திருக்குறள்

21/08/2013

EMIS-ஆன்-லைனில் பதிவு செய்யாத 9 மாவட்ட பள்ளிகளுக்கு ஆக., 23ம் தேதிக்குள், ஆன்-லைனில் பதிய வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை, "கெடு' விதித்துள்ளது.

ஆன்-லைனில் பதிவு செய்யாத 9 மாவட்ட பள்ளிகளுக்கு கெடு

ஆன்-லைனில் விவரங்களை பதிவு செய்யாத, ஒன்பது மாவட்டபள்ளிகளுக்கு, கல்வித் துறை, "கெடு' விதித்துள்ளது. தமிழகத்தில்,36,505 அரசு பள்ளிகள், 8,266 அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. புள்ளி விவர கணக்கீட்டிற்காக, இப்பள்ளிகளின் விவரங்களை, ஆன்-லைன் மூலம், கல்வி தகவல் மேலாண்மை தொகுப்பில் பதிவு செய்ய, அரசு உத்தரவிட்டிருந்தது. கடந்த கல்வியாண்டில், ஒன்று முதல், பிளஸ் 2 வரை, ஆசிரியர்கள்,மாணவர்கள், வகுப்பு, பாலினம், இனம் உள்ளிட்ட, 30 விவரங்கள் பதிவு செய்யப்பட்டன. ஏப்ரல் வரை, 4,000 பள்ளிகளின் விவரங்கள் பதிவு செய்யப்படவில்லை.

நடப்பு கல்வியாண்டில், புதிதாக சேர்ந்த முதல் வகுப்பு மாணவர்களையும் சேர்த்து, ஜூலை 31க்குள் பதிவு செய்ய, கல்வித் துறை, "கெடு' விதித்திருந்தது. இதுவரை, 23 மாவட்டங்கள் மட்டும்,முழுமையாக பதிவு செய்துள்ளன. தர்மபுரி, சேலம், சிவகங்கை,தேனி, திருவள்ளூர், வேலூர், பெரம்பலூர், தஞ்சை, திருச்சி மாவட்ட பள்ளி விவரங்கள், முழுமையாகப் பதிவு செய்யப்படவில்லை. விடுப்பட்ட மாவட்ட பள்ளிகளின் விவரங்களை, ஆக., 23ம் தேதிக்குள், ஆன்-லைனில் பதிய வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை, "கெடு' விதித்துள்ளது.

No comments:

Post a Comment