திருக்குறள்

04/06/2014

அரசு பள்ளிகளில் உபரி ஆசிரியர்களின் விவரம் வெப்சைட்டில் பதிய உத்தரவு

அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் உபரி ஆசிரியர் பெயர் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நகராட்சி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர் பணியிடங்களை மாவட்டத்தில் உள்ள பிற காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்பும் வகையில் உபரி ஆசிரியர் பணியிடங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன. ஆசிரியர் மாணவர் விகிதாச்சார அடிப்படையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி நிலவரப்படி இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

பாடவாரியாக இந்த காலியிடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் முன்னுரிமை விபரங்கள் கணினி வழியாகவே கணக்கிடப்படுகிறது. இதுதொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment