திருக்குறள்

21/06/2014

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனடைய ஜூன் 30க்குள் விண்ணப்பிக்கவும்

பொதுத்துறை வங்கி திட்டம் மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழ்நாடுஅரசு ஓய்வூதியதாரர்கள் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்பயனடைய தங்களது விவரங்களை ஜூன் 30ம் தேதிக்குள் உரியபடிவத்தில் அளிக்க வேண்டும். இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பு:1.7.2014 முதல்ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்- 2014நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதற்காக விண்ணப்பங்களைஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் பெறும்வங்கிக் கிளைகளிலிருந்து பெற்றுக்கொள்ளாம். அல்லதுwww.tn.gov.in, www.tn.gov.inkaruvoolam என்ற இணையத்திலிருந்துபதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பொதுத்துறை வங்கி திட்டம்மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், குடும்பஓய்வூதியதாரர்கள் (ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம்,கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள் தவிர) பூர்த்திசெய்யப்பட்ட படிவங்களை புகைப்படம் (துணைவருடன் உள்ளபுகைப்படம்) மற்றும் துணைவரின் பிறந்த தேதிக்கான ஆவணநகலுடன், தொடர்புடைய வங்கிக் கிளைகளில் நேரடியாக அல்லதுபிறநபர் மூலமாக அளிக்க வேண்டும். சரிபார்த்தலுக்குப் பின்னர்படிவத்தின் நகலை வங்கி அலுவலரின் கையொப்பத்துடன் திரும்பபெற்றுக்கொள்ளலாம்

No comments:

Post a Comment