திருக்குறள்

31/10/2013

மாநில பார்வையாளர்கள் குழு நவம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் பள்ளிகளில் பார்வை

திருச்சி மாவட்ட பள்ளிகளை மாநில பார்வையாளர்கள் குழு நவம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் பார்வையிடுகின்றனர். மாநில பார்வையாளர்கள் குழு பள்ளிகளை பார்வையிடும் போது பள்ளிகளில் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள் முழு பயன்பாட்டில் இருக்க வேண்டும்.
கழிப்பறைகளில் தண்ணீர் குழாய் வசதி இல்லையெனில் வாளிகளில் தண்ணீர் நிரப்பி இருக்க வேண்டும். பள்ளிகளில் சுத்தம் சுகாதாரம் பேணப்பட வேண்டும். மாணவ, மாணவிகள் கழிப்பறைகளை பயன் படுத்த வேண்டும். கழிப்பறைகள் பழுது நிலையில் இருந்தாலோ அல்லது பயன்பாட்டில் இல்லாமல் இருந்தாலோ, குடிநீர் வசதி இல்லாமல் இருந்தாலோ அப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’-க்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன

2013ஆம் ஆண்டுக்கான ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’-க்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. என்று தமிழ் வளர்ச்சி துறை அறிவித்துள்ளது.

""கணினி வழித் தமிழ் மொழி பரவிட வகை செய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’ என்ற பெயரில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ரூ.1.00 இலட்சமும் 1 சவரன் தங்கப்பதக்கமும் வழங்கப்படும். இந்த விருது சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு அன்று வழங்கப்படும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது பெற விண்ணப்பம் அனுப்பவேண்டிய கடைசி நாள் : 31.12.2013 ஆகும்.

மேலும் விவரங்களுக்கு www.tamilvalarchithurai.org  என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு வருகிற 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தின் முதலாவது அமர்வில் வரிசை எண்.36ல் பட்டியலிடப்பட்ட இரட்டைப்பட்ட வழக்கு இன்று காலை 11.30மணிக்கு தலைமை நீதியரசர் மற்றும் நீதியரசர் சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இரு தரப்பு வழக்கறிஞசர்களும் தயாராக இருந்த நிலையில் நீதியரசர்கள் தற்பொழுது முதன்மை அமர்வு தயாராக இல்லையெனவும்,
வழக்கு வருகிற 13ம் அன்று முடித்து கொள்ளலாம் எனவும், இதையடுத்து இவ்வழக்கு நவம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பள்ளிக்கல்வி - 2013 தீபாவளி பண்டிகையின் போது தீ பாதுகாப்பு முன்னெச்சரிக்கை எடுக்க உத்தரவு

பள்ளிக் கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் வரும் 08.11.2013 அன்று சென்னையில் நடைபெறகிறது

தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி / உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் 28.10.13 முதல் 02.11.13 முடிய லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரமாக கொண்டாட இயக்குனர் உத்தரவு

ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகளுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு..!


ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் 17,18 தேதிகளில் தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டன. இவற்றின் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதற்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் மீது உயர்நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு அளித்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் சலுகைகளை அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி ரமேஷ், ராஜரத்தினம் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் ஆகஸ்ட் மாத இறுதியில் மனுத்தாக்கல் செய்தனர். தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதிகளின் படி இவ்வாறு சலுகை வழங்க இடமுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர். சில வடமாநிலங்களில் வழங்கப்பட்டு வரும் இந்த சலுகை தமிழகத்தில் அமல்படுத்தும் வரை, தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி இருந்தனர். இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தலைமை நீதிபதி அகர்வால், நீதிபதி சத்யநாராயணா உள்ளிட்ட அமர்வு தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க மறுத்துவிட்டது. அதே சமயம் ஆசிரியர் தகுதி தேர்வு வாயிலாக நடத்தப்படும் நியமனங்கள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டவையாக இருக்குமென்றும் உத்தரவிட்டனர்.

அமைச்சரவை 11வது முறை மாற்றம்-பள்ளிக் கல்வித்துறைக்கு ஆறாவது அமைச்சர் கே.சி.வீரமணி

தமிழக அமைச்சரவை இன்று 11வது முறையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 


தமிழகத்தின் புதிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக கே.சி.வீரமணி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அமைச்சரவை அடிக்கடி மாற்றியமைக்கப்பட்டு வருவது நாம் அறிந்ததே. இதில் பள்ளிக் கல்வித்துறைக்கு மட்டும் இதுவரை 5 அமைச்சர்கள் மாறிவிட்டனர்.


இந்த வகையில், சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி, பள்ளிக் கல்வித்துறைக்கு 6வது அமைச்சராக தற்போது வந்துள்ளார். இதுதவிர, விளையாட்டு, இளைஞர் நலன் மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை உள்ளிட்ட துறைகளையும் அவர் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறைக்கு புதிய அமைச்சராக விஜய பாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.


பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டுமே, இதுவரை,
1-சி.வி.சண்முகம், 
2-அக்ரி கிருஷ்ணமூர்த்தி, 
3-சிவபதி, 
4-வைகை செல்வன்,
5-பழனியப்பன்

6-கே.சி.வீரமணி 
ஆகிய 5 பேர் அமைச்சர்களாக இருந்துள்ளனர். தற்போது ஆறாவது நபராக கே.சி.வீரமணி வந்துள்ளார்.


அதேசமயம், உயர்கல்வித் துறையில் இதுவரை அமைச்சர்கள் மாற்றப்படவில்லை. 2011ம் ஆண்டு அரசு பதவியேற்கும்போது நியமிக்கப்பட்ட பழனியப்பன், இதுவரை அதே துறையை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.


புதிய அமைச்சருக்கு நவம்பர் 1-ந் தேதி தமிழக ஆளுநர் பதவியேற்பு செய்து வைக்கிறார். தமிழகத்தில் 2011ம் ஆண்டு மே மாதம் நடந்த பொதுத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று, மே 16ம் தேதி முதல்வர் ஜெயலலிதா உள்பட 34 அமைச்சர்கள் பதவியேற்றனர். தற்போதுடன் சேர்த்து 11 முறை தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SCHOOL EDUCATION - PAY CONTINUATION ORDER FOR 1591 BT ASST POSTs SANCTIONED AS PER GO.274 DATED.29.10.2012

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு விசாராணை மீண்டும் ஒத்திவைப்பு மீண்டும் இன்று 31/10/2012 விசாராணைக்கு வரவுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை உயர்நீதிமன்றத்தின் முதலாவது அமர்வில் நீதியரசர் இராஜேஸ் அகர்வால் மற்றும் சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் மதியம் 3.00 மணியளவில் வரவேண்டிய இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு மீண்டும்  இன்று   ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டிட்டோஜேக் கூட்டமைப்பின் இரண்டாவது கூட்டம், 09.11.2013 சனிக்கிழமையன்று காலை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைமை அலுவலகத்தில் (இராமுன்னி மாளிகை)நடைபெறவுள்ளது.

இதில் ஏற்கனவே அங்கம் வகிக்கும் 
1. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
2. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
3. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி,
4. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
5. தமிழக ஆசிரியர் கூட்டணி,
6. தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
7. தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
ஆகிய 7 அமைப்புகளும் இதில் பங்கேற்று ஒரு மிகப்பெரிய போராட்ட அறிவிப்பனை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற இயக்கங்களும் ஆதரவளித்தால் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிகிறது.

முக்கிய முடிவுகளை மேற்கண்ட 7 இயக்கஙகளும் இணைந்து மேற்கொள்ளும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

29/10/2013

தீபாவளி திருநாளை முன்னிட்டு நவம்பர் 1 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தீபாவளி திருநாளை முன்னிட்டு  சில மாவட்டங்களில் நவம்பர் 1 பள்ளிகளுக்கு விடுமுறை / உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதனை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 9 தேதி பள்ளி வேலை நாளாக செயல்படும்.

த.அ.உ.ச 2005 - பி.எஸ்.சி., பி.எட்., முடித்த பின் பி.ஏ., (ஆங்கிலம்) மூன்றாண்டுகள் படித்தவர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றபின் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியமர்த்தலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் பதில்

ஆசிரியர்களின் குறைதீர்க்கும் முகாம் இரண்டு, மூன்று மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் அனுசரிக்க உத்தரவு

தொடக்கக் கல்வி - நவம்பர் 2013 மாதம், முதல் சனிக்கிழமை அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் குறைதீர்க்கும் முகாம் நாளானது சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் முறையே இரண்டு, மூன்று மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் அனுசரிக்க உத்தரவு
.

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைமை அலுவலகத்தில் (இராமுன்னி மாளிகை)டிட்டோஜேக் கூட்டமைப்பின் இரண்டாவது கூட்டம், 09.11.2013 சனிக்கிழமையன்று காலை நடைபெறவுள்ளது.

டிட்டோ ஜாக் கூட்டம் 09/11/2013 அன்று காலை சென்னையில் நடைபெறவுள்ளது

டிட்டோஜேக் கூட்டமைப்பின் இரண்டாவது கூட்டம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைமை அலுவலகத்தில் (இராமுன்னி மாளிகை) 09.11.2013 சனிக்கிழமையன்று காலை நடைபெறவுள்ளது. 

கூட்ட அழைப்பு கடிதத்தினை தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் திரு. இரங்கராஜன் அவர்கள் தோழமை சங்கத்தினருக்கு அனுப்ப உள்ளார் என்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.

திருச்சி மாவட்டத்தில் SMS ATTENDANCE நாளை முதல் நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சி தலைவர் உத்தரவு

திருச்சி மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் தினசரி வருகையை நாளை முதல் (29.10.2013) SMS மூலம் உதவி தொடக்க கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலை 9.40 மணிக்குள் SMS மூலமும், மாலை எழுத்து பூர்வமாகவும் தெரிவிக்க வேண்டும். உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் காலை 10.00 மணிக்குள் ஆசிரியர்களின் வருகையை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்க வேண்டும்.

27/10/2013

அரியலூர் மாவட்டத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் தமிழக முதல்வரால் அறிமுகப்படுத்தப்பட்ட தினை மாவு லட்டு தயாரிப்பு சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி

 சத்துணவு அமைப்பாளர்களுக்கு தினை மாவில் லட்டு தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் தமிழக முதல்வரால் அறிமுகப்படுத்தப்பட்ட தினை மாவு லட்டு தயாரிப்பது குறித்த பயிற்சி முகாம்  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமில் பங்கேறற சத்துணவு அமைப்பாளர்களுக்கு தினை மாவில் லட்டு தயாரிப்பது குறித்து . பயிற்சியின் போது தினை மாவு லட்டு தயாரிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் விரிவாக விளக்கிக் கூறப்பட்டது. 

