்டுகளில் மிக வும் பின் தங்கி இருந்த பீகார் முந்தைய ஆண்டில் 59 மாண வர்களுக்கு ஒரு ஆசிரியர் என்கிற நிலையில் இருந்து 51 மாணவர்களுக்கு ஒரு ஆசி ரியர் என்ற நிலையை எட்டி யுள்ளது. புதுச்சேரி, லட்சத் தீவு, சண்டிகர், டாமன் டையூ ஆகிய இடங்களில் மாணவிக ளுக்கு கழிப்பறை 100 சதவீ தம் உள்ளது. அருணாசலப் பிரதேசத்தில் 64.75 சதவீதம் இருக்கிறது.

தேசிய ஆசிரியர் - மாணவர் சராசரி விகிதம், தமிழகத்தில் மிகவும் குறைவு. -பள்ளி கல்வித் துறை முதன்மை செயலர், சபிதா

பள்ளி கல்வித் துறை முதன்மை செயலர், சபிதா, நேற்று கூறியதாவது:
தேசிய ஆசிரியர் - மாணவர் சராசரி விகிதம், தமிழகத்தில் மிகவும் குறைவு. ஐந்தாம் வகுப்பு வரை, ஒரு ஆசிரியருக்கு, 30 மாணவர் என்பது, தேசிய சராசரியாக உள்ளது.தமிழகத்தில், 1:26 என்ற நிலை உள்ளது. 6, 7, 8ம் வகுப்பு களில், 1:35க்கு பதிலாக, 1:27 என்ற நிலையும், 9 முதல், பிளஸ் 2 வரை, 1:40 என்பதற்கு பதில், 1:28 என்ற நிலையும், தமிழகத்தில் உள்ளது.

கூடுதல் கவனம்:ஆசிரியர் - மாணவர் சதவீதம் குறைவு காரணமாக, மாணவர்கள் மீது, ஆசிரியர் கூடுதல் கவனம் செலுத்தி, கல்வி கற்பிக்கின்றனர். மேலும், அரசு பள்ளிகளில், காலியாக இருந்த ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்பினோம்.கடந்த, 2012ல், பல்வேறு பள்ளிகளில், உபரி ஆசிரியர்களாக இருந்த, 10 ஆயிரம் பேரை, பற்றாக்குறை மற்றும் காலி பணியிடங்களுக்கு மாற்றினோம். இது, கடந்த பொதுத் தேர்வில், நல்ல பலனைத் தந்துள்ளது.

பள்ளிகளில் கலவை சாதம் திட்டம்: விரைவில் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த அரசு உத்தரவு!

தமிழகம் முழுவதும் கலவை சாதம் திட்டம் 3 பள்ளிகளில் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 50 லட்சம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 30 வருடங்களாக ஒரே வகையான உணவு வழங்கப்பட்டு வருவதால் குழந்தைகளின் தற்கால தேவைகள் மற்றும் விருப்பங்களின் அடிப்படையில் அவர்களது உணவு வகையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சத்துணவு மையங்களில் 13 வகையான கலவை சாதம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

அதன்படி, வெஜிடபிள் பிரியாணி, பிசிபேளாபாத், சாம்பார் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், கொண்டை கடலை புலாவ், கறிவேப்பிலை சாதம், மிக்சர்ட் மீல் மேக்கர் மற்றும் காய்கறி சாதம், தக்காளி சாதம் என வழங்கப்படுகிறது. இதுதவிர ஆம்லேட், முட்டை பொடிமாஸ், முட்டை வறுவல், அவித்த முட்டை என 4 வகையாக முட்டை 5 நாட்கள் வழங்கப்படுகிறது. சென்னையிலிருந்து 20 சிறந்த சமையல் கலை வல்லுநர்கள் தேர்வு செய்யப்பட்டு 32 மாவட்டங்களுக்கு சென்று அங்குள்ள சத்துணவு பணியாளர்களுக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் 2013-2014ம் ஆண்டின் வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் ரூ.1588,65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கலவை சாதம் திட்டம் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 பள்ளிகளில் சோதனை அடிப்படையில் செயல் படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை விரைவில் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடக்கக் கல்வி - இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் இணையதள வழியாக நடத்தவும், மாறுதல் கோரும் விண்ணப்பங்களை, இணையதள பதிவு செய்ய இயக்குனர் உத்தரவு. இ.நி.ஆ மாவட்ட மாறுதல் கலந்தாய்வு 28.6.2014 பதிலாக 30.6.14 மற்றும் 01.07.14 ஆகிய இரு நாட்களும், ப.ஆ கலந்தாய்வு 21.6.14 பதிலாக 02.7.14 அன்று நடைபெறவுள்ளது

DEE - 2014-15 CONDUCT OF ONLINE COUNSELING FOR SG / BT DISTRICT TRANSFER REG PROC CLICK HERE...

19/06/2014

ஜூன் 26க்குள் 2 ஆயிரம் புதிய ஆசிரியர் பணியிடங்கள்: கல்வித்துறை பரிசீலனை

தமிழகம் முழுவதும் ஜூன் 26க்குள் புதிதாக 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க கல்வித் துறை பரிசீலனை செய்து வருகிறது. மாநிலத்தில் தொடக்க மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் 'கவுன்சிலிங்' ஜூன் 16 முதல் துவங்கியுள்ளது. இதில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 'பணிநிரவல்' மாறுதல் 'கவுன்சிலிங்' ஜூன் 26ல் நடக்கிறது.


இதில், அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை விகிதம் குறைந்ததால், தற்போதுள்ள மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில், மாநிலம் முழுவதும் 3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் 'சர்பிளஸ்' ஆக கணக்கிட்டு, 'பணிநிரவல்' அடிப்படையில் அவர்களை பணியிட மாறுதல் செய்ய கல்வித்துறை முடிவு செய்தது. இதற்கு ஆசிரியர்களிடம் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், பணி மாறுதல் செய்யப்பட்டால், அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டதா என்ற தகவலும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது. இதன் விளைவாக, 'சர்பிளஸ்' ஆசிரியர் எண்ணிக்கையை கணக்கிட்டு, ஒவ்வொரு மாவட்டங்களிலும் கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க கல்வித் துறை முடிவு செய்துள்ளது.


இப்புதிய பணியிடங்களை, ஆங்கில வழி வகுப்புகளுக்கு பாடவாரியாக ஒதுக்கீடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய பணியிடங்களை ஜூன் 26 ல், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாநிலம் முழுவதும் நடக்கும் பணிநிரவல் 'கவுன்சிலிங்' முன் ஒதுக்கீடு செய்யவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சர்பிளஸ்' பட்டதாரி ஆசிரியர்கள் எண்ணிக்கையுடன், கூடுதல் ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி, அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகளுக்கு ஒதுக்கீடு செய்ய பரிசீலனை நடக்கிறது. மாவட்டம் தோறும் ஒதுக்கப்பட்ட புதிய பணியிடங்கள் குறித்து, முதன்மை கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் 156 பேருக்கு பணியிட மாறுதல்

பணியிட மாறுதல் கலந்தாய்வில் 156 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் திங்கள்கிழமை (ஜூன் 16) பணியிட மாறுதல் பெற்றதாக தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் அலுவலர்கள், ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. சென்னையில் உள்ள தொடக்கக் கல்வி இயக்ககத்தில் நடைபெற்ற இந்தக் கலந்தாய்வில் 344 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர்.

இந்த நேரடி கலந்தாய்வில் 156 பேர் முன்னுரிமை அடிப்படையில் தங்களுக்கான பணி மாறுதல் இடங்களைத் தேர்ந்தெடுத்தனர். அவர்களுக்கு உடனடியாக மாறுதல் ஆணைகளும் வழங்கப்பட்டன. நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவியிலிருந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக பணிமாறுதல் வழங்கும் கலந்தாய்வில் கலந்துகொண்டவர்களில் 7 பேருக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டது. இவர்களுக்கான ஆணைகளும் உடனடியாக வழங்கப்பட்டதாக ஆர்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

16/06/2014

ஆசிரியர் கல்வியில் அதிரடி மாற்றம் விரைவில்-NCERTதலைவர் சந்தோஷ் பாண்டே



தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சை -2014-2015 பி.எட் சேர்க்கைகான விண்ணப்படிவம்

சத்துணவு, அங்கன்வாடி மையங்களின் பணிகளை தொண்டு நிறுவனம், தனியாரிடம் ஒப்படைக்க அரசு ஆலோசனை

தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களின் சில பணிகளை தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் மூலம் செயலாக்கம் திட்டம் குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பில், சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 1982ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம், ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கு சத்துணவு, முட்டை, சுண்டல் உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது.தமிழகத்தில் மொத்தம் 65,000 சத்துணவு மையங்கள் மற்றும் 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மையங்களிலும், ஒரு அமைப்பாளர், ஒரு சமையலர், ஒரு உதவியாளர் நியமிக்கப்படுகின்றனர்.

தமிழகம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் சத்துணவு அமைப்பாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், ஊழியர் பற்றாக்குறை, சம்பளம் நிலுவை என பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் பணியாற்றும் ஊழியர்கள், தங்களின் சம்பளம் உயர்வு, போனஸ், ஓய்வூதியம் உள்ள சலுகைகளுக்காக 
தொடர்ந்து அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். ஆனால், இவர்களின் கோரிக்கையை தமிழக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. மேலும், தரமான உணவு, சத்துணவு பொருட்கள் வாங்குவதில் மோசடி போன்றவற்றை தடுக்கவும் அரசு உறுதி எடுத்துள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டு முதல் சத்துணவு மையங்களில் 13 வகையான கலவை சாதங்கள் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். 

ஆனால், அதற்கான செலவினம் அதிகரிப்பதால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது, ஒவ்வொரு மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் 3 அல்லது 5 மையங்களில்தான் இந்த கலவை சாதம் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமென்றால், ஒரு மெகா சைஸ் உணவு தயாரிப்பு கூடம் இருந்தால்தான் சாத்தியம் என்று அதிகாரிகளின் அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற நடைமுறை அண்டை மாநிலமான கர்நாடகாவில், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல தமிழகத்திலும் பரிட்சார்த்த முறையில் செய்து பார்க்க சமூக நலத்துறை முடிவு செய்துள்ளது.

