திருக்குறள்

28/09/2014

ஆசிரியர் தகுதித் தேர்வு சிறுபான்மை பள்ளிகளுக்கு கட்டாயமில்லை என உச்சநீதிமன்ற சாசன அமர்வு உத்தரவு

2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்குகள் பதியப்பட்டுள்ளது

2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இவ்வழக்குகளை க.பரமத்தி ஒன்றிய ஆசிரியர்கள் சார்பில் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் வழக்கு தொடரப்பட்டு தமிழக அரசுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
வழக்கு எண் விவரம். WP.15724, WP.15725, WP.15726, WP.15727, WP.15728/2014

தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக ஓ.பன்னீர் செல்வம் தேர்வு

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்று முதல்வர் பதவியை இழந்ததையடுத்து, தற்போது நிதி அமைச்சராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் அடுத்த முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னை ரயப்பேட்டையிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து முக்கிய நிர்வாகிகளுடன் சற்று நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தமிழக ஆளுனர் ரோசய்யாவை சந்திக்க செல்கிறார். 

பன்னீர்செல்வம் தலைமையிலான புதிய அரசு நாளை பதவி ஏற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே 2001 செப்டம்பர் முதல் 2002 மார்ச் மாதம் வரை தமிழக முதல்வராக இருந்தது குறிப்பிடத்தக்கது.










தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 29ம் தேதி நடைபெறவிருந்த போராட்டம் ரத்து; பொதுச் செயலாளர்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 29ம் தேதி நடைபெறவிருந்த போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்றைய அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டும், பங்கேற்பாளர்களின் நலனை
கருத்தில் கொண்டும் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு.ரங்கராஜன் அறிவித்துள்ளார். 

மேலும் போராட்ட தேதி குறித்த அறிவிப்பு மாநில அமைப்பு கூடி முடிவு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

26/09/2014

வெற்றி வெற்றி இயக்கத்திற்கு கிடைத்த முதல் வெற்றி .....

15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நமது பேரியக்கமாம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 29.09.2014 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்திட திட்டமிட்டுள்ளதைத் தொடர்ந்து, மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் நமது இயக்கத்தினை பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்து அனுப்பியுள்ள கடிதம் அனுப்பி உள்ளார்.

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணை விநியோகம்!

இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராக தேர்வானோருக்கு பணிநியமன ஆணை இன்று பிற்பகல் முதல் வழங்கப்படுகிறது.

கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு நடைபெற்றது.

இதில் பங்கேற்று பணியிடம் தேர்வு செய்தவர்களுக்கு இன்று (25ஆம் தேதி) பிற்பகல் முதல் பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது. இந்த பணி ஆணையை சம்பந்தப்பட்ட கலந்தாய்வு மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

இதையடுத்து, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமன ஆணையைப் பெற்று உடனடியாக பணியில் சேருமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு அரசாணையை ரத்து செய்து உத்தரவு; ஆசிரியர் தகுதித் தேர்வு முடிந்த பின் சலுகை வழங்கியது சரியில்லை என்று உயர் நீதிமன்ற கிளை கூறியுள்ளது

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு அரசாணை இரத்து செய்து மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிடப்பட்டது. பல்வேறு தரப்பு கோரிக்கையால் மதிப்பெண் தளர்வு எனபது ஏற்க முடியாது என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிடப்பட்டுள்ளது. மதிப்பெண் தளர்வு அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களை பணி நீக்கம் செய்ய கூடாது. 
சமூக நீதி என்பது மதிப்பெண்ணில் பார்க்க கூடாது எனவும் உத்தரவு. இட ஒதுக்கீட்டு மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 5% மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டிருந்தது.

25/09/2014

அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் தொலைநிலை கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு

த.அ.உ.சட்டம் 2005 - எம்.ஏ., (பொருளியியல், வரலாறு, புவியியல், சமூகவியல், அரசியல் அறிவியல்) சார்பான உயர்க்கல்விக்கு ஊக்க ஊதியம் சார்ந்த துணை இயக்குனரின் பதில்கள்


தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட கணக்குத்தாள்களை விரைவில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்க நடவடிக்கை

ஊராட்சிஒன்றிய / நிதியுதவி / நகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் C.P.S கணக்குத்தாள்கள் 2009-10 முதல் 2012-13 வரை சம்பந்தப்பட்ட மாவட்ட கருவூல அலுவலர் அவர்களுக்கும், சென்னை தொடக்கக்கல்வி இயக்ககத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளன. விரைவில் சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள் மூலம் சம்மந்தப்பட்ட பணியாளர்களுக்கு வழங்கப்படும்.

அலுவலக பணிகளில் ஆசிரியரை ஈடுப்படுத்தக்கூடாது; சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள வழக்கு எண். W.P.NO.28785/2012.

உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும். உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் ஆசிரியர்களை பல்வேறு பணிகள் செய்ய பயன்படுத்துகிறார்கள். அதில் சம்பள பட்டியல் தயாரிக்கும் பணிகளில் (ECS) ஈடுப்படுத்துவதால் ஆசிரியர் கற்பித்தல் பணி பாதித்து மாணவர்கள் தேர்ச்சியிலும் பாதிப்பு ஏற்படுகிறது. தமிழகம் முழுவதும் இதே நிலை உள்ளது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் உளூந்தூர்பேட்டை வட்டாரத்தில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தை சுட்டிக்காட்டி வழக்கு தொடரப்பட்டது.

இதற்கு சென்னை உயர்நீதிமன்ரத்தின் நீதியரசர் மதிப்புமிகு. டி.ஹரிபரந்தாமன் வழங்கிய தீர்ப்பில் ஆசிரியர்களை பல்வேறுபட்ட பணிகளுக்கு ஈடுப்படுத்தக்கூடாது "குறிப்பாக சம்பளம் பட்டியல் தயாரிக்கும் பணியில் (ECS) ஈடுபடுத்திடகூடாது, என்றும் அப்படி ஈடுபடுத்தினால் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பது பாதிப்படையும் என்று தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு புதிய முறையில் சம்பளம்: இந்த மாதம் முதல் அமலாகிறது

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் மின்னணு முறையில் பட்டுவாடா செய்யப்பட்டாலும், சம்பள பட்டியல் தயாரிப்பது, பணம் பெற்று வழங்கும் அதிகாரிகள் அனுமதி வழங்குவது, கருவூலங்களில் சமர்ப்பிப்பது உள் ளிட்ட நடைமுறைகள் இன்னும் காகித வடிவில்தான் நடக்கிறது. இதை நவீனப் படுத்தும் வகையில், வலைதள பட்டியல் மென்பொருள் (Centralised Employees Data Base) முறையில் சம்பளம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு ரூ.167.45 கோடி ஒதுக்கியது.

முதற்கட்டமாக அரசு பணியாளர் பற்றிய அனைத்து விவரங்களும் அடங்கிய ஒருமித்த தரவுத்தளம் (Web Payroll) ஏற் படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி, வேளாண்மைத்துறை ஆகிய 3 துறைகளைச் சார்ந்த ஊழியர்களுக்கும் முதற்கட்டமாக வலைதள மென்பொருள் முறையில் செப்டம்பர் மாத சம்பள பட்டியலை தயாரித்து அனுப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.
இப்புதிய முறை அமல்படுத்தப் படுவதால், மாதத்தின் கடைசி வேலை நாளில் உறுதியாக சம்பளம் கிடைத்துவிடும். ஊழியர் கள் தங்கள் சம்பள விவரம், பிடித்தத் தொகை, சம்பள உயர்வு, பதவி உயர்வு, பணி மாறுதல், விடுப்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். மாநிலத்தில் எந்த இடத்துக்கு மாறுதலில் சென்றாலும் சம்பளம் பெறுவதில் சிக்கல் வராது. சம்பளப் பட்டியலை தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதனால் அடுத்தடுத்த மாதங்களில் அனைத்து துறைகளிலும் 9 லட்சம் அரசு ஊழியர்கள் பயனடைவர்.

அரசாணை எண்.148 பள்ளிக்கல்வித்துறை நாள்.22.09.2014 - 2014-15ம் கல்வியாண்டில் அரசு உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகலின் பட்டியல்

24/09/2014

தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்....

தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்துக்கு தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு பல்வேறு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
புத்தகங்கள் வாங்குவதற்கு, பிளஸ் 1 முதல் முதுகலைப் பட்டம் வரை பயிலும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு பாட நூலுக்கான நிதியுதவி அளிக்கப்படும். பொறியியல், மருத்துவம், சட்டம், விவசாயம், பட்டதாரி ஆசிரியர், உடற்பயிற்சி ஆசிரியர் ஆகிய கல்விகளின் பட்ட மேற்படிப்பு, பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

தொழிற்பயிற்சி கல்வி, மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை, பொதுத் தேர்வில் கல்வி மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று, தேர்ச்சி பெற்ற முதல் 10 மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை அளிக்கப்படும். இந்தத் திட்டங்கள் தொழிலாளர் நல நிதி செலுத்தும் நபர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். நலத் திட்டங்கள் தொடர்பான விவரங்கள், விண்ணப்பங்களுக்கு செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், த.பெ.எண்.718, தேனாம்பேட்டை, சென்னை.6 என்ற முகவரிக்கு சுய விலாசமிட்ட தபால் தலை ஒட்டப்பட்ட உறையுடன் தொடர்புக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

21/09/2014

அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12ம் வகுப்புகள் வரை பயிலும் மாணவ / மாணவிகள் 02.10.2014 முதல் 08.10.2014 முடிய "Joy of giving week " கொண்டாட இயக்குனர் உத்தரவு


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்




தமிழகம் முழுவதும் ஆன்லைன் வழி சம்பள பட்டியல் சமர்பிப்பு முறை

தமிழ் நாட்டில் தற்போது வரை உள்ள சம்பள பட்டியல் சமர்பிப்பு முறை (இ.சி.எஸ்) விரைவில் ஆன்லைன் வழியாக நடைபெற உள்ளது. இப்புதிய Online Epayroll முறையில் ஒவ்வொரு சம்பளம் வழங்கும் அலுவலருக்கும் 2 பாஸ்வேர்ட்கள் வழங்கப்படும்.

இதன்படி சம்பளபட்டியலை தயாரிக்கும் இளநிலை உதவியாளருக்கு ஒரு பாஸ்வேர்டும், அதனை சரிபார்த்து ஒப்புதல் வழங்கி கருவூலத்தில் சமர்பிக்க Pay Drawing Officer க்கு ஒரு பாஸ்வேர்ட்டும் வழங்கப்படும். இதன் மூலம் சம்பள பட்டியலை ஆன்லைனில் சமர்பித்துவிட்டு, எம்.டி.சி மற்றும் இதர சிறப்பு ஆவணங்களை மட்டும் (சம்பள பட்டியலுடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்) கருவூலத்தில் சமர்பிக்க வேண்டியதாக இருக்கும். இப்புதிய முறை தற்போது ஊரக வளர்ச்சித்துறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஓரிரு மாதங்களில் கல்வித்துறை உட்பட இதர துறைகளிலும் அமல்படுத்தப்பட உள்ளது.

பள்ளிக்கல்வி - 1990-91 மற்றும் 1991-92ம் ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நியமன தேதி முதல் காலமுறை ஊதியம் வழங்குதல் - நிதியுதவுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் நீட்டித்து அரசு உத்தரவு

GO.118 SCHOOL EDUCATION DEPT DATED.22.08.2014 - 1990-91 & 1991-92 CONSOLIDATED PAY REG AMENDMENT - ORDER

வருமான வரி பிடித்தம் சார்பான சுற்றறிக்கை




15/09/2014

செப்டம்பர் 15 - பேரறிஞர் அண்ணாவின் 106வது பிறந்த நாள்


அப்பாவியாகத் தோற்றமளித்த அறிஞன். எதிராளியையும் வசப்படுத்திய வசியன். குரலால், எழுத்தால் ஆண்ட மன்னன். தமிழ்நாட்டின் அண்ணன்!

புதிய மாவட்ட கல்விஅலுவலர் திரு.சுகுமார் அவர்களை ‌15.09.2014 இன்று அரியலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் சந்திப்பு உடன் பெரம்பலூர் மாவட்டச்செயலாளர் திரு.ஈ.இராஜேந்திரன் அவர்கள்



கல்விச்சான்றிதழ்கள் உண்மைத்தன்மை பெற விண்ணப்பம்

14/09/2014

புது முயற்சி ஆசிரியர்களின் வேலை பளுவை குறைக்க EASY TO CCE DATA XL SHEET


 

CLICK HERE EASY TO CCE DATA XL SHEET


பதிவிறக்கம் செய்து பயன் அடையுங்கள் மேம்படுத்த ‌ஆலோசனை வ‌ழங்குங்கள்

வீட்டுப்பாடம் என்பதற்கு பதிலாக, ஏதேனும் வேறொரு மாற்று இடம்பெற முடியுமா?

6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான படிப்பில், வீட்டுப்பாடம் என்பதற்கு பதிலாக, ஏதேனும் வேறொரு மாற்று இடம்பெற முடியுமா? என்று பள்ளிகளிடம் CBSE 
கேட்டுள்ளது.

இதுதொடர்பாக, நிரப்ப வேண்டிய ஒரு கேள்விப் படிவத்தை பள்ளிகளுக்கு, CBSE அனுப்பியுள்ளது. இதன்மூலம், வீட்டுப்பாடம்(homework) பற்றிய பள்ளிகளின் புரிந்துணர்வு மற்றும் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படும் என்று CBSE நம்புகிறது.

வீட்டுப்பாடம் என்பது ஒரு மாணவன் வகுப்பில் படித்த விஷயங்களை, மறுஆய்வு செய்து, அதுதொடர்பான சிந்தனைகளை வீட்டில் வளர்த்துக் கொள்வதற்கான ஒரு அம்சமே வீட்டுப்பாடம் என்பது ஒரு பொதுவிதியாக இருந்தாலும், இன்றைய வீட்டுப்பாடங்கள் அனைத்து அதுபோன்று இருக்கிறதா? என்பது குறித்த பதில்களை இதன்மூலம் CBSE எதிர்பார்க்கிறது.

