திருக்குறள்

14/07/2013

இந்திய சிறுமிக்கு முதல் மலாலா விருது!


ஐக்கிய நாடுகள் சபையில் முதலாவது மலாலா விருதுக்கு உத்தரபிரதேசத்தை சேர்ந்த மாணவி ராஜியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த பள்ளிச் சிறுமியான மலாலா குழந்தைகளுக்கான கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனால் தலிபான்களால் அவர் சுடப்பட்டார். தலையில் காயமடைந்த நிலையில் பாகிஸ்தானை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் தஞ்சமடைந்தார். அவருக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டியதுடன் அவர் பெயரில் கல்விக்கான சேவை புரிவோருக்கு மலாலா விருது வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மலாலாவின் பிறந்த நாள். இதையொட்டி நடைபெற்ற நிகழ்வில் அவர் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றினார். அப்போது தலிபான்கள் துப்பாக்கி மூலம் என்னை மெளனிக்கப் பார்த்தனர். அதற்கு நான் அஞ்சவில்லை. அவர்கள்தான் தோற்றுப் போயினர் என்று தீரமிக்க உரை நிகழ்த்தினார். மேலும் முதலாவது மலாலா விருதுக்கு அவரை போன்று கல்விக்காக சேவை புரிந்த உத்தரபிரதேசத்தின் மீரட் நகரைச் சேர்ந்த ராஜியா சுல்தானா, தேர்வு செய்யப்பட்டுள்ளார். குழந்தை தொழிலாளராக இருந்த போதும் இதர குழந்தை தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி பள்ளிக்கு அனுப்பி வருகிறார் ராஜியா. இதற்காக அவரை ஐநா தேர்ந்தெடுத்துள்ளது.

No comments:

Post a Comment