திருக்குறள்

11/07/2013

பதிவு மூப்பு அடிப்படையில் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்த ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்

டி.எஸ்.அன்பரசு, என்.பரந்தாமன் உட்பட 94 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், ‘உச்ச நீதிமன்றம் 2008 ஆகஸ்ட் 20ம் தேதி பிறப்பித்த உத்தரவில், பதிவு மூப்பு அடிப்படையில் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்து ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
சென்னை : ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வு அறிவிக்கப்பட்டதற்கு முன்பு வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் தேர்வாகி சான்று சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு தகுதித் தேர்வு அவசியம் இல்லை என்றும் அவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தை மத்திய அரசு கடந்த 2010 ஏப்ரல் 1ல் கொண்டு வந்தது. இதன்படி, இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கண்டிப்பாகஎழுத வேண்டும். இந்த சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.
தமிழக அரசும் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்படும் என்று கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி ஆணை பிறப்பித்தது. இதை எதிர்த்து டி.எஸ்.அன்பரசு, என்.பரந்தாமன் உட்பட 94 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், ‘உச்ச நீதிமன்றம் 2008 ஆகஸ்ட் 20ம் தேதி பிறப்பித்த உத்தரவில், பதிவு மூப்பு அடிப்படையில் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்து ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
அதன்படி, வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம், இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றி உதவி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தன. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பில் 32 ஆயிரம் பேர் கலந்து கொண்டோம். சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி 2010ம் ஆண்டு மே மாதம் முடிவடைந்தது. இந்த நிலையில், தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே ஆசிரியர் பணி என்று கூறி எங்களுக்கு பணி வழங்கதமிழக அரசு மறுத்துவிட்டது. எனவே, எங்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பணி வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்‘ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார். தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து டிவிஷன் பெஞ்சில் அப்பீல் செய்யப்பட்டது. அப்பீல் வழக்கை தலைமை நீதிபதி அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி அன்பரசு, பரந்தாமன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். மனு நீதிபதிகள் எலிபி தர்மாராவ், வேணுகோபால் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு: கட்டாயம் கல்வி உரிமை சட்டத்தில், ஆசிரியர் பணிக்கு நியமிக்கப்படுபவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு கண்டிப்பாக தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதன்படி, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் 2010ல் அறிவிப்பாணையை வெளியிட்டது.
அதே நேரத்தில், ஆசிரியர் பணிக்கான தேர்வு ஏற்கனவே நடத்தப்பட்டு சான்றிதழ் சரி பார்க்கும் பணி முடிவடைந்து விட்டால், அதில் தேர்வானவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் என்று கருதத் தேவையில்லை என்று அறிவிப்பாணை பிரிவு 5ல் கூறப்பட்டுள்ளது.
இந்த முக்கிய பிரிவை தனி நீதிபதியும், டிவிஷன் பெஞ்சும் கவனிக்க தவறி விட்டது. எனவே இந்த மறுசீராய்வு மனு ஏற்று கொள்ளப்படுகிறது. அதே நேரத்தில் தற்போது பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (உதவி பட்டதாரி ஆசிரியர்கள்) காலி இல்லை என்று அட்வகேட் ஜெனரல் தெரிவித்துள்ளார். எனவே, இந்த வழக்கை தொடர்ந்த மனுதாரர்களை ஆசிரியர் தகுதி தேர்வை எழுத வற்புறுத்தாமல் வரும் காலத்தில் ஏற்படும் காலியிடங்களில் இவர்களை பணியமர்த்த வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment