திருக்குறள்

30/06/2013

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,அரியலூர் மாவட்ட கிளையின் சார்பாக 7அம்சகோரிக்கையை வென்றெடுக்க தொடர் மறியல் போராட்ட ஆயத்த விளக்க மாநாடு இன்றுஅரியலூர் மாவட்ட கிளையின் சார்பாக PNM மண்டபத்தில் நடைபெற்றது.உலக கல்வி அமைப்பின் துணைத் த‌லைவர்,அகில இந்திய பொதுச் செயலாளர் மதிப்புமிகு சு.ஈஸ்வரன் அவர்கள் பேருரையாற்றினார்.



மறியல் போராட்ட ஆயத்த விளக்க மாநாடு

அரியலூரில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அரியலூர் மாவட்டக் கிளை சார்பில் சென்னையில் நடைபெறவுள்ள தொடர் மறியல் போராட்ட ஆயத்த விளக்க மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.அரியலூர் மாவட்டத் தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். அகில இந்திய பொதுச்செயலர் சு. ஈசுவரன் கோரிக்கைகளை விளக்கினார். கூட்டத்தில், கல்வித் துறை அலுவலக காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வை உடனடியாக ரத்து செய்து, வேலைவாய்ப்பக முன்னுரிமைப்படி ஆசிரியர் நியமனங்களை அமல்படுத்த வேண்டும். 1.6.1988க்கு தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் ஒட்டுமொத்த பணிக் காலத்தையும் கணக்கிட்டு தேர்வுநிலை, சிறப்புநிலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, செப். 25 முதல் சென்னையில் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலத் தலைவர் காமராஜ், பொதுச்செயலர் ரெங்கராஜன், மாநிலப் பொருளாளர் ஜோசப் சேவியர், மாநிலத் துணைச் செயலர் ராஜேந்திரன், மாநிலத் துணைத் தலைவர் அருமைக்கண்ணு, மாவட்டச் செயலர் (ஓய்வு பிரிவு) கருப்புசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் எழில், மாநில பொதுக்குழு உறுப்பினர் வேல்மணி, மாவட்டத் துணைத் தலைவர்கள் சச்சிதானந்தம், இளவரசன், மாவட்டத் துணைச் செயலர்கள் வேல்முருகன், அய்யாகண்ணு உள்பட பலர் கலந்துகொண்டனர்.மாவட்டச் செயலர் பாண்டியன் வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் மார்ட்டின் ஆரோக்கியராஜ் நன்றி கூறினார்.

பாலியல் கொடுமை தடுக்க பிளஸ் 1 பாடப்புத்தகத்தில் இலவச சைல்டு ஹெல்ப் லைன் 1098 என்ற தொடர்பு எண் கொடுக்கப்பட்டது


பள்ளிகளில் பாலியல் கொடுமைகளை தடுக்க பிளஸ் 1 பாடப்புத்தகத்தில் இலவச ஹெல்ப்லைன் தொலைபேசி எண்கள் அச்சிடப்பட்டுள்ளன. சமீப காலமாக, பள்ளிகளில் பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாக பரவலாக புகார்கள் வருகின்றன.
இதை தடுப்பதற்காக, அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதுதொடர்பாக மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியிலும் அரசு ஈடுபட்டுள்ளது. சைல்டு ஹெல்ப் லைன் என்ற பெயரில் 1098 என்ற தொடர்பு எண் கொடுக்கப்பட்டது. ஹெல்ப்லைன் இருப்பது குறித்து மாணவ, மாணவியர் அறிந்து கொள்ளும் விதத்தில், முதல் கட்டமாக பிளஸ் 1 பாடப்புத்தகங்களில் நடப்பு கல்வியாண்டில் இந்த எண் அச்சிடப்பட்டுள்ளது. இது கட்டணமில்லாத இலவச தொலைபேசி எண் என்பதால், எந்த தொலைபேசியில் இருந்தும் புகார் அளிக்கலாம். இதுகுறித்து பாடநூல் கழக உயர்அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவே, இந்தாண்டு பிளஸ் 1 புத்தகங்களின் அட்டையில், ஹெல்ப்லைன் எண் அச்சிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டிலிருந்து, அனைத்து வகுப்பு பாடப்புத்தகங்களிலும் இந்த எண் அச்சிடப்படும்’’ என்றார். பள்ளிகளில் பாலியல் கொடுமைகளை தடுப்பதற்காக, இந்த முயற்சியை எடுத்துள்ள அரசு, இதில் வரும் புகார்களுக்கும் உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இந்த கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என பெற்றோர் கூறுகின்றனர்

7அம்சகோரிக்கையை வென்றெடுக்க தொடர் மறியல் போராட்ட ஆயத்த விளக்க மாநாடு இன்றுஅரியலூர் மாவட்ட கிளையின் சார்பாக PNM மண்டபத்தில் நடைபெறுகிறது.உலக கல்வி அமைப்பின் துணைத் த‌லைவர்,அகில இந்திய பொதுச் செயலாளர் மதிப்புமிகு சு.ஈஸ்வரன் அவர்கள் பேருரையாற்றுகிறார்.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,அரியலூர் வட்டார கிளையின் சார்பாக இயக்க உறுப்பினர்கள் அனைவரையும் வருக!வருக!என அன்புடன் அழைக்கிறோம்.ஒன்று கூடுவோம் !வென்றுகாட்டுவோம்!!


தனியார் பள்ளியா? தொழிற்சாலையா? கல்வியின் ‌எதிர்கால நிலை என்ன?

பள்ளிக் கொள்ளையை எதிர்ப்பது எப்படி?


அது ஒரு பள்ளிக்கூட வகுப்பறை. ஐந்தாம் வகுப்பு. சுமார் 60 மாணவர்கள் அமர்ந்திருக்கின்றனர். அவர்களில் பள்ளிக் கட்டணத்தை முழுமையாகக் கட்டாத நான்கு பேர் மட்டும் வகுப்பறையின் ஓரமாகத் தனித்து அமர வைக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர், திருத்திய விடைத்தாள்களை எல்லோருக்கும் தருகிறார்; அவர்களுக்கு மட்டும் தரவில்லை. வருகைப் பதிவேட்டுக்காக ஒவ்வொருவரின் பெயராக அழைக்கிறார். ''பிரசன்ட் சார்'' என்று சொல்லக் காத்திருந்த அந்த நால்வரின் பெயர்கள் மட்டும் இறுதிவரையிலும் அழைக்கப்படவில்லை. நடத்திய பாடத்தில் இருந்து எல்லா மாணவர்களிடமும் கேள்வி கேட்கப்படுகிறது. அந்த நால்வரிடமும் மட்டும் எதுவும் கேட்கப்படவில்லை. வழக்கமாக பள்ளி முடியும் நேரம் 4.30 மணி என்றால், அந்த நான்கு பேர் மட்டும் 3.30 மணிக்கே வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.

இங்கு ஒரு பள்ளி வகுப்பறை சேரி ஆகிறது.

எல்.கே.ஜி. சீட்டுக்கு 50 ஆயிரம் கொடுத்தாலும் அனுமதி கிடைக்காத புகழ்பெற்ற பள்ளி அது. போட்டி போட்டுக்கொண்டு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அங்கு சேர்த்தனர். பள்ளியின் கொள்ளளவைவிட மூன்று மடங்கு மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். ஒரே நேரத்தில் எல்லா மாணவர் களையும் அமரவைத்து வகுப்பெடுக்க வகுப்பறைகள் போதாது. என்ன செய்யலாம்? காலை 8 மணிக்கு துவங்கி ஒரு ஷிஃப்ட்; 11 மணிக்கு துவங்கி ஒரு ஷிஃப்ட் என பள்ளிக்கூட நேரம் பிரிக்கப்பட்டது.

இங்கு பள்ளிக்கூட வகுப்பறை, ஒரு தொழிற் சாலை ஆகிறது.
முந்தையது நடந்தது கடலூர் மாவட்டத்தில். பிந்தையது நடப்பது சென்னை நகரத்தில். ஒரு பள்ளி மாணவனை வகுப்பறையிலேயே ஒதுக்கிவைத்து தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் இத்தகைய தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்குத்தான், பெற்றோர்கள் தவமாய் தவமிருக்கின்றனர். ஒரு தொழிற்சாலையின் உதிரி பாகத்தைப் போலக் குழந்தைகளை வைத்து ஷிஃப்ட் முறையில் சம்பாதிக்கும் இவர்களுக்கு கொட்டிக் கொடுக்கத்தான் உயிரைக் கொடுத்து உழைக்கிறது நடுத்தர வர்க்கம். ஆசை ஆசையாகப் பெற்று வளர்த்து, பள்ளிக்கு அனுப்பி, குண்டுமணி தங்கம்கூட இல்லாமல் அடகுவைத்துப் பணம் கட்டினால், இவர்கள் நம் பிள்ளைகளைப் பணயக் கைதிகளைப் போலப் பிடித்து வைத்துக்கொண்டு பணம் பறிக்கிறார்கள்.

''தனியார் பள்ளிகளில் இன்ன வகுப்புக்கு இவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று நீதியரசர் சிங்காரவேலர் கமிட்டி ஒரு வரையறை வகுத்துள்ளது. ஆனால், அதைத் தனியார் பள்ளிகள் கழிவறை காகிதமாகக்கூட மதிப்பது இல்லை. எல்.கே.ஜி-க்கு பில் போட்டு 6 ஆயிரம் என்றால், பில் போடாமல் இன்னொரு 6 ஆயிரம் கொடுத்தால்தான் சீட் கிடைக் கும். 'அரசு நிர்ணயித்த கட்டணத்தை வாங்கு’ என்று சொன்னால், 'அரசுக் கட்ட ணம்னா, அரசாங்க ஸ்கூலுக்குப் போ’ என்று திமிராகப் பதில் சொல்கிறார்கள்.

எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல், யாருக்கும் அச்சப்படாமல் பகல்கொள்ளை அடிக்கிறார்கள். கண்காணித்து, தண்டித்து, முறைப்படுத்த வேண்டிய அரசாங்கமோ இந்த கல்விக் கொள்ளையர்களைக் கண்டுகொள்வது இல்லை. ஆனால், நாங்கள் அப்படிச் சும்மா விடுவதாக இல்லை. இடைவிடாமல் போராடுவோம். அப்படிப் போராடி வெற்றியும் பெற்றிருக்கிறோம்'' என்கிறார் வெங்கடேசன். கடலூர், விருத்தாச்சலம், சிதம்பரம் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக இயங்கிவரும் 'மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின்’ கடலூர் மாவட்டத் தலைவர் இவர்.

'அரசுக் கட்டணத்தைத்தான் செலுத்துவோம்’ என இவர்கள் நடத்திய பல போராட்டங்கள் மூலமாக, இன்று அந்தப் பகுதிகளில் பல பள்ளிகள் வேறுவழியே இல்லாமல் அரசுக் கட்டணத்தை மட்டுமே வசூலிக்கின்றன. ஆனால், அவை வெகு சில பள்ளிகள்தான். இன்னும் பல நூறு பள்ளிக்கூடங்களில் கட்டணக் கொள்ளை தொடர்கிறது. ஓர் உதாரணத்துக்கு திருச்சி நகரில் உள்ள ஒரு சுமாரான பள்ளியில் 2,500 மாணவர்கள் படிக்கிறார்கள். ஒரு மாணவனுக்கு மிகக் குறைந்தது 15 ஆயிரம் ரூபாய் என்று வைத்துக்கொண்டாலும் சுமார் 2.75 கோடி ரூபாய் வருகிறது. எனில் அந்த நகரில் உள்ள மொத்தப் பள்ளிகளையும் கணக்கிட்டால் எவ்வளவு வரும்? ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை கோடி? சென்னையில் எவ்வளவு? மொத்தத் தமிழ்நாட்டிலும் ஒரு ஆண்டில் புழங்கும் பணம் எவ்வளவு? ஸ்பெக்ட்ரம்ஊழ லுக்கு நிகரான கொள்ளையல்லவா இது! 