சில நல்ல பள்ளிகள், உண்மையிலேயே பயனுள்ள வீட்டுப் பாடங்களை, மாணவர்களுக்கு தரும் அதேவேளையில், பல பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகிய அனைத்து தரப்பாரையும் எரிச்சலும், சோர்வும் அடையச் செய்யும் வகையிலான வீட்டுப்பாட திட்டத்தைக் கொண்டுள்ளன.

எனவே, இத்தகைய விஷயங்களை கருத்தில்கொண்டு, வீட்டுப்பாடம் தொடர்பான ஒரு உள்ளார்ந்த புரிதலையும், சிறப்பான மாற்றத்தையும் கொண்டுவரும் வகையில், பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்காக மேற்சொன்ன கேள்விப் படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது. அக்கேள்விப் படிவத்தில், தேவையின் அடிப்படையில், பலவிதமான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன

பிஎஃப் உயர்வு... பென்ஷன் கட்!

தொழிலாளர்களின் ஓய்வுக்காலத்துக்காகப் பிடித்தம் செய்யப்படும் பிராவிடண்ட் ஃபண்டை கணக்கிடுவதற்கான சம்பளத் தொகையின் வரம்பை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இங்கு சம்பளம் என்பது அடிப்படை மற்றும் பஞ்சப்படி மட்டுமேயாகும். மேலும், பிஎஃப் பென்ஷன் தொகையையும் குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாய் எனவும், பிஎஃப் மூலமாகத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் இன்ஷூரன்ஸ் கவரேஜ் தொகையையும் 3.6 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளது. இதுகுறித்து சென்னை மண்டல பிஎஃப் கமிஷனர் எஸ்.டி. பிரசாத் விளக்குகிறார்.

“வேலை செய்யும் தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து அதிகபட்சம் 6,500 ரூபாயை வரம்பாக வைத்து பெரும்பாலான நிறுவனங்கள் பிஎஃப் பிடித்தம் செய்து வருகிறது. ஒரு தொழிலாளரின் சம்பளத்தில் அடிப்படை சம்பளம், பஞ்சப்படி சேர்த்து 12 சதவிகித தொகையை பிடித்தம் செய்வார்கள். இதே அளவு தொகையை நிறுவனமும் உங்களின் கணக்கில் வரவு வைக்கும்.

தற்போது பிஎஃப் பிடித்தம் செய்வதற்கான சம்பளத்தொகை வரம்பு 6,500-லிருந்து 15,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, ஒருவர் 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என வைத்துக்கொள்வோம். இதில் அதிகபட்சமாக 6,500 ரூபாய்க்கு 12 சதவிகிதம் என 780 ரூபாய் பிடிக்கப்பட்ட பிஎஃப் இப்போது 1,800 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதே அளவு தொகையை நிறுவனமும் செலுத்தும். நிறுவனம் செலுத்தும் தொகையில் 8.33 சதவிகித தொகை பி.எஃப் பென்ஷனுக்காகவும், மீதமுள்ள 3.36 சதவிகித தொகை பி.எஃப் கணக்கிலும் வரவு வைக்கப்படும்.

இதுவரை பென்ஷனுக்காக அதிகபட்சம் ரூ. 541 ் பிடித்தம் செய்யப்பட்டு வந்தது. இனி இந்தத் தொகை 1,249 ரூபாய் பிடித்தம் செய்யப்படும். மேலும் 01.09.2014 தேதி முதல் பென்ஷன் ஊதிய தொகையானது, பென்ஷனை கணிப்பதன் பொருட்டு சந்்தாதாராக இருந்த 60 மாத கால சராசரி ஊதியம் ஆகும். 31.08.2014 வரைக்குமான பென்ஷன் ஊதியத்தொகை ரூ.6,500 ஊதிய வரைவிற்கேற்ப ஒரு பகுதியாகவும் தொடருகின்ற காலத்துக்கு ரூ.15,000 ஊதிய வரைவிற்கேற்பவும் கணக்கிட்டு வரையறுக்கப் படும். 

01.09.2014 முதல் ஓய்வூதிய திட்டமானது ரூ.15,000 வரையிலுமாக ஊதியம் பெறுகின்ற பிஎஃப் உறுப்பினர்களுக்க்கு மட்டுமே பொருந்தும். 01.09.2014 முதல் ரூ.15,000க்கு கூடுதலாக மாத ஊதியம் பெறுகின்ற புதிய பிஎஃப் உறுப்பினர்களது தொழிலாளர் மற்றும் தொழில் நிறுவனர் பங்கான பிஎஃப் சந்தா தொகையிலிருந்து ஓய்வூதிய திட்டத்துக்கு பகிர்ந்தளிக்கப்படமாட்டாது.

பிஎஃப் அமைப்பு ஓய்வுபெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குகிறது. இந்த ஓய்வூதியம் பெறுகிறவர்கள் தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள். இவர்களுக்கு வழங்கப்படும் பென்ஷன் தொகையைக் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதனால் உடனடியாக சுமார் 50 லட்சம் தொழிலாளர்கள் பயன் அடைவார்கள். வேலையில் இருக்கும்போது உடல்நலக் குறைவு, விபத்து போன்ற காரணத்தில் மரணம் ஏற்படும்போது தொழிலாளரின் குடும்பத்தின் நலனுக்காகத் தொழிலாளர் வைப்பு சார் ஈட்டுறுதி காப்பீடுத் திட்டம் (Employees’ Deposit-Linked Insurance Scheme) உள்ளது. இதன் கவரேஜ் தொகையையும் அதிகப் படுத்தியுள்ளது. அதாவது, அதிகபட்சம் ரூ.1,56,000-லிருந்து ரூ.3,60,000 என உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தக் காப்பீடு திட்டத்துக்காக பிரீமியம் தொகை அனைத்து நிறுவன மும் கட்டாயம் செலுத்த வேண்டும். இதை பிஎஃப் அலுவலகத்தில் செலுத்த லாம். எல்ஐசியிலும் பிரீமியம் செலுத்தி காப்பீடு பெறலாம். இப்படி செய்யும் போது பிஎஃப் அமைப்பு வழங்கும் கவரேஜ் தொகையைவிட கூடுதலாக 2 ஆயிரம் ரூபாய் கவரேஜ் கிடைக்கும்.

எல்ஐசியில் பிரீமியம் செலுத்தும் சான்றிதழை குறிப்பிட்ட கால இடைவெளியில் பிஎஃப் அலுவலகத் தில் சமர்ப்பிக்க வேண்டும். இல்லை யெனில், நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஏதாவது அசம்பாவிதம் நிகழும்போது இந்த இன்ஷூரன்ஸ் திட்டத்தின் கீழ் இழப்பீடு கிடைக்கவில்லை எனில், ஊழியர்கள் நேரடியாக பிஎஃப் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம்” என்றார்.

பிஎஃப் பிடித்தம் செய்யும் தொகை, குறைந்தபட்ச பென்ஷன் ஆயிரம், இன்ஷூரன்ஸ் கவரேஜ் என அனைத்தை யும் உயர்த்திய அரசு 1.09.2014-க்கு பிறகு வேலைக்குச் சேருபவர்களில் 15,000 ரூபாய்க்குமேல் சம்பளம் வாங்குபவர் களுக்கு பென்ஷன் கிடையாது என அறிவித்துள்ளது.

அதாவது, மருத்துவத் துறையின் வேகமான வளர்ச்சியினால் மனிதனின் வாழ்நாள் அதிகமாகி உள்ளது. இதனால் பென்ஷன் பெறும் ஆண்டுகளின் எண்ணிக்கை அதிகமாகும். புதிதாக வேலைக்குச் சேருபவர்களுக்கு பென்ஷன் தொகை நிறுத்தப்படுவதற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், எதிர்காலத் தேவைகளுக்காக எந்த திட்டமிடலும் இல்லாத நம் மக்களிடையே திடீரென பென்ஷன் தொகை நிறுத்தப்பட்டால் மிகவும் கஷ்டப்படுவார்கள். இன்றைய நிலையிலேயே இருவர் கொண்ட ஒரு குடும்பத்தை நிம்மதியாக கழிக்க குறைந்தபட்சம் 15 ஆயிரம் ரூபாயாவது வேண்டியிருக்கும்.

இதுவே இன்னும் 20 ஆண்டுகள் கழித்து சுமார் 7 சதவிகிதம் பணவீக்கம் என வைத்துக் கொண்டால் கூட சுமார் 58,045 ரூபாயாவது தேவையாக இருக்கும் என்கிறபோது 58 வயதுக்குப்பின் குறைந்தபட்ச பென்ஷனும் இல்லை எனில், பலரது ஓய்வுக்காலம் கேள்விக்குறியாகிவிடும்.

Results of Departmental Examinations - MAY 2014

Results of Departmental Examinations - MAY 2014
Enter Your Register Number :                                    

ஆசிரியர்களே உஷார்-மாணவர்கள் கொண்டு வரும் தின்பண்டங்களை சோதனைக்கு உட்படுத்த தவறாதீர்

9.9.2014 சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் ஒன்றியத்திற்கு உட்பட்ட காஞ்சிப்பட்டி ஆரம்பப்பள்ளியில் முதல் வகுப்பில் படிக்கும் மாணவன் தன் தந்தை வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்த சாக்லேட்டை(சீன தயாரிப்பு) ஆசையுடன் அனைத்து மாணவர்களுக்கும் பகிர்ந்து கொடுத்துள்ளான். மாணவர்கள் சாக்லெட் உண்ட சிறிது நேரத்திற்குள் 16க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொடர் வாந்தி எடுத்துள்ளனர். உஷாரான தலைமையாசிரியர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து துரித வேகத்தில் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்பொழுது சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகச்சை பெற்று வரும் மாணவர்கள் நலமுடன் இருப்பதாக தகவல். தகவல் அறிந்த AEEO, DEEO மற்றும் CEO அனைவரும் மருத்துவமனையில் முகாமிட்டுள்ளனர். எனவே ஆசிரியப்பெருமக்களே தங்கள் பள்ளி மாணவர்கள் கொண்டு வரும் தின்பண்டங்களை சோதனைக்கு உட்படுத்த தவறாதீர். மாணவர் நலனே நமக்கு முக்கியம்.

உலக சராசரியைவிட இந்தியாவின் எழுத்தறிவு விகிதம் குறைவு: ஆளுநர்

100 சதவீத எழுத்தறிவு நிலையை எட்ட தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறபோதும், உலக சராசரியுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் எழுத்தறிவு பெற்றவர்களின் விகிதம் இப்போதும் குறைந்தே காணப்படுகிறது என்று தமிழக
ஆளுநர் கே.ரோசய்யா கவலை தெரிவித்தார்.

சென்னை தமிழக ஆளுநர் மாளிகையில் சர்வதேச எழுத்தறிவு தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், வயது வந்தோர் கல்வித் திட்டம் மூலம் பயனடைந்து, அதற்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற 2 பெண்கள், 3 திருநங்கைகளுக்கு சான்றிதழ்களை வழங்கி ஆளுநர் ரோசய்யா பேசியது:

வறுமையை ஒழிப்பதிலும், குழந்தை இறப்பைக் குறைப்பதிலும், மக்கள்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும், ஆண்-பெண் சமநிலையை உருவாக்குவதிலும், பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதிலும், அமைதி, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலும் மிக முக்கியப் பங்காற்றுவது எழுத்தறிவு.

இதைக் கருத்தில்கொண்டே, மத்திய, மாநில அரசுகள் எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கையை உயர்த்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் மூலம், கடந்த 1991-ஆம் ஆண்டில் 52.2 சதவீதமாக இருந்த இந்தியாவின் எழுத்தறிவு விகிதம், 2011-இல் 73 சதவீதமாக உயர்ந்தது. இப்போது 100 சதவீதத்தை எட்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனினும், உலக சராசரியோடு ஒப்பிடும்போது, இந்தியாவின் எழுத்தறிவு விகிதம் தொடர்ந்து குறைவாகவே உள்ளது. இந்த நிலையை மாற்ற தன்னார்வ அமைப்புகளும், கல்வி நிறுவனங்களும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு, ஒன்றிய பிரதிநிதிகளும், மாவட்ட நிர்வாகம், கல்வி அதிகாரிகளோடு கைகோர்த்து கல்வியைப் பரப்புவதிலும், பள்ளி இடைநிற்றலைத் தடுப்பதற்கும் உதவ வேண்டும்.

ஆரம்பக் கல்வி மாணவர் சேர்க்கைக்கும், இடநிலைக் கல்வி மாணவர் சேர்க்கைக்கும் மிகப் பெரிய இடைவெளி இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, ஆரம்பக் கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் 98 சதவீதமாக இருக்கும் நிலையில், இடநிலைக் கல்வியில் சேர்க்கை விகிதம் 57 சதவீதம் என்ற அளிவில் மட்டுமே இருப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

மேலும், 81.5 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கே வராமல் இருப்பதாகவும், அவர்களில் மாற்றுத்திறனாளிகள் 34.12 சதவீதம் என்றும் விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, ஒவ்வொரு எழுத்தறிவு பெற்ற நபரும், எழுத்தறிவு இல்லாத பெற்றோர், குழந்தைகளிடையே கல்வியின் அவசியம் குறித்து பரப்ப முன்வரவேண்டும். அப்போதுதான் நாட்டின் எழுத்தறிவு பெற்றவர்களின் விகிதம் உயரும் என்றார் அவர்.

நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறைச் செயலர் சபிதா, மாநில எழுத்தறிவு இயக்க ஆணையத்தின் உறுப்பினர் செயலரும், மாநில அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் திட்ட இயக்குநருமான பூஜா குல்கர்னி ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்

தமிழ் வாசிப்பில் தடுமாறும் மாணவர்கள்: கற்பித்தலில் மாற்றம் ஏற்படுத்த எதிர்பார்ப்பு


தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், மொழிப்பாடங்களில் பின்தங்கி இருப்பதாக, கல்வித்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. 'இத்தகைய குறைபாடுகளை களைய,
lகற்பித்தலில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்' என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும், அரசு, அரசு உதவிபெறும் நிலையில், 28 ஆயிரத்து 591 துவக்க மற்றும் 9,259 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களின் கல்வித்திறன், மொழி உச்சரிப்பு, பாடங்களை உள்வாங்கிக் கொள்ளும் விதம் ஆகியவற்றை கண்காணிக்க, கல்வித்துறை இணை இயக்குனர் தலைமையில், மாவட்டந்தோறும் உள்ள கல்வி அதிகாரிகளின் சார்பில், ஆய்வுப்பணிகள் நடந்தன.இதில், பெரும்பாலான கிராமப்புற பள்ளிகளில், மாணவர்கள் மொழி உச்சரிப்பில் தடுமாறுவது தெரியவந்துள்ளது. குறிப்பாக, நடுநிலைப்பள்ளி மாணவர்களே தமிழ்ப்பாட உரைநடைப்பகுதியில், பத்திகளை முழுமையாக வாசிப்பதற்கு கூட சிரமப்பட்டுள்ளனர். ஆங்கிலப்பாட புத்தகத்தில் பெரும்பாலான வார்த்தைகளின் பொருள், உச்சரிக்கும் விதம் தெரிவதில்லை.

'இது தொடர்ந்தால், உயர்கல்வியில் மாணவர்கள் குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெறுவதற்கே பெரிதும் சிரமப்பட வேண்டியிருக்கும்' என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, மலைப்பகுதி பள்ளிகளில், மாணவர்களது கல்வித்தரம் குறைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை மேம்படுத்த, வகுப்பாசிரியர்களுக்கு பிரத்யேக பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறுகையில், ''கிராமப்புற பள்ளிகளில் படித்து, பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள், ஆங்கிலப்பாட அறிவு குறைபாடால், உயர்கல்வியில் சராசரி மதிப்பெண்கள் பெறுவதற்கு கூட திண்டாடுவது தொடர்கதையாகி வருகிறது.

''மொழிப்பாட அறிவில்லா மாணவர்களால், உயர்கல்வியில் முத்திரை பதிக்க முடியாது. தமிழ் வழியில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள், உயர்கல்வி முடித்ததும், மொழி அறிவு குறைபாடால், செய்தித்தாள் வாசிப்பதில் கூட திணறுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த முரண்பாடு களைய, கற்பித்தலில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.''எழுத்துகள் அமைவிடம், உச்சரிப்பு, பொருள் குறித்து படங்கள் வாயிலாக, தெளிவுபட விளக்க வேண்டும். இத்தகைய செயல்பாடுகள் மூலம், மாணவர்களின் மொழிப்பாட அறிவை அதிகப்படுத்த முடியும்," என்றார்.

பள்ளிகளில் நன்னெறிக் கல்வி கற்பிக்க வழக்கு : ஐகோர்ட் நோட்டீஸ்

பள்ளி, கல்லூரிகளில் நன்னெறிக் கல்வி கற்பித்தலை துவக்கி, மாணவர்களுக்கு ஆலோசனை மையங்கள் அமைக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

மதுரை அண்ணாநகர் ராஜேந்திரன் தாக்கல் செய்த பொது நல மனு: பள்ளிகளில் முன்பு நாட்டுப்பற்று, கலாசாரம், நீதி, நேர்மையை கற்பிப்பது வழக்கம். துவக்கத்திலிருந்து கடமை, சகிப்புத் தன்மை, பெண்களை மதிப்பது பற்றி கற்பிக்க வேண்டும். தற்போது நன்னெறிக் கல்விக்கு (நீதி போதனை) முக்கியத்துவம் தருவதில்லை. பாடத்திட்டத்தில் உள்ளவற்றை கற்பிப்பதில் மட்டும் கவனம் செலுத்துகின்றனர். இதனால், சமூக முன்னேற்றம் தடைபட்டுள்ளது.
நன்னெறிக் கல்வி இல்லாததால் மாணவர்கள் மத்தியில் அனைத் திலும் குற்றம், குறை காணும் தன்மை அதிகரித்துள்ளது. மேற்கத்திய கலாசாரம் நம் சமூகத்தில் ஊடுருவியுள்ளது. இதனால், சமூகத்தில் குற்றங்கள் அதிகரித்துள்ளன. திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன. எத்திசையில் பயணிப்பது என மாணவர்கள் விழிபிதுங்குகின் றனர். சகிப்புத் தன்மை, சமத்துவம் ஏற்பட வேண்டுமெனில் சமூக மாற்றத்திற்கான கமிஷன் அமைக்க வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், கலெக்டர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் ஆலோசனை மையங்கள் உருவாக்க வேண்டும். மேற்கு வங்கத்தில் பள்ளி, கல்லூரிகளில் நன்னெறிக் கல்வியை, மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நன்னெறிக் கல்வி பெயரளவில் உள்ளது. சமூக மாற்றத்திற்கான கமிஷன் அமைத்து, பள்ளி, கல்லூரிகளில் நன்னெறிக் கல்வி கற்பிக்கும் பணியை துவக்க வேண்டும். ஆலோசனை மையங்கள் அமைக்க உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார். நீதிபதிகள் எம்.ஜெய்சந்திரன், ஆர்.மகாதேவன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் சாமிதுரை ஆஜ ரானார். உயர்கல்வித்துறை செயலாளர், சமூக நலத்துறை செயலா ளருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தர விட்டனர்.

LEARN ENGLISH THROUGH TAMIL LETTERS ......... ஆங்கிலம் வாசிப்பதில் பின்தங்கிய மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள பகுதி......


Alphabet Chart: Vowels, Consonants and Syllables

aaaiiiuuueeeaioooau
kக்காகிகீகுகூகெகேகைகொகோகௌ
cச்சாசிசீசுசூசெசேசைசொசோசௌ
Tட்டாடிடீடுடூடெடேடைடொடோடௌ
tத்தாதிதீதுதூதெதேதைதொதோதௌ
pப்பாபிபீபுபூபெபேபைபொபோபௌ
Rற்றாறிறீறுறூறெறேறைறொறோறௌ
ngங்ஙாஙிஙீஙுஙூஙெஙேஙைஙொஙோஙௌ
njஞ்ஞாஞிஞீஞுஞூஞெஞேஞைஞொஞோஞௌ
Nண்ணாணிணீணுணூணெணேணைணொணோணௌ
ndந்நாநிநீநுநூநெநேநைநொநோநௌ
mம்மாமிமீமுமூமெமேமைமொமோமௌ
nன்னானினீனுனூனெனேனைனொனோனௌ
yய்யாயியீயுயூயெயேயையொயோயௌ
rர்ராரிரீருரூரெரேரைரொரோரௌ
lல்லாலிலீலுலூலெலேலைலொலோலௌ
vவ்வாவிவீவுவூவெவேவைவொவோவௌ
zhழ்ழாழிழீழுழூழெழேழைழொழோழௌ
Lள்ளாளிளீளுளூளெளேளைளொளோளௌ
jஜ்ஜாஜிஜீஜுஜூஜெஜேஜைஜொஜோஜௌ
sஸ்ஸாஸிஸீஸுஸூஸெஸேஸைஸொஸோஸௌ
shஷ்ஷாஷிஷீஷுஷூஷெஷேஷைஷொஷோஷௌ
hஹ்ஹாஹிஹீஹுஹூஹெஹேஹைஹொஹோஹௌ

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்- கணக்கில் விடுபட்ட தொகை விவரங்களை (புதிய படிவத்தில்)சம்பந்தப்பட்ட கருவூலத்தில் ஒப்படைத்திட வேண்டும் .

மலைப்பகுதி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல புதிய ஏற்பாடுகளை செய்யும் தமிழக அரசு!

கோவை, திருப்பூர், தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 19 மாவட்டங்களில், 1,287 மலைப்பிரதேச கிராமங்களில் உள்ள மாணவர்கள், ஜீப், ஆட்டோ போன்ற வாகனங்களில் பள்ளிகளுக்குச் செல்லவும், தேவையான குழந்தைகளுக்கு, உடன் பாதுகாவலர்கள் செல்லவும் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

நடப்பு கல்வி ஆண்டில், 14,749 பேர் இந்த வசதியை பெறுகின்றனர். தனியார் பள்ளிகள், மலைவாழ் பகுதிகளில் உள்ள மாணவர்களின் கல்வி குறித்து, சிந்திப்பது கூட கிடையாது. போதிய சாலை வசதி இல்லாத, அடர்ந்த காடுகளுக்கு நடுவே உள்ள, சின்ன சின்ன கிராமங்களில் வாழும் குழந்தைகள், கல்வி பயில வேண்டும் என்பதற்காக, தமிழக அரசு, சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.

மலைப்பிரதேச பகுதிகளில் உள்ள சிறுவர்கள், பள்ளிகளுக்குச் செல்வதில் உள்ள பிரச்னைகளை அறிந்த தமிழக அரசு, மாணவர்கள், பாதுகாப்புடன் பள்ளிகளுக்குச் செல்வதை உறுதிபடுத்தும் வகையில், வாகன வசதி திட்டத்தை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது.

19 மாவட்டங்கள்: இந்த திட்டத்தால், கடந்த ஆண்டு 10 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்தனர். நடப்பு கல்வி ஆண்டில், கோவை, திருப்பூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, தஞ்சாவூர், நாமக்கல், சேலம், நாகை, தேனி, நீலகிரி, நெல்லை, திருவண்ணாமலை, திருவள்ளூர், வேலூர் ஆகிய 19 மாவட்டங்களில் 1,287 சிறு சிறு பகுதிகள் அடையாளம் காணப்பட்டன. இந்த கிராமங்களில் வசிக்கும் 14,749 குழந்தைகள், எந்த பிரச்னையும் இன்றி, வாகனங்களில் பள்ளி சென்றுவர, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனரகம் ஏற்பாடு செய்துள்ளது.

655 அரசு பள்ளிகள்

மலை பகுதிகளில் உள்ள கிராமங்களும், பள்ளிகளும், அருகருகே உள்ளன. மேற்கண்ட மாவட்டங்களில் 473 ஆரம்பப் பள்ளிகளும், 182 அரசு நடுநிலைப் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. எட்டாம் வகுப்பு வரையிலான படிப்பிற்கு, இந்த அரசு பள்ளிகளை நம்பித் தான் மலைவாழ் பகுதி மாணவர்கள் உள்ளனர்.

இவர்கள், உரிய பாதுகாப்புடன் பள்ளிகளுக்கு சென்றுவர வேண்டும் என்பதற்காக, அந்த பகுதிகளில் உள்ள ஆட்டோ, ஜீப் போன்ற வாகனங்கள் மூலம் பள்ளி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கூடுதலாக, தேவையான மாணவர்களுக்கு பாதுகாப்பாக, உடன் ஒருவர் செல்லவும், தமிழக அரசு அனுமதித்துள்ளது. இதற்காக, பாதுகாவலர்களுக்கு மாதம் 250 ரூபாய் வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ரூ.4.42 கோடி நிதி: மாணவர்களின் வாகன செலவுக்காக, ஒரு ஆண்டுக்கு தலா 3,000 ரூபாய் ஒதுக்கப்படுகிறது. அதன்படி, நடப்பாண்டில், 4.42 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. அனைவருக்கும் கல்வி திட்ட நிதியில் இருந்து, இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: கிராம வாரியாக, மாணவர் எண்ணிக்கை வாரியாக கணக்கெடுப்பு நடத்தி, அதன் விவரம் தற்போது அரசு கெஜட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இதை, மத்திய அரசுக்கு அனுப்பி, உரிய நிதி பெறப்படும். மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும், வாகன வசதி, பாதுகாவலர் வசதி செய்யப்படுகிறது. நடப்பாண்டில் 9,595 மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தலா, 5,000 ரூபாய் செலவில், வாகன வசதி மற்றும் பாதுகாவலர் வசதி செய்யப்படுகிறது. இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

இரட்டைபட்டம் (Double Degree ) மூலம் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர் பதவி இறக்கம் செய்து ஐகோர்ட் உத்தரவு

தஞ்சை மாவட்டத்தில் இரட்டைபட்டம் (Double Degree ) மூலம் பதவிஉயர்வு
பெற்ற ' ஆசிரியர் பதவி இறக்கம் செய்து ஐகோர்ட் உத்தரவு -மேலும் முழு தகவல் விரைவில்

சேத கட்டடங்களில் வகுப்புகளை நடத்தாதீர் - பள்ளிக்கல்வித்துறை அறிவுரை

வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், மாணவர்களின்பாதுகாப்பு கருதி அரசு பள்ளிகளில் சேதமடைந்த கட்டடங்களில்வகுப்புகளை நடத்த வேண்டாம்,”என, பள்ளிக்கல்வித்துறைஅறிவுறுத்தி உள்ளது. பல்வேறு பகுதிகளில் அரசு பள்ளி கட்டடமேற்கூரை பெயர்ந்து, சுவர்களில் கீறல் விழுந்து பராமரிப்பின்றி,சேதமடைந்த நிலையில்உள்ளன. அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளநிலையில், அக்கட்டடங்களில் வகுப்புகளை நடத்தவேண்டாம் எனபள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. மாவட்ட கல்வித்துறைஉயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

துவக்க முதல் மேல்நிலை வரை அனைத்து அரசு பள்ளிகட்டடங்களின் நிலை குறித்து, பொதுப்பணித்துறைஇன்ஜினியர்களின் உதவியுடன் ஆய்வு செய்யதலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.மாணவர்களின் பாதுகாப்பு கருதி சேதமடைந்த கட்டடங்களில்வகுப்புகள் நட௨த்த வேண்டாம். அங்கு நடத்தப்படும் வகுப்புகளைவேறு பகுதிக்கு மாற்றவும், பள்ளிகளில் புதிதாக கட்டடங்கள்கட்டப்பட்டிருந்தால் அதன் திறப்பு விழாவிற்காக காத்திருக்காமல்,துறை உயர்அதிகாரிகளின் முறையான அனுமதி பெற்றுபயன்படுத்திக்கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பள்ளிஅருகே தாழ்வாக செல்லும் மின் வயர்கள், உயர் மின்அழுத்தகம்பிகளை உடனடியாக மாற்றி அமைக்க, வளாகத்தில் மழைநீர்தேங்கவிடாமல் பார்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கவும்வலியுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் பட்டியல்...?

