திருக்குறள்

18/08/2013

மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வலியுறுத்தி, தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் அடுத்த மாதம் 25ஆம் தேதி முதல் தொடர் மறியல் போராட்டம் நடைபெற இருப்பதாக அதன் அகில இந்தியப் பொதுச் செயலாளர் க.ஈசுவரன் தெரிவித்தார்.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் மாவட்டக் கிளைக் கூட்டம் தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்றது. 

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அகில இந்தியப் பொதுச் செயலாளர் க.ஈசுவரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

மத்திய அரசு ஆறாவது ஊதியத்தைத் குழுவில் அறிவித்த ஊதியம் தர தமிழக அரசு மறுத்து வருவதால், தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஒரு லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை 20 ஆண்டுகளாகப் பெற்று வந்த நிலையில், ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்தாததால் ஆசிரியர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

இதன்மூலம் தமிழக ஆசிரியர்கள் மாதம் ஒன்றுக்கு ரூ.8,550 குறைவாக ஊதியம் பெறுகின்றனர். இந்தப் பாதிப்பு ஓய்வூதியம் பெறும் வரை இருக்கும்.

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள ஊதியத்தை வழங்குவதோடு, ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்து வேலைவாய்ப்பக முன்னுரிமைப்படி நியமனம்

செய்ய வேண்டும். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அடுத்த மாதம் 25ஆம் தேதி முதல் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் சென்னையில் தொடர் மறியல் போராட்டம் நடைபெறும். இதற்கான ஆயத்தக் கூட்டங்கள் இதுவரை 22 மாவட்டங்களில் நடத்தப்பட்டுள்ளது.

முதல் நாள் மறியலில் பங்கேற்க இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பெயரைப் பதிவு செய்துள்ளனர். ஆசிரியைகளுக்காக ஓதுக்கப்பட்டுள்ள இரண்டாம் நாள் மறியலில் 3,500 பேர் பங்கேற்கின்றனர் என்றார் அவர்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------

மத்திய அரசின் இடைநிலை ஆசிரியர், சம்பளத்துடன் ஒப்பிடுகையில், மாநில அரசின் இடை நிலை ஆசிரியருக்கு, மாதந்தோறும், ரூ.8,550 இழப்பு ஏற்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மூன்று நபர் கமிஷன் பரிந்துரைப்படி, மாநில அரசின் கீழ் செயல்படும், இடை நிலை ஆசிரியருக்கு, அடிப்படை, தர ஊதியத்தில் அதிக அளவில் வேறுபாடு உள்ளது. 
தற்போது நியமிக்கப்படும், மத்திய அரசு பணியாளருக்கு, அடிப்படை ஊதியம் ரூ.9,300, தர ஊதியம் 4200, அகவிலைப்படி (80%) ரூ.10,800 என மொத்தம் ரூ.24,300 கிடைக்கிறது.

மாநில அரசின் இடைநிலை ஆசிரியருக்கு, அடிப்படை ஊதியம் 5200, தர ஊதியம் 2800, தனி சம்பளம் ரூ.750, அகவிலைப்படி (80%) ரூ.7,000 என மொத்தம் ரூ.15,750 வழங்கப்படுகிறது. இதன்படி மத்திய அரசு பணியாளருடன் ஒப்பிடுகையில், மாநில அரசின் இடை நிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,550 மாதந்தோறும் இழப்பீடு ஏற்படுகிறது.
ஒருநபர் கமிஷன் அறிக்கையில், இடை நிலை ஆசிரியர்கள், கிராமத்தில் இருப்பதால் சம்பளம் போதும், என,பொருத்தமில்லாத காரணத்தை கூறினர். 
இதனால், அரசிடம் முறையிட்டதன்பேரில், மூன்றுநபர் கமிஷன் அமைக்கப்பட்டது. 

மாநில அரசின் கீழ் பணியாற்றும், பாராமெடிக்கல் பிரிவில், டிப்ளமோ முடித்தவருக்கு, அடிப்படை சம்பளம், ரூ.9300 வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதே தகுதி உள்ள, இடைநிலை ஆசிரியருக்கு வழங்கப்படவில்லை.

No comments:

Post a Comment