தமிழகத்தில் 17000 தொடக்கப்பள்ளிகளில் 2 ஆசிரியர்களேபணியாற்றுவதாக அரசு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டில்மத்திய அரசு கொண்டு வந்த கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில் 6 முதல் 14வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கல்வி உறுதி செய்யப்பட வேண்டும் என்றுதெரிவித்துள்ளது. இதையடுத்து 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளைபள்ளிகளில் சேர்ப்பதில் பல்வேறு சலுகைகளை அறிவித்து அரசு உத்தரவிட்டது.இந்நிலையில் தொடக்கப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இருக்கிறார் களாஎன்பது குறித்து பள்ளிக் கல்வி மேலாண்மை தகவல்(எஸ்.இ.எம்.ஐ.எஸ்) மையம்சமீபத்தில் நடத்திய ஆய்வில் சில பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாகவும், 17000பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாகவும் இயங்குவது தெரியவந்துள்ளது.
கடந்த 2011,12ம் ஆண்டு கணக்குப்படி தமிழகத்தில் 34871 தொடக்கப் பள்ளிகள்இயங்கின. அவற்றில் 60986 ஆசிரியர்களும், நிதியுதவி பெறும் பள்ளிகளில் 24338ஆசிரியர்களும் பணியாற்றினர். தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 33000தொடக்கப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் சுமார் 30 லட்சம் குழந்தைகள் படிக்கின்றனர்.தொடக்கப் பள்ளிகள் குறித்து எஸ்.இ.எம்.ஐ.எஸ் எடுத்த புள்ளிவிவரப்படி மேற்கண்டதகவல் பெறப்பட்டுள்ளது.
மேலும் மலைப்பிரதேசம், எல்லையோரம் போன்ற பகுதிகளில்இயங்கும் பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளில் ஓராசிரியர் மட்டுமே உள்ளதாகஅந்த புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது. இது தவிர 5 குழந்தைகள் மட்டுமே படிக்கும்பள்ளிகள் 500 என்பதும் தெரியவந்துள்ளது. 5 முதல் 25 குழந்தைகள் இருந்தாலும்அந்த பள்ளிக்கு 2 ஆசிரியர்தான் நியமிக்க முடியும் என்பதால் இரண்டு ஆசிரியர்களைகொண்டே இவை இயங்குகின்றன. இந்த விவரம் தற்போது மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் கூறுகையில்,தமிழகத்தில் ஓராசிரியர் பள்ளிகள் என்பது கிடையாது. ஆனால் 2 ஆசிரியர்கள்பணியாற்றும் பள்ளிகளில் ஒருவர் மாறுதலாகியோ, மாற்றுப்பணிக்கோசென்றுவிட்டால் ஒரு ஆசிரியர்தான் கவனிக்க வேண்டும். தொடக்கப் பள்ளிஆசிரியர்களுக்கு புள்ளி விவரம் எடுப்பது, மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல்பணி, உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுத்துவதால் ஒரு ஆசிரியர்தான்பள்ளிகளில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆசிரியர் மாணவர் விகிதாசாரப் படி,குறைந்த மாணவர் உள்ள பள்ளிக்கு 2 ஆசிரியருக்கு மேல் நியமிக்க முடியாது என்றுவிதி உள்ளதே இதற்கு காரணம். இதுபோன்ற பள்ளிகளில் அதிக மாணவர்களைசேர்த்து தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
No comments:
Post a Comment