விபத்தின்றி கொண்டாட வேண்டும் அரியலூர் கலெக்டர் வலியுறுத்தல்

தீபாவளி பண்டிகையை விபத்தில்லாத பண்டிகையாக அனைவரும் கொண்டாட வேண்டும் என்று அரிய லூர் கலெக்டர் சரவணவேல்ராஜ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரியலூர் மாவட்டத் தில் தீபாவளி பண்டிகையை யாருக்கும் பாதிப்பின்றி, அனைவருக்கும் நன்மை பயக்கும் வகையில் கொண்டாட வேண்டும். வெடியினால் ஏற்படுத்தும் தீய விளைவுகளை உணர வேண்டும். குறிப்பாக, வெடிகளின் தாக்கத்தால் தற்காலிக மற்றும் நிலை யான செவிட்டுத்தன்மை ஏற்படும் அபாயம் உள் ளதை உணர வேண்டும். எனவே 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசையை ஏற்படுத்தும் வெடிகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். பட்டாசுகளை வெடிக் கும் போது கந்தக டை ஆக்சைடு, நைட்ரஜன், நைட்ரஜன் ஆக்ஸைடு, கன உலோக ஆக்ஸைடு, மிதக்கும் நுண் துகள்கள் ஆகியவை காற்றில் கலந்து சுற்றுச்சூழலை மாசுபடுத்தும். இதனால் கண் எரிச்சல், ஒவ்வாமை, சுவாசக் கோளாறு மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், உச்சநீதிமன்ற உத்தரவின்படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.அதேவேளையில் ஒளி மற்றும் வண்ணங்களை ஏற்படுத்தும் மத்தாப்புக்களை வெடிக்கலாம், இருப்பினும், போக்குவரத்து அதிகமுள்ள சாலைகள், நெரிசல் மிக்க இடங்களில் வெடிகள் வெடிக்கக் கூடாது. மேலும் மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள் போன்ற அமைதி யான சூழல் தேவைப்படும் பகுதிகளில் வெடிகளை வெடிக் கக் கூடாது. இதே போல, குடிசைகள் உள்ள பகுதிகளில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் உள்ள இடத்தில் ராக்கெட் வெடிகள் வெடிப்பதை முற் றிலும் தவிர்க்க வேண்டும். எனவே பட்டாசுகள் வெடிப்பதை குறைத்து அந்த பணத்தைக் கொண்டு ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கு உதவ லாம். ஒளித்திருநாளான தீபாவளி பண்டிகையை ஒலி மாசை ஏற்படுத்துகின்ற பட்டாசு களை தவிர்த்து வண்ணமிகு ஒளி ஏற்படுத்தும் பட்டாசுகளை குறைந்த அளவில் உபயோகித்து வழக்கமான உற்சாகத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி சுற்றுச்சூழலை பேணி காக்க வேண்டும். ஒளிப் பண்டிகையான தீபா வளியை ஒலி மாசற்ற பண்டிகையாக நாம் அணை வரும் கொண்டாட வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள், பிரதமரின் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் ஆண்டு மருத்துவம், பொறியியல் , வர்த்தக மேலாண்மை பயிலும் முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள், பிரதமரின் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2013-14 ஆம் கல்வி ஆண்டில் இளநிலை மருத்துவம், பொறியியல், செவிலியர், வர்த்தக மேலாண்மை போன்ற தொழிற்கல்வியில் முதலாம் ஆண்டு பயிலும், முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம்.

தகுதியான மாணவ, மாணவிகள் www.desw.gov.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என புது டெல்லியில் உள்ள மைய முப்படை வீரர் வாரியம் தெரிவித்துள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நவம்பர் 22 ஆம் தேதிக்குள், மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. முழுமையாக பூர்த்தி செய்யப்படாத மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாத விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Applications invited from Ex-servicemen and Ex-Indian Coast Guards and their widows/wards under PM´s Scholarship Scheme 2013-14 by 30th November 2013 (in English)
Information Brochure
Application Form for 2013-14 Para wise guidlines for filling up of Application Form
Payment cum Renewal Form

பஸ் வசதி கேட்டு அரியலூர் கலெக்டரிடம் பள்ளி குழந்தைகள் மனு

2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் களின் மனக்குமுறல்-இது எவ்வகையில் நியாயம்?எங்கள் குரல் அரசுக்கு எப்போது கேட்கும்?


தீபாவளிக்கு பட்டாசை பாதுகாப்பாக வெடிப்பது குறித்து நடிகர் சூர்யா மூலம் விழிப்புணர்வு விளம்பர படம் தீயணைப்புத்துறை தயாரிப்பு

பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக நடிகர் சூர்யா நடித்துள்ள விளம்பர படத்தை தமிழ்நாடு தீயணைப்புத்துறை தயாரித்துள்ளது. இந்த படங்களை டி.வி. சேனல்கள், தியேட்டர்கள் மற்றும் பொது இடங்களில்ஒளிப்பரப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் ஆர்.சி.குடவாலா கூறியதாவது:- 

விபத்து இல்லா தீபாவளிதீபாவளியை, தீ விபத்து இல்லாத பண்டிகையாக பொதுமக்கள் சந்தோஷமாக கொண்டாட வேண்டும். இதற்காக தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையை சேர்ந்த அனைவரும் நூறு சதவீத அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறோம்.
முதலில் பட்டாசு கடைகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு அமைக்கும் பணிகளை தீவிரமாக பின்பற்றியுள்ளோம். அதாவது,வெடிமருந்து சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள் அனைத்தையும் தீவிரமாக பின்பற்றும் வியாபாரிகளுக்கு மட்டுமே பட்டாசு கடை வைப்பதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்படுகிறது.

4,500 பட்டாசு கடைகள்
பட்டாசு கடை அமைப்பதற்கு தடையில்லா சான்றிதழ் கேட்டு தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் மனுக்கள் வந்துள்ளது. அதில்,4,500 மனுக்கள் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு, தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. விதிமுறை பின்பற்றாத 300 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. 200 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.
அதேபோல, சென்னையில் 1,200 பேர் மனு கொடுத்துள்ளார்கள். அதில், 700 பேருக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுவிட்டது. 120 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. மற்ற மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.

நடிகர் சூர்யா படம்
தீபாவளிக்கு பட்டாசு அதிகம் வெடிப்பவர்கள் மாணவர்கள்தான். அதனால், பட்டாசு எப்படி வெடிக்கவேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு பிரசாரத்தை பள்ளிகள், கல்லூரிகளில் நடத்தி வருகிறோம். மேலும், பிள்ளைகள் பட்டாசு வெடிக்கும்போது,பெற்றோர்கள் அல்லது பெரியவர்கள் கண்டிப்பாக அருகில் இருக்க வேண்டும்.

இது சம்பந்தமாக நடிகர் சூர்யா மூலம் ஒரு விளம்பர படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம், டி.வி.சேனல்கள், தியேட்டர்கள் மற்றும் பொது இடங்களில் ஒளிபரப்பு செய்யப்படும்.

ராக்கெட் பட்டாசு
இதுதவிர பட்டாசு வெடிப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் தீயணைப்பு வீரர்கள் கொடி அணிவகுப்பு பேரணியை நடத்தி வருகின்றனர். வாகன மூலம் பிரசாரமும் செய்யப்பட்டு வருகிறது.

தீபாவளி பண்டிகைக்கு ராக்கெட் போன்ற பட்டாசுகள் போடும்போதுதான் தீ விபத்து ஏற்படுகிறது. இந்த ராக்கெட் பட்டாசு எங்களால் தடை விதிக்க முடியாது. வெடிமருந்து சட்டத்தின்படி, மத்திய அரசுதான் தடை செய்ய முடியும்.
இந்த ராக்கெட் பட்டாசு மூலம் குறிப்பாக குடிசை பகுதிகளில் அதிக அளவில் தீ விபத்து ஏற்படுகிறது. சென்னை மாநகரில் மொத்தம் 70 குடிசை பகுதிகள் உள்ளது.
தயார் நிலையில்...

இதில், 54 இடங்களில் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலை நிறுத்தப்பட்டிருக்கும். இதுதவிர 50 மெட்ரோ தண்ணீர் லாரிகளும் மாநகரம் முழுவதும் நிறுத்தப்பட்டு இருக்கும். தீயணைப்பு பணியில் 700 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள்.
சென்னையில் குறுகிய பாதைகள் கொண்ட பகுதிகள் அதிகம் உள்ளது. குறிப்பாக குடிசை பகுதிகளுக்குள் தீயணைப்பு வாகனங்கள் எளிதில் செல்ல முடியாது. எனவே இதுபோன்ற பகுதிகளில் ஏற்படும் தீ விபத்துக்களை ஆரம்ப கட்டத்திலேயே அணைப்பதற்கும், மேலும் பரவாமல் தடுப்பதற்கும் 8 தீயணைப்பு மோட்டார் சைக்கிள்கள் பயன்படுத்தப்படுகிறது.

நுரை நீர் 2 வீரர்கள் பாதுகாப்பு உடையுடன், இந்த மோட்டார் சைக்கிளில் சுற்றி வருவார்கள். அந்த மோட்டார் சைக்கிளின் பின்புறம் 2 சிலிண்டர்கள் கொண்ட 2 தீயணைப்பான் பொருத்தப்பட்டுள்ளது. இதில் தலா 10 லிட்டர் தண்ணீருடன்,நுரைகள் கலந்து அடைக்கப்பட்டு உள்ளது.

தீ மீது நுரையுடன் கூடிய இந்த தண்ணீர் அடிப்பதால், தீ பரவாமல் தடுக்கப்படும். மேலும் மின்கசிவினால் ஏற்படும் தீ விபத்தின்போது இதை பயன்படுத்தலாம். அதாவது, 250 வார்ஸ் மின்சார வயரின் மீது இந்த எந்திரத்தை பயன்படுத்தி நுரைநீரை அடித்து தீயை அணைக்கலாம். வீரர்களுக்கு எந்த பாதிப்பும் வராது.
சந்தோஷமான தீபாவளிஎனவே பொதுமக்களும் தனக்கும்,பிறருக்கும் எந்த பிரச்சினையும் இல்லாமல், பாதுகாப்புடன் பட்டாசு வெடித்து சந்தோஷமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு இயக்குனர் குடவாலா கூறினார்.

இரட்டைப் பட்ட வழக்கு விசாரணை!... மீண்டும் 30.10.2013 அன்று ஒத்திவைப்பு

24.10.2013 சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் வரிசை எண் 35ல் விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம்வழக்கு சரியாக பிற்பகல் 2.25க்ககு அதன் எல்லையை தொட்டது. அதற்கு முன்னும், பின்னும் ஒரு பெரிய குழு விசாரணை நிலுவையில் இருந்ததால் வழக்கம் போல் வருகிற 30.10.2013 புதன்கிழமை இவ்வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்ததுதான் மிச்சம்.

1.2 கோடி மாணவர்களின் விவரம்: இணையதளத்தில் பதிவு-பள்ளி கல்வித்துறை, முதன்மை செயலர், சபிதா தகவல்

"தமிழகத்தில், அனைத்து விதமான பள்ளிகளில் படிக்கும், 1.3 கோடி மாணவ, மாணவியரில், 1.2 கோடி பேரின் முழுமையான விவரங்கள், இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மீதம் உள்ள, 10 லட்சம் மாணவர்களின் பதிவுகள், நவம்பர் இறுதிக்குள், பதிவு செய்யப்படும்" என, பள்ளி கல்வித்துறை, முதன்மை செயலர், சபிதா தெரிவித்தார்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என, அனைத்து வகையான பள்ளிகளில் பயிலும், மாணவ, மாணவியரைப் பற்றிய விவரங்களை, இணைய தளத்தில் பதிவு செய்து, அவர்களுக்கு, "ஸ்மார்ட் கார்டு" வழங்க, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஒரு மாணவரைப் பற்றிய, அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படுகின்றன. 

மாநிலத்தில், பிளஸ் 2 வரை, 1.3 கோடி மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்களில், இதுவரை, 1.2 கோடி மாணவ, மாணவியரின் விவரங்கள், இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர், சபிதா தெரிவித்தார்.

இது குறித்து, அவர், மேலும் கூறியதாவது: இணையதளத்தில் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட மாணவர்களுக்கு, படிப்படியாக, "ஸ்மார்ட் கார்டு" வழங்கப்பட்டு வருகிறது. மீதம் உள்ள, 10 லட்சம் மாணவர்கள் குறித்த விவரங்களை, நவம்பர் இறுதிக்குள் பதிவு செய்ய திட்டமிட்டுள்ளோம். ஒரு மாணவர், ஒரு பள்ளியை விட்டு, வேறொரு பள்ளியில் சேர, "ஸ்மார்ட் கார்டை" பயன்படுத்திக் கொள்ளலாம். 

அதேபோல், ஒரு மாணவர், தற்போது என்ன வகுப்பு படிக்கிறார்; படிக்கிறாரா, இல்லையா; படிப்பை பாதியில் நிறுத்தி விட்டாரா என்பது உட்பட, அனைத்து தகவல்களையும், ஒருங்கிணைந்த பள்ளி மேலாண்மை தகவல் அமைப்பு முறை மூலம் அறிய முடியும். அதேபோல், மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட பணிகளையும், இத்திட்டத்தின் கீழ் கண்காணிக்க முடியும். இவ்வாறு, செயலர் தெரிவித்தார்.

தொடக்கப்பள்ளி ஆசரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டத்தில் இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு விவாதிக்கப்பட்டு, கூட்டுப் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்த இயக்ககங்களுடன் பேச பொதுச் செயலாளருக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு எதிர்த்து விரைவில் கூட்டுப் போராட்டம்

சென்னை, திருவல்ல்கேணி, மாஸ்டர் மாளிகையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியுடன் இணைந்து போராட தயாராக உள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மற்றும் தமிழக ஆரம்ப்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆகிய இயக்ககங்கள் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து உரிய முடிவுகளை மேற்கொள்ள தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டத்தில் இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு விவாதிக்கப்பட்டு, கூட்டுப் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்த இயக்ககங்களுடன் பேச பொதுச் செயலாளருக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதையடுத்து விரைவில் தொடக்கக்கல்வித்துறையில் உள்ள முக்கிய இயக்ககங்கள் இணைந்து கூட்டுப் போராட்டம் நடத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கல்வி அதிகாரிகள் தீவிர ஆய்வு ஓராசிரியர் பள்ளிகளை மூடுவதற்கு திட்டம்

மத்திய அரசு கடந்த 2009ம் ஆண்டு கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தை கொண்டு வந்தது. இது பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதில் ஒரு அம்சமாக தரமான கல்வி வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அதற்காக ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதற்கிடையே பள்ளிக் கல்வியின் நிலை குறித்தும் மாணவர்களின் கற்றல் நிலை குறித்தும் பல்வேறு தனியார் அமைப்புகள் சர்வே நடத்தி வருகின்றன.

ஆய்வு முடிவுகளின்படி தொடக்கப் பள்ளிகள், நடுநிலை பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் தரம் குறைவாக உள்ளது. வாசித்தல் திறன் இல்லை. பள்ளிகளின் சூழலும் சரியில்லை என்று தெரியவந்துள்ளது. இது போன்ற ஆய்வுகளால் கலக்கம் அடைந்துள்ள பள்ளிக் கல்வித்துறை இப்போது குழு ஒன்றை அமைத்துள்ளது. இதில் டிஇஓ, மேற்பார்வையாளர்கள், அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு ஒன்றியம் வாரியாக பள்ளிகளை திடீர் ஆய்வு செய்கிறது. 

குறிப்பாக ஒரு மாவட்டத்தில் 100 பள்ளிகள் இருந்தால் அவற்றில் 40 பள்ளிகளோ அல்லது 70 பள்ளிகள் இருந்தால் அவற் றில் 20 பள்ளிகளையோ குறிவைத்து ஆய்வு செய்கின்றனர். மாணவ மாணவியரின் வாசிப்பு பயிற்சி, எழுத்து பயிற்சி நிலை எப்படி உள்ளது, செயல்பாடுகள் எப்படி உள்ளது, பள்ளியின் சூழல் எப்படி உள்ளது, நிர்வாகம் எப்படி உள்ளது, பள்ளிச் சூழல் எப்படி உள்ளது என்பதை இந்த குழு ஆய்வு செய்கிறது.

மேலும் மாணவர்களின் எழுத்தறிவு, எண்ணறிவு குறித்து சிறிய தேர்வு வைத்தும் ஆய்வு செய்கின்றனர். இது தவிர, செயல்வழிக் கற்றல் வழியில் உள்ள அட்டைகளை மாணவர்கள் எப்படி கையாளுகின்றனர் என்பதையும் பார்க்கின்றனர். இது போல் அனைத்து தொடக்க நடுநிலை, உயர்நிலை மேல்நிலை பள்ளிகளில் மேற்கண்ட குழு ஆய்வு செய் கிறது. ஏதாவது ஒரு பள்ளியில் குறிப்பிட்ட பாடத் தில் மாணவர்கள் மேற்கண்ட ஆய்வுகளில் தேறவில்லை என்றால் அந்த பாட ஆசிரியர்களுக்கு ‘மெமோ’ வழங்கப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் பதற்றம் அடைந்துள்ளனர். 

இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், ஆசிரியர்களுக்கு பாடம் நடத்தும் பணியுடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணி, ஆதார் அட்டை வழங்குவது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்குதல் உள்ளிட்ட பணிகள் வழங்கப்படுகிறது. விடுமுறை நாட்களில் பணியிடைப் பயிற்சி, கணினி பயிற்சி, புத்தாக்கப் பயிற்சி என்று பயிற்சிக்கு அழைக்கின்றனர். இதனால் ஆசிரியர்கள் தங்களை ‘அப்டேட்’ செய்துகொள்ள முடியாத நிலை உள்ளது. பாடம் நடத்துவதற்கு போதிய நேரம் இல்லை. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பல முறை தெரிவித்தும் பயன் இல்லை.

மேலும் கடந்த வாரம் ஆசிரியர்கள் தரப்பில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியை சந்தித்து தேர்தல் பணியில் இருந்து விடுவிக்க கோரிக்கையும் வைக்கப்பட்டது. ஆனால், தேர்தல் பணி செய்ய வேண்டும் என்று தெரிவித்துவிட்டார். இது தவிர, பல பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிறை ய காலியாக உள்ளன. இதற்கிடையே ஒரு குழுவை அமைத்து ஒன்றியம் வாரியாக ஆய்வு செய்ய குழு அமைத்துள்ளனர்.

குழுவின் ஆய்வுக்கு பிறகு, ஓராசிரியர் பள்ளிகள் அனைத்தும் மூடப்படும் என்று தெரிகிறது. இதனால் கிராமப் பகுதியை சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். பள்ளிகளை மூடுவதை விட்டு கூடுதல் ஆசிரியர்களை நியமித்தால் மாணவர்கள் அதிக அளவில் சேர்வார்கள் என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

எக்ஸ்ட்ரா தகவல்

தமிழகத்தில் 55,667 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 5 லட்சத்து 49 ஆயிரத்து 691 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

24/10/2013

அகில இந்திய வானொலி செய்திகள் Reading site

திருக்குறளுக்கான சிறப்பு இணையதளம்

சிறுமிகள் திருமணத்தை தடுக்க தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல்கள்

13 முதல் 18 வயது வரையான மாணவிகள், பள்ளியில் திடீரென மாற்று சான்றிதழ் கேட்டால், சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள், மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு தகவல் தரவேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

திருச்சி மாவட்டத்தில்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நடைபெறும் குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்து ஆலோசிக்க, மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ தலைமையில் நடந்த கூட்டத்தில் இவ்வாறு முடிவு செய்யப்பட்டது.

13 முதல் 18 வயது வரையிலான மாணவிகள், திடீரென தகுந்த காரணமின்றி மாற்று சான்றிதழ் கேட்டால், தலைமையாசிரியர்கள் உடனடியாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட சமூக நல அலுவலர், முதன்மை கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், 3 நாட்களுக்கு மேல் தகுந்த காரணங்களின்றி அந்த வயதுடைய மாணவிகள் விடுப்பு எடுத்தாலும், தலைமையாசிரியர்கள் தகுந்த இடங்களில் தகவல் தெரிவிக்க வேண்டும்.

மேலும், பெண்ணின் வயதில் சந்தேகம் இருக்கும் பட்சத்தில், திருமணத்தை எக்காரணம் கொண்டும் பதிவாளர் அலுவலகங்கள் பதிவுசெய்தல் கூடாது என்றும், திருமணத்திற்கான பத்திரிக்கையை அச்சடிக்கும் அச்சகங்கள், மணப் பெண்ணிற்கான தகுந்த வயது சான்றிதழ் காட்டப்படாமல், அச்சடிக்கக் கூடாது என்றும் மாவட்ட அளவில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இவைதவிர, மாணவிகள் எளிதாக தங்களின் புகார்களை தெரிவிக்கும் வகையில், பள்ளிகளில் புகார் பெட்டிகள் வைக்கப்பட வேண்டும் எனவும், பள்ளி மாணவிகள் மத்தியில் சிறார் திருமணம் தொடர்பாக புகார் தெரிவிக்க வேண்டிய இலவச உதவி தொலைபேசி எண் 1098 பிரபலப்படுத்தப்பட வேண்டும் என்றும் முடிவுசெய்யப்பட்டது

ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப தேவைப்படும் கல்வி தகுதிகள்

தீபாவளி 2013 தீ பாதுகாப்பு முன்னெச்சரிக்கை எடுத்தல் தீ பாதுகாப்பு குறித்து பிரச்சாரம் செய்தல் தொடர்பாக

தஞ்சாவூர் PRIST பல்கலைக்கழகத்தில் படித்தவருக்கு ஊக்க ஊதியம் தர விதிகளில் இடம் இல்லை - தகவல் உரிமைச் சட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை

இந்திய அரசின் RTE சட்டப்படி D.T.Ed + BA / B.SC படித்தால் 1 to 8 வரை ஆசிரியராக பணியாற்றலாம்

10 க்கும் குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் பயிலும் பள்ளிகளை கணக்கெடுத்து அவற்றை அருகில் உள்ள பள்ளியோடு இணைக்கும் திட்டம் பரிசீலினை

சென்னையில் நடைபெற்ற கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் 10க்கும் குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் பயிலும் பள்ளிகளை கணக்கெடுத்து அவற்றை மூடிவிட்டு அருகில் உள்ள பள்ளியோடு இணைக்கும் திட்டம் பரிசீலிக்கப்பட்டுள்ளது.

70க்கும் குறைவான மாணவர்கள் பயிலும் நடுநிலைப்பள்ளிகள் கணக்கெடுக்க உத்திரவிடப்பட்டுள்ளதாக தகவல்.

தொடக்கக் கல்வியும் தொடர் சோதனையும் - தினமணி கட்டுரை

தொடக்கக் கல்வி - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவசரம் மற்றும் அவசியம் கருதி ஆசிரியர்களுக்கான பண்டிகை முன்பணம் பெற்று தர உடனடி நடவடிக்கை எடுக்க இயக்குநர் உத்தரவு

தொடக்கக் கல்வி - தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் பொழுது நிர்வாக காரணமாக மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் பொது மாறுதலில் முன்னுரிமை வழங்கிய பின்னர் பொது மாறுதல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி கலந்தாய்வு நடத்த உத்தரவு

அகஇ - 6,7,8 வகுப்புகள் - படைப்பாற்றல் கல்வி முறை - பள்ளிகளை வகைப்படுத்துவதற்கான புதிய படிவம் மாவட்டங்களுக்கு அனுப்பி, பள்ளிகளின் தரத்தை கண்டறிந்து 3ம் தேதிக்குள் அனுப்ப உத்தரவு

விருது - வீரதீர செயலுக்கான நடுவன் அரசின் மிக உயரிய விருதான அசோகா சக்ரா விருதுகள் 2013 - விண்ணப்பங்கள் அனுப்ப உத்தரவு

மா.நி.ஆ.ப.நி - அகஇ பயிற்சி - படித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படைக் கணிதச் செயல்பாடுகளை மேம்படுத்துதல் சார்பான முதன்மை கருத்தாளர் பயிற்சி சென்னையில் நடைபெறவுள்ளது

இரட்டைப்பட்டம்வழக்கு வருகிற 30.10.2013 புதன்கிழமை இவ்வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் வரிசை எண் 35ல் விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம்வழக்கு சரியாக பிற்பகல் 2.25க்ககு அதன் எல்கையை தொட்டது. அதற்கு முன்னும், பின்னும் ஒரு பெரிய குழு விசாரணை நிலுவையில் இருந்ததால் வழக்கம் போல் வருகிற 30.10.2013 புதன்கிழமை இவ்வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
நாளை நிறைவடையும் என நம்பிக்கையுடன் இருந்த பதவி உயர்வு ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்ததுதான் மிச்சம்.

விடுமுறை நாட்களில் பயிற்சி வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் அல்லது சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க கல்வித்துறை ஆவண செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை

பயிற்சியில் இருவேறு நிலைப்பாடு: ஆசிரியர்கள் பெரும் குழப்பம் 

"ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியில், இருவேறு நிலைபாடு உள்ளதால், குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அவற்றை களைய விடுமுறை நாட்களில் பயிற்சி வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என, கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் 32 மாவட்டங்களில் 385 யூனியன்கள் உள்ளன. அவற்றில், 3,700க்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளி, 9,938க்கும் அதிகமான நடுநிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. அதில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் வகையில், அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம், பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வட்டார வளமையம் மூலம், இப்பயிற்சி வழங்கி வருகிறது.

தமிழகத்தில் 385 வட்டார வளமையங்கள் உள்ளன. அவற்றை நிர்வகிக்க மேற்பார்வையாளர் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் பணியாற்றுகின்றனர். மேலும், ஒவ்வொரு யூனியன்களிலும் குறைந்தது ஆறு குறுவள மையங்கள் செயல்படுகிறது. கடந்த 2002ம் ஆண்டு முதல் மாதந்தோறும் முதல் சனிக்கிழமை துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும், இரண்டாம் சனிக்கிழமை, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு வரை மாதத்துக்கு ஒரு நாள் என பத்து நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டது. அந்த பத்து நாட்களும் பள்ளி வேலை நாட்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டது. தற்போது, மூன்று பருவத்துக்கும் தலா ஒரு பயிற்சி வீதம் மூன்று நாட்கள் மட்டுமே வழங்க அனைவருக்கும் கல்வி இயக்ககம் உத்தரவிட்டது.

மேலும், வட்டார வளமையம் மூலம் ஆண்டுக்கு 20 நாட்கள் வழங்கப்பட்டு வந்த பயிற்சியானது, வெறும் நான்கு நாட்களாக குறைக்கப்பட்டது. இப்பயிற்சியில், 40 சதவீதம் ஆசிரியர்கள் மட்டும் பங்கேற்கவும் 60 சதவீதம் ஆசிரியர்கள் பள்ளி நடத்தவும் உத்தரவிடப்பட்டது.

தற்போது, முதல் பருவத்துக்கு ஒரு குறுவளமைய பயிற்சியும், ஒரு வட்டார வளமையப் பயிற்சியும் வழங்கப்பட்டது. அந்த பயிற்சி நடந்த இரண்டு நாட்களும் 40 சதவீத ஆசிரியர்கள் பயிற்சியிலும் 60 சதவீத ஆசிரியர்கள் பள்ளிக்கும் சென்றனர். இந்நிலையில், குறுவளமையம் நடக்கும் மூன்று நாட்களையும், பள்ளி வேலை நாட்களாக அரசு அறிவித்துள்ளது.

ஆனால், வட்டார வள மையத்தில் வழங்கப்படும் பயிற்சி நாள், விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது. மேலும், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு நடைபெறும் நாள் பள்ளி வேலை நாளாகவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடைபெறும் நாள், பள்ளி விடுமுறை எனவும், கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது ஆசிரியரை குழப்பம் அடையச் செய்துள்ளது.

தற்போது, சனிக்கிழமை சமுதாய விழிப்புணர்வு மற்றும் பல்லூடக பயிற்சி வழங்கப்பட்டது. அதில், 40 சதவீத ஆசிரியர்கள் பயிற்சியிலும், 60 சதவீத ஆசிரியர்கள் விடுமுறையிலும் உள்ள சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு விடுமுறை நாளான சனிக்கிழமை பயிற்சி வழங்குவதை எஸ்.எஸ்.ஏ., மறுபரிசீலனை செய்து பள்ளி வேலைநாட்களில் இதுபோன்ற பயிற்சியை வழங்க வேண்டும்.

மேலும், விடுமுறை தினமாக சனிக்கிழமை அன்று பயிற்சியில் கலந்து கொள்ளும் 40 சதவீத ஆசிரியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க கல்வித்துறை ஆவண செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

20/10/2013

தமிழ்,ஆங்கிலம், கணிதம், ABL அட்டைகளும் பாட நூலில் பக்க எண்களும்

"அரியலூர் மாவட்டத்தில் 2.16 லட்சம் மரக்கன்றுகள் நடத் திட்டம்'

அரியலூர் மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்றும் வகையில், 2.16 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாக மாவட்ட வன அலுவலர் நயினார்முகமது தெரிவித்தார்.அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் அறிவுறுத்தலின் பேரில், மாவட்டத்தை பசுமையாக மாற்றும் வகையில், மரக்கன்றுகள் நடும் பணியை அரியலூர் புறவழிச் சாலையில் செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்த பிறகு அவர் கூறியது:அரியலூர் மாவட்டம் தற்போது சுற்றுச்சூழல் சீர்கேட்டால் பாதிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, இந்த மாவட்டத்தில் 2.16 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.இதன்படி, அரியலூர் நகர்ப்புறத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் கூண்டு வைத்து நடப்படுகிறது. அரியலூர் புறவழிச் சாலை ஓரத்தில் 4 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. மேலும், அரியலூர் அரசுக் கலைக் கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் சுற்றியுள்ள கருவேல மரங்களை அகற்றிவிட்டு புங்கமரம், வேம்பு, நாவல், மயில் கொன்னை போன்ற மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. இந்தப் பணியில் வனச் சரக அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.காடுகள் 33% இருக்க வேண்டும். ஆனால், அரியலூர் மாவட்டத்தில் 4.5% காடுகளே உள்ளன. இதை அதிகரிக்கும் பொருட்டே இந்தத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இவ்வாறு நடப்படும் மரங்களுக்கு வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சப்படும்.மேலும், தனியார் நிறுவனங்கள், அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், தொண்டு நிறுவனங்கள், பொதுமக்களின் தேவைக்கேற்ப மரக்கன்றுகள் வழங்கப்படும்.மரக்கன்றுகள் தேவைப்படுவோருக்கு வன அலுவலர்கள் அவர்களின் இடத்துக்கே சென்று கன்றுகளை கொடுப்பார்கள். பொதுமக்கள் தங்களுடைய கால்நடைகள் மரக்கன்றுகளை தின்றுவிடாமல், பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார் அவர். நிகழ்ச்சியில் மாவட்ட வனச் சரக அலுவலர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

3.12.2011 மற்றும் 4.12.2011 ஆகிய தேதிகளில் 1743 பணியிடங்களுக்காக இடைநிலை ஆசிரியர் சான்றிதழ் சரிப்பார்ப்பு நடைபெற்றது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கோரப்பட்ட கேள்விகளுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அளித்த பதில்கள்

தொடக்கநிலை கணிதப் பாடம் & ஆங்கிலம் எளிமையாக கற்பிக்க - விளக்கப் படத்துடன் கற்பிக்க உதவும் இணையதளம்

COMPENSATORY HOLIDAYS TO GOVERNMENT SERVANTS

அரசு உயர்நிலை ,மேல் நிலை பள்ளிகளில் பணி புரியும் இடைநிலை ஆசிரியர்கள் விடுமுறை நாட்களில் நடைபெறும் குருவளமைய பயிற்சியில் கலந்து கொள்ளும் நாட்களுக்கு ஈடு செய் விடுப்பு வழங்குவது குறித்த அரசாணை ( மற்றும் ) வேலை நாட்களாக கருதும் அரசாணை .

CLICK HERE-பள்ளிகல்வித் (சி 2) துறை அரசாணை (நிலை)எண் 128 ,நாள் -07.05.2010-விடுமுறை நாட்களில் நடைபெறும் குருவளமைய பயிற்சியிக்காக ஈடு செய் விடுப்பு ( மற்றும் ) வேலை நாட்களாக கருதும் அரசாணை .


ஆசிரியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க கல்வித்துறை ஆவண செய்ய வேண்டும் என கோரிக்கை

"ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியில், இருவேறு நிலைபாடு உள்ளதால், குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அவற்றை களைய,விடுமுறை நாட்களில், பயிற்சி வழங்குவதை, மறுபரிசீலனைசெய்ய வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில், 32மாவட்டங்களில், 385 யூனியன்கள் உள்ளன. அவற்றில், 3,700க்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளி, 9,938க்கும் அதிகமான நடுநிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. அதில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.இந்த பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் வகையில், அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம், பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வட்டார வளமையம் மூலம், இப்பயிற்சி வழங்கி வருகிறது.தமிழகத்தில், 385 வட்டார வளமையங்கள் உள்ளன. அவற்றை நிர்வகிக்க மேற்பார்வையாளர் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் பணியாற்றுகின்றனர். மேலும், ஒவ்வொரு யூனியன்களிலும், குறைந்தது ஆறு குறுவள மையங்கள் செயல்படுகிறது. கடந்த, 2002ம் ஆண்டு முதல், மாதந்தோறும்,முதல் சனிக்கிழமை, துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும், இரண்டாம் சனிக்கிழமை, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு வரை, மாதத்துக்கு, ஒரு நாள் என, பத்து நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டது. அந்த பத்து நாட்களும், பள்ளி வேலை நாட்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டது. தற்போது, மூன்று பருவத்துக்கும், தலா, ஒரு பயிற்சி வீதம் மூன்று நாட்கள் மட்டுமே வழங்க அனைவருக்கும் கல்வி இயக்ககம் உத்தரவிட்டது.மேலும், வட்டார வளமையம் மூலம் ஆண்டுக்கு, 20நாட்கள் வழங்கப்பட்டு வந்த பயிற்சியானது, வெறும் நான்கு நாட்களாக குறைக்கப்பட்டது. இப்பயிற்சியில், 40 சதவீதம் ஆசிரியர்கள் மட்டும் பங்கேற்கவும், 60 சதவீதம் ஆசிரியர்கள் பள்ளி நடத்தவும் உத்தரவிடப்பட்டது.தற்போது, முதல் பருவத்துக்கு, ஒரு குறுவளமைய பயிற்சியும், ஒரு வட்டார வளமையப் பயிற்சியும் வழங்கப்பட்டது. அந்த பயிற்சி நடந்த இரண்டு நாட்களும், 40 சதவீத ஆசிரியர்கள் பயிற்சியிலும், 60சதவீத ஆசிரியர்கள் பள்ளிக்கும் சென்றனர். இந்நிலையில்,குறுவளமையம் நடக்கும் மூன்று நாட்களையும், பள்ளி வேலை நாட்களாக, அரசு அறிவித்துள்ளது.

ஆனால், வட்டார வளமையத்தில் வழங்கப்படும் பயிற்சி நாள்,விடுமுறை நாளாக அறவிக்கப்பட்டது. மேலும், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு நடைபெறும் நாள் பள்ளி வேலை நாளாகவும்,பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடைபெறும் நாள், பள்ளி விடுமுறை எனவும், கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது, ஆசிரியரை குழப்பம் அடையச் செய்துள்ளது.தற்போது, சனிக்கிழமை சமுதாய விழிப்புணர்வு மற்றும் பல்லூடக பயிற்சி வழங்கப்பட்டது. அதில், 40 சதவீத ஆசிரியர்கள் பயிற்சிலும், 60 சதவீத ஆசிரியர்கள் விடுமுறையிலும் உள்ள சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு விடுமுறை நாளான சனிக்கிழமை பயிற்சி வழங்குவதை,எஸ்.எஸ்.ஏ., மறுபரிசீலனை செய்து, பள்ளி வேலைநாட்களில் இதுபோன்ற பயிற்சியை வழங்க வேண்டும்.மேலும், விடுமுறை தினமாக சனிக்கிழமை அன்று பயிற்சியில் கலந்து கொள்ளும், 40சதவீத ஆசிரியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க கல்வித்துறை ஆவண செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

FULBRIGHT விருது: விண்ணப்பிக்க நவ.,20 கடைசி.



தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளி ஆசிரியர்களிடமிர ுந்து புல்பிரைட் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அமெரிக்க ஜக்கிய நாடுகள் மற்றும் இந்திய கல்வி பவுண்டேஷன் என்ற அமைப்பு இந்த விருதினை வழங்குகின்றது. தகுதியுள்ளவர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். ஆசிரியர்கள் மட்டுமின்றி, தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளின் நூலக சிறப்பாளர்கள், வழிகாட்டு கவுன்சிலர்கள், பாடத்திட்ட சிறப்பாளர்கள், சிறப்பு கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியப் பயிற்சியாளர்கள் ஆகியோரும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். நவம்பர் 20 விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூடுதல் தகவல்களுக்கு http://www.usief.org.in/Fellowships/ Distinguished-Fulbright-Awards-Teaching-Program.aspx என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

ஆசிரியர்கள் நேரம் தவறாமல் பணிக்கு வருகிறார்களா என்பதைக் கண்டறிய மாவட்டத்தில் 300-க்கும் அதிகமான அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் தினமும் காலை 9.10 மணிக்கு தொடங்கி மாலை 4.10 மணிக்கு முடிவடைகிறது. ஆனால் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் சிலர், காலையில் வகுப்புகள் தொடங்கிய பின்னர் பணிக்கு வந்துவிட்டு, மாலையில் வகுப்புகள் முடிவதற்கு முன்னதாகவே சென்று விடுவதாகவும் அதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் அரசுக்குப் புகார்கள் சென்றன.

இந்த புகார்களைத் தொடர்ந்து அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் வருகையைக் கண்காணிக்க மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
அதன் பேரில் அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தலைமையில் உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், வட்டார வளமைய ஆசிரியர்கள் அடங்கிய ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்தக் குழுவினர் எந்தெந்த நாளில் எந்தெந்தப் பள்ளிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்பது பற்றி குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு முந்தைய நாளில் செல்போன் எஸ்எம்எஸ் மூலம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிடுகிறார். 

அதன்படி அந்தக் குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளுக்கு காலையில் 9 மணிக்கு முன்னதாகவே செல்கிறார்கள், அப்போது விடுமுறைக் கடிதம் கொடுக்காத, காலை 9.10 மணிக்குள் பணிக்கு வராத ஆசிரியர்களுக்கும், பள்ளிக்கு வந்துவிட்டு மாலை 4.10 மணிக்கு முன்னதாகவே பள்ளியை விட்டுச் சென்ற ஆசிரியர்களுக்கும் வருகைப் பதிவேட்டில் பணிக்கு வரவில்லை என குறிப்பிடுகின்றனர். இந்த ஆய்வின் போது ஒரே ஆசிரியர் தொடர்ந்து 3 முறை பணிக்கு வராமல் இருந்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறுமிகள் திருமணத்தை தடுக்க தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல்கள்

13 முதல் 18 வயது வரையான மாணவிகள், பள்ளியில் திடீரென மாற்று சான்றிதழ் கேட்டால், சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள், மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு தகவல் தரவேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

திருச்சி மாவட்டத்தில்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நடைபெறும் குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்து ஆலோசிக்க, மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ தலைமையில் நடந்த கூட்டத்தில் இவ்வாறு முடிவு செய்யப்பட்டது.

13 முதல் 18 வயது வரையிலான மாணவிகள், திடீரென தகுந்த காரணமின்றி மாற்று சான்றிதழ் கேட்டால், தலைமையாசிரியர்கள் உடனடியாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட சமூக நல அலுவலர், முதன்மை கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், 3 நாட்களுக்கு மேல் தகுந்த காரணங்களின்றி அந்த வயதுடைய மாணவிகள் விடுப்பு எடுத்தாலும், தலைமையாசிரியர்கள் தகுந்த இடங்களில் தகவல் தெரிவிக்க வேண்டும்.

மேலும், பெண்ணின் வயதில் சந்தேகம் இருக்கும் பட்சத்தில், திருமணத்தை எக்காரணம் கொண்டும் பதிவாளர் அலுவலகங்கள் பதிவுசெய்தல் கூடாது என்றும், திருமணத்திற்கான பத்திரிக்கையை அச்சடிக்கும் அச்சகங்கள், மணப் பெண்ணிற்கான தகுந்த வயது சான்றிதழ் காட்டப்படாமல், அச்சடிக்கக் கூடாது என்றும் மாவட்ட அளவில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இவைதவிர, மாணவிகள் எளிதாக தங்களின் புகார்களை தெரிவிக்கும் வகையில், பள்ளிகளில் புகார் பெட்டிகள் வைக்கப்பட வேண்டும் எனவும், பள்ளி மாணவிகள் மத்தியில் சிறார் திருமணம் தொடர்பாக புகார் தெரிவிக்க வேண்டிய இலவச உதவி தொலைபேசி எண் 1098 பிரபலப்படுத்தப்பட வேண்டும் என்றும் முடிவுசெய்யப்பட்டது.

ஆசிரியருக்கு வழங்கிய தேர்வு நிலை அந்தஸ்தை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு வழங்கப்பட்ட தேர்வு நிலை ஆசிரியர் அந்தஸ்தை ரத்து செய்த உதவி தொடக்க கல்வி அதிகாரியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. 

சுரேஷ்பாபு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: பொள்ளாச்சி அருகே உள்ள நல்லம்பள்ளியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 1989-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தேன்.

அதன் பிறகு, 1997-ஆம் ஆண்டு கோவை, சிங்காநல்லூரில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியில் அரசு வேலை கிடைத்ததும் அங்கு பணியில் சேர்ந்தேன். பிறகு, 10 ஆண்டுகள் ஆசிரியர்களாக பணியாற்றியவர்களுக்கு வழங்கக்கூடிய தேர்வு நிலை ஆசிரியர் அந்தஸ்து 1999-ஆம் ஆண்டு எனக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், அரசு தணிக்கை துறை ஆட்சேபனை தெரிவித்ததாகக் கூறி, எனக்கு வழங்கப்பட்ட தேர்வு நிலை அந்தஸ்தை, பொள்ளாச்சி உதவி தொடக்க கல்வி அதிகாரி 2006-ஆம் ஆண்டு ரத்து செய்து உத்தரவிட்டார். அதனால், எனக்கு வழங்கப்பட்ட அந்தஸ்தை ரத்து செய்த தொடக்க கல்வி அதிகாரியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. 

இந்த மனு நீதிபதி டி.ஹரிபரந்தாமன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் அரசுப் பணியில் சேர்ந்த பிறகு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்ததை ரத்து செய்யவில்லை. அதனால் அரசை ஏமாற்றி உள்ளார் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அரசு உதவி பெறும் பள்ளியில் பணிபுரியும் போது, அரசுப் பணியில் சேர்வதற்கு அனைத்து உரிமைகளும் உள்ளன என்று ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், 1979-ஆம் ஆண்டு அரசு வெளியிட்ட அரசாணையில், அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர்கள் பணியாற்றிய காலத்தை, தேர்வு நிலை ஆசிரியராக அந்தஸ்து வழங்கும் போது கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் கூறப்பட்டுள்ளது.

இது தவிர, தேர்வு நிலை ஆசிரியர் அந்தஸ்து வழங்கி 7 ஆண்டுகள் கழித்து அதை ரத்து செய்வது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. அதனால், தொடக்கக் கல்வி அதிகாரி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், மனுதாரரிடம் இருந்து பணம் திரும்பப் பெற்றிருந்தால் அதை அவரிடம் வழங்கவும் உத்தரவிடப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வி - ஆசிரியர்கள் முன் அனுமதி பெற வேண்டிய நிலையில், முன் அனுமதி பெறாமல் பட்டப்படிப்பு மேற்கொண்டால் அதற்கு விதிகளின்ப்படி தக்க ஒழுங்கு நடவடிக்கை தான் எடுக்க வேண்டுமே தவிர ஊக்க ஊதிய உயர்வினை இரத்து செய்ய கூடாது என இயக்குநர் உத்தரவு

16/10/2013

குடும்ப அட்டைக்கு எங்கே விண்ணப்பிப்பது? தொலைந்து போனால் எப்படிப் பெறுவது போன்ற கேள்விகளுக்கான விளக்கங்கள் இங்கே...

குடும்ப அட்டையின் அவசியம்:

பொதுவிநியோகத் திட்டத்தில் பொருட்கள் பெற மட்டுமல்லாது சமையல் எரிவாயு சிலிண்டருக்கு விண்ணப்பிக்கும் போதுசமர்ப்பிக்கக்கூடிய ஆவணமாகவும், இருப்பிடச் சான்றுக்கான மிக முக்கிய ஆவணமாகவும் பயன்படுகிறது. 


குடும்ப அட்டை பெறுவதற்கான தகுதிகள்:


1.தனிக்குடும்பமாக வசிக்கும் தமிழக மக்கள் எவருமே குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

2.விண்ணப்பதாரர் தனது குடும்பத்துடன் தனி சமையலறையைப் பயன்படுத்துபவராக, தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

3.விண்ணப்பதாரர் மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயர் தமிழகத்தில் வேறு எந்தக் குடும்ப அட்டையிலும் இருக்கக்கூடாது.


விண்ணப்பம் எங்கே கிடைக்கும்?

அனைத்து தாலுகா அலுவலங்களிலும் மற்றும் ஜெராக்ஸ் எடுக்கும் கடைகளிலும் விண்ணப்பப் படிவங்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில் கிடைக்கின்றன. தமிழக அரசின் இணையதளத்தில்http://www.consumer.tn.gov.in/pdf/ration.pdfஆங்கிலத்திலும்http://www.consumer.tn.gov.in/pdf/rationt.pdfதமிழிலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.


எங்கே / யாரிடம் விண்ணப்பிப்பது?

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அவர்கள் வசிக்கும் பகுதிக்குட்பட்ட உணவுப் பொருள் வழங்கும் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உதவி ஆணையாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வட்ட வழங்கல் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தைப் பதிவுத் தபாலிலும் அனுப்பலாம். நேரில் கொடுப்பவர்கள் கண்டிப்பாகக் கொடுத்ததற்கான அத்தாட்சி சீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும்.


கட்டணம்:

புதிய குடும்ப அட்டை பெறும்போது ரூ10 கட்டணமாகப் பெறப்படும்.


தேவையான ஆவணங்கள்:

விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கீழ்கண்ட ஆவணங்களின் நகல் ஒன்றை இணைக்க வேண்டும்.

1. தமிழ்நாட்டில் வசிப்பதற்கான இருப்பிடச் சான்றாக தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை, மூன்று மாதங்களுக்குள்ளான வீட்டு வரி / மின்சாரக் கட்டணம் / தொலைபேசிக் கட்டணம் செலுத்திய ரசீதுகளில் ஏதாவது ஒன்று அல்லது வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் / பாஸ்போர்ட் நகல்/ வாடகை ஒப்பந்தம் இவற்றில் ஏதாவது ஒன்று மட்டும் போதுமானது. ஒரு வேளை இந்தச் சான்றுகள் ஏதும் இல்லையென்றால், நோட்டரி பப்ளிக்கிடம் அஃபிடவிட் பெற்றுக் கொடுக்கலாம்.

2. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை வழங்கப்பட்டிருப்பின் குடும்ப அட்டை வழங்கும் அலுவலரிடமிருந்து பெறப்பட்ட ஒப்பளிப்புச் சான்று.

3. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை வழங்கும் அதிகாரியிடம் (TSO) பெறப்பட்ட பெற்றோர் அல்லது பாதுகாவலர் குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கல் சான்று அல்லது பெயர் சேர்க்கப்படவில்லை என்பதற்கான சான்று.

4.முந்தைய முகவரியில் குடும்ப அட்டை இல்லை எனில் குடும்ப அட்டை இல்லை என்ற சான்று.

5.எரிவாயு இணைப்பு ஏதேனும் இருப்பின், இணைப்பு யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் எரிவாயு இணைப்பு முகவர் மற்றும் எண்ணெய் நிறுவனத்தின் பெயர் போன்றவை அடங்கிய விவரங்கள் கொடுக்க வேண்டும்.

6.விண்ணப்பத்தினை அளித்த உடன் விண்ணப்பத்தை வரிசை எண், தேதி, அலுவலக முத்திரையுடன் மற்றும் இறுதி முடிவு தெரிந்து கொள்ளும் தேதி ஆகியவற்றுடன் கூடிய ஒப்புகைச் சீட்டை மனுதாரர் பெற்றுக்கொள்ள வேண்டும். பதிவுத் தபாலில் அனுப்புவர்கள் சுயமுகவரியிட்ட தபால் தலையுடன் கூடிய தபால் உறை அல்லது அஞ்சல் அட்டை இணைக்கலாம்.

குடும்ப அட்டை தொலைந்து போனால்:

தொலைந்து போன குடும்ப அட்டையின் நகலுடன் ஏதாவது ஓர் அடையாள அட்டையின் நகலையும் சேர்த்து கிராமப்புறங்களில் வட்டார உணவுப்பொருள் வழங்கு அலுவலரையும்,நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்குதுறை மண்டல உதவி ஆணையரையும் அணுக வேண்டும். சம்பந்தப்பட்ட அலுவலரிடம் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புதுக் குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும். விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் புதிய குடும்ப அட்டை கிடைத்துவிடும். இதற்கு ரூ.10 கட்டணம் செலுத்த வேண்டும்.

குடும்ப அட்டை குறித்து எங்கே புகாரளிப்பது?

வட்ட வழங்கல் அலுவலகத்திலிருந்து மனு பெறப்பட்ட நாளிலிருந்து அடுத்த 30 நாட்களுக்குள் தணிக்கை அதிகாரிகளால் விண்ணப்பத்தின் உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள அதாவது அதிகாரிகள் மனுதாரரின் வீட்டுக்கு நேரில் சென்று தனியாக சமையல் செய்யப்படுகின்றதா விண்ணப்பதாரர் சொன்னது உண்மையா என ஆய்வு செய்வார்கள்.

