பீகாரில் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததை அடுத்து பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவு தரமானது என்பதை ஆய்வு செய்ய புதிய கண்காணிப்புக் குழு அமைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பீகாரில் நடந்த இந்த துயர சம்பவத்தை அடுத்து, மதிய உணவு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைவதில் மத்திய அரசு இனி கவனம் செலுத்தும் எனக் கூறப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக சத்துணவு தரமானது என்பதை ஆய்வு செய்ய புதிய கண்காணிப்புக் குழு அமைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மதிய உணவு திட்டத்தை செயல்படுத்துவதில் மாநில அரசுகளும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மதிய உணவு திட்டத்தை கண்காணிக்க மத்திய அரசால் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 2 குழுக்கள் 6 மாதத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு மாநிலத்திலும் இத்திட்டத்தை ஆய்வு செய்து வருகிறது. இக் குழுக்களில் ஒன்று பீகாரில் மதிய உணவு திட்டம் மோசமாக செயல்பட்டு வருவதாக அம்மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment