திருக்குறள்

20/08/2013

மறைந்த பாரத பிரதமர் ராஜிவ் காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வருடந்தோறும் ஆகஸ்ட் 20 அன்று நல்லிணக்க நாள் உறுதி மொழியை அரசு அலுவலகங்களில் எடுக்க அரசு கடிதம் வெளியீடு

அரசு முதன்மை செயலர், (பொதுத்துறை ) சென்னை அவர்களின் கடிதம் 22608/ பொது-I / 2013-9 நாள் : 13.08.2013.இல் 20.8.2013 அன்று மறைந்த பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் (69–வது ) பிறந்த நாளை முன்னிட்டு 20.8.2013 முதல் 03.9.2013 


வரையுள்ள காலத்தை நல்லிணக்க நாட்களாக அனுசரிக்க வேண்டும் என்றும், 20.8.2013 அன்று காலை 11.00 மணிக்கு நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக்கொள்ளவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.


நல்லிணக்க நாள் உறுதிமொழி 

நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன். மேலும் எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும், வன்முறையில் ஈடுபடாமல், பேச்சு வார்த்தைகள் மூலமாகவும் அரசியலமைப்பு சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக் கொள்வேன் என்றும் இதனால் உறுதி அளிக்கிறேன்.


No comments:

Post a Comment