திருக்குறள்

25/07/2013

தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து 60 ஆசிரியர்களுக்கு "ஆசிரியர் செம்மல்' விருதுகளை வழங்க உள்ளன.

இந்த விருதுக்கான விண்ணப்பங்களை தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் என்ற தனியார் அமைப்பு வரவேற்றுள்ளது. இந்த அமைப்பின் சார்பில் 8-வது ஆண்டாக விருது வழங்கப்படுகிறது.

45 முதல் 55 வயது வரையுள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள், வெளிநாட்டு ஆசிரியர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

பல ஆண்டுகளாக ஆசிரியர்களாக சிறப்பாக பணியாற்றுவோர், ஏழைகள் கல்வி பெற உதவி செய்தவர்கள், சமூக சேவை செய்து வருபவர்கள், பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவி செய்வோருக்கு இந்த விருது வழங்கப்படும் என அமைப்பின் டீன் எஸ்.வஜ்ரவேலு தெரிவித்தார்.

விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் 60 பேருக்கும் சான்றிதழ், பதக்கம் மற்றும் இனிப்புகள் வழங்கப்படும். விருது வழங்கும் விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் வாழ்ந்த இல்லத்தில் நடைபெற உள்ளது.

விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவோர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஏவி.எம். ராஜேஸ்வரி திருமண மண்டபத்திலிருந்து விழா நடைபெறும் டாக்டர் ராதாகிருஷ்ணன் வீடு வரை ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுவர்.

இதற்கான விண்ணப்பப் படிவத்தை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பம் செய்வதற்கான இறுதிநாள் ஆகஸ்ட் 15 ஆகும்.

3 comments:

  1. நல்ல முயற்சி.

    ReplyDelete
  2. பாராட்டுக்களும் வாழ்த்துகளும்

    ReplyDelete
  3. தற்போதும் இது போன்ற விருதுகள் வழங்கப் படுகிறதா? ANY Contact no or mail id /website

    ReplyDelete