விண்ணப்பித்த 30 நாட்களில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து60 நாட்களுக்குள் குடும்ப அட்டை கொடுக்கப்படவேண்டும் அல்லது குடும்ப அட்டை கொடுக்கப்படாததற்கு காரணம் சொல்லவேண்டும். அதையும் மனுதாரருக்கு 60 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.

வேண்டுமென்றே கொடுக்க மறுத்தாலோ, காலதாமதம் செய்தாலோ சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆணையாளருக்கும் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மாவட்ட வழங்கல் அலுவலர் அல்லது மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்ய வேண்டும் அல்லது தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி எளிதில் வாங்க முடியும் அல்லது மாநில நுகர்வோர் மையத்தைத் தொடர்பு கொள்ளவும்.

மாநில நுகர்வோர் மையத்தை 044 2859 2858 என்ற எண்ணில் தொலைபேசியிலோ, consumertn.gov.in, schtamilnadugmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ, மாநில நுகர்வோர் உதவி மையம்,உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, 4ஆவது தளம், எழிலகம், சேப்பாக்கம், சென்னை-5 என்ற முகவரியில் தபால் மூலமும் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.

மேலதிக விவரங்களுக்கு:

தங்கள் பகுதிக்குட்பட்ட தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அதிகாரியை அணுகி கூடுதல் விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.

உங்கள் பகுதியின் பொது விநியோகக் கடைக்கான பொருட்களின் ஒதுக்க்கீடு குறித்து அறியhttp://cscp.tn.nic.in/allotmentver2/repallotmentshopwise.jspஇத்தளத்திற்குச் செல்லவும்.

http://egov-civilmis.pon.nic.in/SearchCardPondyAppNo.aspxபுதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் இத்தளத்திற்குச் சென்று விண்ணப்பத்தின் நிலையறியலாம்.

மேலும் விவரங்களை அறிந்துகொள்ளhttp://www.consumer.tn.gov.in/fairprice.htm

இத்தளத்திற்குச் செல்லவும்.

237 G.O 6% Calculation xl sheet & PAY FIATION 6% FOR SELECTION GRADE AND SPECIAL GRADE

அனைத்து பாடங்களும் கற்பிக்க உதவும் இணையதளம் :


இந்த இணைய தளத்தில் ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக 

அறிவியல் பாடக்கருத்துக்கள் அனிமேஷன் வடிவிலும் விளையாட்டு 

வடிவிலும் தரப் பட்டுள்ளன.

சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு தேவையில்லை

 தூத்துக்குடி மாவட் டம், கோவில்பட்டியை சேர்ந்த ஜெயபாரதி, சகுந்தலா, தமயந்தி, செந்தாமரை உள்ளிட்ட 12 பேர் மதுரை ஐகோர்ட் கிளை யில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில்,‘‘நாங்கள் ஆசிரியர் பயிற்சி (டி.டி.எட்) முடித்துள்ளோம். கடந்த2009ம் ஆண்டு இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலக மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப அரசு உத்தரவிட்டது. அதன்படி எங்களுக்கு கடந்த 3.6.2009அன்று சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தது. அதன் பின், எங்களுக்கு நியமன ஆணை எதுவும் வரவில்லை.இதுகுறித்து, விளக்கம் கேட்டபோது, 23.8. 2010க்கு பின்னர் பணியில் சேரும் ஆசிரியர்கள் கண்டிப்பாக தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், அதன்படி தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் எங்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த விதிமுறை அமலுக்கு வருவதற்கு முன்னதாகவே எங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து விட்டது. எனவே,எங்களை தேர்வு எழுதுமாறு நிர்பந்திக்காமல் பணி வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாகமுத்து, ‘‘ஆசிரியர் பணியில் சேர தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதி கொண்டு வரப்படுவதற்கு முன்னரே மனுதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துவிட்டது. எனவே மனுதாரர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று நிர்பந்திக்கக்கூடாது என உத்தரவிட்டார்.இந்த உத்தரவின் நகலை கல்வித்துறை செயலாளர், இயக்குனர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் உள்ளிட்ட கல்வித்துறை மற்றும் வேலை வாய்ப்புத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.

தேர்தல் பணியை புறக்கணிக்காதீர்: ஆசிரியர்களுக்கு "அட்வைஸ்'பள்ளிகல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

அடுத்தாண்டு மே மாதம் நடக்க உள்ள லோக்சபா தேர்தலுக்கான பணிகளை, தேர்தல் கமிஷன் துவங்கி உள்ளது. மாவட்ட வாரியாக தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் குறித்தவிபரம், கலெக்டர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்பம், அனைத்து துறைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ஊழியரின் பெயர், வயது, இனம்,மொபைல் எண், துறை, என்ன பதவியில், எந்த ஊரில் உள்ளார்,சம்பள விகிதம், வீட்டு முகவரி, தாலுகா, அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட விபரங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றை நிரப்பி, புகைப்படம் ஒட்டி, துறைத்தலைவரிடம் வழங்குமாறு கூறப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு அட்வைஸ்: "எந்த தேர்தல் என்றாலும், அதில் ஆசிரியர்களின் பணி மிக முக்கியமானதாகும். எனவே, தேவையற்ற காரணங்களைக்கூறி, லோக்சபா தேர்தல் பணியை புறக்கணிக்கக் கூடாது,' என, ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை அறிவுரை வழங்கி உள்ளது. "ஜனநாயக கடமையான தேர்தல் பணியை செய்ய, அதற்கான விண்ணப்பத்தை நிரப்பி , பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம், மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி அலுவலகத்தில், விரைந்து அளித்திடவும்' குறிப்பிடப்பட்டுள்ளது.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் இரட்டைப் பட்டம் பெற்றவர்கள் கலந்து கொள்ள முடியாது!

Double degree(Dual degree) is not eligible for appointment என்று சான்றிதழ் சரிபார்ப்பிற்கான instruction பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரட்டைப்பட்டம் என்பது மூன்று வருடம் ஒரு பட்டம் படித்துவிட்டு அதன் அடிப்படையில் ஒரே வருடத்தில் மற்றொரு பட்டம் பயின்றால் அது தான் இரட்டைப்பட்டமாகும். வெவ்வேறு பட்டங்களை மூன்று மூன்று வருடங்கள் தனித்தனியே முடித்திருந்தால் அது இரட்டைப் பட்டம் அல்ல. அத்தகைய பட்டம் தகுதியுடையது தான்.

* இரட்டைப் பட்ட வழக்கு இன்னும் முடிவடையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

CCE 2nd TERM WEEKLY SYLLABUS for std 1 to 8

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் 2014 ம் ஆண்டிற்கான பி.எட் சேர்க்கை அறிவிப்பு

2014 ம் ஆண்டிற்கான பி.எட் சேர்க்கை


*10+2+3 முறையில் இளங்கலை முடித்திருக்க வேண்டும்

*நுழைவுத்தேர்வு இல்லை

*க்ராஸ் மேஜருக்கு தகுதி இல்லை

*நேரடியாக விண்ணப்ப கட்டணம் ரூ600, அஞ்சல் வழி கட்டணம் ரூ650

*கடைசி நாள் 30-11-2013 மாலை 5 மணி வரை


அரசு பாடப்புத்தகத்தில் மாணவனுக்கு "கவுரவம்"

தமிழக அரசு, சமச்சீர் பாடத்திட்டத்தில், மூன்றாம் வகுப்பு, தமிழ் இரண்டாம் பருவ பாடப்புத்தகத்தில், திருக்குறள் தெளிவுரைக்கு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த உண்மை சம்பவம், போட்டோவுடன் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் இளம் வயதில் நுண்ணறிவை பயன்படுத்திய மாணவனுக்கு, "கவுரவம்" கிடைத்துள்ளது.

அரசு பாடப்புத்தகத்தில், தமிழ்பாடத்தில், திருக்குறளுக்கு, சிறுகதைகளுடன் தெளிவுரை கொடுக்கப்படுகிறது. சமச்சீர் பாடத்திட்டம் கொண்டு வரப்பட்ட பின், தமிழ் பாடங்களுக்கு, கார்ட்டூன் படங்களுடன் விளக்கம் கொடுக்கப்படுகிறது. இந்தாண்டு, சமச்சீர் பாடத்திட்டத்தில், மூன்றாம் வகுப்பு, இரண்டாம் பருவ புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது.

அதில், தமிழ் பாடப்புத்தகத்தில், திருக்குறள் ஐந்து அதிகாரங்களில் இருந்து, ஐந்து திருக்குறளுக்கு தெளிவுரை கொடுக்கப்பட்டுள்ளது.அன்புடைமை, அறிவுடைமை, மக்கட்பேறு, இனியவை கூறல், இன்னா செய்யாமை என்ற அதிகாரங்களில் இருந்து, தலா, ஒரு திருக்குறள் இடம் பெற்றுள்ளது.

மக்கட்பேறு என்ற அதிகாரத்தில்,"ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்" என்ற குறளுக்கு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த, உண்மை சம்பவம், போட்டோவுடன் மேற்கொள் காட்டப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகே, அரையம்பாக்கம் கிராமத்திலுள்ள, ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது. இதைப் பார்த்த, அக்கிராமத்தைச் சேர்ந்த, சந்தோஷ் என்ற, 11வயது சிறுவன், உடனடியாக, ஊர் மக்களிடம் அந்த செய்தியை தெரிவித்தான். அந்த வழியாக வந்த, "விழுப்புரம் பயணிகள் ரயிலை" ஊர் மக்கள் நிறுத்தினர்.

ரயிலில் பயணம் செய்த பலரின் உயிரை காப்பாற்றிய சந்தோஷ், அரைம்பாக்கத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். சந்தோஷுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கினர்.

இதற்கு, "மகனை பெற்றபோது தாய் மகிழ்ச்சி அடைகிறார். அதைவிட, அறிவும் ஒழுக்கமும் நிறைந்தவன், என, தன் மகனைப் பிறர் புகழக் கேட்கும் போது, மேலும் மகிழ்ச்சி அடைகிறார்" என பொருள் கூறப்பட்டுள்ளது. இந்த பாடத்தில், சந்தோஷ்க்கு பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில், பொன்னாடை போர்த்தி, பரிசு வழங்கிய போட்டோவும் இடம் பெற்றுள்ளது.

"வழக்கமாக, குட்டிக்கதை ஒன்றைக் கூறி, திருக்குறளுக்கு விளக்கும் கொடுத்த நிலை மாறி, உண்மை சம்பவத்தை போட்டோவுடன் பொருள்பட விளக்கும் போது, பாடம் படிக்கும் மாணவர்களுக்கு நல்லொழுக்கம் ஏற்படும். திருக்குறள் பொருள் மாணவர்களுக்கு எளிதில் புரியும், மனதில் பதியும். மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், சமச்சீர் பாடத்திட்டத்தில், இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது" என அரசு பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

பாடப்புத்தகத்தில் இடம் பெற்ற மாணவனை தொடர்பு கொள்ள, அரையம்பாக்கத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியை தொடர்பு கொண்டபோது, தொடர் விடுமுறை காரணமாக யாரிடமும் பேச முடியவில்லை.

இறுதியில், அரையம்பாக்கம் ஊராட்சி துணைத்தலைவர் வெங்கடேசனை தொடர்பு கொண்ட போது, "2008ல் அந்த சம்பவம் நடந்தது. சந்தோஷை ஊரே தூக்கி வைத்து கொண்டாடியது. சந்தோஷ் தற்போது, மதுராந்தகம் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறான். அவனது புத்திசாலி தனத்தால், ஊருக்கே கவுரவம் கிடைத்துள்ளது. அவனது அப்பா வேலு, அம்மா சரசு இருவரும் கட்டட தொழிலாளர்கள். அவர்களிடம் மொபைல்போன் வசதியில்லை" என்றார்.

வருமான வரி சோதனையை தவிர்க்க...

* ஒருவரது வங்கி சேமிப்பு கணக்கில் பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் சேமிப்புத் தொகை இருந்தால் வங்கியானது வருமான வரித்துறைக்கு அந்த வாடிக்கையாளர் வரி கட்ட தகுதியுடையவர் என்பதை தெரிவித்து விடும்.

* கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் கவனிக்க வேண்டியது என்னவெனில், கிரெடிட் கார்டை பயன்படுத்தி வருடத்திற்கு இரண்ட ரூபாய் செலவு செய்திருந்தால் அவர்களும் வரி செலுத்த தகுதியுடையவராவார்கள். அவர்களின் விவரமும் வங்கியின் மூலமாக வருமான வரித் துறையினருக்கு தெரிவிக்கப்படும். 