''தனியார் பள்ளி முதலாளிகள் முதலீடு போட்டுத் துவங்கியிருக்கும் தொழில் இது. பெற்றோர்களாகிய நீங்கள், பணம் கொடுத்து அவர்களிடம் ஒரு சேவையைப் பெறுகிறீர்கள். வாடிக்கையாளராகிய உங்களிடம் மரியாதையாக நடந்துகொள்ள வேண்டியது அவர்களது கடமை. ரெண்டு ரூபாய்க்குப் பச்சைமிளகாய் வாங்கினாலும் மளிகைக் கடை அண்ணாச்சி மரியாதையாகத் தான் நடத்துகிறார். நீங்கள் மட்டும் 50 ஆயிரத் தைக் கொட்டிக் கொடுத்துவிட்டு ஏன் பிரின்சிபல் ரூம் வாசலில் கூனிக் குறுகி நிற்க வேண்டும்? எதிர்த்துக் கேள்வி கேளுங்கள். 'படிப்பு விஷயம் சார்... நாம ஏதாச்சும் எதிர்த்துப் பேசி, பசங்களோட எதிர்காலம் ஸ்பாயில் ஆயிடக்கூடாதுல்ல.?’ என்று இதற்குப் பதில் சொல்வார்கள். என்றால், உங்கள் பிள்ளைகள் என்ன பணயக் கைதிகளா? இப்படிப்பட்ட அடிப் படை ஒழுக்கத்தைப் பின்பற்றாத பள்ளியில் படித்தால்தான் உங்கள் பிள்ளையின் எதிர்காலம் கெட்டுப்போகும். மாணவர்களுக்காகத்தான் பள்ளிக்கூடமே தவிர, பள்ளிக்கூடத்துக்காக மாணவர்கள் இல்லை.
முதலில் ஒவ்வொரு வகுப்புக்கும் எவ்வளவு கட்டணம் என்பதைப் பள்ளிக் கூடங் களின் நோட்டீஸ் போர்டில் எழுதி ஒட்ட வேண்டும். இது அரசு விதி. ஆனால் 'ஒட்ட முடியாது’ என்று திமிராகச் சொல்கிறார்கள். வாங்கும் காசுக்கு ரசீது தர வேண்டும். இதுவும் விதி. ஆனால், இவை எதுவுமே கடைபிடிக்கப்படுவதில்லை. பல பள்ளிகளின் தாளாளர்களுக்கு அரசியல் பின்புலம் இருப் பதால் தனியரு பெற்றோராக அவர்களை எதிர்ப்பது சிரமமாக இருக்கும். ஆனால், நாம் சங்கமாக ஒன்று சேர்ந்து போராடினால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. அப்படிப் போராடாமல் இவர்களை எதுவும் செய்ய முடியாது. வேறு எதற்கும் இவர்கள் அஞ்சவும் மாட்டார்கள். பெற்றோர்களாகிய நாம் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் திரண்டு பள்ளிக்கூடம் முன்பு உட்கார்ந்தால் அதிகாரிகள் தேடி வருவார்கள்; வர வைக்க வேண்டும். மற்றபடி மனு கொடுத்தோ, வழக்குப் போட்டோ இந்தப் பிரச்னையைத் தீர்க்க முடியாது!'' என்கிறார் இந்த சங்கத்தின் ஆலோசகரான வழக்கறிஞர் ராஜூ.

பல பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்ட ணத்தை மட்டுமே செலுத்திய மாணவர்கள் டி.சி. கொடுத்து அனுப்பப்படுகின்றனர். யாரிடம் இதற்கு முறையிடுவது என்றுகூடப் பெற்றோர்களுக்குத் தெரியவில்லை. மாவட்டக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு மனு போடலாம்; சிங்காரவேலர் கமிட்டியிடம் முறையிடலாம்; நீதிமன்றத்துக்குப் போகலாம்... இதெல்லாம் இருக்கும் வாய்ப்புகள். ஆனால், தனியரு பெற்றோருக்கு இது நடைமுறைச் சாத்தியம் இல்லாதது. பெற்றோர்கள் கூட்டாகத் திரண்டுவந்து தட்டிக் கேட்க வேண்டும். அப்போதுதான் பள்ளிக்கூட உரிமை யாளர்கள், 'பெயர் கெட்டுப்போய்விடும்’ என்று பயப்படுவார்கள். 'பள்ளியின் நற்பெயர் கெட்டுவிடக் கூடாது’ என்ற அவர்களின் அச்சம்தான் பெற்றோர்கள் சுதாரிக்க வேண்டிய இடம். 'இந்தப் பள்ளியின் உண்மையான கட்டணம் இவ்வளவுதான்’ எனப் பெற்றோர் சங்கம், போஸ்டர் அடித்து ஒட்ட வேண்டும். இப்படிச் செயல்பட்டால் கொடுத்த டி.சி-யைத் தானாகவே வாங்கி பள்ளியில் சேர்ப்பார்கள். இப்படிப் பல இடங்களில் நடக்கவும் செய்திருக்கிறது. முக்கிய மானது, இதைத் தனி ஒருவரால் செய்ய முடியாது. சங்கமாகத் திரண்டால் மட்டுமே இதைச் சாதிக்க முடியும்!
- ஆனந்த விகடன்

ஆசிரியர்களை நியமிப்பதற்கான தகுதியை நிர்ணயிக்கும் அரசாணை 252ஐ திரும்பப் பெறவேண்டும் எனக் கல்வியாளர்கள் கோருகிறார்கள்

மத்திய அரசின் கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணிபுரிய விரும்புபவர்களுக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வு (TET)கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் ஒன்றிலிருந்து எட்டாம் வகுப்பு வரை பணியாற்ற விரும்பும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET)தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

கடந்த ஆண்டு இரண்டு முறை இத்தேர்வு நடத்தப்பட்டது. தற்போது வரும் ஆகஸ்ட் 17, 18 தேதிகளில் மீண்டும் TETதேர்வு நடைபெறும் என்று ஆசிரியர்கள் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள கடந்த ஆண்டுக்கான காலிப் பணியிடங்கள், இந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட இடங்கள் உள்பட மொத்தம் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் TET தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.

இந்த ஆண்டு முதல், பணி நியமன முறையில் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. முதலில் TET தேர்வு நடத்தப்பட்டு அதில் 60 சதவீதமும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களும் பெற்றவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக கருதப்படுவார்கள். ஆசிரியர் காலிப் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும்போது, TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தங்களது தகுதித் தேர்வு மதிப்பெண்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர் பணியைப் பொருத்தவரை (ஒன்று முதல் ஐந்து வகுப்புகளுக்கு), பிளஸ் டூ மதிப்பெண்கள், ஆசிரியர் கல்விக்கான டிப்ளமோ பட்டம் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) மதிப்பெண்கள் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பட்டதாரி ஆசிரியர்களைப் பொருத்தவரை, பிளஸ் டூ மதிப்பெண், பட்டப் படிப்பு மதிப்பெண், பிஎட் மதிப்பெண் சான்றிதழ்களின் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் அனைத்துப் பிரிவினருக்கும் குறைந்தபட்சம் தேர்ச்சி மதிப்பெண் 60 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (எஸ்.சி), பழங்குடியின வகுப்பினர் (எஸ்.டி.), இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓ.பி.சி.), மாற்றுத் திறனாளிகள் போன்றோருக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் பணி நியமனம் வழங்கலாம் என்று ஆசிரியர் கல்விக்கான தேசியக் கவுன்சில் (NCTE) கூறியிருக்கிறது. ஆனால், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவு மக்களுக்கு தமிழக அரசு மதிப்பெண் தளர்வு வழங்காதது இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிரானது என்று கூறப்படுகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் காலிப் பணியிடங்களில் ஆசிரியர்களை நியமிப்பதற்கான தகுதியை நிர்ணயித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை கடந்த ஆண்டு (2012) அக்டோபர் 5-ஆம் தேதி அரசாணை எண்.252-ஐ வெளியிட்டது. இந்த அரசாணையில், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தகுதி நிர்ணயிக்கப்படவில்லை. அதனால், இந்த அரசாணை இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும் இதனைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் அதன் அடிப்படையிலான பணி நியமனத்தில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை சார்பில் சென்னையில் சமீபத்தில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

“மத்திய அரசு தனது அலுவலகக் குறிப்புகளில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வழிகாட்டுதலைக் கொடுத்திருக்கிறது. எந்தக் காரணத்தைக் கொண்டும் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மக்களின் பணியிடங்கள் காலியாக இருக்கக்கூடாது என்பதே அது. அவற்றிலிருந்து மாநில அரசுகள் இடஒதுக்கீட்டுக் கொள்கைகளை உருவாக்கிக் கொள்ளலாம். அதாவது, அவற்றைவிட அதிகமான சலுகைகளை வழங்கலாமே தவிர, சலுகைகளை மறுப்பதற்கு மாநிலங்களுக்கு உரிமையில்லை. அரசாணை எண்.252 இடஒதுக்கீட்டை மறுத்து, ‘தரத்தை’ப் பற்றி மட்டுமே பேசுகிறது. இது சரியல்ல” என்கிறார், பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

“இடஒதுக்கீட்டுக்கு எதிரான அரசாணையை திருத்தி அமைக்கவேண்டும். எஸ்.டி., எஸ்.சி. பிரிவினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அத்துடன் மதிப்பெண்களிலும் அவர்களுக்கு சலுகை காட்ட வேண்டும். மிகவும் பிற்பட்ட பகுதிகளிலும், பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளிலும் உள்ளூரைச் சேர்ந்தவர்களுக்கு பணி நியமனம் அளிக்க வேண்டும்” என்கிறார், இந்திய அரசின் முன்னாள் செயலர் பி.எஸ்.கிருஷ்ணன்.

தகுதியும், இடஒதுக்கீடும் என்றுமே முரணாக இருந்ததில்லை. வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் பிரதிநிதித்துவமே இடஒதுக்கீடு ஆகும். உரிய சூழலும், தகுந்த பயிற்சியும் வழங்கப்பட்டால் யார் வேண்டுமானாலும் தகுதி உடையவர் ஆகலாம். ஆசிரியர் தகுதித் தேர்விலும், அதன் அடிப்படையிலான பணி நியமனத்திலும் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய மதிப்பெண் தளர்வு வழங்கவேண்டும். சமூக நீதியைக் காக்கும் பொருட்டு இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள இடஒதுக்கீட்டு உரிமையும், தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கையும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்கிறார்கள் கல்வியாளர்கள்.

“அரசாணை எண்.252 திரும்பப் பெறப்பட்டு, உரிய திருத்தங்களுடன் புதிய அரசாணை வழங்கப்படவேண்டும். ஏற்கெனவே இருக்கும் இடஒதுக்கீட்டுக் கொள்கையை ஆசிரியர்கள் நியமனத்திலும் கடைப்பிடிக்கவேண்டும். பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு அளிப்பது என்பது தரத்தில் பின்தங்கியது ஆகாது” என்கிறார், கல்வியாளர் வி.வசந்திதேவி.

அரசாணை எண்.252 தீர்மானித்துள்ள தகுதியின் அடிப்படையில், ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் பின்பற்றப்பட்டுள்ள இடஒதுக்கீட்டு வழிமுறை தன்னிச்சையானது என்பதே ஒட்டுமொத்தக் கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பின்பற்றுவது போல இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக குறைந்தபட்சத் தகுதி மதிப்பெண் நிர்ணயிக்கவேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

தங்களது கோரிக்கைகளையும், தீர்மானத்தையும் வலியுறுத்தி, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு மனுவும் அளித்திருக்கிறார்கள்.

ஒரே மாணவருக்கு இரண்டு "டிசி'கள் கிடைக்கும் வாய்ப்பு பெற்றோர் ஓர் உறுதிமொழி எழுதிக் கொடுத்தாலே பள்ளியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற முறையால் உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து காட்டவும் வாய்ப்புள்ளது.