முதல்கட்டமாக, தமிழகத்தின் 15 மாவட்டங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களை தனியார்மயமாக்க குறிப்பாக தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்த சமூகநலத்துறை திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, முதல்வர் அறிவித்தபடி அனைத்து மையங்களிலும் கலவை சாதம் வழங்க ஒரு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது, தனியார் நிறுவனங்களின் பங்களிப்போடு நவீன இயந்திரம் மூலம், ஒரே இடத்தில் வைத்து 1 லட்சம் குழந்தைகளுக்கு உணவு தயாரித்து அதை பல்வேறு மையங்களுக்கு எடுத்து செல்ல திட்டமிட்டுள்ளனர். இதற்கு உலக வங்கி மூலம் நிதி பெறப்படுகிறது. 

இதுகுறித்து ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு, இம்மாதம் இறுதியில் மத்திய அரசின் பயிற்சி குழுவினர் தமிழகம் வரவுள்ளனர். தமிழக அரசின் இந்த முயற்சிக்கு சத்துணவு மற்றும் அங்கன்வாடி மைய ஊழியர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அங்கன்வாடிமைய ஊழியர் சங்கத்தை சேர்ந்த பழனிச்சாமி கூறியதாவது: ஏழை, எளிய மாணவர்களின் கல்வி நலனுக்காக தமிழக அரசு சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தது. ஆனால், தற்போதைய அரசு இத்திட்டத்தை ஒழிக்கும் முயற்சியை எடுத்து வருகிறது. 

ஏற்கனவே, குறைந்த ஊதியத்தில் வேலை பார்க்கும் எங்களுக்கு பல்வேறு சலுகைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், எங்க ளின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் வகையில், சத்துணவு மற்றும் அங்கன் வாடி மையங்களை தனியார்மயமாக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது எங்கள் வயிற்றில் அடிக்கும் செய லாகும். அரசின் இந்த செயலை கண்டித்து விரை வில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்‘ என்றார்.

12/06/2014

இன்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்

குழந்தைகளின் பணி, கல்வி கற்பது மட்டும் தான். கட்டாயத்தின் காரணமாக சிலர் குழந்தையிலேயே தொழிலாளர் ஆகின்றனர். குழந்தைகளின் வருமானம் நாட்டின் அவமானம். வளர்ச்சியை விரும்பும் நாடுகள், முதலில் ஒழிக்க வேண்டியது, குழந்தை தொழிலாளர் முறையைத் தான். 

உலகில் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்துடன் ஜூன் 12ம் தேதி, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகில் 25 கோடி குழந்தை தொழிலாளர் உள்ளனர், இதில் 10 கோடி பேர், பாதுகாப்பற்ற கஷ்டமான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என 'யுனிசெப்' நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. 2016ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கையை அறவே ஒழிக்க வேண்டும் என, சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ.,) இலக்கு நிர்ணயித்துள்ளது. மையக்கருத்து: 
இந்த ஆண்டு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தின் மையக்கருத்துகள். 
* சர்வதேச தொழிலாளர் அமைப்பு பரிந்துரைத்த, சமூக பாதுகாப்பு விதி எண்.202யை செயல்படுத்துதல். 
* தேசிய சமூக பாதுகாப்பு அமைப்பின் மூலம் குழந்தைகளுக்கு உதவுதல்; குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்தல். 
* பாதிக்கப்பட்ட குழந்தைகளை கண்டறிந்து, அவர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்தல்.

14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல், பணிக்கு சென்றால் அவர்கள் குழந்தை தொழிலாளர்கள். பள்ளி முடித்தவுடன் சில குழந்தைகள் பகுதி நேரமாக வேலைக்குச் செல்கின்றனர். சிலர் பெற்றோருக்கு உதவியாக இருக்கின்றனர். இவர்கள் குழந்தை தொழிலாளர்களாக கருதப்பட மாட்டார்கள். சர்வதேச தொழிலாளர் அமைப்பின்படி, கடினமான வேலைகளில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டுமே ஈடுபடுத்த வேண்டும். 15 வயது வரை கட்டாயமாக கல்வி கற்க வேண்டும். 13 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள், இலகுவான வேலைகளை பார்க்கலாம். அதே நேரம் கல்வி, சுகாதாரம், மனம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது. 

இந்தியாவின் நிலை: 

இந்தியாவில் குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை அதிகம். விவசாயம், தீப்பெட்டி, செங்கல் சூளை, டெக்ஸ்டைல் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கட்டுமானப் பணிகள் ஆகியவற்றில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்கள் குறைந்த ஊதியத்தில் விடுமுறையின்றி, ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கும் மேல் வேலைபார்க்கின்றனர். கொத்தடிமைகளாகவும் குழந்தைகள் இருக்கின்றனர்.இந்தியாவில் அனைவருக்கும் இலவச, கட்டாயக் கல்வி சட்டத்தை முழு அளவில் நிறைவேற்றினால் அதிகளவிலான குழந்தைகள் பள்ளிக்குச் செல்வர். பெரும்பாலான குழந்தைகள், குடும்ப சூழ்நிலை காரணமாகத் தான், பணிக்கு அனுப்பப்படுகின்றனர். பெற்றோரின் நிரந்தர வருமானத்துக்கு அரசு வழிவகுத்தால், அவர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவர். குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கலாம்.



குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்-12.06.2014-உறுதிமொழி-

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல் மற்றும் 1 முதல் 30 வரை உள்ள நடுநிலைப் பள்ளி த.ஆ, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணிமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள இயக்குனர் உத்தரவு

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - AEEO / AAEEO 31.12.2008 முடிய பணிமாறுதலுக்கு பரிசீலிக்க வேண்டிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு

10/06/2014

பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / மாநகராட்சி தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் - 2014-15ம் ஆண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்

தொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு அரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14

விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014

16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல்

       மாலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு

17 - காலை: நடுநிலைப் பள்ளி த.ஆ மாறுதல்,

       மாலை: நடுநிலைப் பள்ளி த.ஆ பதவிஉயர்வு

18- காலை: ப.ஆ பணிநிரவல்,
      
     மாலை: ப.ஆ மாறுதல் மற்றும் பதவி உயர்வு

19 - ப.ஆ ஒன்றியம் விட்டு மாறுதல்

21 - ப.ஆ மாவட்ட மாறுதல்

23 - காலை: தொடக்கப்பள்ளி த.ஆ மாறுதல்,

       மாலை: தொடக்கப்பள்ளி த.ஆ பதவி உயர்வு

24 - இ.நி.ஆ பணிநிரவல்

25 - இ.நி.ஆ மாறுதல்

26 - இ.நி.ஆ ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல்

28 - இ.நி.ஆ மாவட்ட மாறுதல்

எனினும் அதிகாரப்பூர்வ அரசாணை சற்று நேரத்தில் வெளியிடப்படும்

08/06/2014

தொடக்கக் கல்வி - ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் தங்கள் பெயரின் தலைப்பெழுத்துக்களை (Initial) தமிழில் மட்டுமே எழுத தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை பி.எட். படிப்பு விண்ணப்பம்

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், பி.எட். சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் இதுகுறித்து, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:

பி.எட். படிப்பு
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், 2015ம் ஆண்டுக்கான பி.எட். படிப்பிற்கு விண்ணப்பங்கள் 9ந் தேதி (நாளை) மதியம் 12 மணி முதல் விற்பனை செய்யப்படுகின்றன. தமிழ் வழி படிப்பிற்கு 500 இடங்கள், ஆங்கில வழி படிப்பிற்கு 500 இடங்கள் என மொத்தம் 1,000 இடங்கள் உள்ளன.
விண்ணப்பங்கள் ஆகஸ்டு 14ந் தேதி வரை வினியோகம் செய்யப்படும். அதே போன்று, பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் 14ந் தேதிக்குள் திருப்பப்பெறப்படும். இதற்கான விண்ணப்பங்கள், பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைப்பு மையங்களான, அன்னை வேளாங்கண்ணி கலைக்கல்லூரிசென்னை, எஸ்.டி.இந்து கல்லூரிநாகர்கோவில், முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரிவேலூர், மற்றும் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரிவிழுப்புரம் ஆகியவற்றில் வினியோகம் செய்யப்படுகின்றன.
மண்டலம், கல்விமையங்கள் மேலும், மண்டல மையங்களான, எஸ்.என்.ஆர். கல்லூரிகோவை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக மண்டல மையம்மதுரை, வருவான் வடிவேலன் பி.எட். கல்லூரிதர்மபுரி, ஷிவானி பொறியியல் கல்லூரிதிருச்சி மற்றும் கல்வி மையங்களான ஸ்டெல்லா மேட்டிடுனா கல்வியியல் கல்லூரிசென்னை, புனித கிறிஸ்டோபர் கல்வியியல் கல்லூரிசென்னை, டாக்டர் என்.ஜி.பி. கல்வியியல் கல்லூரிகோவை, இக்னேசியஸ் கல்வியியல் கல்லூரிதஞ்சாவூர், கிரசன்ட் கல்வியியல் கல்லூரிதிருவண்ணாமலை, கஸ்தூரிபா காந்தி கல்வியியல் கல்லூரிமசக்காளிபட்டி, ராசிபுரம் கல்வியியல் கல்லூரிராசிபுரம், கபி கல்வியியல் கல்லூரிமதுரை, பவானி கல்வியியல் கல்லூரிகடலூர் ஆகிய கல்லூரிகளிலும் விண்ணப்பங்களை நேரடியாக 500 ரூபாய் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், பல்கலைக்கழகத்தின் இணையதள வழியாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் (டவுன்லோடு) செய்து 500 ரூபாய்க்கான வரைவோலையை இணைத்து அனுப்ப வேண்டும். தபால் மூலம் விண்ணப்பத்தை பெற, 550 ரூபாய்க்கான வரைவு காசோலையை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், சென்னை15 என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்கதாக எடுத்து, பதிவாளர், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், 577, அண்ணா சாலை, சென்னை600015 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.2015 ஜனவரியில் தொடக்கம் மாணவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தமிழக அரசின் இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை அக்டோபர் மாதம் முதல் தொடங்கும். பின்னர் பி.எட். வகுப்புகள் 2015 ஜனவரியில் தொடங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04424306657 மற்றும் 04424306658 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.எட். படிப்பில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

09.06.2014 முதல் 13.06.2014 வரை மழை நீர் சேகரிப்பு வாரத்தினை பள்ளிகளில் கட்டுரை, ஓவியம் போட்டி மற்றும் கண்காட்சிகள் நடத்தி கொண்டாட பள்ளிக்கல்வி இயக்ககம் உத்தரவு

பள்ளி கல்வித்துறை இயக்குனர், ராமேஸ்வர முருகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: 'அனைத்து வகை பள்ளிகளிலும், மழைநீர் சேகரிப்பு வாரம் கொண்டாட வேண்டும்' என, முதல்வர், உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஜூன் 9 முதல், 13 வரை, 6 முதல், 9ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியரிடையே, மழைநீர் சேகரிப்பு நிகழ்ச்சியை நடத்த வேண்டும். வரும், 9ம் தேதி, பள்ளி அளவில், மழைநீர் சேகரிப்பு, விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும். பள்ளியை சுற்றியுள்ள பகுதியில், பேரணி நடத்த வேண்டும். ஜூன் 10 ல், 'மழைநீர் சேகரிப்பு, வளமான எதிர்காலம்' என்ற தலைப்பில், கட்டுரை போட்டியும், ஜூன் 11 ல், ஓவிய போட்டியும், ஜூன்13 ல் மாணவர்களை, 'புராஜக்ட்' செய்யவும், அறிவுறுத்த வேண்டும். மாவட்ட அளவில், 13ம் தேதி, கண்காட்சி நடத்த வேண்டும். சிறந்த படைப்புகளுக்கு, பரிசு வழங்க வேண்டும், என்றார்.

04/06/2014

உலக சுற்றுச்சூழல் தினம்: போட்டிகள் நடத்த பள்ளிகளுக்கு உத்தரவு

உலக சுற்றுசூழல் தினத்தையொட்டி ஜூன் 5ம் தேதி பள்ளிகளில் விழிப்புணர்வு பேரணி, கட்டுரை, பேச்சு,ஓவியப்போட்டிகள் நடத்த வேண்டும், என முதன்மை கல்வி அலுவலர் கேட்டுக் கொண்டுள்ளனர். 

இது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் அவர் அனுப்பியுள்ள வெளியிட்ட அறிக்கை: சுற்றுப்புற சீர்கேட்டை தடுத்து நிறுத்தும் வகையில், சமுதாயத்தின் அங்கத்தினர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, சுற்றுச்சூழலை பாதுகாத்து பராமரிக்கும் செயல்பாடுகளை ஊக்குவித்து நடைமுறைப்படுத்தி வரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம்தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

அதே போலவே வரும் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாட அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களும் ஏற்பாடு செய்ய வேண்டும். இதன்படி, சுற்றுச்சூழல் குறித்த முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக பள்ளி மாணவ, மாணவியருக்கிடையே பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, வினாடி- வினா, மாணவர் பேரணி போன்ற விழிப்புணர்வு நிகழச்சிகளை நடத்தி, அதன் விபரங்களை வரும் 20ம் தேதிக்குள் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு ஃபோட்டோவுடன் அறிக்கையாக அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளனர்.

தொடக்கக்கல்வித்துறையில் 13ம் தேதி முதல் மாறுதல் கலந்தாய்வு நடக்க வாய்ப்பு-தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணிக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் பதில்

இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொறுப்பாளர்கள் கூறியதாவது

2014-15ம் ஆண்டுக்கான ஆசிரியர்கள் பொதுமாறுதல் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரிடம் பேசிய போது வருகிற 13ம் தேதி உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல் கலந்தாய்வும், அன்று மாலை நடுநிலைப் பள்ளி த.ஆ பதவியிலிருந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வும்,அதை தொடர்ந்து மற்ற ஆசிரியர் பணியிடங்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நடைபெற வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் அதன் மாநில பொறுப்பாளர்கள் தெரிவித்தனர். மேலும் இதற்கான ஆணை விரைவில் வெளியாகவுள்ளதெனவும் தெரிவித்தனர்.

அரசு பள்ளிகளில் உபரி ஆசிரியர்களின் விவரம் வெப்சைட்டில் பதிய உத்தரவு

அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் உபரி ஆசிரியர் பெயர் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நகராட்சி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர் பணியிடங்களை மாவட்டத்தில் உள்ள பிற காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்பும் வகையில் உபரி ஆசிரியர் பணியிடங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன. ஆசிரியர் மாணவர் விகிதாச்சார அடிப்படையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி நிலவரப்படி இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

பாடவாரியாக இந்த காலியிடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் முன்னுரிமை விபரங்கள் கணினி வழியாகவே கணக்கிடப்படுகிறது. இதுதொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

உபரி ஆசிரியர் 'டிரான்ஸ்பர்' விவகாரம் : ஆசிரியர்கள், தேவையில்லாமல் பதற்றம் அடைய வேண்டாம்; கல்வித்துறை வட்டாரம்

அரசு பள்ளிகளில், உபரி ஆசிரியர்களை, 'டிரான்ஸ்பர்' செய்ய, கல்வித்துறை எடுத்துவரும் நடவடிக்கைக்கு எதிராக, ஆசிரியர்களும், ஆசிரியர் சங்க நிர்வாகிகளும்,போர்க்கொடி துாக்கி உள்ளனர். நிர்ணயிக்கப்பட்ட ஆசிரியர் - மாணவர்விகிதாச்சாரப்படி, அரசு பள்ளிகளில், தற்போதுள்ள நிலைமையை ஆய்வு செய்து, உபரியாக உள்ள, 3,000பட்டதாரி ஆசிரியர்களை, ஆசிரியர் தேவை உள்ள பள்ளிகளுக்கு, பணியிட மாற்றம்செய்ய, கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. 'இந்நடவடிக்கை,நியாயமானது; அதே நேரத்தில், அவசரகதியில், நடைமுறைப்படுத்த முயற்சிப்பதுதான் தவறு' என, ஆசிரியர்களும், சங்க நிர்வாகிகளும் கொந்தளிக்கின்றனர். 

அரசு பள்ளிகளில், ஆகஸ்ட் வரை, மாணவர் சேர்க்கை நடக்கிறது. மாணவர்எண்ணிக்கை விவரம், ஆகஸ்ட் இறுதியில் தான் தெரியும். அதற்குள், இப்போதுள்ளமாணவர் எண்ணிக்கையை வைத்து, உபரி ஆசிரியரை, எப்படி கணக்கிட முடியும்.மேலும், கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாத நிலவரத்தின் அடிப்படையில், உபரி ஆசிரியரைகணக்கிடுவதாக, தகவல் வருகிறது. கடந்த, மே, 31ம் தேதி, அதிகளவில், ஆசிரியர்ஓய்வு பெற்றுள்ளனர். இந்த தேதியில் உள்ள ஆசிரியர் காலி பணியிடங்கள்அடிப்படையிலும், ஆகஸ்ட் இறுதியில் உள்ள மாணவர் எண்ணிக்கைஅடிப்படையிலும், உபரி ஆசிரியர் குறித்து, கணக்கெடுக்க வேண்டும். உபரிஆசிரியரை, பணியிட மாற்றம் செய்வதில், தவறில்லை; இந்த நடவடிக்கையை,வரவேற்கிறோம். அதே நேரத்தில், முடிந்த அளவிற்கு, தற்போது பணிபுரியும்ஆசிரியருக்கு, பாதிப்பு வராத அளவிற்கு, கல்வித்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும். எனினும், ஆசிரியர்களும், எப்போது, 'டிரான்ஸ்பர்' வருமோ என,அச்சத்தில் உள்ளனர்.இது குறித்து, கல்வித்துறை வட்டாரம் கூறியதாவது: நான்குமாணவர்; ஐந்து மாணவர் குறைவாக இருந்தால், அதை ஒரு காரணமாக வைத்து,உபரி ஆசிரியர் என, கணக்கிட மாட்டோம். மாணவர், மிக மிக குறைவாக உள்ளபள்ளிகளில், ஆசிரியர் அதிகமாக இருந்தால், அவர்களைத் தான், வேறு பள்ளிகளுக்குமாற்றுவோம்.இந்த விவகாரத்தில், இன்னும் முடிவு எடுக்கவில்லை. அதற்குள், ஆசிரியர்கள்,தேவையில்லாமல் பதற்றம் அடைய வேண்டாம்.இவ்வாறு, கல்வித்துறை வட்டாரம்தெரிவித்தது.

ஆசிரியர் தகுதித் தேர்வு: புதிய வெயிட்டேஜுக்கான அரசாணை வெளியீடு!

தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி வகுப்பறைகளில் ஆசிரியர்கள் செல்போன் பேசக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இது சம்பந்தமான சுற்றறிக்கை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

இந்த சுற்றறிக்கை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

இது பற்றி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கூறிய தாவது:–

பள்ளிக்கூடங்களில் செல்போன் பயன்படுத்துவதால் கற்கும் திறன் பாதிக்கப்படுகிறது.

இதனால் பள்ளிக் கூடங்களுக்கு மாணவர்கள் செல்போன் கொண்டு வரக்கூடாது என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதை ஆசிரியர்கள் மட்டும் அல்லாமல் மாணவ– மாணவிகளின் பெற்றோர்களும் கண்காணிக்க வேண்டும்.

இதைபோல ஆசிரியர்களும் வகுப்பறைகளில் செல்போன் பேசக்கூடாது. செல்போனை தங்களது ஓய்வறையிலேயே வைத்து விட்டு செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

2014-15ம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் விவரம் வெளியீடு, தொடக்க / நடுநிலைப் பள்ளி - 220 நாட்கள், உயர் / மேல்நிலைப் பள்ளிகள் - 210 நாட்கள்

02/06/2014

குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்-12.06.2014-உறுதிமொழி-தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை.


2011-2012 ஆம் கல்வியாண்டில்RMSA மூலம் தரம் உயர்த்த சமர்பிக்கப்பட்ட தமிழக நடுநிலைப்பள்ளிகள்பட்டியல் ரத்துசெய்வதாக மத்திய HRDஅறிவிப்பு

TNPSC - DEPARTMENTAL EXAM - தேர்வில் குளறுபடி .....28.5.2014 FN,THE ACCOUNTS TEST FOR EXECUTIVE OFFICERS - 117 - தாளில் கொடுக்கப்பட்ட VI கணக்கு கேள்வியில் குளறு படி.25 மதிப்பெண் வழங்க கோரிக்கை.

VI வது கேள்வியில் கேட்கப்பட்ட கேள்வியில் தமிழ் வழியில் SPECIAL ALLOWANCE - Rs 1000 ஆனது கொடுக்கப்படவில்லை ஆனால் ஆங்கிலத்தில் SPECIAL ALLOWANCE - Rs 1000 என்று
கொடுக்கபட்டிருந்தது.

