அரசு பள்ளிகளில், உபரி ஆசிரியர்களை, 'டிரான்ஸ்பர்' செய்ய, கல்வித்துறை எடுத்துவரும் நடவடிக்கைக்கு எதிராக, ஆசிரியர்களும், ஆசிரியர் சங்க நிர்வாகிகளும்,போர்க்கொடி துாக்கி உள்ளனர். நிர்ணயிக்கப்பட்ட ஆசிரியர் - மாணவர்விகிதாச்சாரப்படி, அரசு பள்ளிகளில், தற்போதுள்ள நிலைமையை ஆய்வு செய்து, உபரியாக உள்ள, 3,000பட்டதாரி ஆசிரியர்களை, ஆசிரியர் தேவை உள்ள பள்ளிகளுக்கு, பணியிட மாற்றம்செய்ய, கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. 'இந்நடவடிக்கை,நியாயமானது; அதே நேரத்தில், அவசரகதியில், நடைமுறைப்படுத்த முயற்சிப்பதுதான் தவறு' என, ஆசிரியர்களும், சங்க நிர்வாகிகளும் கொந்தளிக்கின்றனர்.
அரசு பள்ளிகளில், ஆகஸ்ட் வரை, மாணவர் சேர்க்கை நடக்கிறது. மாணவர்எண்ணிக்கை விவரம், ஆகஸ்ட் இறுதியில் தான் தெரியும். அதற்குள், இப்போதுள்ளமாணவர் எண்ணிக்கையை வைத்து, உபரி ஆசிரியரை, எப்படி கணக்கிட முடியும்.மேலும், கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாத நிலவரத்தின் அடிப்படையில், உபரி ஆசிரியரைகணக்கிடுவதாக, தகவல் வருகிறது. கடந்த, மே, 31ம் தேதி, அதிகளவில், ஆசிரியர்ஓய்வு பெற்றுள்ளனர். இந்த தேதியில் உள்ள ஆசிரியர் காலி பணியிடங்கள்அடிப்படையிலும், ஆகஸ்ட் இறுதியில் உள்ள மாணவர் எண்ணிக்கைஅடிப்படையிலும், உபரி ஆசிரியர் குறித்து, கணக்கெடுக்க வேண்டும். உபரிஆசிரியரை, பணியிட மாற்றம் செய்வதில், தவறில்லை; இந்த நடவடிக்கையை,வரவேற்கிறோம். அதே நேரத்தில், முடிந்த அளவிற்கு, தற்போது பணிபுரியும்ஆசிரியருக்கு, பாதிப்பு வராத அளவிற்கு, கல்வித்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும். எனினும், ஆசிரியர்களும், எப்போது, 'டிரான்ஸ்பர்' வருமோ என,அச்சத்தில் உள்ளனர்.இது குறித்து, கல்வித்துறை வட்டாரம் கூறியதாவது: நான்குமாணவர்; ஐந்து மாணவர் குறைவாக இருந்தால், அதை ஒரு காரணமாக வைத்து,உபரி ஆசிரியர் என, கணக்கிட மாட்டோம். மாணவர், மிக மிக குறைவாக உள்ளபள்ளிகளில், ஆசிரியர் அதிகமாக இருந்தால், அவர்களைத் தான், வேறு பள்ளிகளுக்குமாற்றுவோம்.இந்த விவகாரத்தில், இன்னும் முடிவு எடுக்கவில்லை. அதற்குள், ஆசிரியர்கள்,தேவையில்லாமல் பதற்றம் அடைய வேண்டாம்.இவ்வாறு, கல்வித்துறை வட்டாரம்தெரிவித்தது.
No comments:
Post a Comment