திருக்குறள்

03/07/2013

காணாமல் போன அரசு ஊழியர் குடும்பத்தினர் ஓய்வூதியம் பெறலாம்: மத்திய அரசு உத்தரவு

காணாமல் போன ஒரு அரசு ஊழியரின் குடும்பத்தினர் அவருக்கு சேர வேண்டிய ஓய்வூதியம் உள்ளிட்டவற்றை பெறலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இது தொடர்பான புதிய வழிமுறைகளை மத்திய ஊழியர், ஓய்வூதியத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பது: ஒரு அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியம் பெறுபவர் காணாமல் போனால், அவரது குடும்பத்தினர் உரிய அலுவலகத்தில் மனு செய்து உரிய தொகைகளைப் பெறலாம். இந்த முறையில் சம்பள பாக்கி, குடும்ப ஓய்வூதியத் தொகை, பணம் பெறத்தக்க விடுப்புத் தொகை, வருங்கால வைப்பு நிதித் தொகை ஆகியவற்றை பெற புதிய உத்தரவு வழி செய்கிறது. தீவிரவாதிகள் அல்லது பயங்கரவாதிகள் கடத்திச் சென்ற அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியம் பெறுபவரின் குடும்பத்தினர் அந்த ஊழியர் அல்லது ஓய்வூதியம் பெறுபவருக்கு சேர வேண்டிய தொகையைக் கோரி பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment