திருக்குறள்

15/07/2013

‘மெட்ரிக்குலேஷன்’ வார்த்தையை பயன்படுத்த விரைவில் வருகிறது தடை

தனியார் பள்ளிகளில் இடம் பெறும் ‘மெட்ரிக்குலேஷன்’ என்றவார்த்தையை நீக்கவிட்டு அரசுப் பள்ளிகள் போல உயர்நிலை, மேனிலை என்றவார்த்தைகளை சேர்க்க வேண்டும் என்று அறிவிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகஉள்ளது. மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் என்ற பெயரில் ஆங்கில வழியில் கல்விபோதிக்கும் கல்வி நிறுவறுனங்கள் ஆங்கிலேயர் காலத்தில் அறிமுகம்செய்யப்பட்டது. இதுபோன்ற பள்ளிகள் தொடக்க காலங்களில் மெட்ராஸ்யுனிவர்சிட்டியின் கீழ் இயங்கின. 1970களில் தமிழகத்தில் 44 பள்ளிகள் மெட்ராஸ்யுனிவர்சிட்டியின் கீழ் இயங்கின. கடந்த 1974ம் ஆண்டு இந்த பள்ளிகள் அனைத்தும்பள்ளிக் கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்பட்டன. பின்னர் மெட்ரிக்குலேஷன்பள்ளிகள் இயக்ககம் என்று தனியாக பிரிக்கப்பட்டு மெட் ரிக் பள்ளிகள்கண்காணிக்கப்பட்டன.
ஆங்கிலவழி கல்விக்கு அதிக மோகம் இருந்ததால் தமிழகத்தில்மெட்ரிக் பள்ளிகள் வளரத் தொடங்கி தற்போது 4500 பள்ளிகள் இயங்கி வருகின்றன.இவற்றில் 1 முதல் 10ம் வகுப்பு வரையும், பிளஸ் 2 வரையும் வகுப்புகள்நடத்தப்படுகின்றன. இந்த வகை பள்ளிகள் பெரும் பாலும் தனியாரால்நடத்தப்படுவதால், அவர்கள் விரும்பிய பெயரை சூட்டி அத்துடன் மெட்ரிக்குலேஷன்என்ற வார்த்தையையும் இணைத்து வருகின்றனர். மாநில கல்வி வாரியத்தின் கீழ்படிப்பவர்களுக்கு ஒரு வகை மதிப்பெண்ணும், மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில்படிப்போருக்கு ஒரு வகை மதிப்பெண்ணும் பொது தேர்வில் வழங்கப்பட்டு வந்தது. இந்த வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் 2 தாள்கள் எழுதவேண்டிய நிலை இருந்தது. மாநில கல்வி வாரியத்தில் (அரசுபள்ளிகள்) படிக்கும்மாணவர்கள் மொழிப்பாடங்கள் தவிர மற்ற பாடங் களை தலா ஒரு தாள் எழுதினால்போதும் என்று நிலை இருந்தது. இது மாணவர்கள் இடையே தரத்தின் அடிப்படையில்வேறுபாட்டை உருவாக்கியது. பெற்றோர் இதை எதிர்த்தனர்.

அரசுக்கு பெற்றோர் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் கடந்த2008ம் ஆண்டு அனைத்து கல்வி வாரியங்களையும் கலைத்துவிட்டு, பொதுக்கல்விவாரியத்தை கொண்டு வர அரசு முடிவு செய்தது. இதையடுத்து அனைத்து வகைபள்ளிகளும் பொதுக்கல்வி வாரியத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன. பொது தேர்வில்10ம் வகுப்புக்கு மொத்த மதிப்பெண்கள் 500 என்றும், பிளஸ் 2 தேர்வில் மொத்தமதிப்பெண்கள் 1200 என்றும் மாற்றி அமைக்கப்பட்டது. பொதுக்கல்வி வாரியம்அமைக்கப்பட்டு விட்டதால் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககம் என்பதைகலைத்துவிட அரசு முடிவு செய்துள்ளது. மேலும், தனியார் நடத்தும் அனைத்துமெட்ரிக்குலேஷன் பள்ளிகள் ‘மெட்ரிக்குலேஷன்’ என்ற வார்த்தையை நீக்கிவிட்டு,அதற்கு பதிலாக பள்ளிகள் பெயருடன் உயர் நிலை, மேனிலைப் பள்ளி என்றவார்த்தையை சேர்க்கவும் உத்தரவிட பள்ளிக் கல்வித்துறை தீர்மானித்துள்ளது.விரை வில் இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. இதனால் தனியார் மெட்ரிக்பள்ளிகள் நடத்துவோர் கலக்கம் அடைந்துள்ளனர். தங்களை கேட்காமல் மெட்ரிக்பள்ளி களில் எந்த மாற்றமும் செய் யக் கூடாது என்று கோரி, நீதிமன்றத்தில் வழக்குதொடரவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

No comments:

Post a Comment