திருக்குறள்

28/08/2013

டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு வாய்ப்பு | Opportunity to TET Candidates who had not submitted certificates in past two verifications


கடந்த ஆண்டு நடந்த, 2 டி.இ.டி., தேர்வுகளுக்குப் பின் நடந்த சான்றிதழ் சரிபார்ப்புகளில் பங்கேற்காதவர்கள், உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறிய தேர்வர்கள் ஆகியோருக்கு, இறுதியாக, மீண்டும் ஒரு முறை வாய்ப்பு அளித்து, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. அதன்படி, செப்., 6, 7 ஆகிய தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக டி.ஆர்.பி., தலைவர், விபு நய்யார் வெளியிட்ட அறிவிப்பு: கடந்த ஆண்டு, ஜூலை, 12 மற்றும் அக்டோபர், 14 ஆகிய தேதிகளில், டி.இ.டி., தேர்வுகள் நடந்தன. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு, முறையே, கடந்த ஆண்டு, செப்., 7, 8 மற்றும் நவம்பர், 6 முதல் 9ம் தேதி வரை நடந்தன. 

இதில் பங்கேற்காத தேர்வர்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நாளன்று, உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறிய தேர்வர்களுக்கு, மீண்டும் ஒரு இறுதி வாய்ப்பு வழங்கும் வகையில், வரும், செப்., 6, 7 ஆகிய தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். இந்நிகழ்வு, சென்னை, அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்படும். 

கடந்த ஆண்டு, நவம்பர், 9ம் தேதி அன்று, இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, உரிய முழுமையான கல்வித்தகுதியை பெற்றிருந்து, உரிய பட்டயச் சான்று, பட்டச் சான்று, மதிப்பீட்டிற்கான சான்று மற்றும் மதிப்பெண் பட்டியல் போன்றவற்றை சமர்ப்பிக்கத் தவறியவர்களுக்கு மட்டும், இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. 

ஏற்கனவே நடந்த சான்றிதழ் சரிபார்ப்பு ஆவணங்கள் அடிப்படையில், சம்பந்தப்பட்ட தேர்வர்களின் பதிவு எண்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. கடந்த, இரண்டு, டி.இ.டி., தேர்வுகளில், தேர்ச்சிக்குரிய, குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்று, சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறியவர்களின் விவரங்கள், இணையதளத்தில் தரப்பட்டுள்ளன. 

தேர்வர்கள், பதிவு எண்களை சரிபார்த்து, அதில் அழைக்கப்பட்டுள்ளவர்கள் மட்டும், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம். தற்காலிக அடிப்படையில் தான், தேர்வர், அழைக்கப்படுகின்றனர். பெயர் விடுபட்டு இருந்தால், டி.ஆர்.பி., தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, விபு நய்யார் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நடந்த சான்றிதழ் சரிபார்ப்புகளுக்குப் பிறகே, பல தேர்வர்களுக்கு, சான்றிதழ்கள் கிடைத்தன. அவர்கள், அப்போதைய டி.ஆர்.பி., தலைவர், சுர்ஜித் சவுத்ரியிடம், பல முறை முறையிட்டும், அவர், தேர்வர்களின் கோரிக்கைகளை ஏற்கவில்லை. இதனால், வேலை வாய்ப்பை பெறும் நிலையில் இருந்த பலர், சான்றிதழ் இல்லாததன் காரணமாக, வேலை வாய்ப்பை இழந்தனர். பல பெண்கள், கண்ணீர் விட்டு கதறினர். எனினும், தேர்வர்களின் நியாயமான கோரிக்கைகள், கடைசிவரை பரிசீலிக்கப்படவில்லை. 

இந்நிலையில், எட்டு மாதங்களுக்குப்பின், டி.ஆர்.பி.,யின் புதிய தலைவராக பதவி ஏற்ற குறுகிய நாட்களிலேயே, தகுதி வாய்ந்த தேர்வர்களுக்கு, விபு நய்யார், வாய்ப்பு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், தகுதி வாய்ந்த தேர்வர்களுக்கு, வேலை வாய்ப்பு கிடைக்கும் நிலை உருவாகி உள்ளது.

8 இந்திய ஆட்சி பணி அதிகாரிகள் மாற்றம், புதிய அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் மாநில திட்ட இயக்குனராக பூஜா குல்கர்னி நியமனம்

தமிழகத்தில் 8 இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் ஏற்கனவே அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனராக பணிபுரிந்த மதிப்புமிகு. மகேஸ்வரன் தமிழ் நாடு பாடநூல் கழக இயக்குனராக மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. புதிய அனைவருக்கும் கல்வி இயக்கக மாநில திட்ட இயக்குனராக மதிப்புமிகு. பூஜா குல்கர்னி அவர்களை நியமனம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

27/08/2013

பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் B.Ed படிப்பிற்கான மாணவர் சேர்க்கை துவக்கம்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் தொலைநிலைக் கல்வியில் இரண்டாண்டு B.Ed படிப்பிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இப்படிப்பிற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் இரண்டு ஆண்டுகள் பணி புரிந்திருக்க வேண்டும்.தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிர் வேதியியல், விலங்கியல், சுற்றுச்சூழலியல், கணினி அறிவியல், கணினிபயன்பாட்டியல், தகவல் தொழில்நுட்பம், வரலாறு, புவியியல் உள்ளிட்டபாடப் பிரிவுகளில் இளநிலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.முதுநிலையில், பொருளாதாரம், வணிகவியில், மனையியல், அரசியல், சமூகப்பணி, சமூகவியல், உளவியல், தர்க்கம், இந்திய கலாச்சாரம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசின் இடஒதுக்கீட்டு கொள்கை மற்றும் நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை இறுதி செய்யப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

www.bdu.ac.in என்ற இணைய தளம் வழியாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது இயக்குநர்,தொலைநிலைக் கல்வி இயக்ககம், பாரதிதாசன் பல்கலைக் கழகம், பல்கலைப் பேரூர் வளாகம், திருச்சி - 620 024 என்ற முகவரிக்கு நேரில் சென்றும் பெறலாம். அல்லது பாரதிதாசன் பல்கலைக் கழக சேர்க்கை மையங்களில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், CDE, Bharathidasan University, Trichy என்றபெயரில் 500 ரூபாய்க்கு வரைவோலை எடுத்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.ஆகஸ்ட் மாதம் 19-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். செப்டம்பர் மாதம் 29-ஆம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நுழைவுத் தேர்வுநடைபெறும். நுழைவுத் தேர்வுகள் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும்.

செப்., 5 ராதாகிருஷ்ணன் விருதுக்கு 360 ஆசிரியர் தேர்வு

"ராதாகிருஷ்ணன் விருது'க்கு, தகுதி வாய்ந்த 360 ஆசிரியரை தேர்வு செய்ய,பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் தலைமையிலான மாநில தேர்வுக் குழு, இன்று, சென்னையில் கூடுகிறது. முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான, செப்., 5, தேசிய அளவில், ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளையொட்டி, சிறந்த ஆசிரியரைத் தேர்வு செய்து, தமிழக அரசு, "ராதாகிருஷ்ணன் விருது' வழங்கி வருகிறது. விருது, 5,000 ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை, அரசுவழங்குகிறது.

மாநிலத்தில், 64 கல்வி மாவட்டங்கள் உள்ளன. பள்ளி கல்வித் துறை தரப்பில், ஒரு கல்வி மாவட்டத்திற்கு, இருவர் வீதமும், தொடக்க கல்வித் துறையில், ஒரு கல்வி மாவட்டத்திற்கு, மூன்று பேர் வீதமும், தகுதி வாய்ந்த ஆசிரியர் தேர்வு செய்யப்படுகின்றனர். மேலும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உள்ளிட்ட வேறு சில துறைகளில் இருந்தும், தகுதி வாய்ந்த ஆசிரியர் தேர்வு செய்யப்படுகின்றனர். மொத்தத்தில், 360 ஆசிரியர்களுக்கு, வரும் செப்., 5ம் தேதி,விருது வழங்கப்பட உள்ளது. மாவட்ட அளவில், அதிகாரிகள் பரிந்துரை செய்து அனுப்பியுள்ள விண்ணப்பங்களை ஆய்வு செய்து, தகுதியான ஆசிரியர்களைத் தேர்வு செய்ய, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் தலைமையிலான மாநில தேர்வுக் குழு, இன்று, சென்னையில் கூடுகிறது . மாநிலக் குழு, விண்ணப்பங்களை ஆய்வு செய்து, 360 ஆசிரியரை, தேர்வு செய்ய உள்ளது. தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு,இந்த வார இறுதிக்குள், அழைப்புக் கடிதம் அனுப்பப்படும்.செப்., 5ம் தேதி மாலை,சென்னை, சேத்துப்பட்டு, எம்.சி.சி., பள்ளியில் நடக்கும் விழாவில், பள்ளிக்கல்வி அமைச்சர் வைகை செல்வன், விருதுகளை வழங்குகிறார். இதற்கான ஏற்பாடுகளை,பள்ளி கல்வித் துறை, மும்முரமாக செய்து வருகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 10% செப்டெம்பர் 3 வது வாரம் அறிவிப்பு வெளியாகும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 10% 01.07.2013முதல்...80% லிருந்து 90% ஆகஉயர்கிறது. செப்டெம்பர் 3 வது வாரம் அறிவிப்பு வெளியாகும்.

அகஇ - படைப்பாற்றல் கல்வி - பள்ளிகளின் தரத்தை ஒவ்வொரு மாதமும் 10ம் தேதிக்கு பதிலாக 3ம் தேதிக்குள் மாநில திட்ட இயக்ககத்திற்கு அனுப்ப உத்தரவு

அரசு ஊழியர்களுக்கு இம்மாதம் சம்பளம் குறைக்க வேண்டாம், கோர்ட் தடை உத்தரவால் அரசு புது உத்தரவு!

பள்ளிகல்வி - மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியாளர்கள் 1991 ஆம் ஆண்டில் பணியிழந்தோருக்கு, உச்சநீதிமன்ற ஆணைகளின் படி பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டு, பட்டதாரி ஆசிரியர் பதவியில் பணிவரன்முறை சார்ந்த கருத்துக்கள் அரசுக்கு பணிந்து அனுப்பப்பட்டது சார்பாக கூடுதல் விவரங்கள் கோருதல் சார்ந்து

பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில், 14 வயது நிறைவு பெறதாவர்களுக்கு, தேர்வு எழுதுவோர் பட்டியலில் இடம் பெற முடியவில்லை. சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்பதால், மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியல் ஆன்- லைனில் பதிவு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. தவறுகள் ஏற்படாமல் இருக்க தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 14 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். இதன்படி பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 30.09.1999 க்கு முன் பிறந்தவர்களுக்கு மட்டுமே 14 வயது நிறைவு பெறும்.

இந்த தேதிக்கு பின்னர் பிறந்தவர்களுக்கு மட்டுமே ஆன்- லைனில் பதிவு செய்ய சாப்ட்வேர் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கு பின் பிறந்தவர்கள் பெயரை பட்டியலில் சேர்க்க முடியாத நிலை உள்ளது. 01.10.1999 முதல் 31.12.1999 வரை பிறந்தவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள மாவட்ட கல்வி அலுவலர்களிடம், சிறப்பு அனுமதி பெற்று தேர்வு எழுதலாம், என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

அதற்கு பின்பு பிறந்தவர்கள் பள்ளிக்கல்வி இயக்குனரிடம் அனுமதி பெற வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த வயதுடைய மாணவர்கள், பள்ளிக்கல்வி இயக்குனரகம் சென்று அனுமதி பெறுவதற்கு, சென்னைக்கு அலைய வேண்டிய நிலை உள்ளது. பல பள்ளிகளில் பள்ளி மாற்று சான்றிதழில் உள்ள தேதியை வைத்து ஆசிரியர்கள் பதிவு செய்கின்றனர்.

இதில் அந்த மாணவர் பிற்காலத்தில் பணிக்கு செல்லும் போது பிறப்பு சான்றிதழில் ஒரு தேதியும், மதிப்பெண் சான்றிதழில் வேறு தேதியும் பதிவு செய்யப்பட்டிருப்பதால், சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

ஒரு நபர்க் குழுவின் பரிந்துரை அடிப்படையில் டிப்ளமோ பட்டம் கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்ட பணியிடங்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.9300, தர ஊதியம் ரூ.4200 வழங்கப்பட்டுள்ளது என அரசு அறிவிப்பு




தமிழ்நாடு பள்ளிகல்வி சார்நிலைப்பணி - 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின் +2 பயிலாமல் பட்டம் / பட்டயம் பெற்று பட்டதாரி ஆசிரியர்களாக செய்யப்பட்டவர்களுக்கு தகுதிகாண் பருவம் முடித்து ஆணை வழங்குதல் சார்பாக விவரம் கோருதல்

Tamil Nadu Teachers Eligibility Test - 2013 - Tentative Answer Key Paper I and Paper II Released

TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2013
College Road, Chennai-600006

TENTATIVE KEY 


PLEASE CLICK FOR PAPER II

PLEASE CLICK FOR PAPER II pdf


ஆசிரியர் தகுதித் தேர்விற்கான அதிகாரப்பூர்வமான தோராய விடைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது,விடையில் பிழை இருந்தால் உரிய ஆவனங்களோடு 02.09.2013அன்று மாலை 05.00 மணிக்குள் தபால் மூலமாகவோ /வாரியத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியிலோ வந்து சேருமாறு அனுப்ப வேண்டும் -டி.ஆர்.பி

25/08/2013

அரசின் திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம் அல்



அரசின் திட்டங்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம் அல்ல என்று நாடாளுமனற விவகாரத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சுக்லா கூறியுள்ளார்.
மக்களின் அத்தியாவசிய தேவைகளான பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, வங்கி கணக்கு, பாஸ்போர்ட், கியாஸ் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயம் வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கேட்பதாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புகார்கள் குவிகின்றன.
ஆதார் அட்டை வழங்கப்படுவதில் ஏகப்பட்ட குளறுபடிகள் நிகழ்வதால், பெரும்பாலான மக்களால் இதைப் பெற முடியவில்லை. அப்படியிருக்க, ஆதார் அட்டையைக் கேட்டால் என்ன செய்ய முடியும்?
நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சுக்லா, ''வங்கி கணக்கு தொடங்குவது, பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, பாஸ்போர்ட் உள்ளிட்ட அரசின் மானிய திட்டங்களுக்கு ஆதார் அட்டை கட்டாயமல்ல. மக்களை கட்டாயப்படுத்துவதாக தெரியவந்தால்.சம்பந்தபட்ட நிறுவனங்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்'' என்று எச்சரிக்கை விடுத்தார்!

வாடிக்கையாளருக்கு எஸ்எம்எஸ் தகவல் தர 5 வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன: ப.சிதம்பரம்

பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட 5 பொதுத்துறை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அளிக்க கட்டணம் வசூலிப்பதாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துமூலம் அளித்த பதிலில் அவர் தெரிவித்ததாவது:பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து கிடைத்த தகவலின்படி, ஐ.டி.பி.ஐ. வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, விஜயா வங்கி, பாட்டியாலா ஸ்டேட் வங்கி ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அளிக்க இப்போது கட்டணம் வசூலிக்கின்றன.ரிசர்வ் வங்கி கடந்த 2011ஆம் மாண்டு மார்ச் மாதத்தில், வாடிக்கையாளர்களின் அனைத்து பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாகவும் எஸ்எம்எஸ் தகவல்களை அனுப்புமாறு வங்கிகளை அறிவுறுத்தியது. எனினும், இந்தத் தகவல்களை வழங்குவதற்கு கட்டணம் வசூலிப்பதற்கு எந்த நெறிமுறைகளையும் தான் வெளியிடவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வங்கிகள் இவ்வாறு கட்டணம் வசூலிப்பதை வாபஸ் பெறுவது குறித்து அரசு பரிசீலிக்கவில்லை. வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் தனது செல்போன் எண்ணை வழங்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. செல்போன் எண்ணைக் கொடுத்து, எஸ்எம்எஸ் மூலம் தகவல் வேண்டும் என்று வாடிக்கையாளர் விரும்பும்போது அவருக்கு தகவல்கள் அனுப்பப்படுகின்றன என்று சிதம்பரம் தனது பதிலில் தெரிவித்தார்.

தமிழக அரசின் வெப்சைட்ஸ்கள் :-



நம்மில் பலருக்கு தமிழக அரசின் பல வெப்சைட்டுகள் உள்ளதே என்று தெரியாது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு பலர் அதை பயன்படுத்தாமலே உள்ளனர் எனலாம். தமிழக அரசின் பயனுள்ள சில வெப்சைட்களும், மற்றும் பயனுள்ள அரசு சாரா வெப்சைட்கள் சிலவற்றின் விபரம் கீழே...




சான்றிதழ்கள்
1) பட்டா / சிட்டா அடங்கல்

2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட

3) வில்லங்க சான்றிதழ் http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0

4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்

5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்

6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்

E-டிக்கெட் முன் பதிவு
7) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு

விமான பயண சீட்டு

E-Payments (Online)
9) BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி

10) mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதி

11) E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி

12) NEFT / RTGS மூலம் பிறர் ACCOUNT ‘க்கு பணம் மாற்றும் வசதி
13) E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும் வசதி

14) Share Market - பங்குச் சந்தையில் On-Line வணிகம் செய்யும் வசதி

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள் (Online)
15) மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்

16) பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி

3) சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய

4) இணையதளங்கள் மூலமாக 10th, 12th Std பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதி

5) 10th & 12th வகுப்பிற்கான அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள் மற்றும் பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்ய

6) UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி, தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி

7) உள் நாடு மற்றும் உலக நாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும் வசதி

இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய

9) இந்திய கப்பல் படையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அறிய

10) Face to Face chat / Interview நேர்காணல் செய்யும் வசதி

கணினி பயிற்சிகள் (Online) 1) அடிப்படை கணினி பயிற்சி
tamil.gizbot.com

2) சிறார்களுக்கு கணினி பயிற்சி

3) இ - விளையாட்டுக்கள்

4) ப்ரௌசிங், இ-மெயில், சாட்டிங், வெப் கான்ஃபெரென்ஸ், தகவல் தேடுதள்

பொது சேவைகள் (Online)
1) தகவல் அறியும் உரிமை சட்டம்

2) சுற்றுலா மற்றும் முக்கிய தலங்கள் பற்றிய தகவல் பெறும் வசதி

3) திருமணம் புரிய விரும்புவோர் இணையதளங்கள் மூலமாக பதிவு செய்து தங்கள் வாழ்க்கை துணையை தேடி தேர்வு செய்யும் வசதி

4) குழந்தைகளுக்கான தமிழ் பெயர்களை அர்த்ததோடு பார்க்கவும் மற்றும் தமிழ் அகராதி, தமிழ் புத்தகங்களை பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய

5) ஜாதகம் மற்றும் ராசிபலனை அறிந்துக் கொள்ள

6) இணையதளம் மூலமாக இந்தியாவில் எந்த ஒரு மொபைலுக்கும் இலவசமாக SMS அனுப்பும் வசதி http://www.way2sms.com/

7) இணையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான VIDEO படங்களை தேடி கண்டு மகிழலாம்

இணையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொழில் / வர்த்தகம் மற்றும் ஸ்தாபனங்கின் முகவரி / தொலைபேசி தகவல்கலை இலவசமாக தேடி தெரிந்து கொள்ளலாம்

9) இணையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மொழியில் தினசரி / வார நாளிதல்களை இலவசமாக வாசித்து செய்திகளை அறியலாம்

10) இணையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை நேரலையாக இலவசமாக கண்டு மகிழலாம்

11) SPEED POST மூலமாக நீங்கள் அனுப்பும் தபால்களை இந்திய தபால் துறையின் இணையதளம் மூலமாக தபால் சேர்ந்த விவரம் அறியலாம் http://services.ptcmysore.gov.in/Speednettracking/Track.aspx

12) இந்திய தபால் துறையின் INTERNATIONAL SPEED POST / ELECRTONIC MONEY ORDER / REGISTERED POST / EXPRESS PARCEL / E-VPP சேவைகளை தபால் துறையின் இணையதளம் மூலமாக விவரம் அறியலாம்.

மென்பொருள் (Software) பதிவிறக்கம் செய்ய
1) இணையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மென்பொருளை இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகிக்கலாம்

வணிகம் (Economy)
1) தமிழ் நாட்டின் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விவரம் அறியலாம்

2) வெளிநாட்டின் பணமதிப்புக்கு இந்திய ரூபாயின் அன்றைய மாற்றத்தக்க மதிப்பை அறியலாம்

அரசு சார்ந்த விண்ணப்ப படிவங்கள் (Online)
1) பாஸ்போர்ட் விண்ணப்பம்

2) பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்ய

அரசு நலத் திட்ட படிவங்கள் (Online)
1) குடும்ப அட்டை

2) மகளிர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெறுவதற்கான விண்ணப்பம்

3) பெண்கள் திருமணத்திற்கு கோரப்படும் உதவித் தொகை விண்ணப்பம் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்

4) நலிந்தோர் குடும்ப நல நிதியுதவி பெருவதற்கான மனு

5) ஆதரவற்ற முதியோர் / விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் / உடல் ஊனமுற்றோர் உதவி தொகைக்கான மனு
தேவையான வெப்சைட்களை பயன்படுத்துங்கள் ! பயன்பெறுங்கள்

NSTSE - Discover your Child's Strenghts & Weaknesses



முக்கியமான பல்கலைக்கழகங்கள் வலைதளங்கள்

சென்னை : http://www.unom.ac.in/
அண்ணாமலை பல்கலை : http://www.annamalaiuniversity.ac.in/
இக்னோ : http://www.ignou.ac.in/
திருவள்ளுவர் : http://thiruvalluvaruniversity.ac.in/
பாரதிதாசன் : http://www.bdu.ac.in/
சாஸ்த்திரா : http://www.sastra.edu/
அழகப்பா : http://www.alagappauniv.ac.in/
Physical & sports : http://www.tnpesu.org/
தமிழ் பல்கலைக்கழகம் : http://www.tamiluniversity.ac.in/
பெரியார் : http://www.periyaruniversity.ac.in/

இணையான படிப்பில் பட்டம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி...உயர்நீதிமன்றம் உத்தரவு.

ஆசிரியர்தினம் ஆசிரியர்களுக்கான கட்டுரைப்போட்டி- தினமலர் அறிவிப்பு

100நாள் வேலை திட்ட பணியாளர் மூலம் பள்ளி ,அரசு நிலம் ,ரோடு ,தெரு முதலிய இடங்களில் மரம் வளர்க்க கோரிய கோரிக்கை ஏற்பு





மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில், தொலைதூர கல்வி மையத்தில் பி.எட்., படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர்கள் யுஜிசி அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இளங்களை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற மேல்நிலை பள்ளியில் இரண்டு வருட ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தமிழ்நாடு மாநில அரசு விதிப்படி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். நுழைவுத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். நுழைவுத்தேர்வு நடைபெறும் இடம், நாள் குறித்த தகவல்கள் பின்னர் அறிவிப்பு வெளியிடப்படும்.
விண்ணப்பம் மற்று ம்கையேடுகளை பல்கலைக்கழக சேர்க்கை மையத்தில் செப்டம்பர் 6 வரை பெற்று கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு www.mkudde.org என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

ஓய்வூதியர்களுக்கான பஞ்சப்படி உயர்வு

ஓய்வூதியர்களுக்கான பஞ்சப் படியை உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, 1988, ஜூன் 1ம்தேதியில் இருந்து, 1995, டிசம்பர், 31ம் தேதி வரை ஓய்வு பெற்றவர்களுக்கு, பஞ்சப் படியை உயர்த்தி, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, குறிப்பிட்ட ஆண்டில் ஓய்வு பெற்றவர்களுக்கு, மாதம், 870 ரூபாய், கூடுதலாகக் கிடைக்கும்.

மக்கள் தொகை கல்வி தொடர்பான தேசிய அளவில் பங்கேற்று நடித்தல் [Role play] பரிசு விபரம் ,போட்டி விபரம்




தகுதித்தேர்வு மூலம் 14 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள்: ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்

தற்போது நடத்தப்பட்ட தகுதித்தேர்வு மூலம் அரசு பள்ளிகளில் 14 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். தேர்வு பணிகளை அக்டோபர் மாத இறுதிக்குள் முடிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் 
திட்டமிட்டுள்ளது.ஆசிரியர் தகுதித்தேர்வுபள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8–ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு கடந்த 17, 18–ந் தேதிகளில் நடத்தப்பட்டது. பட்டதாரி ஆசிரியர்களுக்கும், இடைநிலை ஆசிரியர்களுக்கும் தனித்தனியாக நடைபெற்ற இந்த தேர்வுகளை தமிழகம் முழுவதும் 6½ லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் எழுதி உள்ளனர்.தகுதித்தேர்வுக்கான ’கீ ஆன்சர்’ ஒரு வாரத்தில் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இதற்கிடையே, பல்வேறு தனியார் இணையதளங்கள் தகுதித்தேர்வுக்கான கீ ஆன்சர்–ஐ வெளியிட்டு உள்ளன. தேர்வு எழுதிய ஆசிரியர்களும் அதைப் பார்த்து தங்களுக்கு எவ்வளவு மதிப்பெண் கிடைக்கும்? என்று கணக்கு போட்ட வண்ணம் உள்ளனர். இருப்பினும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும் அதிகாரப்பூர்வ கீ ஆன்சர் படிதான் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என்பதால் மதிப்பெண்ணை துல்லியமாக அறிந்துகொள்ள ஆசிரியர்கள் காத்திருக்கிறார்கள்.14 ஆயிரம் காலி இடங்கள்கடந்த தகுதித்தேர்வில் 19,246 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 8,849 பேர் பட்டதாரி ஆசிரியர்கள். 10,397 பேர் இடைநிலை ஆசிரியர்கள். பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு காலி இடங்கள் அதிகமாக இருந்ததால் அதில் தேர்ச்சி பெற்ற அனைவருக்குமே வேலை கிடைத்துவிட்டது. ஆனால், இடைநிலை ஆசிரியர் பணியில் காலி இடங்கள் குறைவாக இருந்ததால் தேர்ச்சி பெற்ற எல்லாருக்கும் வேலைகிடைக்கவில்லை.தற்போது நடத்தி முடிக்கப்பட்டுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வில் 7 சதவீதம்பேர் தேர்ச்சி பெறுவார்கள் (சுமார் 50 ஆயிரம் பேர்) என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், மொத்த காலி இடங்களின் எண்ணிக்கை 14 ஆயிரம்தான். இதில் 13 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் இடங்களும், ஆயிரம் இடைநிலை ஆசிரியர் இடங்களும் அடங்கும்.பணிநியமன முறைதற்போதைய நடைமுறையின்படி, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் மாநில அளவிலான பதிவுமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் முறையிலும் (தகுதித்தேர்வு, பிளஸ்–2, டிகிரி, பி.எட். என ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட மதிப்பெண் ஒதுக்கப்படும்) நியமிக்கப்படுவார்கள். எனவே, குறிப்பிட்ட பாடத்தில் காலி இடங்களின் எண்ணிக்கையை விட தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் அவர்கள் அனைவருக்கும் வேலை கிடைத்துவிடும்.அதேநேரத்தில் காலி இடங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்து தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்பட்சத்தில் அதிக பதிவுமூப்பு உடையவர்களுக்கும் (இடைநிலை ஆசிரியர்கள்), கட் ஆப் மதிப்பெண் அதிகம் பெறுவோருக்கும் மட்டுமே வேலை கிடைக்கும். தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் வேலைவாய்ப்புகள் காத்து இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்தகுதித்தேர்வு முடிவை செப்டம்பர் மாதம் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, காலி இடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படும். அவ்வாறு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் இருந்து பதிவுமூப்பு அடிப்படையிலும் (இடைநிலை ஆசிரியர் நியமனம்), அதிக கட் ஆப் மதிப்பெண் அடிப்படையிலும் (பட்டதாரி ஆசிரியர்கள்) ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.14 ஆயிரம் ஆசிரியர்களை தேர்வுசெய்யும் பணியை அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டு இருக்கிறது. ஒருவேளை நடப்பு கல்வி ஆண்டுக்கான ஆசிரியர் காலி பணி இடங்களையும் சேர்த்து நிரப்ப அரசு முடிவு செய்தால் கூடுதலான ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

தங்கள் குழந்தைகளை பள்ளிக்கூடங்களுக்கு அழைத்து செல்லும் போது பெற்றோர்கள் லுங்கி, நைட்டி அணிந்து வர தடை விதிப்பது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 55,900 பள்ளிகளில் 1 கோடியே 36 லட்சம் மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். 6 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பள்ளிக்கு தங்கள் பிள்ளைகளை சில பெற்றோர்கள் வாகனங்களில் அனுப்பி வைக்கின்றனர். சில பெற்றோர்கள் தாங்களாகவே அழைத்து சென்று விடுகின்றனர். அப்போது சில நேரங்களில் அவசரத்தில் பெற்றோர்கள் லுங்கி, நைட்டிகள் அணிந்து கொண்டு பள்ளிக்கு வருகிறார்கள்.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருப்பதால், இது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் அறிக்கை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இது குறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஒழுக்கத்தை வளர்க்கும் பள்ளிக் கூடத்தில் பெற்றோர் லுங்கி, அரை டவுசர் ஆகியவை அணிந்து பள்ளிக்கூடங்களுக்கு செல்லக் கூடாது. அவ்வாறு செல்வதாக புகார்கள் வந்துள்ளது. எனவே, பெற்றோர்கள் மனம் புண்படாத வகையில் மாணவர்களின் தாயாக இருந்தால் நைட்டி அணிந்து கொண்டு பள்ளிக்கு செல்லக் கூடாது. தந்தையாக இருந்தால் லுங்கி அணிந்து செல்லக் கூடாது. இதை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு அறிக்கை அனுப்ப பள்ளிக் கல்வித்துறை பரிசீலனை செய்து வருகிறது" என்றார்.

அனைத்து அரசு / அரசு நிதியுதவி பள்ளிகளில் மாணவர்களின் வருகைப் பதிவேடு ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய அரசு உத்தரவு


ஆசிரியர் கல்விக்கான இரண்டாண்டு டிப்ளமோ கல்வி, பிளஸ்–2–க்கு இணையானது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தொடக்கக்கல்வி இயக்குனர்

சென்னை ஐகோர்ட்டில் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஏ.முனியம்மாள் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:– நான் கடந்த 1980–ம் ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்று, 1985–ம் ஆண்டில் ஆசிரியர் கல்விக்கான டிப்ளமோ (டி.டி.எட்.) முடித்தேன். பின்னர் பி.லிட். (தமிழ்) பட்டம் பெற்றேன்.

ரத்து செய்ய வேண்டும்

பணி மூப்பு அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியையாக பதவி உயர்வு அளித்திருக்க வேண்டும். ஆனால் பிளஸ்–2 படிக்காதவர்களுக்கு இந்தப் பதவி உயர்வு பெறத் தகுதி இல்லை என்று கூறப்பட்டது. இதற்கு தொடக்கக் கல்வி இயக்குனரின் 13.9.2011 தேதியிட்ட வழிகாட்டி உத்தரவு சுட்டிக்காட்டப்பட்டது. எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பதவி உயர்வு உண்டு

இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:– தொடக்கக் கல்வி இயக்குனரின் அந்த உத்தரவை மற்றொரு வழக்கில் கடந்த 2.7.12 அன்று ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதனடிப்படையில் மற்றொரு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், இரண்டு ஆண்டு ஆசிரியர் கல்வி டிப்ளமோ கல்வி, பிளஸ்–2 படிப்புக்கு இணையானது என்று கூறப்பட்டுள்ளது.

அந்த உத்தரவு இந்த வழக்குக்கும் பொருந்தும். எனவே மனுதாரருக்கு பதவி உயர்வு பெறும் உரிமை உள்ளது. அதன்படி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியையாக அவருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். அதற்கேற்ற பணப் பலன்களையும் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம், கோப்பிலியாங்குடிகாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் சுவர்கள் மிகவும் சேதம டைந்துள்ளதை கலெக்டர் சரவணவேல்ராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


பள்ளியின் கட்டிட சுவர்களை உடனடியாக சீரமைக்க எவ்வளவு காலம், எவ்வளவு செலவு ஆகு மென்றும் ஒன்றிய பொறி யாளரிடம் கேட்டறிந்தார். அதேபோன்று பள்ளி தலை மையாசிரியரிடம் மாணவர்களின் படிப்பு எந்த விதத்திலும் பாதிப்பு அடையாத வண்ணம் பள்ளியின் சீரமைப்பு பணிகள் முடியும் வரை பள்ளி தற்காலிகமாக வேறு ஒரு இடத்தில் செயல்படுவதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க தலைமையாசிரியருக்கு உத்தரவிட்டார். 
மேலும், பள்ளியின் சீரமைப்பு பணிகள் முடியும் வரை மாணவர்கள் கட்டிடங்களுக்குள் செல்ல அனுமதிக்க கூடாது என பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தர விட்டார். மேலும், இப்பள்ளிக்கு தற்காலிக இடமாக மண்ணூழியில் உள்ள ஒரு இடத்தினை கலெக்டர் பார்வையிட்டு அவ்விடமானது தற்போது இயங்கி வரும் பள்ளியிலிருந்து வெகு தொலைவில் உள்ளதால் அந்த இடத்திற்கு பதிலாக அப்பள்ளி தற்போது இயங்கி வரும் இடத்திற்கு அருகாமையில் பள்ளிக்கு இடம் தேர்வு செய்யுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், மழை காலங்களுக்குள் பள்ளியின் கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை விரைவில் முடித்து மாணவர்களின் படிப்பு எந்தவிதத்திலும் பாதிக்காத வண்ணம் முடித்து தருமாறு பொறியாளருக்கு கலெக்டர் சரவணவேல்ராஜ் உத்தரவிட்டார்.

24/08/2013

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய முறையில் கற்பிக்க முடிவு

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு புதுமையான முறைகளில் ஆங்கிலத்தைக் கற்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 5 புதிய ஆங்கில வார்த்தைகளாவது கற்றுத்தர வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

அரசுத் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என இந்த ஆண்டு 3,500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிகளில் 80 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளனர். அதோடு, ஏற்கெனவே ஆங்கில வழி வகுப்புகள் உள்ள 320 பள்ளிகளில் சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்த மாணவர்களுக்கு ஆங்கிலத்தைக் கற்றுத்தர பல்வேறு புதிய திட்டங்களை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வகுத்துள்ளது.

முதல் கட்டமாக, இந்த மாணவர்களுக்கு ஆங்கில வழி வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் சனிக்கிழமை (ஆக.24) பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஒரு பள்ளிக்கு ஒரு ஆசிரியர் வீதம் சுமார் 4 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. கற்பிக்கும் ஆசிரியர்களிடத்தில் தன்னம்பிக்கை வளர்க்கும் விதத்தில் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆசிரியர்களின் ஆங்கிலப் பேச்சுத் திறனை வளர்ப்பதற்கான எளிய முறைகள் இந்தப் பயிற்சியின்போது கற்றுத்தரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆங்கில வழி வகுப்புகளைப் பொருத்தவரை ஆங்கில எழுத்துகள், வார்த்தைகளோடு வார்த்தை உச்சரிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வெறும் கரும்பலகையின் மூலம் மட்டுமே ஆங்கிலத்தைக் கற்பிக்காமல், விடியோ, ஆடியோ சி.டி.க்கள் மூலமும் மாணவர்களின் உச்சரிப்புத் திறன் மேம்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

EMIS இல் உள்ளீடு செய்யப்பட்ட விவரங்களை பள்ளிகள் வாரியாக சீராய்வு செய்து உள்ளீடு செய்யப்பட்ட தகவல்கள் 100%உறுதிபடுத்தும் பொருட்டும் ஒன்றிய அளவில் குழு ஏற்படுத்துதல் &பணிகள்.

*2013~2014மாணவர் விபரம் ( தற்போதைக்கு) உள்ளீடு செய்ய வேண்டாம்.
*2013~2014முதல் வகுப்பு (மட்டும்) மாணவர் விபரம் படிவங்களில் நிரப்பி வைக்கவும்.
*2012~2013 கல்வியாண்டில் உள்ளீடு செய்யப்பட்ட தகவல்கள் 2013 ஏப்ரல் 30 அன்று பள்ளியில் இருந்த மாணவர் எண்ணிக்கை விவரங்களோடு ஒத்து போக வேண்டும்.
*விடுபட்டவர் விபரம் சேர்க்கவும், கூடுதலாக உள்ள தவறான விபரம் நீக்கிடவும் வேண்டும்.
*மாணவர் பெயர்,பிறந்த தேதி,இனம் ,தகப்பனார் பெயர் சரியாக உள்ளதா என சரி பார்க்கவும்.
*ரத்த வகை ,கைபேசி எண், சகோதரர்களின் பிறந்த நாள் விவரம் வேண்டி மாணவர்களை கட்டாயப்படுத்தாதீர்கள்.
*வருங் காலங்களில் பள்ளி மாற்றுச்சான்றிதல்களிலேயே மாணவருடைய
யுனிக்க்யூ கோட் குறிப்பிட்டு விடவும்.
*தங்களது பள்ளி UDISE எண்ணை கரும் பலகையில் குறிப்பிடவும்.
*அனைத்து ஆசிரியர்களுக்கும் பள்ளி எண்ணை தெரியப் படுத்திடவும்.(3309040****)
*பள்ளிகளில் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு EMIS இணைய தளத்தின் முதல் பக்கம் பதிவிறக்கம் செய்து குழுவினரிடம் அளிக்கவும்.
*அனைத்து விவரங்களும் சரி பார்க்கப்பட்டு..."அனைத்து விவரங்களும் சரி பார்க்கப்பட்டதென" சான்று தங்களுக்கு அளிக்கப்படும்.

23/08/2013

364 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது: 27-ந் தேதி தேர்வுசெய்யப்படுகிறார்கள்

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர்5-ந் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினத்தையட்டி தமிழக அரசு சார்பில் 364ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படும். நல்லாசிரியர் விருது ரூ.5ஆயிரம் பரிசு மற்றும் பாராட்டு பத்திரம் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும். 2013-ம்ஆண்டுக்கான தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு கல்வித்துறை அதிகாரிகள்மூலமாக ஆசிரியர்களின் பரிந்துரை பட்டியல் பெறப்பட்டு உள்ளது. அரசு பள்ளிஆசிரியர்கள், அரசு உதவி பெறும் ஆசிரியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆகியஅனைத்து வகையான ஆசிரியர்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.நல்லாசிரியர் விருதுக்கு தகுதியான ஆசிரியர்களின் பட்டியல் 27-ந் தேதிஇறுதிசெய்யப்படுகிறது. தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு செப்டம்பர் 5-ந்தேதிசென்னை சேத்துப்பட்டு சென்னை கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப்பள்ளியில்நடைபெறும் ஆசிரியர் தினவிழாவில் நல்லாசிரியர் விருது வழங்கப்படும்.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன் விருதுகளை வழங்கிஆசிரியர்களை கவுரவிக்கிறார்.

TIME TABLE FOR COMMUNICATIVE ENGLISH TRAINING(Primary) on 24.08.2013

22/08/2013

தமிழக த்தில் பயன்பாட்டில் உள்ள இனவாரியான (ஜாதி கள்) பட்டியல்.

பாரதியார் தின,கு‌டியரசு தின சதுரங்கப்போட்டிகள் நடத்துவதற்கான செயல் திட்டம்

100% EMIS பதிவை உறுதி செய்யவும், மாவட்ட / வட்டார அளவிளான குழுக்கள் அமைத்து 2012-13 கல்வியாண்டு மாணவர் விவரங்களை பள்ளி வாரியாக ஒப்பிட்டு உறுதி செய்யவும் அறிவுரை வழங்கி பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு

பள்ளிகளில் கல்வித்த்ரத்தை மேம்படுத்த, தரக் கண்காணிப்பு முறைகள் (Quality Management Tool) செயல்படுத்துதல் சார்ந்த வழிக்காட்டு நெறிமுறைகள்

மீண்டும் ஏமாற்றம்!... இரட்டை பட்ட வழக்கு இன்று (22.08.2013) விசாரணைக்கு வரவில்லை செவ்வாயன்று (27.08.2013) வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

இரட்டை பட்ட வழக்கு இன்று 152 வது வழக்காக விசாரணைக்கு வர இருந்தது. இன்று ஒரு நீதிபதி ஓய்வுபெறுவதால் அமர்வு மதியம் 3-30 மணிக்கு மேல் நடைபெறவில்லை. மேலும் வரும் செவ்வாயன்று (27.08.2013) முதல் 10 விசாரணை வழக்கிற்கான இடத்திற்குள் வரும் என்று வழக்குரைஞர்கள் கூறியுள்ளனர். மேலும் அன்றைய தினமே வழக்கை கொண்டு வருவதற்கும் மற்றும் வழக்கை முடிப்பதற்கும் முழு முயற்சி செய்து வருகிறோம் என்று வழக்கை நடத்தி வருபவர்கள் தெரிவித்தனர்

21/08/2013

RTI தகவல் -பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை





ஆசிரியர் நியமனத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவது எப்படி?


TNTET 2013 பணிநியமனத்திற்கான பகுக்கப்பட்ட மதிப்பெண் நிறையளவு விவரம்

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெறுவதற்கு 60 சதவீத மதிப்பெண் (150–க்கு 90 மதிப்பெண்) எடுக்க வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்நியமனத்தைப் பொருத்தவரையில்,ஆசிரியர் நியமனம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு வழக்கில் தீர்ப்பு வரும்வரை தகுதித்தேர்வில்தேர்ச்சி பெற்றவர்களில் மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.


பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு,

தகுதி தேர்வு மதிப்பெண்,
பிளஸ்–2 மதிப்பெண்,
பட்டப் படிப்பு மற்றும் 
பி.எட். மதிப்பெண் 
ஆகியவற்றின் அடிப்படையில் நியமனம் நடைபெறும்.
தகுதித்தேர்வுக்கு 60 மதிப்பெண்ணும்,
பிளஸ்–2 தேர்வுக்கு 15 மதிப்பெண்ணும்,
பட்டப் படிப்புக்கு 15 மதிப்பெண்ணும்,
பி.எட். படிப்புக்கு 15 மதிப்பெண்ணும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

மொத்தம் 100 மதிப்பெண். தகுதித்தேர்வில் ஒருவர் எடுக்கும் மதிப்பெண் 60–க்கு மாற்றப்படும்.

பிளஸ்–2,டிகிரி,பி.எட். தேர்வில் மதிப்பெண் ஒதுக்கீடு விவரம் பின்வருமாறு:–

12–ம் வகுப்பில்...

90 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தால்–10 (அதிகபட்ச முழு மதிப்பெண்)
80 சதவீதம் முதல் 90 சதவீதத்திற்குள்–8 மதிப்பெண்
70 சதவீதம் முதல் 80 சதவீதத்திற்குள்–6 மதிப்பெண்
60 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள்–5 மதிப்பெண்
50 சதவீதம் முதல் 60 சதவீதத்திற்குள்–2 மதிப்பெண்

பட்டப் படிப்பில்...

70 சதவீதம் மற்றும் அதற்கு மேல்–15 மதிப்பெண் (முழு மதிப்பெண்)
50 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள்–12 மதிப்பெண்
50 சதவீதத்திற்கு கீழ்–10 மதிப்பெண்

பி.எட். படிப்பில்....

70 சதவீதம் மற்றும் அதற்கு மேல்–15 மதிப்பெண் (முழு மதிப்பெண்)
50 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள்–12 மதிப்பெண்

தகுதித்தேர்வு

90 சதவீதம் மற்றும் அதற்கு மேல்–60 மதிப்பெண் (முழு மதிப்பெண்)
80 சதவீதம் முதல் 90 சதவீதத்திற்குள்–54 மதிப்பெண்
70 சதவீதம் முதல் 80 சதவீதத்திற்குள்–48 மதிப்பெண்
60 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள்–42 மதிப்பெண்

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஜார்க்கண்ட் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு-

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 'ஓய்வூதியம் ' என்பது ஒருவரின் அடிப்படை உரிமை மற்றும் ஊழியர்களின் சொத்து அதை
மறுக்க கூடாது என ஜார்க்கண்ட் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு.இதனால் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ளோர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது

இரட்டைப்பட்டம் வழக்கு 22.8.2013 நாளை முதல் அமர்வில் விசாரணைக்கு வருகிறது.

அவசர தகவல். உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் விடுமுறையில் இருப்பதால் ஒத்தி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட இரட்டைப்பட்டம் வழக்கு நாளை முதல் அமர்வில் விசாரணைக்கு வருகிறது. இவ்வழக்கு விசாரணைக்கு வருவதற்கு தீவிரமாக முயற்சி செய்தது திரு.கலியமூர்த்தி அவர்கள். வழக்கு ஏறத்தாழ நாளை நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

EMIS-ஆன்-லைனில் பதிவு செய்யாத 9 மாவட்ட பள்ளிகளுக்கு ஆக., 23ம் தேதிக்குள், ஆன்-லைனில் பதிய வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை, "கெடு' விதித்துள்ளது.

ஆன்-லைனில் பதிவு செய்யாத 9 மாவட்ட பள்ளிகளுக்கு கெடு

ஆன்-லைனில் விவரங்களை பதிவு செய்யாத, ஒன்பது மாவட்டபள்ளிகளுக்கு, கல்வித் துறை, "கெடு' விதித்துள்ளது. தமிழகத்தில்,36,505 அரசு பள்ளிகள், 8,266 அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. புள்ளி விவர கணக்கீட்டிற்காக, இப்பள்ளிகளின் விவரங்களை, ஆன்-லைன் மூலம், கல்வி தகவல் மேலாண்மை தொகுப்பில் பதிவு செய்ய, அரசு உத்தரவிட்டிருந்தது. கடந்த கல்வியாண்டில், ஒன்று முதல், பிளஸ் 2 வரை, ஆசிரியர்கள்,மாணவர்கள், வகுப்பு, பாலினம், இனம் உள்ளிட்ட, 30 விவரங்கள் பதிவு செய்யப்பட்டன. ஏப்ரல் வரை, 4,000 பள்ளிகளின் விவரங்கள் பதிவு செய்யப்படவில்லை.

நடப்பு கல்வியாண்டில், புதிதாக சேர்ந்த முதல் வகுப்பு மாணவர்களையும் சேர்த்து, ஜூலை 31க்குள் பதிவு செய்ய, கல்வித் துறை, "கெடு' விதித்திருந்தது. இதுவரை, 23 மாவட்டங்கள் மட்டும்,முழுமையாக பதிவு செய்துள்ளன. தர்மபுரி, சேலம், சிவகங்கை,தேனி, திருவள்ளூர், வேலூர், பெரம்பலூர், தஞ்சை, திருச்சி மாவட்ட பள்ளி விவரங்கள், முழுமையாகப் பதிவு செய்யப்படவில்லை. விடுப்பட்ட மாவட்ட பள்ளிகளின் விவரங்களை, ஆக., 23ம் தேதிக்குள், ஆன்-லைனில் பதிய வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை, "கெடு' விதித்துள்ளது.

School Education Learning Disability among the students-Issue of certificate to the Differently Abled student-Formation of committee Clarificatory -Orders issued

புவியியல் நினைவுச் சின்னமாகிறது அரியலூர்

தமிழகத்தில் உள்ள அரியலூர் கடல்படிம ஆய்வகத்தை தேசிய புவியியல் நினைவுச் சின்னமாக அறிவிக்க இந்திய புவியியல் ஆய்வு மையம் முடிவு செய்துள்ளது. இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக
உள்ளது. இது தொடர்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் அதன் இயக்குனர் ஜெனரல் ஏ.சுந்தரமூர்த்தி தெரிவித்துள்ளார். அதிகளவிலான கடல் படிமங்கள் அரியலூர் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சுந்தரமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 16 முதல் 22 வரை சமஸ்கிருத வாரம் கொண்டாட அரசு கடிதம் வெளியீடு

பள்ளிக்கல்வி - SAVE PAPER - SAVE TREES - அறிவியல் செய்முறை பயிற்சி ஏடுகள் மற்றும் ஒப்படைப்புகளில் ONE SIDE பயன்படுத்துவதை தவிர்க்க தமிழக அரசு உத்தரவு

தொடக்கக் கல்வி - 01.06.1988 முதல் தேர்வுநிலை / சிறப்புநிலை வழங்க கோரி பெறப்பட்ட இறுதியாணை -களுக்கு, பொதுவான ஆணை பிறப்பிக்க வழக்கு தொடுத்த அனைவர்களின் விவரங்களையும் 20.08.2013க்குள் சமர்பிக்க உத்தரவு

அண்ணாமலை பல்கலை.,யில் பி.எட்: நுழைவு தேர்வுக்கு அழைப்பு

அண்ணாமலை பல்கலை.,யில் தபால் வழி பி.எட் படிப்புக்கான நுழைவு தேர்வுக்கு வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.,யில் நடப்பு ஆண்டில் தபால் வழி பி.எட் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பி.ஏ, பி.எஸ்சி, பி.காம், பி.பி.ஏ, பி.சி.ஏ, எம்.ஏ, எம்.எஸ்சி, எம்.காம், எம்.பி.ஏ, மருத்துவ படிப்பு, பட்டய படிப்பு, முதுகலை பட்டய படிப்பு, சான்றிதழ் படிப்புகளுக்கான சேர்க்கையும் தற்போது நடந்து வருகிறது.

இந்த படிப்புகள் சம்பந்தமான விபரங்களை அண்ணாமலை பல்கலை., இணையதளம் (http://annamalaiuniversity.ac.in/distance_edu.htm) அல்லது கல்வி மையங்களை அணுகவும்.

தொடக்க கல்வித் துறையில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணியாற்றி வந்த, 51 பேர், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தொடக்கக்கல்வித் துறையில் காலியாக இருந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு, நேற்று சென்னையில் நடந்தது. இதற்கு பணி மூப்பு அடிப்படையில், 100 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். இதில், 51 பேருக்கு, பதவி உயர்வு உத்தரவுகளை, தொடக்கக்கல்வி இயக்குனர் இளங்கோவன் வழங்கினார்

தமிழ் தெரியாத பள்ளி மாணவர்கள்: சிறப்பு பயிற்சி அளிக்க அரசு திட்டம்

தமிழக பள்ளிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியரில், தமிழ் எழுத, படிக்கத் தெரியாதவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க, கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது.

மேல்நிலைக் கல்வி கற்க வரும் மாணவ, மாணவியரில் பலருக்கு, தமிழில் எழுத, படிக்கத் தெரியாத நிலை உள்ளது. தமிழில் எழுத, படிக்க சிரமப்படுவது குறித்து, பள்ளிக்கல்வித் துறை ஆய்வு செய்தது. இதையடுத்து, அந்த வகை மாணவ, மாணவியருக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிட்டு, அதற்காக, செயல்முறை புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
இந்த திட்டத்தில், ஒவ்வொரு மாவட்ட கல்வித் துறையில் இருந்தும், தமிழாசிரியர்கள் மூன்று பேருக்கு, சென்னையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக, ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. பயிற்சி பெற்ற தமிழாசிரியர்கள், அந்தந்த மாவட்டங்களில், மற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பர். பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், மாணவ, மாணவியருக்கு, செயல்முறை புத்தக பாட அடிப்படையில், பயிற்சியளிக்க உள்ளனர். இந்த சிறப்பு திட்டம், விரைவில் நடைமுறைக்கு வர உள்ளதாக, கல்வித் துறை தெரிவித்து உள்ளது.

தற்போது 1.1.2011-க்கு முன்னர் தேர்வுநிலை பெற்றவர் -களுக்கு தனி ஊதியம் அனுமதியில்லை எனவும் அதனால் பெற்ற பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என வேலூர் பகுதி பள்ளிகளில் தணிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள -தாக நிலவி வரும் தகவல்களுக்கு விளக்கமளிக்க உங்களுக்கு முதலாவது சென்னை கருவூல கணக்கு இயக்குனர் அவர்களின் 17.5.2011 நாளிட்ட கடிதத்தை உங்களுக்காக வெளியிட்டு எங்கள் கருத்தினையும் உங்கள் முன் பதிவு செய்ய விரும்புகிறோம்.

Special Allowance மற்றும் P.P பற்றிய தகவல்களை அரசாணைகளின்படி பார்ப்போம்.

தற்போது எழுந்துள்ள நிலைகளை விளக்குவதற்கு முன்னர் S.A.மற்றும் P.P பற்றிய தகவல்களை அரசாணைகளின்படி பார்ப்போம்.

SPECIAL ALLOWANCE பற்றிய விளக்கம் :

இது ஒரு நபர் குழுவைத் தொடர்ந்து அரசாணை 270 நாள்.26.8.2010 இன் மூலம் இ.நி.ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. அதாவது அரசாணையில் "Government direct that the Special Allowance of Rs.500/- per month be granted to the Secondary Grade Teachers and Headmaster High Schools" என்று உள்ளது. மேலும் இறுதியில் " The Special Allowance sanctioned in Para - I above shall take effect from 1.8.2010.

இதில் Secondary Grade Teachers என்று குறிப்பிடப்பட்டதால் அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் S.A. பெற தகுதியாகி 1.8.2010 முதல் பெற்றனர்.

பின்னர் 12.01.2011 இல் அரசாணை 23 இன் படி தனி ஊதியம்.

இதில் பத்தி 4 - இல் " இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தத்திற்கு மாற்றாக ஒரு நபர் குழுவின் அடிப்படையில் தற்போது சாதாரண நிலையில் 5200 - 20200 + தர ஊதியம் 2800 பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ஒன்றுக்கு தற்போது வழங்கப்படும் ரூ.500/- சிறப்புப்படிக்கு பதிலாக மாதம் ரூ.750/- ஆக உயர்த்தி அதனை தனி ஊதியமாக வழங்க அரசு ஆணையிடுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பத்தி 4 - இன் இறுதியில் " மேலும், தற்போது தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலையில் முறையே ரூ.9300-34800 + தர ஊதியம் 4300/- மற்றும் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4500/- பெறும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தேர்வுநிலை மற்றும் சிறப்புநிலையில் பணியாற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் சிறப்புபடியான ரூ.500/- தொடர்ந்து பெற அனுமதித்தும் அரசு ஆணையிடுகிறது." என்றும் உள்ளது.

சிறுவிளக்கம் உங்களுக்காக:

இதில் குறிப்பிடப்பட்டுள்ள "சாதாரண நிலையில்" என்ற வாசகத்தை வைத்துக்கொண்டு தணிக்கை தடை என்று பணத்தை திருப்பிகட்ட கூறுவதாக தற்போது தகவல்கள் பரவி வருகிறது.

அதாவது 1.1.2006 இல் புதிய ஊதிய விகிதத்தில் 5200-20200 +2800 இல் ஊதிய நிர்ணயம் செய்துகொண்ட இடைநிலை ஆசிரியர்கள் 1.1.2011 இல் தேர்வுநிலையை அடைந்திருந்தால் தனி ஊதியம் 750 பெற இயலாது என்பதாகவும், ஏனெனில் தனி ஊதிய அரசாணையில் சாதாரண நிலையில் என்று உள்ளது என தணிக்கையர்கள் கூறுகின்றனராம்.

இங்கு கொஞ்சம் பொறுமையாக படியுங்கள்.

S.A. வழங்கும்போது GRANTED TO SECONDARY GRADE TEACHERS என இருந்தததால் இதனை பெற்றவர்களை பட்டியலிட்டால்

1. 5200 - 20200 + தனி ஊதியம் 2800 பெற்று தேர்வுநிலை முடிக்காதோர்.(சாதாரண நிலை என்று வைத்துகொள்ளுங்களேன் )

2. 1.6.2009 -க்கு பின்னர் தேர்வுநிலை பெற்று 5200 - 20200 + தனி ஊதியம் 2800 பெற்றுகொண்டிருப்போர்.

3. இடைநிலை ஆசிரியர் தேர்வுநிலையினர் 9300-34800 + 4300 நிலையினர்.

4. இடைநிலை ஆசிரியர் சிறப்பு நிலையினர் 9300-34800 + 4500 நிலையினர்
(அதாவது அனைத்து நிலை இடைநிலை ஆசிரியர்களும் சிறப்பு படி பெற தகுதிடையவ்ர்கள் )

இதில் நாம் குறிப்பிட்டுள்ள வரிசை எண் 3 மற்றும் 4 இல் உள்ளவர்கள் அரசாணை 23 இன் பத்தி 4 - இன் இறுதியில்உள்ள " மேலும், தற்போது தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலையில் முறையே ரூ.9300-34800 + தர ஊதியம் 4300/- மற்றும் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4500/- பெறும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் (தேர்வுநிலை மற்றும் சிறப்புநிலையில் பணியாற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு) தற்போது வழங்கப்பட்டுவரும் சிறப்புபடியான ரூ.500/- தொடர்ந்து பெற அனுமதித்தும் அரசு ஆணையிடுகிறது." வரிகளின்படி சிறப்புபடி தொடர்ந்து பெற தகுதி பெறுகின்றனர்.

இவர்களுக்கு தொடர்ந்துபெற தகுதி பெறுகின்றனர் என்றால், இவர்களைத்தவிர மேலும் சிறப்புபடி பெற்று வந்தவர்களுக்கு என்ன நிலை?

அவர்களுக்கு "தற்போது வழங்கப்படும் ரூ.500/- சிறப்புப்படிக்கு பதிலாக மாதம் ரூ.750/- ஆக உயர்த்தி அதனை தனி ஊதியமாக வழங்க அரசு ஆணையிடுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது." என்ற வரிகளையே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பத்தி 4 இன் வரிகளை திரும்ப படியுங்கள்:

பத்தி 4 - இல் " இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தத்திற்கு மாற்றாக ஒரு நபர் குழுவின் அடிப்படையில் தற்போது சாதாரண நிலையில் 5200 - 20200 + தர ஊதியம் 2800 பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ஒன்றுக்கு தற்போது வழங்கப்படும் ரூ.500/- சிறப்புப்படிக்கு பதிலாக மாதம் ரூ.750/- ஆக உயர்த்தி அதனை தனி ஊதியமாக வழங்க அரசு ஆணையிடுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் சாதாரண நிலையில் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் 1.6.2009 -க்கு பிறகு தேர்வு நிலை பெற்று 5200 - 20200 + 2800 இல் உள்ளவர்களுக்கு தனி ஊதியம் இல்லை என்கின்றனர்.

இவர்களை தேர்வுநிலை பெற்றவர்கள் பட்டியலில் வைத்தால்,சிறப்புபடியை தொடர்ந்து பெற அனுமதிக்கப்பட்ட தேர்வு/சிறப்பு நிலை பெற்றவர்களுடன் இவர்களையும் இணைத்திருப்பார்கள் அல்லவா? அப்படி சிறப்பு படியை தொடர்ந்து பெற அனுமதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் 5200-20200+2800 பெறும் தேர்வுநிலை பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் இடம் பெறாததால் இவர்கள் தனி ஊதியம் பெறவே தகுதி பெற்றவர்கள்.

இதுசார்ந்து நாமக்கல் கருவூல அலுவலர் கோரிய தெளிவுரைக்கு சென்னை கருவூல கணக்கு இயக்குனர் அவர்கள் அளித்த பதிலை மீண்டும் படியுங்கள்.

20/08/2013

ஓவிய போட்டி SAVE WATER SECURE FUTURE . 6,7,8 th students

உங்களது PF-பிராவிடண்ட் பண்ட்டில் எவ்வளவு பணம் இருக


வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பணம் செலுத்தும் அனைத்து அரசு, தனியார் நிறுவன ஊழியர்களின் கணக்கு விவரங்களை இணையதளத்திலேயே பார்க்க முடியும். இதற்கு முன்னால் உங்கள் PF கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியாது. ஆனால் தற்போது அது எவ்வளவு என்பதை அவ்வபோதே தெரிந்து கொள்ளலாம்.இந்த விவரத்தை தற்போது பார்போம்.


இணைய சுட்டி...இதனை கிளிக் செய்து அந்த இணைய தளத்தில் சென்று படத்தில் காட்டியுள்ளது போல் செய்தால் உங்களது விவரங்கள் தெரியும்..



அதில் know your EPF balance என்பதை கிளிக் செய்தால் கீழே உள்ளதுபோல் விண்டோ ஓபன் ஆகும்.


அதில் Click Here என்பதை கிளிக் செய்து பின்பு வரும் விண்டோவில் படத்தில் சுட்டி காட்டிய இடத்தில் தங்களது மாநிலத்தை தேர்வு செய்தால் படத்தில் காட்டியுள்ளதுபோல் தோன்றும் அதில் உங்களது EPFO OFFICE-யை தேர்வு செய்தால்




மேலே உள்ளது போல் தோன்றும் அதில் சுட்டி காட்டப்பட்ட இடத்தில் தங்களது விவரங்களையும் (முக்கியமாக தொலைபேசி எண்ணை தர வேண்டும்) கொடுத்து submit செய்தால் இணையத்தில் காட்டாது உங்கள் பணத்தின் விவரம் உங்களது தொலைபேசிக்கு ஒரு செய்தி(SMS)ஆக வரும். அதில் உங்களது தொகையின் விவரம் தெரிந்துவிடும்...அவ்வளவுதான் நண்பர்களே..


கொசுறு: பணியிலிருந்து ஓய்வு பெறுவோர் தங்களது PF பிராவிடண்ட் பண்ட் பணத்தை வாங்குவதற்கு பல விதிமுறைகளைச் சொல்லி அலையோ அலை என்று அலைய விட்டு உயிரை எடுப்பார்கள்.. ஆனால், சில வருடங்களாக நிலைமை மாறிவிட்டது. பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஒருவர் தனது PFபிராவிடண்ட் பண்ட் பணத்தைக் தர கோரி விண்ணப்பம் தாக்கல் செய்தால், விண்ணப்பம் தாக்கல் செய்த 30 நாட்களுக்குள் அவருக்கு பணம் போய் சேர வேண்டும் என்பது கட்டாயமாகி விட்டது.