திருக்குறள்

26/07/2013

பள்ளி சத்துணவில் அழுகிய முட்டை சப்ளைக்கு தொழில் போட்டியே காரணம்



நாமக்கல்லில் தொழில் போட்டி காரணமாக சத்துணவு மையங்களுக்கு அழுகிய முட்டை சப்ளை செய்திருப்பது தெரியவந்துள்ளது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்காக வாரம் 3 கோடி முட்டை களை சமூக நலத்துறை கொள்முதல் செய்கிறது. நாமக்கல்லை சேர்ந்த கோழிபண்ணையாளர்களும், வியாபாரிகளும் கூட்டு சேர்ந்து அரசுக்கு முட்டை சப்ளை செய்து வந்தனர். மாதம் தோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் டெண்டர் நடத்தப்பட்டு சத்துணவு மையங்களுக்கு முட்டை வினியோகம் செய்ய பண்ணையாளருக்கு ஆர்டர் அளிக்கப்பட்டது. தற்போது ஒரு ஆண்டுக்கு, ஒரு டெண்டர் என்பது நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி, திருச்செங்கோட்டை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தமிழகம் முழுவதும் சத்துணவுக்கு முட்டை சப்ளை செய்து வருகிறது. இந்த நிறுவனத்துக்கு நாமக்கல் பகுதியை சேர்ந்த சிறிய பண்ணையாளர்கள் முட்டை கொடுக்கின்றனர். வேலூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் சத்துணவு மையங்களில் அழுகிய முட்டை சப்ளை செய்யப்பட்டது கண்டுபிடிக் கப்பட்டது. இந்த முட்டைகள் எந்த பண்ணையில் இருந்து சப்ளை செய்யப்பட்டது என்பது குறித்தும் நாமக்கல் பகுதியிலும் விசாரணை நடந்து வருகிறது. சத்துணவு திட்டத்திற்கு அளவு குறைந்த புல்லட் முட்டையை சிலர் சப்ளை செய்கின்றனர். இதை வெளியில் தெரியாமல் மறைப்பதற்கு சமூக நலத்துறை அதிகாரிகள் சரிக்கட்டப்படுவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. சத்துணவு திட்டத்திற்கு முட்டை சப்ளை செய்வதால்தான் நாமக்கல்லில் முட்டை கோழி பண்ணை தொழில் சிறப்பாக நடந்து வருகிறது. தற்போது அழுகிய முட்டை விவகாரத்தில் அரசு தரப்பில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற அச்சமும் பண்ணையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. சப்ளை செய்யும் பண்ணையாளர்கள், நேற்று முன் தினம் ரகசியமாக கூடி ஆலோசனை நடத்தினர். இதில் அரசு திட்டத்திற்கு சப்ளை செய்யப்படும் முட்டையில் எந்த குறைபாடும் இல்லாத அளவுக்கு பண்ணையாளர்கள் நடந்து கொள்ளவேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். கூட்டத்தில் பங்கேற்ற பண்ணையாளர் ஒருவர் கூறுகையில், ''தொழில்போட்டி காரணமாக பண்ணையாளர்கள் சிலர், வியாபாரிகளை மறைமுகமாக தூண்டிவிட்டு, குறைந்த விலைக்கு முட்டைகளை விற்பனை செய்துள்ளனர் '' என்றார். பிரிட்ஜில் வைத்த முட்டைகள் சப்ளை நாமக்கல் கோழிப்பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியது: கோழிப்பண்ணையாளர்களை விட வியாபாரிகள் தான் சத்துணவுக்கு அதிகமாக முட்டை சப்ளை செய்கிறார்கள். கடந்த ஏப்ரல், மே மாதம் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்ட போது, நாமக்கல் பண்ணைகளில் ஒரு முட்டை ஸீ1 முதல் ஸீ1.50 வரை அடிமாட்டு விலைக்கு வியாபாரிகள் வாங்கி மேட்டுப்பாளையம், திருச்சி, சேலம் ஆகிய இடங்களில் தனியார் குளிர்பதன கிடங்கில் சேமித்து வைத்துவிட்டனர். அவற்றைதான் சத்துணவு மையங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். இன்னும் பல கோடி முட்டைகள் குளிர்பதன கிடங்குகளில் இருப்பு உள்ளது. நீண்ட நாட்கள் வைக்கப்பட்ட முட்டைகள் கெட்டுப்போக அதிக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment