திருக்குறள்

14/08/2013

அரசு துறைகளில் கம்ப்யூட்டர்களில் பழைய மென்பொருளுக்கு தடை: தலைமை செயலாளர் அறிவுறுத்தல்

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளில் இப்போது பயன்படுத்தப்பட்டு வரும் விண்டோஸ் எக்ஸ் - பிக்கு தடை விதிக்கப்படுகிறது. இதன் பயன்பாட்டால் கம்ப்யூட்டரில் உள்ள தகவல்களுக்கு ஆபத்து வரும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பான கடிதத்தை மத்திய தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சகம், தமிழக அரசின் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணனுக்கு அனுப்பி வைத்துள்ளது. இது சுற்றறிக்கையாக தமிழக அரசின் அனைத்து துறைகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரித்துள்ளது. கம்ப்யூட்டர் மற்றும் அவை தொடர்பான சாதனங்கள் அனைத்தையும் கொள்முதல் செய்து தரும் நிறுவனமாக அரசு துறையின் எல்காட் நிறுவனம் விளங்குகிறது. அரசு துறைகளில் உள்ள பெரும்பாலான கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் எக்ஸ் - பி என்பது இயக்கும் அமைப்பாக உள்ளது. இந்த விண்டோஸ் எக்ஸ் - பி தனது சேவையை இந்த நிதியாண்டு இறுதிக்குள் நிறுத்திக் கொள்ளவுள்ளது. 

பல்வேறு மாவட்டங்களில் விண்டோஸ் அமைப்பின் தரம் மேம்படுத்தப்பட்டது. விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7 ஆகியவற்றுக்கு பிறகு இப்போது விண்டோஸ் 8 பயன்பாட்டில் உள்ளது. விண்டோஸ் எக்ஸ் -பி தனது சேவையை நிறுத்தி கொள்ளும் நிலையில் அதை தொடர்ந்து பயன்படுத்தும் போது கம்ப்யூட்டர்களுக்கு போதிய பாதுகாப்பு இருக்காது. கம்ப்யூட்டர்களில் உள்ள முக்கிய தகவல்கள் அழியும் நிலை ஏற்படும்.

அரசு அலுவலகங்களுக்கு மென்பொருள்களை வழங்கும் நிறுவனங்களும் விண்டோஸ் எக்ஸ் - பியை வழங்க வேண்டாம் என தலைமை செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார். அரசு துறைகளில் உள்ள அனைத்து கம்ப்யூட்டர்களிலும் இந்த நிதியாண்டு இறுதிக்குள் விண்டோஸ் எக்ஸ் - பிக்கு பதிலாக வேறு அமைப்புகளை பயன்படுத்த கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தலைமை செயலாளரின் அறிவுறுத்தல் கடிதம் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் எஸ்.கே. பிரபாகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment