திருக்குறள்

03/07/2013

பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு: விசாரிக்க தமிழக அரசு குழு அமைப்பு



வேலை செய்யும் நிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்த புகார்களை விசாரிக்க 5 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,
விசாரணைக் குழுவின் தலைவராக காவல்துறை தலைவர் சீமா அகர்வால் பதவி வகிப்பார் என்று அறிவித்துள்ளது.

குழுவின் உறுப்பினர்களாக கூடுதல் காவல்துறை தலைவர் லலிதா குமாரி, காவல்துறை தலைவர் வெங்கட்ராமன், கூடுதல் காவல் ஆணையர் ஆர்.எஸ்.நல்லசிவம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வல்சலகுமாரியும் 5 பேர் கொண்ட குழுவில் உறுப்பினராக இடம்பெற்றுள்ளார்.

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைப் புகார்களை விசாரிக்க குழு ஒன்றை அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில் தமிழக அரசு விசாரணைக்குழு அமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment