திருக்குறள்

03/07/2013

தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை ஊதிய நிர்ணயம் - தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் சில பதில்கள்

50 சதவீதம் பள்ளிகளில் போக்குவரத்து குழுக்கள் இல்லை

தமிழகத்தில், 50 சதவீதம் பள்ளிகளில் போக்குவரத்து குழுக்கள் அமைக்கப்படாதது குறித்து, போக்குவரத்து துறை கவலை தெரிவித்துள்ளது. விபத்துகளை தடுக்க, இக்குழுக்கள் அமைப்பது அவசியம் என அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில், 6,304 தொடக்கப்பள்ளி; 944 நடுநிலைப் பள்ளி; 1,868 உயர்நிலைப் பள்ளி; 2,247 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம், 11,365 தனியார் பள்ளிகள் இயங்குகின்றன. இந்த பள்ளிகளின் வாகனங்களில், விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா, போக்குவரத்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதா என, போக்குவரத்து துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. பள்ளிகளில், தலைமை ஆசிரியர் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர், கல்வித் துறை அதிகாரி, மோட்டர் வாகன ஆய்வாளர், பெற்றோர் - ஆசிரியர் சங்க பிரதிநிதி ஆகியோர் இடம் பெற்ற, போக்குவரத்து குழுவை அமைக்க வேண்டும். இந்த குழுக்கள், பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு நிலை, ஓட்டுனரின் நிலை உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தி, ஆலோசனை கூட்டம் நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில், 50 சதவீத பள்ளிகள், போக்குவரத்து குழுக்களை அமைக்கவில்லை என, கண்டறியப்பட்டு உள்ளது. "இப்பள்ளிகளின் வாகனங்களை இயக்க அனுமதிக்க மாட்டோம்' என, போக்குவரத்து துறை எச்சரித்தும், பெரும்பாலான பள்ளிகள் குழுக்களை அமைக்காமல் அலட்சியமாக உள்ளன.

இது குறித்து, போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: வாகனங்களை முறையாக இயக்க, பள்ளி அளவிலான போக்குவரத்து குழுவை அமைக்க வேண்டியது அவசியம். இதன் மூலம், விபத்துகளை தடுக்க முடியும். இருப்பினும், 50 சதவீதம் பள்ளிகளில் குழுக்கள் அமைக்கவில்லை. இந்த பள்ளிகளின் மீது, துறையின் இயக்குனரகம் சார்பில் நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து குழுக்களை அமைப்பதால் ஏற்படும் நன்மை குறித்து, பள்ளிகளின் நிர்வாகத்தினரிடம், ஆர்.டி.ஓ., தலைமையிலான குழுக்கள் விளக்கி வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

மாநிலம் முழுவதும் பதிவு செய்து விட்டு 82.02 லட்சம் பேர் வேலைக்கு காத்திருப்பு

தமிழகம் முழுவதும், வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்துவிட்டு, 82.02 லட்சம் பேர், வேலைக்காக காத்திருப்பதாக, வேலை வாய்ப்பு இயக்குனரகம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில், நடப்பு ஆண்டு, ஜூன், 30ம் தேதி நிலவரப்படி, வேலை வாய்ப்புக்காக காத்திருப்போர் பற்றிய விவரங்களை, வேலை வாய்ப்பு இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, 40.78 லட்சம் பெண்கள் உட்பட, மொத்தம், 82.02 லட்சம் பேர் வேலை வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.இதில், பிற்படுத்தப்பட்டோர் - 34.40 லட்சம்; மிக பிற்படுத்தப்பட்டோர் - 18.90 லட்சம்; ஆதி திராவிடர் - 18.32 லட்சம்; பழங்குடியினர் - 34,024 பேர் இடம் பெற்றுள்ளனர்.சிறப்பு பிரிவின் கீழ், பர்மாவில் இருந்து தாயகம் திரும்பியோர் - 1,089; இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியோர் - 2,416; மாற்றுத்திறனாளிகள் - 1,05,770 பேரும் உள்ளனர்.பட்டதாரிகள் - 14.3 லட்சம்; முதுநிலை பட்டதாரிகள் - 6.09 லட்சம் பேரும் இப்பட்டியலில் உள்ளனர். இதில், 28 ஆயிரம் மருத்துவர்; 3.17 லட்சம் இன்ஜினியர்களும் அடங்குவர்.

