உலக சுற்றுசூழல் தினத்தையொட்டி ஜூன் 5ம் தேதி பள்ளிகளில் விழிப்புணர்வு பேரணி, கட்டுரை, பேச்சு,ஓவியப்போட்டிகள் நடத்த வேண்டும், என முதன்மை கல்வி அலுவலர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் அவர் அனுப்பியுள்ள வெளியிட்ட அறிக்கை: சுற்றுப்புற சீர்கேட்டை தடுத்து நிறுத்தும் வகையில், சமுதாயத்தின் அங்கத்தினர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, சுற்றுச்சூழலை பாதுகாத்து பராமரிக்கும் செயல்பாடுகளை ஊக்குவித்து நடைமுறைப்படுத்தி வரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம்தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதே போலவே வரும் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாட அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களும் ஏற்பாடு செய்ய வேண்டும். இதன்படி, சுற்றுச்சூழல் குறித்த முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக பள்ளி மாணவ, மாணவியருக்கிடையே பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, வினாடி- வினா, மாணவர் பேரணி போன்ற விழிப்புணர்வு நிகழச்சிகளை நடத்தி, அதன் விபரங்களை வரும் 20ம் தேதிக்குள் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு ஃபோட்டோவுடன் அறிக்கையாக அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment