திருக்குறள்

30/01/2015

குழந்தை திருமணம் செய்து வைப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம்– 2 ஆண்டு சிறை: கலெக்டர் எச்சரிக்கை

அரியலூர், ஜன.25-

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு குழந்தை பாதுகாப்பு தொடர்பான திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமை கலெக்டர் சரவணவேல்ராஜ் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் வாயிலாக கிராம நிர்வாக அலுவலர்களுக்கு குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர், குழந்தைகள் கடத்தல், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் சம்பந்தமான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

சமூகத்தில் குழந்தைகளுக்கு பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இவற்றை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரியலூர் மாவட்டத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு 2012–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சமூகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்றால் நாம் அனைவரும் சேர்ந்து தடுக்க வேண்டும். குறிப்பாக பெண் குழந்தைகள் பாலியல் நோக்கத்தோடு கடத்தப்படுகின்றனர். மேலும் குழந்தைகள், குழந்தை தொழிலாளராகவும், தீய செயல்களுக்காகவும் கடத்தப்படுகின்றனர்.

சமூகத்தில் இவ்வாறு நடைபெறாத வண்ணம் தடுப்பதற்கு அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு மூன்று மாதத்திற்கு ஒருமுறை அந்தந்த பகுதிகளில் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். தீர்வுகாண முடியாத பிரச்சினைகளை மாவட்ட நிர்வாக கவனத்திற்கு கொண்டு வரவேண்டும்.

மேலும் கிராமங்களில் குழந்தைகளுக்கு பிரச்சினைகள் ஏற்படாத வண்ணம் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் அந்தந்த ஊராட்சியின் ஊராட்சி மன்ற தலைவர் தலைவராகவும், கிராம நிர்வாக அலுவலர் கூட்டத்தினை நடத்துபவராகவும் செயல்படுவார்கள்.

இக்குழு கிராமங்களில் நடைபெறும் குழந்தை திருமணங்கள், குழந்தைகள் கடத்தல், குழந்தை தொழிலாளர் போன்ற பிரச்சினைகளை கண்காணித்து அவை நடைபெறாதவாறு தடுக்க வேண்டும். குழந்தை திருமணங்கள் நடைபெற்றால் திருமணம் செய்து வைப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் மற்றும் 2 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.



தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி நாளை 30/01/2015 எடுக்க வேண்டும் - செயலாளர் திருமதி.சபீதா அவர்கள் உத்தரவு





21/01/2015

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 2015ம் கல்வியாண்டிற்கான உதவி / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 5 தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று 31.12.2009 முடிய முழு தகுதிப்பெற்ற நடு நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பட்டியலை மாவட்ட அளவில் தயார் செய்து அனுப்ப இயக்குனர் உத்தரவு

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவிக்கு தகுதி பெற்ற நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பட்டியல் தயார் செய்திடல் படிவம்










தொடக்கக் கல்வி - தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆங்கில கல்வி பயிற்றுவித்தல் சார்பான குறுந்தகடுகளை பள்ளிகளுக்கு 10.02.2015க்குள் வழங்க இயக்குனர் உத்தரவு





20/01/2015

உங்களின் மாத சம்பளம், PF, போனஸ், ARREARS போன்ற ECS தகவல்களை, நிலவரங்களை ஆன்லைனில் இங்கே அறிந்துக்கொள்ளுங்கள்

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - முன்னுரிமைப் பட்டியல் 01.01.2015 நிலவரப்படி அரசு உயர் நிலை த.ஆ பதவிக்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்ய தகுதிவாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல் சார்பான விவரம் கோரி உத்தரவு

24.01.2015 அன்று நடைபெறும் NMMS தேர்விற்கு 20.01.2015 முதல் 23.01.2015 வரை இணையதளத்தில் Hall Ticket டவுன்லோட் செய்துக்கொள்ளலாம்

உதவித் தொகை தேர்வு (NMMS) : அனுமதிச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம்

தேசிய வருவாய் வழி- திறனறி படிப்பு உதவித் தொகை தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை ("ஹால் டிக்கெட்') பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இந்த நுழைவுச்சீட்டை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் இருந்து சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்யலாம். இந்தத் தேர்வு தமிழகத்தில் ஜனவரி 24-ஆம் தேதி நடைபெற உள்ளது.
www.tndge.in

தேசிய நல்லாசிரியர் விருது - மாவட்ட அளவிலான தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்டதேர்வுக் குழு அமைத்து இயக்குனர் உத்தரவு