ஆசிரியர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மூன்று நபர் குழுவின் அறிக்கை சமர்பிக்கப்பட்ட நாள் முதலே ஆசிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் பரபரப்பும் எழத்தொடங்கியது.
கடந்த ஒரு வாரமாக இப்போ வரும் அப்போ வரும் என எதிர்பார்க்கப்பட்ட அரசாணை வெளியீடு நேற்று வெளியானது. பெரும் எதிர்பார்ப்பிலிருந்த ஆசிரியர்களுக்கு தேர்வு/ சிறப்பு நிலைக்கு ஊக்க ஊதியம் கூடுதலாக மூன்று சதவீதம் என்பதை தவிர்த்து வேறு எந்த பலனும் இல்லை என்பதால் பெருத்த ஏமாற்றமாக கருதுகின்றனர்.
குறிப்பாக தேர்வு/ சிறப்பு நிலைக்கு ஊதிய விகித மாற்றம் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய விகித மாற்றம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது குறித்த அறிவிப்பு ஏதும் இல்லை என்பதால். ஆசிரியர் சங்கங்கள் தற்போதே மாபெரும் ஆர்பாட்டம் நடத்தி அரசின் கவனத்தை ஈர்க்க ஆயத்த கூட்டங்களை நடத்தி வருகின்றனர். பல இடங்களில் வட்டார அளவிலேயே முடிவு செய்து ஆர்பாட்டங்களை அறிவித்துள்ளனர். இன்று மாலைக்குள்ளோ நாளையோ பெரும்பாலான சங்கங்கள் மாநிலம் தழுவிய ஆர்பாட்டங்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது அசிரியர் சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்த போராட்டமாக மாறுமாக? என்ற ஆவலும் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Selection Grade and Special Grade Notional Effect from 01.01.2006 and Monetary Effect from 01.04.2013
நபர் குழுவின் பரிந்துரையின் பேரில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை 237ல் தேர்வு நிலை / சிறப்பு நிலைக்கு 01.01.2006 தேதி முதல் 31.03.2013 வரை (பணப்பலனின்றி) சம்பளத்தில் கணக்கிடப்பட்டு அதற்கான பணப்பலன் 01.04.2013 முதல் 3% என்று வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதியம் தற்போது 3%+3% ஆக மாற்றி வழங்கப்படும்.
01.01.2006 முதல் 31.05.2009 வரை தேர்வு நிலை / சிறப்பு நிலை முடித்தோற்கு ஊதிய விகிதம் மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. ஆனால், 01.06.2009க்கு பின் தேர்வு நிலை / சிறப்பு நிலை முடித்தோற்கு ஊதிய விகிதம் மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை, அவர்களுக்கு 3% ஊக்க ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டது. அது தற்போது தற்போது 01.01.2006 முதல் இந்த ஆணை அமுலுக்கு வருவதால், ஊதிய விகிதம் மாற்றி அமைக்கப்பட்ட ஆசிரியர்களும் பலன் பெறுவர்.
No comments:
Post a Comment