* ஒரு வருடத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் அந்த நபரின் விவரங்கள் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தாரால் வருமான வரித்துறைக்கு போய்ச் சேரும். * பாண்டுகளிலோ அல்லது ஃபிக்ஸட் டெபாஸிட்களிலோ வருடத்திற்கு ஐந்து ல ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தால் அவர்களின் விவரங்களும் வருமான வரித் துறையினரிடம் ஒப்படைக்கப்படும். 

* வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பங்குகளில் அல்லது இ.டி.எஃப்.களில் முதலீடு செய்தால் அவர்களின் விவரம் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படும். 

* 30 லட்ச ரூபாய் மதிப்பிலான வீடோ, நிலமோ வாங்கினால், அதன் விவரம் பத்திரப் பதிவு துறை மூலமாக வருமான வரித் துறைக்கு தெரிவிக்கப்படும். அந்த வகையில் மேலே கண்ட முறையில் ஏதாவது பரிவர்த்தனை செய்திருந்தால் அதை குறிப்பிட்டு வருமான வரி கணக்கை தாக்கல் செய்துவிடுங்கள். இல்லை என்றால் வருமான வரித் துறையின் அதிரடி ரெய்டை சந்திக்க வேண்டி வரும்.

இயலாக்குழந்தைகளுக்கு பால், பழம், பிஸ்கட் வழங்க "ஸ்பான்சர்" தேடும் அதிகாரிகள்

மதுரை மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) நிதிக்குறைப்பால் அரசு பகல் நேர பராமரிப்பு மையங்களில், இயலாக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட பால், பழம், பிஸ்கட்கள் ஆகிய ஊட்டச்சத்து உணவுகள் இந்தாண்டு நிறுத்தப்பட்டன.

மாவட்டத்தில் 15 கல்வி ஒன்றியங்களில் இம்மையங்கள் செயல்படுகின்றன. இங்கு 6 முதல் 18 வயது வரை 300 இயலாக்குழந்தைகள் பகல் நேரத்தில் தங்கி படிக்கின்றனர். இதற்கு, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்படுகிறது.

இதில், மதிய உணவுடன் ஊட்டச்சத்துக்காக, குழந்தைகளுக்கு இருவேளை 150 மி., பால், ஹார்லிக்ஸ் அல்லது பூஸ்ட், பழங்கள், பிஸ்கட்கள் வழங்கப்பட்டன. மேலும், வீட்டில் இருந்து மையத்திற்கு குழந்தைகளை அழைத்துவர வாகன வாடகையாக, ஒரு மையத்திற்கு ரூ.4,300 வழங்கப்பட்டன.

மாநிலம் முழுவதும் இந்தாண்டு எஸ்.எஸ்.ஏ., திட்டத்திற்கு, மத்திய அரசு வழங்கும் நிதி குறைக்கப்பட்டது. இதனால், சிக்கன நடவடிக்கையாக இம்மையங்களுக்கும் வழங்கப்பட்டு வந்த பால், பழம், பிஸ்கட்டுகள் முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டன.

மேலும், இத்திட்டத்தில் வழங்கப்பட்ட சத்துணவு, சீருடைகளும் நிறுத்தப்பட்டு, மாநில அரசின் மதிய உணவும், சீருடையும் வழங்கப்படுகிறது. இதனால், இயலாக்குழந்தைகள் பரிதவிப்பில் உள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மைய பொறுப்பாளர்கள், முக்கிய பிரமுகர்கள், நிறுவனங்களில் இருந்து உதவி பெற்று, பால், பழங்கள், பிஸ்கட் வழங்குகின்றனர். நல்ல உள்ளம் படைத்தவர்கள் இக்குழந்தைகளுக்கு உதவி செய்ய முன் வரலாம், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறந்த பள்ளிகள் தேர்வுப் பட்டியல் வெளியாவதில் தாமதம்: காத்திருக்கும் தலைமையாசிரியர்கள்

மாநிலம் முழுவதும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட சிறந்த பள்ளிகளுக்கான தேர்வு பட்டியல் வெளியிடுவதில் தொடர்ந்து தாமதம் நிலவி வருவதாக பள்ளி தலைமையாசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினத்தில் அரசு துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என்ற பிரிவுகளில் மாவட்டம் வாரியாக நான்கு சிறந்த அரசு பள்ளிகளை தேர்வு செய்து ரொக்கப்பரிசாக ரூபாய் 25 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை நடப்பு கல்வியாண்டு முதல் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, ஒரு மாவட்டத்தில் தேர்வு செய்யப்படும் நான்கு பள்ளிகளுக்கு 25 ஆயிரம், 50 ஆயிரம், 75 ஆயிரம் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் வீதம் வழங்கப்படும்.

மாநிலம் முழுவதும் 2.5லட்சம் வீதம் 32 மாவட்டங்களுக்கு 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதியை பயன்படுத்தி சம்பந்தப்பட்ட பள்ளிகளின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்திக்கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

அனைத்து மாவட்டத்திலும் பள்ளி வளாக தூய்மை, மாணவர்கள் சேர்க்கை, கட்டமைப்பு வசதிகள், பொதுத்தேர்வுகளில் பெற்ற தேர்ச்சி விகிதம், பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் செயல்பாடுகள், விளையாட்டு, பிற தனித்திறன் போட்டிகளில் பெற்ற வெற்றிகள் என அரசின் விதிமுறைகளின் படி அந்தந்த மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட கல்வி அதிகாரிகளை கொண்ட சிறப்புக் குழு பள்ளிகளை ஆராய்ந்து தேர்வு செய்தது.

கோவை மாவட்டத்தில் ஜூலை மாதம் இதற்கான ஆய்வுப்பணிகள் ஒவ்வொரு பள்ளியிலும் நடத்தப்பட்டு சிறந்த நான்கு பள்ளிகள் தேர்வு செய்து மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. பின், ஆய்வு முடிவில் தேர்வு பெற்ற பள்ளிகளின் பெயர்கள், விபரங்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டன. இதே போன்று அனைத்து மாவட்டத்திலும் சிறந்த பள்ளிகளின் பெயர்கள் தலைமை அலுவலக்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அரசு பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் கூறியதாவது: "ஜூலை இறுதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு ஆகஸ்ட் முதல் வாரத்தில் சிறந்த பள்ளிகள் பெயர்கள் வெளியிட்டு அதற்கான ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தற்போது, பள்ளிகள் தேர்வு செய்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும் பெயர் பட்டியல் வெளியிடாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.

ஒவ்வொரு முறையும் நல்ல திட்டங்களை அரசு அறிவித்தாலும் அதை செயல்படுத்துவதில் ஏற்படும் தாமதத்தால் பயனில்லாமல் போகிறது. மேலும், சிறந்த பள்ளியில் எங்கள் பள்ளியின் பெயர் இடம் பெறாதா என்ற ஏக்கத்தில் அனைத்து தலைமையாசிரியர்களும் காத்திருக்கிறோம்.

உடனடியாக பெயர் பட்டியலை வெளியிட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்." இவ்வாறு, தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

8ம் வகுப்பு வரை அனைவரும் பாஸ் திட்டத்தை மறுபரிசீலிக்க கோரிக்கை

கட்டாய கல்வி சட்டத்தின்கீழ், 8ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு தேர்வுகள் இன்றி "அனைவரும் பாஸ்" என்ற திடத்திற்கு, பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால், அது பரிசீலனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

ஹரியானா மாநில கல்வி அமைச்சர் கீதா புக்கலின் தலைமையிலான கல்விக்கான தேசிய ஆலோசனை வாரியத்தின் துணை கமிட்டி, இதுதொடர்பான சிக்கலை ஆராய்ந்து வருகிறது மற்றும் இந்த கமிட்டி, அக்டோபர் 23ம் தேதி தனது அறிக்கையை மனிதவள அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கவுள்ளது. மேலும், இந்தக் கமிட்டியானது, அனைவரும் பாஸ் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நாடாளுமன்ற பேனலையும் சந்திக்கவுள்ளது.

பல மாநிலங்கள் இந்த "அனைவரும் பாஸ்" திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஏனெனில், 9ம் வகுப்புவரை எந்த சிக்கலுமின்றியும், கடின உழைப்பின்றியும் கடந்துவரும் மாணவர்கள், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை முதன்முதலாக எதிர்கொள்ளும்போது கடும் நெருக்கடியை சந்திக்கின்றனர். இதனால், அவர்களின் நிலை மட்டுமின்றி, ஆசிரியர்களின் நிலைமையும் சிக்கலுக்கு உள்ளாகிறது என்று இந்த அம்சத்தை எதிர்ப்பவர்கள் வாதிடுகிறார்கள்.

மத்திய மனிதவள இணையமைச்சர், இந்த கமிட்டியின் அறிக்கையை, அடுத்த கூட்டத்திற்கு முன்னதாகவே சமர்ப்பித்து விடுமாறு, ஹரியானா அமைச்சர் புக்கலிடம் கூறியுள்ளார். ஏனெனில், இதன்மூலம் அடுத்து நடைபெறும் கூட்டத்தில் இதைப்பற்றி தெளிவாக விவாதிக்க முடியும் என்பதால் இவ்வாறு அறிவுறுத்தப்படுவதாக சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

தேர்வே இல்லாத இந்த "அனைவரும் பாஸ்" திட்டம், மாணவர்களின் சுய திருப்தியை பாதிப்பதோடல்லாமல், ஆசிரியர்களின் திறனையும் பாதிக்கிறது என்பதால், இத்திட்டத்தை மறுஆய்வு செய்யுமாறு, மத்திய மனிதவள அமைச்சகத்தை இந்தக் கமிட்டி கேட்டுக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

14/10/2013

பள்ளி மாணவர்களுக்கு பயன்படும் புதிய ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்

தொழில்நுட்பம் வளர்ந்து பல்வேறு சாதனங்களை படைத்து வருகிறது. கல்வித்துறையிலும் பல்வேறு வழிமுறைகளில் கணினியும், அதுசார்ந்தசாதனங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கணினிக்கு அடுத்த தற்பொழுது பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் டேப்ளட் பி.சி கள், கையடக்கத் தொலைபேசியான ஆண்ட்ராய்ட் மொபைல்கள் போன்றவற்றிற்கும் கல்வித் தொடர்பான புதிய அப்ளிகேஷன்கள் வரத்துவங்கியுள்ளன.

Ntional Council of Educational Research and Training என்ற அமைப்பின் கீழ் வரும் பள்ளிப் பாடப் புத்தகங்கள் (ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை) அனைத்தும் புதிய ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனில் வெளியிடப்பட்டுள்ளது.

NCERT-android-App-for-school-students-1to-12

என்.சி.ஆர்.டி அமைப்பின் கீழ் வரும் அனைத்து புத்தகங்களையும் இந்த ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் மூலம் மாணவர்கள் படிக்கலாம்.


பயன்மிக்க இந்த ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்ய:

Download NCERT App for school students
android apps for school students, ncert android apps, apps for ncert school students, smartphone apps for students, ncert apps for tablet pc, ncert apk for smartphone, ncert apps for computer, ncert app for mini laptop.

அரசு துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க 15/10/2013 கடைசி நாள்.துறை சார் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் & CODE

அரசு துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க 15/10/2013 கடைசி நாள்.



துறை சார் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் & CODE


இடைநிலை ஆசிரியர்கள்
1. 004 - Deputy Inspectors Test-First Paper
(Relating to Secondary and Special Schools) (without books)
2. 017 - Deputy Inspector’s Test--Second Paper
(Relating to Elementary Schools) (Without Books)
3. 119 - Deputy Inspector’s Test
Educational Statistics (With Books).
4 . 176 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive Officers (With Books).
5 . 208 - The Tamil Nadu Government Office Manual Test
(Previously the District Office Manual--Two Parts) (With Books).


பட்டதாரி ஆசிரியர்கள்

1 . 176 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive Officers (With Books).
2 . 208 - The Tamil Nadu Government Office Manual Test
(Previously the District Office Manual--Two Parts) (With Books).


முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்

1 . 176 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive Officers (With Books).
2 . 208 - The Tamil Nadu Government Office Manual Test
(Previously the District Office Manual--Two Parts) (With Books).


மாவட்டக்கல்வி அலுவலர்

1 . 176 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive Officers (With Books).
2 . 208 - The Tamil Nadu Government Office Manual Test
(Previously the District Office Manual--Two Parts) (With Books).

புதிய மருத்துவ காப்பீடு சம்பந்தமான புகார்களை தெரிவிப்பது தொடர்பான அலுவலர்களை மாற்றி அரசாணை வெளியீடு

ரேஷன் கார்டுகளை ஒரே நிமிடத்தில் ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ளும் வசதி! ! ! !

ரேஷன் கார்டுகளை ஒரே நிமிடத்தில் ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ளும் வசதிக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. ரேஷன் கார்டுக ள் ஸ்மார்ட் கார்டு முறைக்கு மாற்றப்பட உள்ளன. 
பொதுமக்கள் நலன் கருதி ஆன்லைனில் புதுப்பிக்கும் வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், சிவில் சப்ளைஸ் துறை சார்பில் http://www.consumer.tn.gov.in/என்ற பெயரில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் ‘கார்டு புதுப்பித்தல் 2012’ என்ற பகுதிக்கு சென்று ரேஷன் கார்டின் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பிறகு அட்டையின் நிறம், குடும்பத்தில் சேர்க்கப்ப ட வேண்டியவர், நீக்கப்பட வேண்டியவர், சிலிண்டர்கள் விவரம் போன்ற தகவல்களோடு, தொலைபேசி எண் போன்ற விவரங்களையும் இணைய தளத்தில் பூர்த்தி பூர்த்தி செய்ய வேண்டும். அதன்பின்னர், ‘கமெண்ட்ஸ் என்ன?’ என்ற கேள்வி வரும். விருப்பம் இருந்தால் கமெண்ட்ஸ் எழுதலால். இல்லாவிட்டால், ‘இல்லை’ என்று எழுதி, ‘சப்மிட்’ செய்தால் சில நொடிகளிலேயே நமது ரேஷன் கார்டு புதுப்பிக்கப்பட்டு, துணை ஆணையர் கையெழுத்துடன் இணையதளத்தில் ரசீது வருகிறது. இந்த ரசீதை கார்டின் பின்பக்கத்தில் ஒட்டிக் கொள்ள வேண்டும். அவரவர் பகுதிக்குட்பட்ட ரேஷன் கடைக்கு சென்று, ஆன்லைன் பதிவு விவரங்களை எடுத்துச் சொல்லி கார்டில் கையெழுத்து மற்றும் சீல் பெற்றுக் கொள்ள வேண்டும். வேலைப் பளு, குடும்ப சூழ்நிலை காரணமாக பலர் தங்கள் கார்டுகளை புதுப்பித்துக் கொள்ள நேரம் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முறை மூலம் ஒரே நிமிடத்தில் ரேஷன் கார்டு புதுப்பிக்கப்பட்டு ரசீதும் கிடைத்துவிடுவதால் மக்கள் இந்த முறையை பெரிதும் வரவேற்கின்றனர்.
ONLINE RENEWAL OF RATION CARDS IN TAMILNADU  http://www.consumer.tn.gov.in/

இரட்டைப்பட்டம் வழக்கு சார்பான 24.10.2013 அன்றைய தினத்திற்கு ஒத்தி வைப்பு

இன்று (11.10.2013) சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் 38வது வழக்காக பட்டியலிடப்பட்ட இந்த வழக்கு தலைமை நீதியரசர் இராஜேஷ்குமார் அகர்வால் மற்றும் நீதியரசர் சுந்தரேஷ் முன்னிலையில் முற்பகல் 11.45க்கு விசாரணைக்கு வந்தது. இதில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் திரு.பிரகாஷ் அவர்கள் இதுவரை இவ்வழக்கை விசாரித்த நீதியரசர் சத்தியநாரயணன் அவர்கள் இல்லாத நிலையில் இந்த வழக்கில் வாதாட இயலாது எனவும், எனவே மறு தேதி வேண்டும் எனவும் கோரினார்.எனவே நீதியரசர்கள் வருகிற 24.10.2013 வியாழக்கிழமை ஒத்தி வைத்தனர். இது பதவி உயர்வுக்காக காத்திருக்கும் ஆசிரியர்களை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. விரைவில் இவ்வழக்கு நிறைவு பெற வேண்டுகிறோம்.

"சைபர் கிரைம்" குறித்து 1.2 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி

"சைபர் கிரைம்" எனப்படும், இணையவழி குற்றங்களில் இருந்து, மாணவர்களை பாதுகாப்பது குறித்து, 1.2 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க, அனைவருக்கும் கல்வி இயக்ககமும், மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனமும் ஏற்பாடு செய்துள்ளது.

ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, சமுதாய விழிப்புணர்வு குறித்தும், "சைபர் கிரைம்" நடவடிக்கைகளில் இருந்து, மாணவர்களை பாதுகாப்பது குறித்தும், 1.2 லட்சம் ஆசிரியர்களுக்கு, படிப்படியாக பயிற்சி அளிக்க திட்டமிட்டு உள்ளது. முதல் கட்டமாக, ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான, 120 ஆசிரியர்களுக்கு, சென்னையில், நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.

நாளை, ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான, 120 ஆசிரியர்களுக்கு, பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆசிரியர் கல்வி நிறுவன பேராசிரியர்கள், பல்வேறு துறைகள் சார்ந்த நிபுணர்களைக்கொண்டு, இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியைப் பெறும் ஆசிரியர், மாவட்டங்களுக்கு சென்று, பிற ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பர். இப்படியே, 1.2 லட்சம் ஆசிரியர்களுக்கும், பயிற்சி அளிக்கப்படும்.

பின் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்துவர். "சைபர் கிரைம்" குறித்து, டி.எஸ்.பி., வெங்கடாசலபதி, நேற்று, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தார். மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன இயக்குனர், கண்ணப்பன் கூறுகையில், "இணையதளத்தை, ஆக்கப்பூர்வமான முறையில், எப்படி பயன்படுத்துவது, மொபைல் போன்களை, எந்த அளவிற்கு பயன்படுத்த வேண்டும், இணையதள ஆபத்துகளில் இருந்து, சிக்கிக்கொள்ளாமல் இருப்பது எப்படி என்பது உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து, பயிற்சி அளிக்கப்படுகிறது" என்றார்.

தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகள் 2009 - தேர்வுநிலை / சிறப்புநிலை பணிக்கு 3% கூடுதல் ஊதியம் வழங்கிய உத்தரவிற்கு தெளிவுரை வழங்கி தமிழக அரசு உத்தரவு

த.அ.உ.ச - D.T.ED + B.A(TAMIL ) & B.LIT + தமிழ் பண்டிட் & D.T.ED + B.LIT என அனைத்திற்கும் B.Ed படிப்பு கட்டாயம் படித்திருக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்

05/10/2013

SSA-2013-2014 ஆம் ஆண்டிற்கான எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றலுக்கான அறிவுரைகள்

இரட்டைப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை வருகிற திங்கட்கிழமை வருகிறது

07.10.2013 அன்று இரட்டைப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் முதலாவது அமர்வில் விசாரணை வரிசை பட்டியல் எண் 28வதாக வழக்கு விசாரணைக்கு வருகிறது. சென்ற முறை இரட்டைப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்த போது போதிய நேரமின்மை காரணமாக அனைத்து
தரப்பும் ஒப்புக்கொண்டதால், நீதிபதிகள் 07.10.2013 அன்று வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. வருகிற 07.10.2013 அன்று இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு முடிவு பெரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மலேசியாவைப் போல் தமிழகத்திலும் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் வழங்க வேண்டும்

"மலேசியாவைப் போல் தமிழகத்திலும் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தங்களுடன் திருக்குறளை வழங்க வேண்டும்" என, திருக்குறள் பேரவை பழனியப்பன் கூறினார்.

அவர் வெளியிட்ட அறிக்கை: "மலேசியா நாட்டில் மலாய் மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளை அந்த நாட்டின் அரசு மாணவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.

அந்த வகையில், தமிழகத்தில் மாணவ, மாணவிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு விலையில்லா பொருள்களையும், பாடநூல்களையும் அரசு வழங்குகிறது.

இதுபோல வரும் கல்வியாண்டில் நல்ல உரையாசிரியர்களுடன் கூடிய திருக்குறளை முதல் கட்டமாக, ஐந்து மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்க வேண்டும்." இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கல்விச் சான்றிதழ் உண்மைத்தன்மையை ஒரே நொடியில் அறிய ஆன்லைன் வசதி அரசு தேர்வுகள் இயக்குனர் கே.தேவராஜன் தெரிவித்தார்.

கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை ஒரே நொடியில் அறிந்திட ஆன்லைன் வசதியை அரசு தேர்வுத்துறை செயல்படுத்த இருக்கிறது. இதுவரை 2 கோடி பழைய சான்றிதழ்கள் டிஜிட்டல்மயமாக்கப்பட்டுள்ளன.

சான்றிதழ் உண்மையானதுதானா?

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 முடிக்கும் மாணவர்களின் கல்விச் சான்றிதழ்கள் உண்மையானவையா (ஜென் யூனஸ்) என்பதை ஆராய்வதற்காக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்க ளிடமிருந்து அரசு தேர்வுத் துறைக்கு அனுப்பப்படும்.

அந்த சான்றிதழ் நகலை தன்வசம் உள்ள ஆவணங்களுடன் ஒப்பிட்டு தேர்வுத்துறை ஆராய்ந்து அறிக்கை அனுப்பும். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சில மாணவர்கள் போலி பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து என்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தது இத்தகைய ஆய்வின் மூலம்தான் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

காலதாமதம்

ஒருவர் அரசு பணியிலோ அல்லது ஆசிரியர் பணியிலோ சேரும்போது கல்வித்தகுதிக்கேற்ப அவரது எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2, இடைநிலை ஆசிரியர் பயிற்சி சான்றிதழ்கள் தேர்வுத் துறைக்கு அனுப்பி ஆய்வு செய்யப்படும். இதைப்போல, பட்டப் படிப்பு சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்துக்கு ஆய்வுக்காக அனுப்பப்படும்.

ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 20 லட்சம் பேர் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2, சிறப்பாசிரியர் பயிற்சி, இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடிக்கிறார்கள். அவர்களின் சான்றிதழ்களை ஆவணங்களுடன் சரிபார்த்து உண்மைத்தன்மையை உறுதி செய்ய தேர்வுத் துறைக்கு அதிக காலம் பிடிக்கிறது.

நொடியில் சரிபார்க்க ஆன்லைன் வசதி

சான்றிதழ் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது ஆய்வு செய்யும் ஊழியர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. இதனால் அதிக காலதாமதம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது.

இதற்கிடையே, அரசு மற்றும் ஆசிரியர் பணியில் சேருவோரின் சான்றிதழ்களையும் சரிபார்த்து அனுப்ப வேண்டும்.இதையெல் லாம் கருத்தில் கொண்டு கல்விச் சான்றிதழ்களின் உண்மைத்தன் மையை மிக விரைவாக சரிபார்க்கும் வகையில் ஆன்லைன் வசதி திட்டத்தை தேர்வுத் துறை கொண்டுவர உள்ளது.

இதன்படி, அனைத்து கல்விச்சான்றிதழ்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு ஒரே நொடியில் சான்றிதழின் உண்மைத்தன்மையை அறிந்துவிட முடியும்.

டிஜிட்டல்மயம்

ஆன்லைன் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் 1955-ம் ஆண்டு முதல் 1978-ம் ஆண்டு வரையிலான கிட்டத்தட்ட 2 கோடி பழைய சான்றிதழ்கள் கம்ப்யூட்டர் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு டிஜிட்டல்மயமாக்கப்பட்டு இருப்பதாகவும், தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான சான்றிதழ்கள் முழு வீச்சில் ஸ்கேன் செய்யப்பட்டு வருவதாகவும் அரசு தேர்வுகள் இயக்குனர் கே.தேவராஜன் தெரிவித்தார்.

அனைத்து ஆண்டுகளுக்குரிய சான்றிதழ்களும் ஸ்கேன் செய்யப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப் பட்டுவிட்டால் சான்றிதழின் உண்மைத்தன்மையை ஒரு நொடியில் சரிபார்த்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் தேவையற்ற கால தாமதம் தவிர்க்கப்பட்டு மேற்படிப்பு படிக்கும் மாணவர்களும், அரசு பணியில் சேருவோரும் பெரிதும் பயன்பெறுவார்கள்.