இந்திராகாந்தி திறந்த நிலை பல்கலைகழகத்தின் மதுரை மண்டலம் மாற்றம்


இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் மதுரை மண்டலத்தில் உள்ள தென்மாவட்டங்கள் திருவனந்தபுரத்துடன் இணைக்கப்பட உள்ளதால் தூத்துக்குடி, நெல்லை, குமரி மாணவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும். தொடர்ந்து மதுரை மண்டலத்திலேயே இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் மூலம் அஞ்சல்வழியில் பல்வேறு பட்டப்படிப்புகள் நடத்தப்படுகின்றன. மத்திய அரசின் மனிதவள 
மேம்பாட்டுத்துறை மூலம் நிர்வாகிக்கப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு 
மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. 

தற்போது பி.எட் படிப்பு இந்த பல்கலைக்கழகம் வழங்குகிறது. 5 ஆண்டுகள் 
ஆசிரியர் பணி செய்தவர்கள் நுழைவுத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு 
இரண்டு ஆண்டுகள் பயின்று பட்டம் வாங்க வேண்டும் (கல்வியியல் கல்லூரியில் சேர்ந்து படித்தால் 10 மாதம் மட்டுமே) மதுரை இந்திராகாந்தி திறந்த வெளிபல்கலைக் கழக மண்டல அலுவலகம் இயங்குகிறது. 

இதில் பயின்ற மாணவர்கள் மே மாதம் நடக்கும் பி.எட் செமினார் வகுப்புகள் 
படிப்பதற்கான கல்லூரிகளை தேர்ந்தெடுப்பதற்குரிய கவுன்சிலிங், தேர்வு 
கட்டணம் செலுத்துதல், உட்பட அனைத்து தேவைகளுக்கும் மதுரையில் உள்ள மண்டல அலுவலகத்தைபயன்படுத்தி வருகின்றனர். 

இந்த ஆண்டு முதல் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டம் 
மட்டும் மதுரை மண்டலத்தில் இருந்து பிரிந்து திருவனந்தபுரத்தில் 
இணைக்கப்பட்டிருப்பதுடன் விண்ணப்ப கட்டணமும் 500 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 

மதுரை மண்டலத்தை எளிதில் தொடர்பு கொண்டு தேர்வு, ரிசல்ட், அட்மிசன் உட்பட அனைத்து சந்தேகங்களும் போனிலும் நேரிலும் கேட்டு தெளிவடைந்து வரும் தபால் வழி மாணவர்கள் திருவனந்தபுரத்தில் இயக்கப்பட்டால் இரண்டாம் தரகுடிமக்களாக நடத்தப்படும் கசப்பான நிலை ஏற்படும், தொடர்ந்து மதுரை மண்டலத்திலேயே இயக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

''இதர் ஆவோ..''- தமிழகத்தில் இனி வட இந்தியக் குழந்தைகள் இந்தியிலேயே படிக்கலாம்!

எங்கு பார்த்தாலும் பீகாரிகள், பெங்காலிகள்தொழிலாளர் கணக்கெடுப்புபீடா மடிக்க மட்டுமல்ல.. பில்டிங் கட்டவும் இந்திவாலாபடிக்க வழியில்லைஇனி இந்தியிலேயே படிக்கலாம்கோவையில் 402 குழந்தைகள்118 பேர் ஒன்னாப்பு குழந்தைகள்6 முதல் 14 வரைவிரைவில் டீச்சர்கள் நியமனம்

