திருக்குறள்

08/07/2013

""தாய் மொழியில் தொடக்க கல்வியை எதிர்த்து வழக்கு""

தொடக்கக் கல்வியைத் தாய் மொழியில்தான் அளிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட முடியுமா? என்பதை உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட அமர்வு முடிவு செய்ய உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை (தொடக்கக் கல்வி) குழந்தைகளுக்கு தாய் மொழி அல்லது பிராந்திய மொழியிலேயே கல்வி கற்பிக்க வேண்டும் என்று மாநில அரசு கடந்த 1994ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு பல ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நீதிபதி பி.சதாசிவம், ரஞ்சன் கோகோய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இவ்வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:

இந்த வழக்கு, அதிக நீதிபதிகளைக் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட உகந்ததாகும். ஏனெனில், இவ்வழக்கில் இப்போதைய தலைமுறையினரின் அடிப்படை உரிமைகள் மட்டுமின்றி, இனி பிறக்கப் போகும் தலைமுறையினரின் அடிப்படை உரிமைகளும் அடங்கியுள்ளது. ஏற்கெனவே, தொடக்கக் கல்வியைத் தாய் மொழியில் அளிப்பதைக் கட்டாயமாக்கும் கர்நாடக அரசின் உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அடங்கியஓர் அமர்வு மறுத்து விட்டது. இந்தச் சூழ்நிலையில் இரண்டு நீதிபதிகள் அடங்கிய எங்கள் அமர்வும் இவ்வழக்கை விசாரிப்பது பொருத்தமாக இருக்காது என்பது எங்கள் கருத்து என்றனர்.

No comments:

Post a Comment