இது குறித்து கேள்வி எழுப்பியதற்கு ......அந்த SUPERVISORS களுக்கு எதுவும் தெரியவில்லை
பிறகு அவர்களில் சிலர் ஆங்கிலத்தில் கொடுத்த வினாத்தாள் தான் சரியானது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது படி போடவும் என்று அவர்களில் சிலர் கூறினர் ஒரு சில தேர்வு மையங்களில் தமிழ் வழியில் எழுதுபவர்கள் அந்த கேள்வியில் குறிப்பிட்டுள்ளது படி விடை அளிக்குமாறு அவர்களை அறிவுறுத்தியதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது ..............
இது குறித்து TNPSC - முறையான அறிவிப்பு வெளியிட்டு அந்த தேர்வில் தமிழ் வழியில் எழுதிய அரசு ஊழியர்களுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் என்பதே எல்லோரது கோரிக்கையாக உள்ளது.

புத்தகங்கள் படிக்கும் சிறுவர்களை பாராட்டுங்கள்: தொடக்க கல்வி இயக்குனர் சுற்றறிக்கை

பள்ளி மாணவர்களுக்கு கற்றல் திறனை மேம்படுத்த,அதிக புத்தகங்கள் படிக்கும் சிறுவர்களை,பள்ளியிலே பாராட்டுங்கள், என, தலைமை ஆசிரியர்களை, தொடக்க கல்வி இயக்குனர் கேட்டு உள்ளார். ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் சிறுவர், சிறுமியர்கள் பலரும், கம்ப்யூட்டர், மொபைல் போன்களில் கேம்ஸ் விளையாடுவது, "டிவி' யில் சிறுவர்களுக்கான சேனல்களை பார்த்தே, நாள் முழுவதும் முழ்கி போவது போன்ற காரணங்களால், வாசிப்பு திறன் குறைவாக காணப்படுகிறது. இதுபோன்ற குறைபாடுகளால், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கூட, தாய்மொழியை சரளமாக வாசிக்க முடியாமல், திணறுகின்றனர். இந்நிலையில், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும்,உதவி கல்வி அலுவலகம் மூலம், தொடக்க கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், தொடக்க பள்ளிகளில், மாணவர்கள் வாசிப்பு திறனை மேம்படுத்திட, அனைவருக்கும் கல்வி திட்டம் மூலம் வழங்கப்பட்டுள்ள புத்தகங்களை, மாணவர்கள் படிக்கும் வகையில் சூழ்நிலைகளை ஏற்படுத்தி தரவேண்டும்.

பள்ளிகளில் மாணவனின் பெயர் / பிறந்த தேதி / தந்தை பெயர் /சாதி மற்றும் முகப்பெழுத்து திருத்தம் குறித்து இயக்குநரின் அறிவுரைகள்

பள்ளிகல்வி இயக்குநரின் செயல்முறைகள் -ந .க .எண் 28192/எம்/இ3/2014.நாள்-09.05.2014-திருத்தம் குறித்து இயக்குநரின் அறிவுரைகள் -

தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - 6 முதன்மை கல்வி அலுவலர், 11 மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிபவர்கள் 31.05.2014 அன்று ஒய்வுபெறுவதையொட்டி பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து இயக்குநர் உத்தரவு





புதிதாக நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்தால் மட்டுமே ஊதியம்

தமிழக அரசு 1.4.2003 முதல் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற புதிய பென்ஷன் திட்டத்தை (சிபிஎஸ்) தமிழ அரசு ஊழியர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. அவ்வாறு புதிதாக நியமனம் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் ஏராளமானோர் புதிய பென்ஷன் திட்டத்தில் சேரவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் 1.4.2003க்கு பிறகு நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் அனைவரும் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்து சிபிஎஸ் பதிவு எண் பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய அரசு ஊழியர்கள் சிபிஎஸ் எண் பெறுவதற்கு அந்தந்த துறை தலைவர்கள், அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய அரசு ஊழியர்கள் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேருவதற்கான படிவத்தை பூர்த்தி செய்து அதனை துறை தலைவர் வாயிலாக அரசின் டேட்டா சென்டருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அங்கிருந்து சிபிஎஸ் எண் பெற்றுக்கொள்ள வேண்டும். 1.4.2003க்கு பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களில் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இனி ஊதியம் கோரப்பட வேண்டும். புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கான எண் பெறுவதற்காக மேலும் 3 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அனைத்து துறை தலைவர்களும், தலைமை அதிகாரிகளும், சம்பள பிரிவில் உள்ள அதிகாரிகளும் புதிய ஊழியர்கள் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்து அதற்கான எண் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் குடிநீர்,கழிப்பறை வசதி: ஆய்வு நடத்த கல்வித்துறை உத்தரவு

பள்ளிகளில், மாணவர்களுக்கு செய்துதரப்பட்டுள்ள குடிநீர்,கழிப்பறை வசதி குறித்து ஆய்வு செய்ய, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. துவக்க முதல் மேல்நிலை வரை, அனைத்துப்பள்ளிகளிலும், மாணவர்களுக்கு, கண்டிப்பாக சுகாதாரமான குடிநீர், கழிப்பறை வசதி செய்துதரப்பட வேண்டுமென, சமீபத்தில், சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி தலைமையில், கடந்த கல்வியாண்டில், பள்ளி வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில், அரசு பள்ளிகளில், குடிநீர், கழிப்பறை வசதியின்றி, மாணவர்கள் அவதிப்படுவது தெரியவந்தது. அப்பள்ளிகளின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டது. அதன்படி, அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம், அனைவருக்கும் கல்வி திட்டம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, பொதுப்பணித்துறை, குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்டவை மூலமாக, போதிய நிதி ஒதுக்கி, கட்டுமானப்பணிகள் நடந்தன. இந்நிலையில், அடுத்தமாதம் பள்ளிகள் துவங்க உள்ள நிலையில், அங்கு செய்துதரப்பட்டுள்ள குடிநீர்,கழிப்பறை வசதிகள் குறித்து மீண்டும் ஆய்வு செய்ய, முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கல்வித்துறை உயர் அதிகாரி கூறுகையில்,"பள்ளிகள் துவங்கிய பின், இந்த ஆய்வு நடத்தப்பட்டு, அதில் குறைபாடு இருப்பின், உடனடியாக சரி செய்ய, சம்பந்தப்பட்ட தலைமையாசிரியருக்கு அறிவுரை வழங்கப்படும்.

அனைத்து வகை அரசு/அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில்மழை நீர் சேகரிப்பு அமைப்பு

அனைத்து வகை அரசு/அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில்மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் ஜூன் 30 குள் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

தமிழகத்தில் துவக்கக்கல்வி தரத்தை மேம்படுத்த, ஆசிரியர்களுக்கு வரும் கல்வியாண்டில் சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முழு அடிப்படை வசதிகள் உள்ள துவக்கப்பள்ளிகளில், புத்தகங்கள் வாசிப்பு, ஆங்கில உச்சரிப்பு, கணித உபகரணங்களை பயன்படுத்துவதில் மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்த, ஆசிரியர்களுக்கு கூடுதல் சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பாடப்புத்தகங்களில் எப்பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டாலும், விடை எழுதுதல் தொடர்பாக, தேர்வுகளுக்கு தயார்படுத்துதல், எளிதாக ஆங்கிலம், கணிதம் கற்பித்தல் குறித்து, ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடப்புத்தகங்கள், நோட்டுகள், கணித கருவிகள் வழங்கியதும், பயிற்சி அளிக்கப்பட உள்ளது என, அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரி ஒருவர் கூறினார்.

பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிகளில் புகார் பெட்டி: அரசு உத்தரவு

பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை கண்டறிய, அனைத்து பள்ளிகளிலும், புகார் பெட்டி வைக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள், பொது இடங்கள், வீடுகளில் தனியாக இருக்கும், 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு தரப்படுகிறது. இக்குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது, கடுமையான நடவடிக்கை இல்லை. இதன் காரணமாக இக்குற்றங்கள் அதிகரிக்கின்றன. குறிப்பாக, பள்ளிகளில் படிக்கும் 18 வயதிற்குட்பட்ட சிறுமிகள் மீது, பாலியல் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என, குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்புகளுக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்காக, தனியார், அரசு பள்ளிகளில் ஆய்வு நடத்தி, அறிக்கை வழங்கவேண்டும். பள்ளி சிறுமிகள் தைரியமாக, புகார் தெரிவிக்க ஏதுவாக, அனைத்து பள்ளிகளிலும், புகார் பெட்டி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாதம் ஒரு முறை இப்புகார் பெட்டியில் உள்ள மனுக்களை தலைமை ஆசிரியர்கள் எடுக்கவேண்டும். மாவட்ட கல்வி அதிகாரிகள், நன்னடத்தை அலுவலர், குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் உள்ளிட்ட குழுவினர் விசாரித்து தீர்வு காணவேண்டும். புகார்களின் தன்மையை பொறுத்தே, சம்பந்தப்பட்ட குற்றச்செயலில் ஈடுபடுவோர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும், என, சமூகநலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஓய்வுபெற்ற துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி சலுகை: ஐகோர்ட் உத்தரவு

ஓய்வுபெற்ற துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, ஐந்தாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி மாற்றியமைக்கப்பட்ட சம்பளம், ஓய்வூதியப் பலன்கள் வழங்க, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. கன்னியாகுமரி ராஜாதங்கம் உட்பட, நான்கு பேர், மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:

அரசு துவக்கப் பள்ளிகளில், தலைமை ஆசிரியர்களாக பணிபுரிந்து, ஓய்வு பெற்றோம். துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, ஐந்தாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி, மாற்றியமைக்கப்பட்ட சம்பள விகிதம், 1988 ஜூன் முதல் அமல்படுத்தப்பட்டது. எங்கள் பணிக்காலத்தில் இடைநிலை ஆசிரியர்களிலிருந்து, தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்ட, 174 பேருக்கு, சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி, சம்பள விகிதத்தை மாற்றியமைக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. எங்களுக்கு இடைநிலை ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்கப்படுகிறது. சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி சம்பள விகிதம், ஓய்வூதியப் பலன்களை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், பிறப்பித்த உத்தரவில், மனுதாரர்களின் மனுவை, பள்ளிக் கல்வித்துறை செயலர் மற்றும் இயக்குனர் பரிசீலித்து, தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது

கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ள தகவல் அறியும் உரிமைச்சட்ட கையேடு...

பள்ளி ஜூன் 2 ல் திறக்கும் அன்றைய தினம் மாவட்டம் வாரியாக பள்ளியை இயக்குனர்கள் சிறப்பு பார்வை செய்திட உள்ளனர்