தமிழகத்தில் வேலைக்காக குடி பெயர்ந்து வாழ்ந்து வரும் வட இந்தியத் தொழிலாளர்களின் குழந்தைகள் தங்களது தாய் மொழியான இந்தியிலேயே இங்கு கல்வி பயிலும் வசதியை தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. வெளி மாநிலங்களிலிருந்து வேலைக்காக தமிழகத்திற்கு வந்து வாழ்ந்து வருவோரின் குழந்தைகள் தங்களது தாய் மொழியிலேயே கல்வி கற்க வசதி செய்யப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்தத் திட்டத்தை மே15ம் தேதி சட்டசபையில் அறிவித்த முதல்வர் ஜெயலலிதா, இதுதொடர்பான கணக்கெடுப்புக்கும் உத்தரவிட்டிருந்தார்.

காணாமல் போன அரசு ஊழியர் குடும்பத்தினர் ஓய்வூதியம் பெறலாம்: மத்திய அரசு உத்தரவு

காணாமல் போன ஒரு அரசு ஊழியரின் குடும்பத்தினர் அவருக்கு சேர வேண்டிய ஓய்வூதியம் உள்ளிட்டவற்றை பெறலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இது தொடர்பான புதிய வழிமுறைகளை மத்திய ஊழியர், ஓய்வூதியத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பது: ஒரு அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியம் பெறுபவர் காணாமல் போனால், அவரது குடும்பத்தினர் உரிய அலுவலகத்தில் மனு செய்து உரிய தொகைகளைப் பெறலாம். இந்த முறையில் சம்பள பாக்கி, குடும்ப ஓய்வூதியத் தொகை, பணம் பெறத்தக்க விடுப்புத் தொகை, வருங்கால வைப்பு நிதித் தொகை ஆகியவற்றை பெற புதிய உத்தரவு வழி செய்கிறது. தீவிரவாதிகள் அல்லது பயங்கரவாதிகள் கடத்திச் சென்ற அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியம் பெறுபவரின் குடும்பத்தினர் அந்த ஊழியர் அல்லது ஓய்வூதியம் பெறுபவருக்கு சேர வேண்டிய தொகையைக் கோரி பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு: விசாரிக்க தமிழக அரசு குழு அமைப்பு



வேலை செய்யும் நிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்த புகார்களை விசாரிக்க 5 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,
விசாரணைக் குழுவின் தலைவராக காவல்துறை தலைவர் சீமா அகர்வால் பதவி வகிப்பார் என்று அறிவித்துள்ளது.

குழுவின் உறுப்பினர்களாக கூடுதல் காவல்துறை தலைவர் லலிதா குமாரி, காவல்துறை தலைவர் வெங்கட்ராமன், கூடுதல் காவல் ஆணையர் ஆர்.எஸ்.நல்லசிவம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வல்சலகுமாரியும் 5 பேர் கொண்ட குழுவில் உறுப்பினராக இடம்பெற்றுள்ளார்.

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைப் புகார்களை விசாரிக்க குழு ஒன்றை அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில் தமிழக அரசு விசாரணைக்குழு அமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மவுசு குறைந்து வரும் ஆசிரியர் பயிற்சி படிப்பு: காலியிடம்-17,000; விண்ணப்பித்தவர்-4,430 பேர்


ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கான அரசு ஒதுக்கீட்டில் 17 ஆயிரத்து 45 சீட்டுக்கள் உள்ளன. இந்த படிப்புக்கான மவுசு குறைந்து வருவதால், இந்த ஆண்டு 4 ஆயிரத்து 430 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இதனால் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் கலக்கம் அடைந்துள்ளன.

தமிழகத்தில் 539 அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

அரசு பள்ளிகளில் எளிதாக வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கிராமப்புற மாணவர்கள் இந்த படிப்பில் சேர ஆர்வம் காட்டி வந்தனர். இதனால், கடந்த சில வருடங்களாக இந்த படிப்புக்கு நல்ல கிராக்கி இருந்தது. ஆனால், தற்போது அரசு பள்ளிகளில் தகுதி தேர்வு மூலம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவதால், ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படித்தாலும், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு ஆசிரியராக முடியும் என்பதால் இந்த படிப்பில் தற்போது யாரும் அக்கறை செலுத்தவில்லை.