"மாணவர்களின் வயதிற்கு ஏற்ப கல்வி முறை திட்டத்தால், ஒரே மாணவருக்கு இரண்டு "டிசி'கள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்,'' என கல்வி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.மத்திய அரசின் குழந்தைகளுக்கான கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்கீழ், அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும், இடைநிற்றலை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கில், ஒரு மாணவரின் வயதிற்கு ஏற்ப, தகுந்த வகுப்புகளில் சேர்க்கலாம், என உத்தரவிடப்பட்டது. இதையொட்டி, ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளியில், 8ம் வகுப்பு வரை சேர்க்கும்போதும் (மாற்றுத்திறனாளி மாணவருக்கு 16 வயது வரை) அந்த மாணவரிடம் "டிசி' (மாற்றுச் சான்று) கேட்டு, கட்டாயப்படுத்தக் கூடாது .மாணவரின் பிறந்த தேதி தொடர்பாக, அவரது பெற்றோர் ஓர் உறுதிமொழி எழுதிக் கொடுத்தாலே பள்ளியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

இதனால், சம்மந்தப்பட்ட அந்த மாணவர் இடைநின்றவரா, எந்த பள்ளியில் படித்தவர், பெற்றோர் குறிப்பிடும் வயது சரியானதா என்ற விவரம் தெரியாமல் போக வாய்ப்புள்ளது. மேலும், பழைய மற்றும் புதிய பள்ளிகளில் ஒரே மாணவருக்கு இரண்டு "டிசி'கள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும், என கல்வி அதிகாரிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

வயதுக்கு ஏற்ப பள்ளிகளில் சேர்க்கப்படும் குழந்தைகளின் விவரங்களை ஆய்வு செய்ய, கல்வி அலுவலர் குழு ஏற்படுத்த வேண்டும். ஒரு பள்ளியில் இருந்து, மற்றொரு பள்ளியில் சேரும் மாணவருக்கு, பழைய மற்றும் புதிய பள்ளிகள்என இரண்டு இடங்களிலுமே "டிசி'கள் இருக்க வாய்ப்புஏற்படும்.
இதை தவறாக பயன்படுத்தவும், உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து காட்டவும் வாய்ப்புள்ளது. இதை கல்வி அதிகாரிகள் வரைமுறைப்படுத்த வேண்டும்.

ரூ. 750 தனி ஊதியம் குறித்து தமிழ்நாடு அரசு நிதித்துறை(சிஎம்பிசி) கடித எண் 8764 சிஎம்பிசி 2012-1 நாள் 18.04.12 ல் பக்கம் 2 ல் பத்தி 2(ஆ) ல் கொடுக்கப்பட்டுள்ள விளக்கம்

ஆ) மேற்குறிப்பிட்டுள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு அனுமதிக்கப்படும்தனி ஊதியம் ரூ.750 ஆண்டு உயர்வுக்கும் அகவிலைப்படிக்கும் ஓய்வூதியத்திற்கும்கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இவ்வகை ஆசிரியர் பணியிடங்களில்இருந்து பதவி உயர்வு பெற்றுசெல்லும் ஆசிரியர்களுக்கு உயர்பதவியில் ஊதியம் நிர்ணயம் செய்யும் போதுஇத்தனி ஊதியம் அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அதன் பின்னர்உயர்பதவியில் இத்தனி ஊதியம் அனுமதிக்கப்படக் கூடாது. என விளக்கம்கொடுக்கப்பட்டுள்ளது. 

இதில் சந்தேகம் என்னவென்றால் பதவி உயர்வுக்கான ஊதியநிர்ணயத்தின் போது 3 சதவீதத்திற்கு மட்டுமே தனி ஊதியம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். 
21.11.11 ல் இடைநிலை ஆசிரியர் பதவியில் பெற்ற ஊதியம்
Pay 14030 + 2800 GP + 750 PP = Total = 17580
பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு நாள் 22.11.2011
பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு அனுமதிக்கப்படும் ஊதிய உயர்வுத் தொகை 
Pay 3 % 530 + 1800GP = 2330
22.11.2011 ல் பட்டதாரி ஆசிரியர் பதவியில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம்
Pay 15310 + 4600 GP = 19910
இதில் என்ன சந்தேகம் என்றால்
15310 என்பது 14030 + 530 + 750 என்பதன் கூட்டுத் தொகை.
இந்த 750 இதனுடன் சேருமா?
அப்படி சேர்க்கும் பட்சத்தில் கிரேடு ஊதியம் 4600 + 750 மொத்தம் 5350 என்றுஆகாதா?
ஒரு பதவி உயர்வின் போது 3 சதவீதம் ஊதிய உயர்வு என்பது மட்டும் அல்லாமல் 750ம் ஊதிய உயர்வாக கணக்கிடப்படாதா? அப்பொழுது ஒரு பதவி உயர்வின் போது 750 + 530 என 1280 ஊதிய உயர்வாகக் கிடைக்குமா?

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (CPS) இணைய வழியில் விவரங்களை தொகுக்க / பராமரிக்க 03.07.2013 அன்று அனைத்து மாவட்டங்களுக்கும் காஞ்சிபுரம், திருச்சி மற்றும் மதுரையில் மண்டலங்களில் ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது

எஸ்பிஐ(SBI) ஏடிஎம் கார்டுக்கு சேவைக் கட்டணம் அமல்

ஏடிஎம் அட்டையுடன் தொடர்புடைய எஸ்எம்எஸ் சேவைக்கு ஒரு காலாண்டுக்கு ரூ.15 கட்டணமாக ஆண்டுக்கு ரூ.60 வசூலிக்கும் புதிய திட்டத்தை பாரத ஸ்டேட் வங்கி அமல்படுத்தியுள்ளது. ஏடிஎம் கார்டில் பணம் எடுக்கும்போதும், செலுத்தும்போதும் வாடிக்கையாளர்களின் செல்பேசியில் வங்கி மூலம் எஸ்.எம்.எஸ். அனுப்பப்படுகிறது. எனவே "எஸ்எம்எஸ் சேவைக்கு கட்டணம்' என்ற பெயரில் ஏடிஎம் கார்டுக்கு சேவைக் கட்டணம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல், மே, ஜூன் என முதல் மூன்று காலாண்டுக்கு சேவைக் கட்டணம் ரூ.15-ஐ வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து வங்கி பிடித்தம் செய்துள்ளது.

முதல் கட்டமாக நாடு முழுவதும் உள்ள 68 லட்சம் வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து இந்தத் தொகை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. முதலில் ஒவ்வொரு வாடிக்கையாளர் கணக்கிலிருந்தும் ரூ.15-ம், அதற்கு சேவை வரியாக ரூ.2-ம் என மொத்தம் ரூ.17 பிடித்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறு சில வாடிக்கையாளர் கணக்கிலிருந்து ரூ.17 பிடித்தம் செய்யப்பட்டது. ஆனால், பின்னர் சேவை வரி வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதால், ரூ.15 மட்டும் பிடித்தம் செய்யப்படுகிறது. தங்களது கணக்கிலிருந்து ரூ.17 பிடித்தம் செய்யப்பட்டவர்களுக்கு, ரூ.2-ஐ அவர்களது கணக்குக்கே திரும்ப அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என பாரத ஸ்டேட் வங்கியின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏற்கெனவே ஏடிஎம் கார்டுக்கு ஆண்டு பராமரிப்புக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள ரூ.102 என்பது தொடரும் என்றும் அதிகாரிகள் கூறினர். ஓசையின்றி அமல்: பாரத ஸ்டேட் வங்கிக்கு நாடு முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. அவற்றில் கோடிக்கணக்கானோர் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளனர். இவர்களில் 75 சதவீதம் பேர் ஏடிஎம் கார்டு வைத்துள்ளனர். இவர்கள் அனைவரிடம் இருந்தும் ஒரு காலாண்டுக்கு ரூ.15 வீதம் ஓர் ஆண்டுக்கு ரூ.60-ஐ சேவைக் கட்டணமாக பிடித்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தங்களது கணக்கிலிருந்து ரூ.15 அல்லது ரூ.17 பிடித்தம் செய்யப்பட்டிருப்பதைப் பார்த்து லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஊழியர்களுக்கு விலக்கு: பாரத ஸ்டேட் வங்கியின் ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் இந்த சேவைக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு முதல் கல்வி உதவித்தொகை மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு முதல் கல்வி உதவித்தொகை மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்படுகிறது. இது தொடர்பாக ஆவணங்களை மாணவர்களிடம் பெறுவது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு அறிவுரைகள் வழங்கப்பட்டன. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாணவ,மாணவிகளுக்கு ஆண்டு தோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை பெற தகுதியுள்ள மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து கல்வி மாவட்ட அளவில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆலோசனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.


இதில் ஆகஸ்டு 31ம் தேதிக்குள் தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் 6ம் வகுப்பு முதல் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி வரை பயிலுவதற்கு உரிய கல்வி உதவித்தொகை வழங்க பெற்றோரின் வருமான வரம்பு உள்ளிட்ட தகுதிகள் குறித்தும் விளக்கம் வ‌ழங்கப்படுகிறது

இதுவரை மாணவர்களுக்கு காசோலையாக வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகை இந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் மாணவர்களின் வங்கி கணக்குகளில் நேரிடையாக சேர்க்கப்பட உள்ளது. இதற்காக மாணவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்குவது, ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களும் தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுப்பது, விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் முறை, விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் உள்ளிட்டவை குறித்த ஆலோசனைகளும் வ‌ழங்கப்படுகிறது.

வங்கி மூலம் உதவித்தொகை: தலைமை ஆசிரியர்கள் அதிர்ச்சி

மத்திய, மாநில அரசுகள், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் துவங்கி, அயல்நாடு சென்று கல்வி கற்பது வரை, கல்வி உதவித்தொகை, ஊக்கத்தொகை உள்ளிட்ட சலுகை மற்றும் திட்டங்களை செயல்படுத்துகிறது.

தமிழகத்தில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்கள் நலத்துறை சார்பில், மூன்றாம் வகுப்பு முதல், மருத்துவப் படிப்பு வரை, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் துறை சார்பிலும், உழவர் பாதுகாப்பு திட்ட தொழிலாளர்களின் குழந்தைகள், அமைப்புசாரா தொழிலார்கள் துறை சார்பில், அவர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 

அவை, பணமாகவே கடந்த காலங்களில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. கடந்தாண்டு முதல், கல்லூரி மாணவர்களின் பெயரில் வங்கி கணக்கு துவங்கப்பட்டு, கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால், நடப்பாண்டில் வழங்கப்படும், கல்வி உதவி அனைத்தும், பள்ளி மாணவருக்கும், வங்கி கணக்கு துவங்கி, அதன் மூலமே வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நடப்பாண்டு, மோசடியை தவிர்க்க, மாணவர்கள் பெயரில், "நெட் பேங்கிங்" வசதியுள்ள வங்கிகளில், மாணவர்களின் பெயரில் தந்தையுடன், கூட்டு அக்கவுண்ட் துவங்கப்படும்.

மாணவர்கள் வங்கிக்கு சென்று,கணக்கு துவங்க செல்ல வேண்டியதில்லை.
வங்கியாளர்களே, சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று, வங்கி கணக்கை துவங்கி கொடுப்பர். பின், எங்களது துறையில் இருந்து பணம் பரிவர்த்தனை, மாணவர்களின் கணக்கில் சேர்க்கப்படும்.

"நெட் பேங்கிங்" வசதியில்லாத பகுதி மாணவர்களுக்கு, தபால் அலுவலகங்களில் கணக்கு துவங்கி, உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்யப்படும். மேலும், மாணவரின் பெற்றோர் செய்யும் தொழில் குறித்த விவரங்களை, புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தில், வி.ஏ.ஓ., சான்று பெற வேண்டும்.

புதிய அனைவருக்கும் கல்வி இயக்கக (SSA) மாநில திட்ட இயக்குநராக திரு.சி.என்.மகேஸ்வரன், இ.ஆ.ப அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்

புதிய அனைவருக்கும் கல்வி இயக்கக மாநில திட்ட இயக்குநராக திரு.சி.என்.மகேஸ்வரன், இ.ஆ.ப அவர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனெவே அனைவருக்கும் கல்வி இயக்கக மாநில திட்ட இயக்குநராக பணிபுரிந்த திரு.முகமது அஸ்லாம், இ.ஆ.ப அவர்களை சிறுபான்ன்மை நலத்துறை ஆணையாளராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடக்கக் கல்வி துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு மாவட்ட அளவில் விடுமுறை பட்டியல் அறிவிப்பதில் இழுபறி, ஆசிரியர்கள் கவலை

இந்த கல்வியாண்டில் பள்ளி திறந்து ஒருமாதம் கடந்த நிலையில் தொடக்க கல்வி அதிகாரிகள் ஆண்டு முழுவதும் செயல்பட வேண்டிய பள்ளி நாட்களை திட்டமிடுவதில் மெத்தனம் காட்டுவதாக ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஆண்டு திட்டம் எனும் விடுமுறைப்பட்டியல் வெளியிடப்படாததால் குழப்பமடைந்துள்ளனர். இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளிக்கல்வித்துறை தனக்கென நாட்காட்டிவெளியிட்டு உள்ளது. ஆனால் தொடக்கக்கல்வித்துறை பொறுத்துவரையில் ஒவ்வொரு மாவட்ட அளவில் தயாரிக்கப்பட்டு அதையே அந்தந்த மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை பட்டியல் நடைமுறைப்படுத்ததால், பள்ளி வேலை நாட்கள் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் நீட்டிக்கிறது. 

தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் சனி பள்ளி வேலை நாள் என்பதை முன்கூட்டி குறிப்பிட்டு கால இடைவெளி விட்டு வெளியிடாமல், வியாழன் அல்லது வெள்ளி மதியத்திற்கு மேலே உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் அறிவிப்பதை தவிர்த்து முன் கூட்டியே திட்டமிட்டு அறிவிக்க ஆசிரியர்கள் கோருகிறார்கள். இவ்வாறு கடைசி நேர அறிவிப்புகளால் ஆசிரியர்கள் மத்தியில் மன உளைச்சலும், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் மனப்பான்மை குறைவதுடனும் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் என்று ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர். எனவே இந்த பிரச்சனையில் தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளமாறு ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

பட்டியல் அறிவிக்கப்படாததால் மாணவர்கள் குழப்பம் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் எவை?

தமிழகத்தில் பள்ளி கல்வித் துறையில் ஒவ்வொரு ஆண்டும் 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும், 50 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படுவது வழக்கம். இந்த அறிவிப்பு பள்ளிகள் திறக்கும் முன் செய்யப்பட்டு தரம் உயர்த்தப்படும் பள்ளிகள் விவரம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும். இதனால் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு தகுதி உள்ள ஆசிரியர்கள் உரிய பள்ளிகளுக்கு மாறுதலாகி செல்ல வாய்ப்பு கிடைக்கும். இதுபோல் கிராமப்புற மாணவர்கள் தங்கள் ஊருக்கு அருகே உள்ள பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டால் அங்கேயே உயர்நிலை அல்லது மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் வாய்ப்பும் கிடைக்கும். இந்த கல்வி ஆண்டில் வழக்கம் போல் 100 மற்றும் 50 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என தமிழக முதல்வரால் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியாகி கிட்டத்தட்ட 2 மாதங்கள் ஆன பிறகும் தரம் உயரும் 150 பள்ளிகள் எவை எவை என்ற பட்டியல் விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை. பள்ளிகள் கடந்த 10ஆம் தேதியே திறக்கப்பட்டுவிட்டது. 8ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கடந்த 3 வாரபடிப்பு முடிந்துவிட்டது. இதுபோல் பிளஸ் 1 மாணவர்களுக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சேர்க்கை முடிந்து வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 3 முதல் 4 பள்ளிகளின் பட்டியல் தரம் உயர்த்தப்படுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டு பல மாதங்கள்ஆகி விட்டன. இந்தப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு செயல்படும் என இனி அறிவிக்கப்படும் போது வகுப்புகள் தொடங்கிவிட்ட நிலையில் இப்பள்ளிகளில் புதிய மாணவர்களை சேர்ப்பது மிகுந்த சிரமமான செயலாக இருக்கும் என ஆசிரியர்கள் கருதுகின்றனர். ஏற்கனவே அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் 10 சதவீதம் மாணவர்களையாவது உயர்த்த வேண்டும் என கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வகுப்புகள் தொடங்கப்பட்ட பின் புதிதாக தரம் உயர்த்தப்படும் 50 மேல்நிலை மற்றும் 100 உயர்நிலைப்பள்ளிகளில் மாணவர்கள் எப்படி சேர்வார்கள் என்ற கவலை ஆசிரியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்பிற்கு இடம் கிடைக்காமல் பல மாணவர்கள் பாலிடெக்னிக், ஐடிஐ என வேறு தொழிற்கல்வியை தேர்வு செய்துள்ளனர். இவர்களும் புதிதாக தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு இனி திரும்புவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 'காலத்தே பயிர் செய்' என்பது தான் கல்வி கற்பிப்பதின் தாரகமந்திரம். எனவே தேவையான நேரத்திற்கு ஏற்ப தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளை அடை யாளம் காண தவறி வரும் கல்வித்துறை இனியாவது காலம் தாழ்த்தாமல் பட்டியலை வெளியிட வேண்டும் என ஆசிரியர்களும் பெற்றோரும் மாணவர்களும் எதிர்பார்க்கின்றனர்.

27/06/2013

தகுதி வாய்ந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் பட்டியல் வெளியீடு

நடப்பு கல்வி ஆண்டில், மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு தகுதி வாய்ந்தஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளின் பட்டியலை, ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம்வெளியிட்டு உள்ளது. மாநிலம் முழுவதும், 560 ஆசிரியர் பயிற்சிப்பள்ளிகள் (டீச்சர் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட்) உள்ளன. இவற்றில், பல பள்ளிகள், மூடநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில், ஆசிரியர்பயிற்சிப் படிப்பில் சேர, 4,500 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஜூலை முதல்வாரத்தில், "ஆன்-லைன்" வழியாக, மாணவர் சேர்க்கை கலந்தாய்வுநடத்தப்படுகிறது. இந்நிலையில், மாணவர் சேர்க்கைக்கு, தகுதி வாய்ந்த ஆசிரியர்பயிற்சிப் பள்ளிகள் எவை என்ற விவரங்களை, ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம், தன்இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. www.tnscert.org என்ற இணைய தளத்தில்,ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொருபள்ளியின் முகவரி, சம்பந்தப்பட்ட பள்ளிக்கு, அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களின்எண்ணிக்கை உள்ளிட்ட பல விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இது, ஆசிரியர்பயிற்சிப் படிப்பில் சேர முடிவு செய்துள்ள மாணவருக்கு, பெரிதும் உதவியாகஇருக்கும்.

26/06/2013

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,அரியலூர் மாவட்ட கிளையின் சார்பாக இயக்கத்தின் 7அம்சகோரிக்கையை வென்றெடுக்க தொடர் மறியல் போராட்ட ஆயத்த விளக்க மாநாடு 30.06.2013 அன்று நடைபெறுகிறது. ஒன்று கூடுவோம் !வென்றுகாட்டுவோம்!!

            

மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த மாநில ஆதார வள மையம்: ஜெயலலிதா திறந்து வைத்தார்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு சம வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் வகையிலும், மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையிலும், அவர்களிடையே தன்னம்பிக்கையை வளரச் செய்யும் வகையிலும், மாற்றுத் திறனாளி குழந்தைகள் மட்டுமல்லாமல் அக்குழந்தைகளின் பெற்றோர்களும் அறிந்து கொள்ளும் வகையில் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ் நாட்டில் உள்ளடக்கிய கல்விக் கான மாநில ஆதார வள மையம் ஒன்று சென்னையில் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றப் பேரவையில் அறிவித்திருந்தார். 

அதன்படி, அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் சென்னை, சாந்தோமில் 46 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மாற்றுத் திறன்கொண்ட குழந்தைகளுக்கான உள்ள டக்கிய கல்விக்கான மாநில ஆதார வள மையம் நிறுவப்பட்டுள்ளது. 

மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளின் குறைபாட்டினைக் கண்டறிந்து சிறப்பு மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்கள் மூலமாகத் தகுந்த சிகிச்சை அளிக்கவும், தேவையான உபகரணங்கள், சான்றிதழ்கள், உதவித் தொகை, போன்றவற்றை வழங்குவதற்கும், அவர்களுடைய வாழ்க்கையை சிறப்புற அமைத்துக் கொள்ள தக்க ஆலோசனைகளை வழங்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா 25.6.2013 அன்று காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். 

அகில இந்திய அளவில் முதன் முறையாக அமைக்கப்பட்டுள்ள இந்த உள்ளடக்கிய கல்விக்கான மாநில ஆதாரவள மையத்தில், இயன்முறை பயிற்சி, பேச்சுப் பயிற்சி, பார்வை தூண்டல், மாற்றுத் திறனாளி குழந்தைகள் தொடர்பு கொள்ள உதவும் சாதனங்கள், குழந்தைகளின் குறைபாடுகளின் தன்மையை அளவிடும் மையம், பெற்றோர்களுக்கான ஆலோசனை மையம், அனைத்து மாவட்டங்களிலிருந்து வரும் ஆசிரியர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான பயிற்சி மையம், சிறப்பு புத்தகங்கள் கொண்ட நூலகம், தேசிய நிறுவனங்களின் தகவல் மையம் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

மாணவச் சமுதாயத்திற்குத் தேவையான வாய்ப்பும் வசதியும் வழங்கி, அவர்களின் கல்வி கற்றலை ஊக்குவித்திடவும், தரமான கல்வியினை வழங்கிடவும், பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் இன்றியமையாதவை என்பதைக் கருத்தில் கொண்டு முதல்- அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பள்ளிகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தப்படுத்தி வருகிறது. 

அதன்படி, 91 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வகுப்பறைகள், ஆய்வகங்கள், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் சுற்றுச் சுவர் என 87 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான உட்கட்டமைப்பு வசதிகள்; 

நடுநிலைப் பள்ளிகளிலிருந்து உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட கோயம்புத்தூர் மாவட்டம் சரவணம்பட்டி, தர்மபுரி மாவட்டம் பொம்ம ஹள்ளி, ஈரோடு மாவட்டம் சலங்கபாளையம் மற்றும் காசிப்பாளையம், ராமநாதபுரம் மாவட்டம் கும்பரம் மற்றும் செவ்வூர், திருப்பூர் மாவட்டம் அருள்புரம், காஞ்சிபுரம் மாவட்டம் கடப்பாக்கம் மற்றும் வள்ளுவப்பாக்கம், திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி மற்றும் தேவரப்பன்பட்டி ஆகிய 11 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 5 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்கள்; 

நாகப்பட்டினத்தில் 17 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகக் கட்டடம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டம், மருங்காபுரியில் 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகக் கட்டடம்; 

ஆசிரியர் கல்வியை மேம்படுத்தும் வகையில் திருநெல்வேலி மாவட்டம், சமூகரெங்கபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டம், ஜோகில்பட்டி ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடங்கள்; பொது மக்களிடம் புத்தகம் வாசிக்கும் திறனை ஊக்குவிக்கும் நோக்கத்தின் அடிப்படையில் திருச்சிராப்பள்ளி மற்றும் ஈரோடு மாநகரங்களில் 5 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன நூலகக் கட்டடங்கள்; 

கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களிலுள்ள குழந்தைகளுக்கு கூடுதல் கவனத்துடன் தரமான கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டம் ஜி. அரியூர், ரிஷிவந்தியம் மற்றும் கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் நல்லூர், சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஆகிய 6 இடங்களில் 17 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாதிரி பள்ளிகளுக்கான புதிய கட்டடங்கள்; 

என மொத்தம், 117 கோடியே 77 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 91 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் 11 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 6 மாதிரிப் பள்ளிகள், 2 தொடக்கக் கல்வி அலுவலகங்கள், 2 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், 2 மாவட்ட நூலகங்கள் ஆகிய வற்றிற்கான புதிய கட்டடங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா 25.6.2013 அன்று திறந்து வைத்தார்.

