திருக்குறள்

20/07/2013

பள்ளியில் அமைச்சர் திடீர் ஆய்வு 4 ஊழியர்கள் சஸ்பெண்ட்


சென்னை : பள்ளியில் அமைச்சர் ஆய்வின்போது பணிக்கு வராத சத்துணவு அமைப்பாளர் உள்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த 2 நாட்களில் இதுவரை மொத்தம் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பீகாரில் மதிய உணவு சாப்பிட்ட 23 குழந்தைகள் இறந்த விவரகாரம் பரபரப்பு அடங்கும் முன் னர் தமிழகத்தில் நெய்வேலியில் சத்துணவு சாப்பிட்ட 157 மாணவிகளுக்கு நேற்று முன்தினம் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி சென்னை திருவொற்றியூர் ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று சோதனை நடத்தினார். அப்போது மாணவ, மாணவிகளுக்கு சத்துணவு உணவு தயாரிக்கும் சமையல் கூடம் பூட்டிக் கிடந்தது. இதுபற்றி அமைச்சர் கேட்டபோது, சத்துணவு அமைப்பாளர் வரவில்லை என தெரியவந்தது. இதையடுத்து, அமைப்பாளர் அமலாமேரியை செல்போனில் அழைத்து அமைச்சர் விசாரித்தார். அப்போது அவர் கூறிய காரணங்களை அமைச்சர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து, கலெக்டருடன் பேசிய அமைச் சர், சரியான நேரத்துக்கு வராத அமைப்பாளர், உதவியாளர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண் டார். இதையடுத்து அமைப்பாளர் அமலா மேரி,உதவியாளர்கள் இந்திரா, ஏகவள்ளி, ஆயா சந்திரா ஆகியோரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கூறியுள்ளார். கடலூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி சத்துணவு கூடத்தில் கடலூர் கலெக்டர் கிர்லோஷ்குமார் நேற்று மதியம் அதிரடி ஆய்வு நடத்தினார். கடலூர் மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நேற்று மதியம் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சத்துணவு மாதிரிகள் எடுக்கப்பட்டன. அவை, சென்னை கிண்டியில் உள்ள சோதனை கூடத்துக்கு அனுப்பப்பட்டன. நெய்வேலியில் உள்ள என்எல்சி பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 157 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தையடுத்து அந்த பள்ளியின் சத்துணவு அமைப்பா ளர், உதவியாளர் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்ய கடலூர் கலெக்டர் உத்தர விட்டுள்ளார்.

No comments:

Post a Comment