திருக்குறள்

16/06/2014

சத்துணவு, அங்கன்வாடி மையங்களின் பணிகளை தொண்டு நிறுவனம், தனியாரிடம் ஒப்படைக்க அரசு ஆலோசனை

தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களின் சில பணிகளை தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் மூலம் செயலாக்கம் திட்டம் குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பில், சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 1982ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம், ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கு சத்துணவு, முட்டை, சுண்டல் உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது.தமிழகத்தில் மொத்தம் 65,000 சத்துணவு மையங்கள் மற்றும் 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மையங்களிலும், ஒரு அமைப்பாளர், ஒரு சமையலர், ஒரு உதவியாளர் நியமிக்கப்படுகின்றனர்.

தமிழகம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் சத்துணவு அமைப்பாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், ஊழியர் பற்றாக்குறை, சம்பளம் நிலுவை என பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் பணியாற்றும் ஊழியர்கள், தங்களின் சம்பளம் உயர்வு, போனஸ், ஓய்வூதியம் உள்ள சலுகைகளுக்காக 
தொடர்ந்து அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். ஆனால், இவர்களின் கோரிக்கையை தமிழக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. மேலும், தரமான உணவு, சத்துணவு பொருட்கள் வாங்குவதில் மோசடி போன்றவற்றை தடுக்கவும் அரசு உறுதி எடுத்துள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டு முதல் சத்துணவு மையங்களில் 13 வகையான கலவை சாதங்கள் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். 

ஆனால், அதற்கான செலவினம் அதிகரிப்பதால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது, ஒவ்வொரு மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் 3 அல்லது 5 மையங்களில்தான் இந்த கலவை சாதம் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமென்றால், ஒரு மெகா சைஸ் உணவு தயாரிப்பு கூடம் இருந்தால்தான் சாத்தியம் என்று அதிகாரிகளின் அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற நடைமுறை அண்டை மாநிலமான கர்நாடகாவில், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல தமிழகத்திலும் பரிட்சார்த்த முறையில் செய்து பார்க்க சமூக நலத்துறை முடிவு செய்துள்ளது.

முதல்கட்டமாக, தமிழகத்தின் 15 மாவட்டங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களை தனியார்மயமாக்க குறிப்பாக தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்த சமூகநலத்துறை திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, முதல்வர் அறிவித்தபடி அனைத்து மையங்களிலும் கலவை சாதம் வழங்க ஒரு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது, தனியார் நிறுவனங்களின் பங்களிப்போடு நவீன இயந்திரம் மூலம், ஒரே இடத்தில் வைத்து 1 லட்சம் குழந்தைகளுக்கு உணவு தயாரித்து அதை பல்வேறு மையங்களுக்கு எடுத்து செல்ல திட்டமிட்டுள்ளனர். இதற்கு உலக வங்கி மூலம் நிதி பெறப்படுகிறது. 

இதுகுறித்து ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு, இம்மாதம் இறுதியில் மத்திய அரசின் பயிற்சி குழுவினர் தமிழகம் வரவுள்ளனர். தமிழக அரசின் இந்த முயற்சிக்கு சத்துணவு மற்றும் அங்கன்வாடி மைய ஊழியர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அங்கன்வாடிமைய ஊழியர் சங்கத்தை சேர்ந்த பழனிச்சாமி கூறியதாவது: ஏழை, எளிய மாணவர்களின் கல்வி நலனுக்காக தமிழக அரசு சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தது. ஆனால், தற்போதைய அரசு இத்திட்டத்தை ஒழிக்கும் முயற்சியை எடுத்து வருகிறது. 

ஏற்கனவே, குறைந்த ஊதியத்தில் வேலை பார்க்கும் எங்களுக்கு பல்வேறு சலுகைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், எங்க ளின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் வகையில், சத்துணவு மற்றும் அங்கன் வாடி மையங்களை தனியார்மயமாக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது எங்கள் வயிற்றில் அடிக்கும் செய லாகும். அரசின் இந்த செயலை கண்டித்து விரை வில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்‘ என்றார்.

No comments:

Post a Comment