SSA- 2013-14ஆம் கல்வியாண்டிற்கான தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான முதல் CRC 06.07.2013 அன்று தொடங்குகிறது, 40% ஆசிரியர்கள் கலந்து கொள்ள உத்தரவு.

தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான 2013-14ஆம் கல்வியாண்டின் முதல் CRC 06.07.2013 அன்று தொடங்குகிறது. 

இப்பயிற்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட குறுவள மையங்களில் 40% ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற உத்தரவிடப்பட்டுள்ளது. தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி Reinforecment Training on CCE in SABL என்ற தலைப்பிலும், உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி Reinforecment Training on CCE என்ற தலைப்பிலும் நடைபெற உள்ளது.

பள்ளிக்கல்வி - 2013-14 கல்வியாண்டில் மாணவ / மாணவியருக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்குவது சார்பான செயல்முறைகள்

25/06/2013

பெரம்பலூர் மாணவிக்கு கலெக்டர் பாராட்டு : ஐ.எஃப்.எஸ்., தேர்வில் 56வது இடம்

இந்திய வனத்துறை பணி தேர்வில் தேர்ச்சி பெற்று 56வது இடத்தை பிடித்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஷாக்கிராபேகத்தை கலெக்டர் தரேஷ்அஹமது பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். பெரம்பலூர் மாவட்டம், தொண்டமாந்துறை கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் அப்துல்ரஷீத். இவரது மகள் ஷாக்கிராபேகம். 2012ம் ஆண்டுக்கான இந்திய வனத்துறை பணி தேர்வில் 56வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.இவர் தனது தொடக்கக் கல்வியை தொண்டமாந்துறை பஞ்., யூனியன் துவக்கப்பள்ளியிலும், ஆறாம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.ஸி., வரை தொண்டமாந்துறை அரசு உயர்நிலைப் பள்ளியிலும், மேல்நிலைக்கல்வியை பெரம்பலூர் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் படித்தார். இதைத்தொடர்ந்து திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரியில் பி.எஸ்.சி., அக்ரி பட்டப்படிப்பு முடித்தார். தொடர்ந்து ஐ.சி.ஏ.ஆர்., நுழைவுத்தேர்வில் அகில இந்திய அளவில் மூன்றாம் இடம் பெற்று, டில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் எம்.எஸ்.சி., ஜெனடிக்ஸ் மற்றும் பி.ஹெச்.டி., ஜெனடிக்ஸ் படிப்பு முடித்து, குஜராத்தில் உள்ள தேசிய நிலக்கடலை ஆராய்ச்சிமையத்தில் விஞ்ஞானியாக பணிபுரிந்து வருகிறார். இவர் 2012ம் ஆண்டுக்கான இந்திய வனத்துறை பணி தேர்வில் 56வது இடத்தை பிடித்து சாதனை படைத்து பெரம்பலூர் மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.இந்திய வனத்துறை பணி தேர்வில் தேர்ச்சி பெற்று 56வது இடம் பெற்றதற்காக பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தரேஷ்அஹமது, ஷாக்கிராபேகத்தை பாராட்டி, வாழ்த்து தெரிவித்து பரிசு வழங்கினார்.அப்போது அவர் தெரிவித்ததாவது:இந்திய வனப்பணி தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷாக்கிராபேகம் தேர்ச்சி பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்காக பயிற்சி வகுப்பு அளித்தது. சென்ற ஆண்டில் 80க்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்று அரசு பணியில் இணைந்துள்ளனர். இந்நிலையில், இந்தாண்டு பயிற்சி பெற்று வரும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு இவர் ஒரு உந்துகோலாக விளங்குவார். பெண்ணாக இருந்தாலும் உயர்கல்வி பெற்று இந்திய வனப்பணி தேர்வில் பங்கு பெற தங்கள் மகளுக்கு அனைத்து ஒத்துழைப்பும் வழங்கிய இவரின் தாய், தந்தையரை நான் பாராட்டுகிறேன்.பெரம்பலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் எஸ்.எஸ்.எல்.ஸி., ப்ளஸ் 2 வகுப்பு வரை படித்தால் போதும் என்ற பெற்றோரின் எண்ணத்தை இவரது வெற்றி மாற்றும் என நம்புகிறேன்.இவரை முன்னுதாரணமாக கொண்டு பெரம்பலூர் மாவட்ட பெற்றோர் அனைவரும் தங்கள் பெண் குழந்தைகளை உயர்கல்வி கற்று, சாதனையாளர்களாக உயர் பணிகளில் ஈடுபட அனைத்து முயற்சிகளையும், ஒத்துழைப்பையும் அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் ஷாக்கிராபேகத்தின் பெற்றோர் அப்துல்ரஷீத், ஷாஜாதிபேகம் ஆகியோர் உடனிருந்தனர்.

பி.ஏ. ஆங்கிலம் (சி.ஏ.) பட்டம் பி.ஏ. ஆங்கிலத்துக்கு நிகரானது: உயர்கல்வித்துறை அரசாணை வெளியீடு

பி.ஏ. ஆங்கிலம், தமிழ் (கணினி பயன்பாட்டியல்) பட்டங்கள், பி.ஏ. தமிழ், ஆங்கிலம் பட்டங்களுக்கு நிகரானது என்று உயர் கல்வித்துறை சார்பில் அண்மையில் வெளியிடப்பட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கும் கணினிமயம், எதிலும் கணினிமயம் என்ற நிலை உருவாகிவிட்ட நிலையில், தமிழ், ஆங்கிலம் பட்டம் பெறும் மாணவ, மாணவிகளுக்கு கணினி அறிவையும் சேர்த்து அளிக்கும் வகையில் பெரும்பாலான பல்கலைக் கழகங்களில் பி.ஏ. தமிழ் (கணினி பயன்பாட்டியல்), பி.ஏ. ஆங்கிலம் (கணினி பயன்பாட்டியல்) ஆகிய பாடப்பிரிவுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த பாடங்களை படித்தால் உயர் கல்வி பெறுவதில் சிக்கலும், குழப்பமான நிலையும் இருந்து வந்தது. இந்நிலையில், உயர் கல்வித்துறை சார்பில் அண்மையில் வெளியிடப்பட்ட ஆணையில் பி.ஏ. தமிழ் (கணினி பயன்பாட்டியல்), ஆங்கிலம் (கணினி பயன்பாட்டியல்) ஆகியவை பி.ஏ. தமிழ், ஆங்கிலம் பட்டங்களுக்கு நிகரானது என அறிவித்துள்ளது.இதன் மூலம் பி.ஏ. தமிழ் (கணினி பயன்பாட்டியல்), ஆங்கிலம் (கணினி பயன்பாட்டியல்) பட்டங்களை பெறுவோர், பி.ஏ. தமிழ், ஆங்கிலம் பட்டங்களை பெறும் மாணவ, மாணவிகளுக்கு நிகராக உயர் கல்வியை தொடர வழிவகை செய்யப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவு வரவேற்க்கத்தக்கது என்றும் கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைசட்டம்:செயல்படுத்தாத தனியார் பள்ளிகள்

குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி சட்டம் 2009-ன் படி தமிழக அரசு வெளியிட்டுள்ள அணை எண்:60 பள்ளிக்கல்வி துறை வெளியிட்டுள்ள தேதி 01.14.2013 இன் படி நுழைவு வகுப்பில் சேர்வதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிந்த பிரிவினருக்கான (குடும்பதலைவரின் ஆண்டு வருமானம் ரூ 2 இலட்சம் மற்றும் பெற்றோர் இல்லாதோர், மாற்றுத்திறனாளிகள், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்,துப்புரவு பணியாளர்கள் குழந்தைகள், எஸ்.சி,எஸ்.டி,எம்.பி.சி,மற்றும் பி.சி ஆகிய பிரிவுகளை சேர்ந்த குழந்தைகளுக்கு)25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி தனியார் மெட்ரிகுலேசன்பள்ளிகளில் நுழைவு வகுப்புகளான எல்.கே.ஜி மற்றும் ஆறாம் வகுப்புகள் துவங்கும் பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை சேர்த்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இத்தகுதி உடைய பெற்றோர்கள் தங்கள் வசிக்கும் இடத்தில் இருந்து 1 கீ.மீ அல்லது 3 கீ.மீ தொலைவிற்குள் உள்ள பள்ளிகளில் சேர்த்திடலாம் என்றும். விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன்,15 தேதி என்றும். முடிவுகள் ஜூன்,20 தேதி வெளியிடப்படும் என்று முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து அறிவிப்பு வெளியாகி இருந்தது.இத்திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் ஒவ்வெரு மாவட்டத்திற்கும் சுமார் 1000 த்தில் இருந்து 5000 பேர் வரையிலான விண்ணப்பங்கள் விண்ணப்பித்தனர். இந்த விண்ணப்பங்களை சம்பந்த பட்ட பள்ளிக்கு அனுப்பபட்டு ஜூன்,20 தேதி முடிவு தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.இதனை கண்ட பெற்றோர்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் அருகில் இருக்கும் மெட்ரிகுலேஷேன் பள்ளியில் தங்களது பிள்ளைகளை சேர்த்து விடலாம் என்ற கனவில் கிராமநிர்வாக அலுவலகம்,வருவாய் ஆய்வாளர்,வட்டாட்சியர் ஆகியோரிடம் சென்று பலநாட்கள் காத்திருந்து சாதி மற்றும் வருமான சான்றிதழ்களை வாங்கி பூர்த்தி செய்து மாவட்டமுதன்மை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கஷ்டப்பட்டு ஒரு வழியாக சமர்பித்தனர்.அவ்வாறு விண்ணப்பம் செய்யப்பட்ட பெற்றோர்கள் பள்ளியில் இருந்து அறிவிப்பு வெளியாகும் என்று காத்திருந்தனர்.ஆனால் காத்திருந்ததுதான் மிச்சம் அறிவிப்பு வரவில்லை.இது சம்மந்தமாக முதன்மை கல்வி அலுவலரை சந்தித்து கேட்டால்,பள்ளிகளில் இருந்து தான் அறிவிப்பு வரும் என்று கூறி ஒதுங்கிகொண்டார்கள்.பள்ளி நிர்வாகத்திடம் சென்று கேட்டால் பல்வேறு காரணங்களை கூறி மாணவர்களின் பெற்றோர்களை விரட்டி விடுவதிலேயே குறிக்கோளாக இருக்கின்றனர்.மேலும் சில பள்ளிகள் பிரின்சிபல் இல்லை தலைவர் இல்லை என்று கூறி மாணவர்களின் பெற்றோர்களை அலைக்கழித்து வருகின்றனர்.மேலும் சில பள்ளிகள் பேருக்கு அவர்களுக்கு தெரிந்த மாணவர்கள் சிலரை மட்டும் சேர்த்து கொண்டு,மற்ற மாணவர்களை அலைக்கழித்து வருகின்றனர்.இது சம்மந்தமாக மாவட்ட முதன்மைகல்வி அலுவலகத்திடம் பெற்றோர்கள் புகார் தெரிவித்தால்.இது சம்மந்தமாக முதன்மை கல்வி அலுவலகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவிக்கின்றனர்.இச்சட்டத்தால் எந்த பெற்றோரும் பயனடைய போவதில்லை மாறாக மாணவர்களின் பெற்றோர்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.அரசு இச்சட்டம் அறிவித்தால் மட்டும் போதாது.இச்சட்டத்தை அமுல்படுத்த வேண்டுமானால் ஒரு பள்ளியின் மாணவர் சேர்கையில் இந்தனை சதவீதம் ஏழை மாணவர்கள் கண்டிப்பாக சேர்க்கவேண்டும் என்றும்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம் மாணவர்களை தேர்ந்தெடுத்து பள்ளிக்கு எழுத்து பூர்வமான அறிவிப்பு கொடுத்து மாணவர்களே சேர்க்கவேண்டும்.அதனை கண்காணிக்க வேண்டும்.மேலும் அப்படி செயல்படுத்தாத பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும்.மேலும் தற்போது செயல்படும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நகர் மற்றும் கிராமத்தில் இருந்து பல கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.அப்படி இருக்கும் போது 1 கிலோ மீட்டரில் இருந்து 3 கிலோ மீட்டர் என்பதை மாற்றி 7 கிலோ மீட்டர் சுற்றளவுள்ள பள்ளிகள் என்று அறிவித்தால் பல ஏழை மாணவர்கள் கல்வியறிவு பெறுவார்கள்.