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் பட்டியல் ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் காலியாக இருந்த, 49 மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) பணியிடங்களை நிரப்பி, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.



மாநிலம் முழுவதும், மாவட்ட கல்வி அலுவலர் நிலையில், 50க்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக இருப்பது குறித்தும், இதனால், பள்ளிகளை ஆய்வு செய்வதில், முட்டுக்கட்டை ஏற்பட்டிருப்பது குறித்தும், கடந்த வாரம், 'தினமலர்' நாளிதழில், செய்தி வெளியானது. இந்நிலையில், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், 22 பேர், அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், 27 பேர் என, 49 பேரை, மாவட்ட கல்வி அலுவலர்களாக, பதவி உயர்வு செய்து, இயக்குனர் ராமேஸ்வர முருகன்,உத்தரவிட்டார். இந்த பதவி உயர்வால் ஏற்பட்டுள்ள தலைமை ஆசிரியர் காலி பணியிடங்கள், விரைவில் நிரப்பப்படும் எனவும், தரம் உயர்த்தப்படும் பள்ளிகள் பட்டியலும், ஓரிரு நாளில் வெளியாகும் எனவும், கல்வித்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

எஸ்.எஸ்.ஏ., மானியம் செலவிடுவதில்' மாணவர்கள் கண்காணிக்கலாம்!

தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) ஒதுக்கப்படும் பள்ளி பராமரிப்பு மானியத்தை செலவிடுவதற்கு ஒப்புதல் வழங்கும் குழுவில், ஆசிரியர்கள், மாணவர்களை சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கற்றல், கற்பித்தல் தேவை அடிப்படையில் ஆண்டுதோறும் எஸ்.எஸ்.ஏ., திட்டம் சார்பில் ஒன்று முதல் 8 ம் வகுப்பு வரை பள்ளி மானியம் மற்றும் பராமரிப்பு மானியம் வழங்கப்படுகின்றன. பள்ளி மானியமாக அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளுக்கு ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை ரூ.5 ஆயிரம், 6 முதல் 8 ம் வகுப்பு வரை ரூ. 7 ஆயிரம் வழங்கப்படும்.

பராமரிப்பு மானியம் என்பது பயன்பாட்டில் உள்ள வகுப்பறை எண்ணிக்கை அடிப்படையில் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை ஒதுக்கப்படும். பராமரிப்பு மானியம் அரசு பள்ளிகளுக்கு மட்டும் வழங்கப்படும். கடந்தாண்டு வரை இம்மானியத்தை செலவிட, பள்ளி தலைமையாசிரியர் மற்றும் கிராமக் கல்விக் குழு ஒப்புதல் போதுமானதாக இருந்தது. ஆனால், இந்தாண்டு முதல் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, முதற்கட்டமாக பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர், மாணவர், அங்கன்வாடி பணியாளர் கொண்ட குழு ஏற்படுத்தி, இதன் ஒப்புதல் பெற்ற பின் தான், கிராமக் கல்விக் குழுவில் வைத்து அனுமதி பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து இத்திட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: பள்ளி மானியம் மற்றும் பராமரிப்பு மானியத்தை செலவிடுவதில் சில மாவட்டங்களில் வெளிப்படை தன்மை இல்லை என்ற சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு கூட்டத்தில், தலைமையாசிரியருடன், அந்த பள்ளி ஆசிரியர், மாணவர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களையும் குழுவில் இணைக்க முடிவு செய்யப்பட்டது. இந்தாண்டு முதல் இக்குழுவும் ஒப்புதல் அளித்தால்தான் மானியத்தை செலவிட முடியும். நிதியை தவறாக பயன்படுத்த முடியாது, என்றார்.

சிறார் திருமணங்களில் இந்தியா 2வது இடம்: ஐ.நா. அதிர்ச்சி தகவல்!


நியூயார்க்: உலகிலேயே அதிக சிறார் திருமணங்கள் நடைபெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதாக ஐ.நா. அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து குழந்தைகள் நலனுக்கான ஐ.நா.வின் அமைப்பான யுனிசெஃப், அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''வங்கதேசத்துக்கு அடுத்தபடியாக, இந்தியாவில்தான் அதிக அளவில் சிறார் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. வங்கதேசத்தில், மூன்றில் இரண்டு பெண்களுக்கு 18 வயதுக்கு முன்னரே திருமணம் நடத்தப்பட்டுள்ளது.

2005 முதல் 2013 வரையிலான ஆண்டுகளில் இந்தியாவில் 20 முதல் 24 வயதுடைய பெண்களில் 43 சதவீதத்தினருக்கு, 18 வயது பூர்த்தியாவற்குள் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு வரை படித்த பெண்களைவிட, படிப்பறிவு இல்லாத சிறுமிகள் திருமணம் செய்விக்கப்படுவது 5.5 மடங்கு அதிகமாக உள்ளது.

இந்தியாவில், கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்துகொள்ள தடை விதிக்கப்பட்டிருந்தாலும், ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது. 4 வயது வரை உள்ள குழந்தைகளில், 1,000 ஆண் குழந்தைகளுக்கு 924 பெண் குழந்தைகள் என்ற அளவிலேயே ஆண்-பெண் விகிதாசாரம் உள்ளது.

உலகில் பிறப்பு பதிவு செய்யப்படாத 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அதிகம் கொண்ட நாடுகளில், இந்தியா முதலிடம் வகிக்கிறது. கடந்த 2000 ஆண்டில் இருந்து 2012 ஆம் ஆண்டு வரையிலான கால அளவில் பிறந்த 7.1 கோடி குழந்தைகளுக்கு, பிறப்புச் சான்றிதழ் பெறப்படவில்லை. 2012 நிலவரப்படி, இந்தியாவில் ஒரு வயதுக்குட்பட்ட 68.6 லட்சம் குழந்தைகளுக்கு நோய்த் தடுப்பு மருந்துகள் அளிக்கப்படவில்லை

இந்தியாவில், குழந்தைகளின் பிறப்பை பதிவு செய்வதில் மதம் முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்தியாவிலுள்ள முஸ்லிம்களில் 39 சதவீதமும், ஹிந்துக்களில் 40 சதவீதமும், ஜெயின் மதத்தினரில் 87 சதவீதமும் குழந்தை பிறப்பை பதிவு செய்துள்ளனர்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

13/09/2014

இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 33399/13

12-09-2014 ஊதிய வழக்கு விசாரணை படியலில் 400 வது வழக்காக இருந்தது .நீதியரசர் 399 வழக்கில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என அறிவித்து இருந்தார்கள் . வழக்கு விசாரணையில் அரசு ஊதியம் 9300+4200 வழங்கிட தடை இல்லை .ஆனால் IAS அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கூடா து.என்றார்கள் .8 வார காலத்தில் ஊதியத்தை மாற்றி அமைத்திட வேண்டும் என ஆணை வழங்கப்பட்டு உள்ளது .தீர்ப்பு நகல் விரைவில் வெளியிடப்படும் . 