இந்நிலையில் 2013-14 ஆம் கல்வியாண்டுக்கான ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான கவுன்சிலிங்

வரும் 8 ஆம் தேதி தொடங்கி, 15ஆம் தேதி வரை நடக்கிறது. ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களில் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் நடத்தப்படும் இந்த கவுன்சிலிங்கில் இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டுக்கு 17 ஆயிரத்து 45 சீட்டுக்கள் கிடைத்துள்ளன. ஆனால், 4 ஆயிரத்து 430 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இதில் 429 பேர் மாணவர்கள், 4001 பேர் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு குறைந்த அளவு மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளதால் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் கலக்கம் அடைந்துள்ளன.

02/07/2013

தமிழக அரசு ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி கணக்குச் சீட்டு குறித்த அறிவுறுத்தலை மாநில கணக்காயர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இது குறித்து துணை மாநில கணக்காயர் (நிதி) வர்ஷினி அருண்திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழக அரசு ஊழியர்களுக்கான கடந்த நிதியாண்டின் பொதுவருங்கால வைப்பு நிதியின் வருடாந்திர கணக்கு அறிக்கை ஜூலைமுதல் வாரம் முதல் மாநில முதன்மை கணக்காயர் அலுவலகத்தில்இருந்து அனுப்பப்பட உள்ளன. இந்த அறிக்கை சம்பந்தப்பட்ட பணம்பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு அனுப்பப்படுகின்றன.

பொது வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் கடந்த பிப்ரவரி 28 ஆம்தேதியன்று எந்த அலுவலகத்தில் பணியாற்றினார்களோ, அந்தஅலுவலக பணம் பெற்று வழங்கும் அலுவலரை அணுகி அவரவர் கணக்குஅறிக்கையை பெற்றுக் கொள்ளலாம்.

கணக்கு அறிக்கையில் ஏதேனும் மாறுபாடுகள் காணப்பட்டால் அதுகுறித்த தகவல்களை மாநில கணக்காயர் அலுவலகத்துக்கு உடனடியாகத்தெரிவிக்க வேண்டும். மேலும், சந்தாதாரர் அல்லது வாரிசுதாரர்கள்தகவல் பரிமாற்றத்துக்கான தங்களது செல்பேசி எண் மற்றும் முழுமுகவரி ஆகியவற்றை அனைத்துக் கடிதத் தொடர்புகளிலும் தவறாமல்குறிப்பிடவும்.

அதேபோன்று, பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் தங்கள்அலுவலகத்தின் முழு முகவரி, தொலைபேசி, செல்பேசி, இ-மெயில்ஆகிய தகவல்களை தங்களின் அனைத்துக் கடித தொடர்புகளிலும்தவறாமல் குறிப்பிட வேண்டும்.

தகவல்கள் தெரிவிக்க...044-24314477. இணையதளம்: www.agae.tn.nic.in நேரடிக் கடிதம் மூலம்: வர்ஷினி அருண், துணை மாநில கணக்காயர்(நிதி), மாநில முதன்மைக் கணக்காயர் அலுவலகம் (கணக்கு மற்றும் பணிவரவு), 361, அண்ணாசாலை, சென்னை-600 018.

அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும், “சிலையும் நானே சிற்பியும் நானே ”அதிசியகோட்” எனும் சினிமாவை திரையிட்டு காட்ட வேண்டும்.சினிமாவை திரையிட்டு காட்ட , 7ரூபாய் கட்டணம் வசூலித்துக்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


சத்துணவுதிட்டத்தில் பணியாற்றும் சத்துணவு அமைப்பாளர்,சமையளர் மற்றும் உதவியாளர்களுக்கான மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு) அறிவுரைகள்


01/07/2013

தமிழக அரசின் பல்வேறு துறைகளில், 30 ஆயிரம் பேருக்கு, புதிய வேலை வாய்ப்புகளை அளிப்பதற்கான நடவடிக்கைகளில், டி.என்.பி.எஸ்.சி., யும், டி.ஆர்.பி.,யும், மும்முரம்

அரசு” தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., ஆகிய இரு அமைப்புகளும், தமிழக அரசு துறைகளில், புதிய நியமனங்களை செய்வதில், பெரும் பங்கை ஆற்றி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும், சராசரியாக, இரு அமைப்புகளும், தலா, 30 ஆயிரம் பேருக்கு, வேலை வாய்ப்புகளை வழங்கும் பணியை செய்து வருகின்றன.நடப்பு ஆண்டிலும், வரும் செப்டம்பருக்குள், 30 ஆயிரம் பேருக்கு, வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான பணிகளில், இரு அமைப்புகளும், மும்முரமாக ஈடுபட்டுள்ளன.


குரூப்-4 தேர்வு மூலம், 5,566 பேரை தேர்வு செய்ய, ஆகஸ்ட் 25ல், போட்டித்தேர்வை நடத்துகிறது. இந்த தேர்வை, 6 லட்சம் பேர் வரை எழுத உள்ளனர். இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில், 5,566 பேரும் நியமிக்கப்படுவர். இவர்களுக்கு, 20 ஆயிரம் ரூபாய் வரை, மாதச்சம்பளம் கிடைக்கும்.இதேபோல், சுகாதாரத்துறையில், 2,594 உதவி மருத்துவர்களை நியமனம் செய்ய, செப்டம்பர், 22ம் தேதி, போட்டித்தேர்வை நடத்துகிறது. இதனை, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவை மட்டுமில்லாமல், பல்வேறு குறைந்தபணியிடங்களுக்கான தேர்வுகளும், தொடர்ந்து நடக்க உள்ளன.

அரசு பள்ளிகளில், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் மற்றும்முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான பணிகளில், டி.ஆர்.பி., ஈடுபட்டு வருகிறது. ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம், 15 ஆயிரம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான தேர்வு, ஆகஸ்ட் 17, 18 தேதிகளில் நடக்கிறது. இந்த தேர்வை, 7 லட்சம் பேர் வரை எழுதுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கு விண்ணப்பிக்க, நாளை ஜூலை 1ம் தேதி கடைசி நாள். அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,900 முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான தேர்வை, ஜூலை, 21ம் தேதி நடத்துகிறது. இந்த தேர்வை, 1.5 லட்சம் பேர் எழுதுகின்றனர். மேலும், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், 1,100உதவி பேராசிரியர்களை நியமனம் செய்வதற்கான பணிகளிலும், டி.ஆர்.பி., ஈடுபட்டுள்ளது.மேலும், அரசு பள்ளிகளில், தையல், இசை, உடற்கல்வி ஆசிரியர்களும், நியமிக்கப்பட உள்ளனர். வரும் செப்டம்பருக்குள், இந்த அனைத்து பணி நியமனங்களும் முடிக்கப்பட்டுவிடும் என்பதால்,வேலை வாய்ப்பை எதிர்நோக்கியுள்ள பட்டதாரிகள், உற்சாகம் அடைந்து உள்ளனர்.அதே நேரத்தில், பணி நியமனங்களே நடக்காமல் உள்ள, இதர துறைகளில் உள்ள, காலி பணியிடங்களை நிரப்பவும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, பட்டதாரிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தனியார் பள்ளிகளில் ஆய்வு நடத்த உத்தரவு...

ஒரு வகுப்பில் 5 பிரிவுகளுக்கு மேல் நடத்தும் தனியார் பள்ளிகள் குறித்தும் கூடுதலாக படிக்கும் மாணவர்கள் விவரங்கள் குறித்தும் ஆய்வு நடத்தி அறிக்கை தர மெட்ரிக் பள்ளி இன்ஸ்பெக்டர்களுக்கு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. அரசின் உத்தரவால், தனியார் பள்ளிகளில் கூடுதலாக சேர்க்கப்பட்ட 50 ஆயிரம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது.தமிழகத்தில் 7000 நர்சரி, பிரைமரி பள்ளிகள், 1500 மெட்ரிக் பள்ளிகள், 4500 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள், 2000 தனியார் சுயநிதி பள்ளிகள், 650 சிபிஎஸ்இ பள்ளிகள் என மொத்தம் 15650 தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் சுமார் 1.5 கோடி மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். ஒரு லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். அனைவருக்கும் இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி (ஆர்டிஇ) அரசு, தனியார் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை ஒரு வகுப்புக்கு 30 மாணவர்களும், 6 முதல் 10ம் வகுப்பு வரை 35 மாணவர்களும், 11, 12ம் வகுப்புகளில் 40 மாணவர்கள் வரை மட்டுமே சேர்த்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பல தனியார் பள்ளிகள் விதிகளை மீறி ஒரு வகுப்பில் கூடுதல்மாணவர்களை சேர்த்துள்ளதாகவும், இதனால் அரசுப் பள்ளிகளில் சேர்க்கை குறைவதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தனியார் பள்ளிகளில் ஒரு வகுப்புக்கு அதிகபட்சம் ஐந்து பிரிவுகளுக்கு (செக்ஷன்) மேல் நடத்தக்கூடாது என்றும், ஆர்டிஇ விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் உத்தரவிட்டு இருந்தது. மாணவர் சேர்க்கை முடிந்து, பள்ளிகள் துவங்கப்பட்ட நிலையில் திடீரென்று மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் இவ்வாறு அறிவித்தது, தனியார் பள்ளிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல தனியார் பள்ளிகள் ஒரு வகுப்புக்கு ஏ முதல் எல் வரை 12 பிரிவுகள் நடத்தி வருகின்றன. தற்போதைய உத்தரவால் கூடுதலான பிரிவுகளில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இதுகுறித்து மெட்ரிக் பள்ளி இயக்கக அதிகாரி ஒருவர் கூறுகையில், மாநிலம் முழுவதும் 300 தனியார் பள்ளிகளில் கூடுதல் பிரிவுகள் இயங்குவது தெரியவந்துள்ளது. இவற்றில் எத்தனை மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளனர் என்பது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தர, மெட்ரிக் பள்ளி இன்ஸ்பெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கூடுதலாக சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான மாற்று ஏற்பாடு குறித்து அரசுதான் முடிவு செய்யும் என்றார். இதுகுறித்து தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் சங்க மாநில செயலாளர் நந்தகுமார் கூறும்போது, ''மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள தனியார் பள்ளிகள் இந்த உத்தரவை வரவேற்கின்றன. போதிய கட்டிட வசதிகளும், ஆசிரியர்களும் இருந்தால் எத்தனை பிரிவுகள் வேண்டுமானாலும் நடத்திக்கொள்ளலாம். இதுதான் நடைமுறை. மார்ச், ஏப்ரல் மாதத்திலேயே பள்ளிகளுக்கு நோட்டீஸ் கொடுத்து நடவடிக்கை எடுத்திருந்தால் தனியார் பள்ளிகள் விதிகளுக்கு உட்பட்டு பிரிவுகளை குறைத்திருக்கும். இப்போது திடீரென உத்தரவு போட்டுள்ளதால் மாநிலம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்படுவர். ஆசிரியர்களுக்கும் வேலை இழப்பு ஏற்படும். இந்த உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

2013-14 கல்வியாண்டில் தமிழ்வழி / ஆங்கில வழியில் 1ஆம் வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை01.07.2013 பிற்பகல் 2 மணிக்குள் விவரம் வேண்டும் -தொடக்கக் கல்வி இயக்குனர்


2012 - 13ஆம் ஆண்டுக்குரிய மாநில நல்லாசிரியர் விருதிற்கு தகுதிவாய்ந்த தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை / மெட்ரிக் பள்ளிகள் ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட அளவில் குழு அமைத்தல், வழிக்காட்டு நெறிமுறைகள் மற்றும் விண்ணப்பம் வெளியீட்டு உத்தரவு