9ம் வகுப்பு பாடத்திட்டத்தில் உடற்கல்வி தனிப்பாடமாக சேர்ப்பு

முப்பருவ பாடத்திட்ட முறையின் கீழ் 9ம் வகுப்பு பாடத்திட்டத்தில் உடற்கல்வியும் ஒரு பாடமாக சேர்க்கப்பட்டுள்ளதால் விளையாட்டுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று உடற்கல்வி இயக்குனர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 9ம் வகுப்புக்கும் முப்பருவ பாடத்திட்ட முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் உடற்கல்வி பாடத்திற்கும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தற்போது 6 முதல் 9ம் வகுப்பு வரை முப்பருவ பாடதிட்ட முறையின்படி தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையில் பிற பாடங்களை போன்று உடற்கல்வியும் 6 வது பாடமாக சேர்க்கப்பட்டுள்ள தால் அதற்கேற்ற முறையில் உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் செயல்படுதல் வேண்டும். ஆண்டு தொடக்கத்தில் பள்ளி மாணவர்கள், மாணவிகளை உட்புற விளையா ட்டு போட்டிகள் நடத்துவதற்கு ஏற்றவாறு அணி அணியாக பிரித்து விளையாட்டுகளை தேர்வு செய்து முதல் பருவம் முதல் மூன்றாம் பருவம் வரை வெவ்வேறு கால கட்டங்களில் மாலை நேரங்களில் போட்டிகளை நடத்தி ஆண்டு இறுதியில் 'பள்ளி விளையாட்டுவிழா' நடத்தி பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட வேண்டும் என்று கல்வித்துறையின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றாந்தாய் போக்குடன் புறக்கணிக்கப்படும் தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்கள்,பதவி உயர்வு வாய்ப்பானது கட்டுப்படுத்தப்படுகிறது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்14 மற்றும் 16 ன்படி சம உரிமை மற்றும் வாய்ப்புகள் பறிக்கப்படுவதாககருதப்படுகிறது. இக்குறைகளை களைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

1. பள்ளிக் கல்வித் துறையில் பணியில் சேரும் பட்டதாரி ஆசிரியர்கள் பணிமூப்பு மற்றும் உயர்கல்வித் தகுதியின் அடிப்படையில் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் / முதுகலை பட்டதாரி ஆசிரியர் / வட்டாரவளமைய மேற்பார்வையாளர், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் /மாவட்ட கல்வி அலுவலர் / மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்,முதன்மைக் கல்வி அலுவலர் / இனை இயக்குனர், இயக்குனர் போன்ற பலஉயர் பதவிகளுக்கு பதவி உயர்வு பெற வழி வகை செய்யப்பட்டுள்ளது.ஆனால், அதே கல்வித் தகுதியுடன் ஒரே தேர்வு முறையில்தேர்ந்தெடுக்கப்பட்டு தொடக்கக் கல்வித் துறையில் பணியில் சேரும்பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பானது நடுநிலைப் பள்ளித்தலைமையாசிரியர் மற்றும் அதனையொத்த பணியிடமான உதவித்தொடக்கக் கல்வி அலுவலர் பதவியுடன் கட்டுப்படுத்தப்படுகிறது.மேலும், பட்டதாரி ஆசிரியர் தகுதியுடன் நேரடியாக உதவித் தொடக்கக்கல்வி அலுவலராக பணியில் சேருபவர்களுக்கு அவர்கள் பணிக்காலம்முழுவதும் பதவி உயர்வு வாய்ப்பு என்பது இல்லவே இல்லை.

2. தற்பொழுது சுமார் 125 – 150 மாணவர்கள் இருந்தாலே உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் நிலையில் அந்த ஒரு பள்ளியை மட்டும்நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ள உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி நிலையவிட, சுமார் 75 - 100 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின்கண்காணிப்பு, ஆய்வு மற்றும் சம்மந்தப்பட்ட ஆசிரியர்களின் நிர்வாகப்பொருப்பை வகிக்கும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களின் பதவி நிலை கீழே வைக்கப்பட்டுள்ளது.

3. தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளி/மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 6 – 8 வகுப்புகளுக்காக இயங்கிக்கொண்டிருக்கும் வட்டார வள மையங்களின் மேற்பார்வையாளர்பதவிக்கு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களைக்கொண்டே நிரப்பப்படுகிறது. தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின்எண்ணிக்கை பெரும்பான்மையாக உள்ள நிலையில், மேற்பார்வையாளர்பதவிக்கு தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் நடுநிலைப் பள்ளிதலைமையாசிரியர்கள் / பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மூலம்வாய்ப்பளிக்கப் படாதது ஏன் ?.

4. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பதவியானது தொடக்கக்கல்வித் துறைக்கு தொடர்பில்லாத உயர்நிலைப் பள்ளி / மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர்களுக்கே அளிக்கப்படுகிறது.இப்பணி விதிகள் அனைத்தும் பள்ளிக்கல்வித்துறை ஒன்றாகஇருந்தபொழுது வகுக்கப்பட்டது போல தோன்றுகிறது. தற்பொழுதுதொடக்கக் கல்விக்கென தனி இயக்ககம் உள்ள நிலையில், தொடக்கக்கல்வித்துறையிலும் பள்ளிக்கல்விதுறைப் போன்று தகுதிவாய்ந்தபட்டதாரி ஆசிரியர்கள் / தமிழாசிரியர்கள் / நடுநிலைப்பள்ளிதலைமையாசிரியர் / உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் என பலர்உள்ளனர். இந்த நிலையில், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்பதவியினை தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரிபவர்களுக்கே ஒதுக்கீடு செய்து, மேற்பத்தி 2 – ன்படி உயர்நிலைப் பள்ளிதலைமையாசிரியர் நிலைக்கு உயர்த்தப்பட்ட உதவித் தொடக்கக் கல்விஅலுவலர்கள் மற்றும் மேற்பத்தி 3 – ன்படி தொடக்கக் கல்வித்துறையிலிருந்து பதவியுயர்வுப் பெற்ற வட்டார வளமையமேற்பார்வையாளர்களைக் கொண்டும் ஏன் நிரப்பக்கூடாது?.

5. பள்ளிக் கல்வித்துறையில் இடைநிலை உதவி ஆசிரியர்களாகபணியில் சேருபவர்கள் B.Lit., & B.Ed. உயர்கல்வி தகுதி பெற்றதும்பணிமூப்பின் படி தமிழாசிரியர்களாகவும் பின்னர் உயர்நிலைப்பள்ளிதலைமை ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு பெறுகின்றனர். இவர்களதுமொத்தப்பணிக் காலத்தில் B.Lit., B.Ed. & M.A., உயர்கல்வி தகுதிகளுக்குஇரண்டு ஊக்க ஊதிய உயர்வுகள் (4 ஊதிய உயர்வுகள்)பெற்றுவிடுகின்றனர். ஆனால், தொடக்கக் கல்வித் துறையில்இடைநிலை உதவி ஆசிரியர்களாக பணியில் சேர்ந்து தமிழாசிரியர்தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு பெற்ற நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் B.Ed. தேர்ச்சிப் பெற்றால் ஊக்க ஊதியம் மறுக்கப்படுகிறது. இவர்களைவிட உயர் பதவியிலுள்ளஉயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் B.Lit., B.Ed. & M.A., தேர்ச்சிக்கு 2ஊக்க ஊதிய உயர்வுகளையும் பெற்றுவிடுகின்ற நிலையில் – கீழ் பதவிநிலையிலுள்ள நடு நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் இரண்டாவதுஊக்க ஊதியம் பெறுவதற்கு M.Ed. தகுதி பெற வேண்டியுள்ளது. இது எந்தவகையில் நியாயம் ?. இவை அனைத்திற்கும் காரணமாக, தொடக்கக்கல்வித் துறையில் மாவட்டம் மற்றும் மாநில அளவில் நிர்வாகப்பொருப்பில் உள்ள உயரதிகாரிகள் அனைவரும் பள்ளிக்கல்வித்துறையை சார்ந்தவர்களாக இருப்பதால் அவர்களின்பாரபட்சமான நடவடிக்கை எனவும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்14 மற்றும் 16 ன்படி சம உரிமை மற்றும் வாய்ப்புகள் பறிக்கப்படுவதாக கருதப்படுகிறது. இக்குறைகளை களைய தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா?....

திட்டம் இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்துவது என்பது அரசின் கொள்கை முடிவிற்கு உட்பட்டது - அரசு இணை செயலாளர்

01.04.2013 க்கு முன்னர் நிதியுதவி பள்ளியில் பணிபுரிந்து, பணி இடைமுறிவு இன்றி தற்போது அரசு பள்ளியில் பணியில் சேர்ந்து இருந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தில் தொடரலாம்.

24.06.2013 - தலைமையாசிரியர் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகள்

24/06/2013

பிஎப் நிதிக்கு இந்த ஆண்டும் 8.5 சதவீத வட்டிதான்

ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இபிஎப்ஓ) 2012,13ம் நிதியாண்டில் தந்த 8.5 சதவீத வட்டியையே நடப்பு ஆண்டிலும் தனது 5 கோடி சந்தாதாரர்களுக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இபிஎப்ஓ தனது சந்தாதாரர்கள் மூலம் கிடைக்கும் பணத்துக்கு ஆண்டுதோறும் வட்டியை நிர்ணயித்து வழங்கி வருகிறது. 2011,12ம் நிதியாண்டில் 8.25 சதவீதமாக இருந்த வட்டியை கடந்த ஆண்டில் 8.5 சதவீதமாக உயர்த்தியது.

இந்நிலையில் இபிஎப்ஓ அதிகாரி ஒருவர் கூறுகையில், ''நடப்பு ஆண்டில் ஊழியர்கள், நிறுவனங்கள் மூலம் எவ்வளவு பிஎப் நிதி கிடைக்கும், அதற்கு எவ்வளவு வட்டியை வழங்கினால் சரியானதாக இருக்கும் என்று ஏற்கனவே கணக்கிடப்பட்டது. கடந்த ஆண்டைப் போலவே நடப்பு ஆண்டிலும் வட்டி விகிதத்தை மாற்றாமல் 8.5 சதவீத வட்டி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது'' என்றார்.

ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக நடைபெறுவது போல வட்டி வழங்குவது குறித்த திட்டம் நிதி மற்றும் முதலீட்டு குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பின்னர் மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் தலைமையிலான மத்திய அறங்காவலர் குழுவின் இறுதி பரிசீலனைக்கு செல்லும். அந்த குழு அனுமதி அளித்தால் மத்திய நிதியமைச்சரின் ஒப்புதலுக்கு அது அனுப்பப்படும். மத்திய பிஎப் ஆணையர் கே.கே.ஜாலன் தலைமையிலான நிதி மற்றும் முதலீட்டு குழு கூட்டம் அடுத்த மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடக்கக் கல்வி-நீதிமன்றங்கள் வழக்கை உடனுக்குடன் முடிக்கவும், அவமதிப்பு வழக்கை தவிர்க்கவும் புதிய மென்பொருள் தொடக்கக்கல்வித் துறையில் நடைமுறைப்படுத்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலக பணியாளர்களுக்கு 25.06.2013 அன்று ஒரு நாள் பயிற்சி குறித்த உத்தரவு

கோவா பள்ளிகளில் இனி புத்தகங்கள் இருக்காது""இ-நோட்புக்" மட்டுமே

தமிழகத்தில் பள்ளி செல்லும் குழந்தைகள், தங்களது எடையை விட, அதிக எடையுள்ள புத்தக பையை சுமந்து செல்கின்றனர். ஆனால் கோவாவில் அடுத்த மாதத்தில் இருந்து இப்படிப்பட்ட குழந்தைகளை பார்க்க முடியாது. ஏனெனில் ஐந்து மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு, புத்தகங்களுக்கு பதிலாக, "இ-நோட்புக்" வழங்கப்பட உள்ளது.