HIGH COURT OF JUDICATURE AT MADRAS DAILY CAUSE LIST
(For 12th, September, 2014 )

AT 2.15 P.M
TO DISPOSE OF THE REPRESENTATION 
399. WP.21737/2014 MR.C.PRAKASAM M/S.L.P. SHANMUGASUNDARAM (Service) FOR R2 SPL.G.P.(CO-OP) FOR R1 
400. WP.33399/2013 M/S.AJMAL ASSOCIATES MR.A. LECIMAN (Service) C.VENKATESH KUMAR SPL..GP. TAKES NOTICE M.NATARAJAN H.MOHAMMED IMRAN AND K.PONNAIAH 


செப்.13: சர்வதேச முதலுதவி தின பகிர்வு..

உலக முதலுதவி தினம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் இரண்டாம் வாரத்தின் சனிக்கிழமை அன்று அனுசரிக்கப்படுகிறது. உலக செஞ்சிலுவை கூட்டமைப்பு கடந்த பதினான்கு வருடங்களாக உயிர்களை காப்பதில் முதலுதவியின் முக்கியத்துவத்தை உணர வைக்க இந்த நாளை கொண்டாடி வருகிறது.

ஒரு உயிரைக்காக்க,மேலும் ஆபத்து ஏற்படாமல் இருக்க,ஒரு குறிப்பிட்ட தாக்குதலில் இருந்து பாதிக்கப்பட்டவரை மீட்க என்று பலவற்றுக்கு முதலுதவி பயன்படுகிறது. மூளை பாதிக்கப்பட்டால் கோமா நிலையும்,இதயம் பாதிக்கப்பட்டால் நாடித்துடிப்பு இறங்குவதும்,நுரையீரலில் சிக்கல் உண்டானால் மூச்சு சிக்கல்களுக்கு உண்டாகும். முதலுதவி செய்ய நீங்கள் மருத்துவராகவோ,நர்சாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை.


ஆறு முக்கியமான அம்சங்களில் கவனம் செலுத்தினால் வெவ்வேறு சமயங்களில் பல உயிர்களை காக்க முடியும்.
முதல் படி :
ஆபத்தை விளைவிக்கும் காரணியைக்கண்டறிந்து அதில் இருந்து பாதிக்கப்பட்டவர் மற்றும் உங்களை காத்துக்கொள்ளுதல். எடுத்துக்காட்டாக பிளாஸ்டிக் எரிப்பால் உண்டாகும் புகையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டால் அதை அணைக்க வேண்டும். அல்லது அங்கிருந்து வெளியேற வேண்டும்.

இரண்டாவது படி :
பாதிக்கப்பட்ட நபர் சுயநினைவோடு இருக்கிறாரா என்று பாருங்கள். அப்படி இருக்கிறார் என்றால் அவருக்கு ஏதேனும் உதவி தேவையா என்று கேளுங்கள். அவர் சுய நினைவில் இல்லை என்றால் முதலுதவி செய்யுங்கள்

மூன்றாவது படி :
மூக்கை பரிசோதியுங்கள். அதில் ஏதேனும் அடைப்பு இருந்தால் உங்கள் விரலால் இருக்கும் அடைப்பை நீக்குங்கள். அவரின் நெற்றியில் ஒரு கையை வைத்து தலையும் பின்புறம் நகர்த்தி,முகவாய்கட்டையை தூக்குங்கள்

நான்காவது படி :
மூச்சை ஒழுங்காக விடுகிறாரா என்பதை கேட்டு,கவனித்து,உணர்ந்து கண்டறியுங்கள். ஒரு நிமிடத்துக்கு பதினைந்து-பதினெட்டு முறை மூச்சு விடுதல் நிகழவேண்டும்.

ஐந்தாவது படி :
அப்படி மூச்சு விடாவிட்டால் வாயோடு வாய் வைத்து நிமிடத்துக்கு பத்து முறை காற்றை உள்செலுத்துங்கள். மற்றவர்களை சுற்றியிருக்க விடாதீர்கள்.

ஆறாவது படி:
ரத்த சுழற்சி : நாடித்துடிப்பை சோதித்து பாருங்கள். மூச்சுக்குழாய் பக்கம் கழுத்துக்கு பக்கவாட்டில் தொட்டுப்பார்த்து நாடித்துடிப்பு இருக்கிறதா என்று பாருங்கள். அப்படி இல்லையென்றால் மேலே சொன்ன வாயோடு வாய் வைத்து காற்றை உள்செலுத்துதலை செய்யுங்கள். அதே போல நெஞ்சை அழுத்தமாக அழுத்துவதும் அவசியம் . இந்த செயலை பாதிக்கப்பட்ட நபர் மூச்சுவிடும் வரையோ,இருமும் வரையோ அல்லது ஏதேனும் அசைவை காட்டும் வரையோ தொடர்ந்து செய்ய வேண்டும். இவை பொதுவாக செய்ய வேண்டியவை. அதே சமயம் வெவ்வேறு விபத்துக்கள் மற்றும் சிக்கல்களுக்கு ஏற்ப முதலுதவியும் மாறுபடும்

02/09/2014

தொடக்கக் கல்வி - அரசு / ஊராட்சி தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் புதியதாக நியமிக்கப்படவுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு பணியில் சேரும் நாளன்றே பணிப்பதிவேடு தொடங்கிட இயக்குனர் உத்தரவு

Department exam december -2014-notification

*விண்ணப்பிக்க கடைசி தேதி 30-9-2014

*தேர்வுதேதி- 23-12-14 முதல் 31-12-14

*தேர்வு கட்டணம் ரூ30,அஞ்சலக கட்டணம் ரூ12 சேர்த்து விண்ணப்ப பாடத்திற்கும் சேர்த்து

*தேர்வு நுழைவுச்சீட்டு 17-12-14 முதல் 31-12-14

*தேர்வு முடிவு 7-3-15&16-3-15

தொடக்கக் கல்வி - பொது மாறுதல் - 2014ம் ஆண்டு கலந்தாய்வில் மாறுதல் பெற்றவர்களில், நிர்வாக காரணங்களால் விடுவிக்கப்படாதவர்களை 04.09.2014 தேதி விடுவித்து 05.09.2014 பணியில் இயக்குனர் உத்தரவு

தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தில் அரசின் 10% பங்கு தொகை செலுத்தப்படுகிறது

தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக கேட்ட வினாக்களுக்கு அரசு தரப்பு பதில் ,தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு அரசின் பங்கு தொகை 10% செலுத்தப்பட்டு வருவதாக பதில்.



வழக்கு தொடுத்த 260 ஆசிரியர்களுக்கு மட்டும் பலன்கள் வழங்க அரசாணை

அரசாணை (நிலை)எண் ;146-19.06.2012 01.06.88 முன் இடைநிலை /தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் /நடுநிலை தலைமை ஆசிரியர் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் தேர்வு நிலை ,சிறப்பு நிலை கோரி வழக்கு தொடரப்பட்டது .அதில் அரசின் நிதிபற்றாகுறையினால் வழக்கு தொடுத்தது தீர்ப்பாணை பெற்ற 260 ஆசிரியர்களுக்கு மட்டும் பணபலனை பெற வெளியிட்ட அரசாணை