நம் தேசியக் கொடியில் இருக்கும் மூன்று வண்ணங்களில் காவி நிறம் இந்து மதத்தையும், பச்சை நிறம் இஸ்லாமியத்தையும் வெள்ளை நிறமானது பிற மதங்களையும் குறிப்பிடும் பொருளில் உருவாக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சில நாட்கள் முன்பு பாபு ராஜேந்திர பிரசாத், அம்பேத்கர், அபுல் கலாம் ஆசாத், சரோஜினி நாயுடு இன்னும் சில முக்கியத் தலைவர்களின் ஆலோசனையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, தேசியக் கொடியைப் பற்றி விவாதம் நடந்தது. அதில் மத அடையாளத்தை மாற்றி, தேசியக் கொடிக்கான புதிய கருத்து உருவாக்கப்பட்டது.
காவி நிறம் தியாகத்தையும், வெண்மை நிறம் ஒழுக்கத்தையும், பச்சை நிறம் நம் நாட்டின் வளத்தையும் குறிக்கும் என்று அறிவித்தார் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன். அசோகச் சக்கரமும் அப்போதுதான் கொடியில் இடம்பெற்றது. மூன்று வாரங்கள் நடந்த அந்த ஆலோசனையின் முடிவில், தேசியக் கொடியை ஜுலை 22, 1947-ல் அங்கீகரித்தார்கள். அந்தக் கொடியே முதன்முறையாக 1947-ஆகஸ்ட் 15 அன்று ஏற்றப்பட்டது.
No comments:
Post a Comment