திருக்குறள்

26/07/2013

சத்து மாத்திரை சாப்பிட்டதால் குழந்தைகள் பற்றிய பாதிப்பு பயம் தேவையில்லை-மத்திய அரசு



சத்து மாத்திரை சாப்பிட்டதால் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு சாதாரணமானதுதான். பயப்பட தேவையில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளின் உடல் நலத்தை பேணுவதற்காக இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி மாத்திரைகள் வழங்கும் மத்திய அரசின் திட்டம் டெல்லியில் கடந்த புதன் கிழமை துவங்கப்பட்டது. வாரம் ஒரு முறை இந்த மாத்திரைகள் வழங்க திட்டமிப்பட்டுள்ளது.திட்டத்தின் துவக்க நா ளில் மாத்திரை சாப்பிட்ட 200க்கும் அதிகமான மாணவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால், பெற்றோர் பயந்தனர்.இந்தப் பிரச்னை பற்றி மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சத்து மாத்திரைகள் சாப்பிட்டதால் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு சாதாரணமானதுதான். இதில் பயப்பட ஒன்றும் இல்லை. எனினும், பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் ஆய்வு செய்து, பாதிப்புக்கான காரணத்தை கண்டுபிடித்து அறிக்கை தாக்கல் செய்ய மவுலானா மருத்துவ கல்லூரி பேராசிரியர் டாக்டர் ராம்ஜிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இரும்பு சத்து மற்றும் வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடுவதால் குழந்தைகள் ரத்த சோகையால் பாதிக்கப்படுவது தடுக்கப்படும். டெல்லியில் மட்டும் பள்ளிகளில் 15 லட்சம் மாத்திரைகளும், அங்கன்வாடி மையங்களில் 3 லட்சம் மாத்திரைகளும் வழங்கப்பட்டன. இதில் 200 குழந்தைகள் மட்டுமே வயிற்று வலி, வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாத்திரைகள் அனைத்தும் ஜூன் மாதம் தயாரிக்கப்பட்டவை. இதன் காலாவதி காலம், 2015ம் வரை உள்ளது. அதனால், பெற்றோர் சிறிதும் பயப்பட தேவையில்லை. மாணவர்களுக்கு மட்டுமின்றி, இந்த மாத்திரையை சாப்பிட்ட ஆசிரியர்கள் சிலரும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டனர். அவர்களும் சிகிச்சைக்கு பிறகு மாமுல் நிலைக்கு திரும்பிவிட்டனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .

No comments:

Post a Comment