இது குறித்து கோவா முதல்வர் மனோகர் பரிக்கர் தெரிவித்ததாவது: "5 மற்றும் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு, முதல் கட்டமாக 50 ஆயிரம் "இ-நோட்புக்" வழங்கப்படுகிறது. இதன் மூலம் புத்தக சுமையிலிருந்து மாணவர்கள் விடுவிக்கப்படுகின்றனர். இந்த "இ-நோட்புக்" கில் அனைத்து பாடப் புத்தகங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும்.

இந்த ஆண்டு இறுதிக்குள், கோவாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் "வை-ஃபை" இன்டர்நெட் வசதி செய்யப்படும், இதன் மூலம் மாணவர்கள் "இ-நோட்புக்" மூலம் வகுப்பறையிலேயே இன்டர்நெட் பயன்படுத்தலாம்.

இப்புதிய திட்டத்தினால் கரும்பலகை மற்றும் நோட்டுப் புத்தகத்தில் இருந்து தள்ளி வைக்கப்படுகின்றனர் என அர்த்தம் இல்லை. மாணவர்கள் நோட்டுப் புத்தகத்தையும் பயன்படுத்தலாம், கரும்பலகையிலும் பாடங்கள் வழங்கப்படும். வீடுகளில் நடத்திய பாடங்களை திருப்பி பார்ப்பதற்கு "இ-நோட்புக்" பயன்படும்" என்றார்.

இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு இடைக்கால தடையை நீக்க மறுப்பு, விசாரணை வருகிற ஜூலை 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு - உயர்நீதிமன்றம்

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று (24.06.2013) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இன்று நடைபெற்ற விசாரணையில் ஒரு தரப்பு தனி நீதிபதி தீர்ப்பிற்கு விதித்த இடைகால தடையை நீக்க வலியுறுத்தப்பட்டது, ஆனால் இருதரப்பும் இந்த வழக்கை விரைவில் முடித்து கொள்ள வேண்டும் என்று தான் நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

ஆகையால் வழக்கிற்கு வழங்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க அவசியமில்லை என்றும், இவ்வழக்கு அடுத்த மாதம் ஜூலை 16 தேதி முதல் தொடர்ந்து விசாரித்து முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

தொடக்கக் கல்வி-சர்வதேச அளவில் பதக்கம் வருங்கால விளையாட்டு வீரர்களை கண்டறியும் திட்டம் - 6 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு உடல்திறன் போட்டிகள் நடத்தி, உடற்திறன் திறமை அறிக்கை அட்டை செயல்படுத்த தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

ஓய்வு பெறும் ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டு இல்லாவிட்டால் “கல்வி ஆண்டு இறுதி வரை பணியாற்ற அனுமதிக்கவேண்டும்" மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

‘‘குற்றச்சாட்டு எதுவும் இல்லாத போது, கல்வி ஆண்டின் இடையில்ஓய்வு பெறும் ஆசிரியர்களை கல்வி ஆண்டு இறுதி வரை பணியாற்ற அனுமதிக்கவேண்டும்’’ என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகாகொன்றைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக வேலைபார்த்து வருபவர் ராவணன். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்தமனு வருமாறு:– வருகிற 30.6.2013 அன்று நான், ஓய்வு பெற உள்ளேன். கல்விஆண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியரை கல்வி ஆண்டு இறுதி வரைபணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று விதி உள்ளது. அதன்படி, இந்த கல்விஆண்டின்(2013–2014) இறுதி வரை பணியாற்ற என்னை அனுமதிக்க வேண்டும் என்றுபள்ளித் தலைமை ஆசிரியர் தஞ்சாவூர் முதன்மை கல்வி அதிகாரியிடம் ஒப்புதல்கேட்டார். ஆனால், ஒப்புதல் கோரிய மனு மீது முதன்மை கல்வி அதிகாரி எந்தவிதஉத்தரவும் பிறப்பிக்கவில்லை. எனவே, உரிய உத்தரவு பிறப்பிக்க முதன்மை கல்விஅதிகாரிக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி எஸ்.மணிக்குமார் முன்னிலையில் விசாரணைக்குவந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ்.விசுவலிங்கம் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர், “தஞ்சாவூர் கல்வி மாவட்டத்தில் மட்டுமே இதுபோன்ற பிரச்சினைஇருக்கிறது. அரசின் விதி இருக்கும் போது அதை செயல்படுத்த தஞ்சாவூர் மாவட்டகல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்வது இல்லை. இதுபோன்ற ஒருவழக்கில் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு ஐகோர்ட்டு உத்தரவுபிறப்பித்துள்ளது“ என்றார்.

மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவில் கூறி இருப்பதாவது:– ‘‘மனுதாரர் மீது குற்றச்சாட்டு எதுவும் இல்லை. அவரது உடல்நிலை நன்றாகஇருப்பதற்கான மருத்துவ சான்றிதழை, கல்வி அதிகாரிக்கு தலைமை ஆசிரியர்அனுப்பி வைத்துள்ளார். குற்றச்சாட்டு எதுவும் இல்லாத போது கல்வி ஆண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களை கல்வி ஆண்டு இறுதி வரை பணியாற்றஅனுமதி மறுக்கக்கூடாது. எனவே, மனுதாரர் இந்த கல்வி ஆண்டின்(2013–2014)இறுதி வரை பணியாற்ற தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனுமதிக்கவேண்டும்.’’ இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

அரசுப் பணியாளர் ஒருவர் பிற துறை / பிற மாநில அரசு / மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பித்தல்- அனுமதியும்,தடையின்மைச் சான்றும் பெற்று கொள்ள வேண்டும்

"ஆசிரியர் அல்லது அரசூழியர் ஒருவர் வேறு துறைப் பணிக்கான தகுதிபெற்றிருந்து அதே மாநில அரசின் பிற துறைப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால்அவர் நியமன அலுவலரிடம் தடையின்மைச் சான்று பெறவேண்டும். பிற மாநில அரசின் பணிக்கும் மத்திய அரசுப் பணிக்கும் விண்ணப்பிக்கத்துறைத்தலைவரிடம்/ அரசிடம் தடையின்மைச் சான்று பெற வேண்டும்" என்றுதமிழ்நாடு அரசுப் பணியாளர் ஒழுங்காற்றுச் சட்டம் கூறுகிறது. NET, SLET, TNTET, TNPSC தேர்வுகள், TRB தேர்வு, துறைத் தேர்வு போன்ற தேர்வுகள் எழுத அலுவலகத்தலைவரிடம் அனுமதி பெற வேண்டும். உயர்கல்வித் தகுதியை வேலைவாய்ப்புஅலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள நியமன அதிகாரியிடம் அனுமதியும்,தடையின்மைச் சான்றும் பெற்று வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வேறுபணிக்காகத் தெரிவு செய்யப்படும் நேர்வில், தற்போதுள்ள பணியிலிருந்துவிடுவிப்புப் பெறவும் முந்தைய பணிக்காலத்தைப் புதிய பணிக்காலத்துடன் சேர்த்துக்கொள்ளவும் சிக்கல் ஏற்படாமல் சுலபமாக அமையும்.

தொடக்கக் கல்வித் துறை:
அலுவலகத் தலைவர்- உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்.
நியமன அலுவலர்- மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்.
துறைத் தலைவர்- இயக்குநர்.

பள்ளிக் கல்வித் துறை:
அலுவலகத் தலைவர்- தலைமையாசிரியர்.
நியமன அலுவலர்- மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
துறைத் தலைவர்- இயக்குநர்.

குறிப்பு:

ஒரு பணியிலிருந்து வேறு பணிக்கு நியமனம் மூலம் செல்கையில்முந்தைய பணிக்காலம் மட்டுமே இறப்பு மற்றும் ஓய்வுக்காலப் பலன்கள்,ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் போன்றவற்றின் கணக்கீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படும். முந்தைய சம்பளம் எந்த விதத்திலும் கருதப்படமாட்டா. அதாவதுபுதிய பணியில் நுழைவுநிலை ஊதியம் மட்டுமே வழங்கப்படும். ஊக்க ஊதியஉயர்வுக்குத் தகுதி இருப்பின் பெறலாம். ஒத்த பணியெனில் தேர்வுநிலை,சிறப்புநிலைக்குத் தகுதியுள்ள முந்தைய பணிக்காலம் எடுத்துக் கொள்ளப்படும்.பழைய பணியிலிருந்து விடுவிப்பானவுடன் மீள்உரிமை துண்டிக்கப்படும். அதாவதுஒருவேளை புதிய பணியைத் தொடர்ச்சியாகச் செய்ய இயலாத நேர்வில்எக்காரணத்தைக் கொண்டும் மீண்டும் பழைய பணிக்கு வந்து சேர எவ்வித வாய்ப்பும்வழங்கப்படாது. மீண்டும் போட்டித் தேர்வில் தேர்ச்சி அல்லது வேலைவாய்ப்பகப்பதிவு சீனியாரிட்டிப்படி தான் நியமனம் பெற முடியும் என்பதைக் கவனத்தில்கொள்ளவும்.

23/06/2013

24.06.13 அன்று அனைத்து ஒன்றியங்களிலும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களால் நடத்தப் பட உள்ள தலைமையாசிரியர்கள் கூட்டம் சார்பான பொருள் விவரம்:

அனைவருக்கும் கல்வி இயக்கம் -ஆசிரியர் பயிற்றுனர்கள்- பள்ளிகளில் (அறிவுறுத்துதல்) கவனிக்கப்பட வேண்டியவை


தமிழகத்தில் பள்ளி நேரத்தில் மாற்றம் இல்லை: பள்ளிக் கல்வித்துறை

தமிழகத்தில் அனைத்து உயர்நிலை பள்ளிகளுக்கும் வேலைநேரம் மாற்றப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், இதனை பள்ளி கல்வித்துறை மறுத்துள்ளது.

பள்ளி நேர மாற்றம் தொடர்பாக தமிழகம் முழுவதும் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாதிரி சுற்றறிக்கையை கல்வித் துறை அனுப்பியுள்ளது.


இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆலோசனை நடத்தி அதனை பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில், பள்ளி நேரம் மாற்றம் தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. எனவே, பள்ளி நேரம் மாற்றம் தொடர்பாக வெளிவந்த தகவல் தவறானது என பள்ளி கல்வித் துறை தெரிவித்துள்ளது.

அனைத்து கட்ட ஆலோசனைக்குப் பின்பே, பள்ளி நேர மாற்றம்‌ தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாணவிகளிடம் தவறாக நடக்கும் ஆசிரியர் கல்விச் சான்றுகள் ரத்து : தமிழக அரசு எச்சரிக்கை


பள்ளி மாணவிகளிடம் தவறாக நடக்கும் ஆசிரியர்களின் கல்விச்சான்றுகள் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை உத்தரவு:பள்ளி ஆசிரியர்கள் காலம் தவறாமையை கடைபிடிக்க வேண்டும். புதுமையில் நாட்டம் உள்ளவர்களாகவும், திறமைகளை வளர்த்து கொள்பவர்களாகவும் இருத்தல் வேண்டும். பாடங்களுடன் பொது அறிவு, நாட்டு நடப்பு, அறிவுசார் திறன் போட்டி, ஆளுமைத்திறன் போன்ற ஆற்றல்களையும் மாணவர்களிடம் வளர்க்க வேண்டும். மாணவ, மாணவிகளிடம் தவறாக நடக்கும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதோடு, கட்டாய ஓய்வு, பணி நீக்கம் போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட ஆசிரியரின் கல்விச்சான்றுகள் அனைத்தும் ரத்து செய்யப்படும். பிற நபர்களின் தவறான நடவடிக்கைகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள மாணவ, மாணவிகளுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் தவறான செயல்களில் ஈடுபடாத வகையில் உளவியல் ஆலோசகர்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். மாணவர்களின் மனநிலையை பாதிக்கும் பிரச்னைகளை களைய, உளவியல் ஆலோசனைகளை வழங்குவதற்கும் ஆலோசகர், உதவியாளர், நடமாடும் ஆலோசனை மையங்கள் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

22/06/2013

மந்தைகளை உருவாக்கும் கல்வி தேவையில்லை!

அனைவருக்கும் இடைநிலை கல்வியில் 18 வயது இளைஞர்களிடையே பிரசாரம்

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில், இந்தாண்டு முதல் இடைநின்ற இளைஞர்களை பள்ளி,கல்லூரிகளில் சேர்க்கும் பிரசாரம் துவங்கியுள்ளது.
மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கத்தில், 2009 முதல் அனைவருக்கும் கட்டாய கல்வி சட்டம், செயல்பாட்டில் உள்ளது. இத் திட்டத்தில் பள்ளிசெல்லாக் குழந்தைகள் கண்டறியப்பட்டு பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர்.
கடந்த ஆண்டுவரை 14 வயது வரை உள்ளவர்களுக்கு மட்டும் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம், இந்த கல்வியாண்டு (2013-2014) முதல், 18 வயது வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 15 முதல் 18 வயது வரை உள்ள இளைஞர்களுக்கான திட்டத்தை, அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் (ராஷ்டீரிய மத்தியமா சிக்ஷா அபியான்) செயல்படுத்துகிறது.
இந்தாண்டு கணக்கெடுப்பில், 15 முதல் 18 வயது நிரம்பிய மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லாத மாணவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களிடம் தற்போது பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. 
எதிர்கால கல்வியின் முக்கியத்துவம், கல்விக்கு அரசு செய்யும் உதவிகள், பல்வேறு திட்டங்களில் பெறப்படும், உதவித் தொகைகள் குறித்து விளக்கப்பட்டு வருகிறது. பல மாணவர்களை, அருகில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் சேர்க்க, முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
பொருளாதார நிலையால், சேரமுடியாத மாணவர்கள் குறித்த அறிக்கையும், அரசுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

2013-14ஆம் கல்வியாண்டு குறுவள மையம் மற்றும் பணியிடைப் பயிற்சி நாட்கள் விபரம் (தற்காலிக விவரம்)

           


எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் முறை (SABL) நடைமுறைப்படுத்த SSA மாநில திட்ட இயக்குநர் உத்த‌ரவு

தமிழ் பல்கலைக்கழகத்தில், 2013-14ம் கல்வியாண்டில் கல்வியியல் கல்லூரியில் இளங்கல்வியியல் (பி.எட்.,) சேர்க்கை அறிவிப்பு

தஞ்சை தமிழ் பல்கலை பி.எட்., படிப்பிற்கு சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பப் படிவங்கள், அனைத்து வேலை நாட்களிலும், ஜூன் 28 வரை வழங்கப்பட இருக்கிறது. இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல் போன்ற பிரிவுகளின் கீழ் பி.எட்., படிப்பு வழங்கப்படுகிறது.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில், இளங்கலை பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பத்தினை நேரில் பெற விரும்புவோர் ரூ.600 பணமாகச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.300 செலுத்திப்பெற்றுக் கொள்ளலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினர் சான்றிதழ் அளித்தல் வேண்டும்

படிவத்தை நேரிலோ, தபாலிலோ அல்லது www.tamiluniversity.ac.in என்ற பல்கலை இணையதளத்திலோ பெற்று விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 28.

விபரங்களுக்கு 04362 227 782, 226 720 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.

2013-14 பள்ளி வாரியான மாணவர் சேர்க்கை ஒன்றிய/ மாவட்ட அளவில் விவரம் கோரி அனைவருக்கும் கல்வி இயக்ககம் உத்தர வு

21/06/2013

அரியலூர் மாவட்டம் திருமானூரில் இடைநிலை ஆசிரியர்கள் பி.எட் பயிற்சி வகுப்பு செல்ல அனுமதி வழங்காததால் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்



திருமானூர் ஒன்றிய பகுதியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் உதவி தொடக்க கல்வி அலுவலரை கண்டித்து ஆசிரியர்கள் திருமானூர் உதவி தொடக்க கல்வி அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

உள்ளிருப்பு போராட்டம்

திருமானூர் ஒன்றியத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் அரசு அனுமதியோடு பி.எட் படிப்பில் சேர்ந்துள்ளனர். அவர்கள் சுமார் 40 நாட்கள் பயிற்சி வகுப்பு செல்ல வேண்டும். பயிற்சி வகுப்பு செல்லும் 40 நாட் களுக்கும் பாதி சம்பளம் வழங்கப்படும். இவர்கள்பயிற்சி வகுப்பு செல்ல கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலரிடம் அதற்கான அனுமதியினை கேட்டுள்ள னர். அவர் அனுமதி வழங்காத தால் நேற்று மாலை 5 மணி யளவில் 4 பெண் ஆசிரியைகள் உள்பட 10 இடைநிலை ஆசிரியர்கள் உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர்.

இந்த உள்ளிருப்பு போராட் டம் தொடர்பாக போராட் டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் ஹென்றி, பாஸ்கரன், ஜான்சன், பாஸ்கரன் உள்ளிட்டவர்கள் கூறும்போது, நாங்கள் அரசு மற்றும் அதிகாரிகளின் அனுமதியோடு தொலைதூரக் கல்வியில் பி.எட் படித்து வருகின்றோம். அதற்கான பயிற்சி வகுப்பு வரும் ஜூலை மாதம் முதல் தொடங்குகிறது. அதற்கான அனுமதியை கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலரிடம் சுமார் 1 வார காலமாக கேட்டு வருகிறோம். என்ன காரணமோ அவர் எங்களுக்கு அனுமதி வழங்க வில்லை. இதற்கு ஒரு முடிவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள் ளோம்.

இதே அலுவலகத்தில் உதவி தொடக்க கல்வி அதிகாரியாக உள்ளவர் அவரிடம் விண் ணப்பம் கொடுத்த ஆசிரியர் களுக்கு அனுமதி வழங்கும் போது அதே பொறுப்பில் உள்ள இந்த கூடுதல் உதவி தொடக்க கல்வி அதிகாரி எங்களுக்கு ஏன் அனுமதி தர மறுக்கிறார் என தெரியவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.

உதவி தொடக்க கல்வி அதிகாரி அனுமதி

இந்த போராட்டம் தொடர் பாக மாவட்ட கல்வி அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் திருமானூர் உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலக உதவியாளர் உங்களது விண்ணப்பங்களை மாவட்ட கல்வி அலுவலர் வாங்க சொல்லி விட்டார். உங்களது கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித் துள்ளார் என கூறியதன் பேரில் ஆசிரியர்கள் பயிற்சி வகுப்பு செல்வதற்கான அனுமதி விண்ணப்பங்களை அவரிடம் கொடுத்து விட்டு கலைந்து சென்றனர். திருமானூர் உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத் தில் மாலை 5 மணிக்கு தொடங்கி 6.30 மணி வரை நடைபெற்றது.

TET தேர்வு அறிவிப்பின் முழு விவரம்

இந்தியாவில் அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்விச் சட்டம் (Right of Children to Free and Compulsory Education (RTE) Act # 2009) என்ற முக்கியமானதோர் சட்டம் 2009-இல் கொண்டுவரப்பட்டது. 

இந்த சட்டத்தில் 6- 14 ஆரம்பப் பள்ளிக் குழந்தைகளுக்கு தரமான கல்வியை தரவேண்டுமென கூறப்பட்டது. அதற்கு தரமான ஆசிரியர்கள் இருந்தால்தான் குழந்தைகளுக்கான கல்வியும் தரமானதாக இருக்கும் என கொள்கை வகுக்கப்பட்டது.

இச்சட்டத்தை நிறைவேற்ற குறைந்தபட்சம் நாடு முழுவதும், 10 இலட்சம் பயிற்சிப் பெற்ற ஆசிரியர்கள் கூடுதலாகத் தேவை. அப்போதுதான் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற ஆசிரியர்- மாணவர் விகிதாச்சாரத்தை உறுதி செய்ய முடியும் எனவும் அந்த ஆசிரியர்கள் தரமிக்கவர்களாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது.

இந்த இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த, நாடு முழுவதும் மிக அதிக அளவிலான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பு என இந்த சட்டம் வலியுறுத்துகிறது. அதற்கு தரமிக்க ஆசிரியர்களை உருவாக்க நாடு முழுவதும் தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டுமென சட்டம் தெளிவாக கூறுகிறது.

ஆக, அரசு பள்ளிகளில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர விரும்புபவர்கள் இந்த தேர்வை எழுத வேண்டும். இதற்காக கல்வி உரிமைச் சட்டத்தின்படி, மத்திய அளவில் நாடு முழுவதும் (காஷ்மீர் மாநிலம் நீங்கலாக) ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (National Council for Teacher Education# NCTE) வழிக்காட்டுகிறது. அந்த வழிகாட்டுதலை அனைத்து மாநிலங்கள் மற்றும் அனைத்து மத்திய ஆட்சிப் பகுதிகளும் பின்பற்ற வேண்டும். ஆண்டுக்கொருமுறை அனைத்து மாநிலங்களின் கல்வி செயலர்களும் தகுதித் தேர்வு பற்றி விரிவான ஆலோசனை மற்றும் ஆண்டறிக்கையை என்.சி.டி.இ. கூட்டத்தில் அளிக்க வேண்டும்.

இந்திய அளவில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு

(Central Teacher Eligibility Test # CTET) நடத்தப்படுகிறது. இத்தேர்வினை சி.பி.எஸ்.சி (Central Board of Secondary Education) நடத்தி வருகிறது.

இதில் நவோதயா, கேந்திரிய வித்யாலயா போன்ற மத்திய அரசுப்பள்ளிகளில் சேர விரும்பும் ஆசிரியர்கள் எழுத வேண்டும். மாநிலங்கள் தோறும் அந்தந்த மாநில அரசு ஆசிரியர் தகுதித் தேர்வை (Teacher Eligibility Test# TET) நடத்துகின்றன. அதன்படி தமிழகத்தில் ஆசிரியர் வாரியம் (TRB# Teacher Recruitment Board) தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வை (Tamilnadu Teacher Eligibility Test# TNTET) நடத்துகிறது.

ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் 1 முதல் 8 வரை பாடம் நடத்தும் அனைத்து ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவித்தது. இது தொடர்பாக அனைத்து மாநில அரசின் கல்வித்துறை செயலாளர்களுக்கு தகவல் 11.02.2011 அன்று அனுப்பப்பட்டது. அதில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை கற்பிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களின் தரத்தை உறுதிப்படுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டுமென கூறி, அதற்கான வழிகாட்டுதலையும் வழங்கியது.

இந்திய அரசின் மத்திய பள்ளிகள் வாரியத்தின் (சி.பி.எஸ்.சி) கீழ் இணைப்பு பெற்ற பள்ளிகளில் (கேந்திரிய வித்யாலய சங்காதன், நவோதயா வித்யாலயா சமிதி, மத்திய இடை நிலைக் கல்வி வாரியம்) பணியாற்றுவதற்கான ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் வழிகாட்டுதல் அளிக்கப்பட்டது. இந்திய அரசின் மத்திய பள்ளிகள் வாரியம் (சி.பிஎஸ்.சி) இத்தேர்வுகளை நடத்தி வருகிறது.

தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் வழி காட்டுதலின் படி, தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை இந்தத் தேர்வுக்கான அரசாணையை (G.O. (M.S) சர். 181- 15.11.2012) இல் வெளியிட்டது. இதன்படி, இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின்படி இடைநிலை ஆசிரியர்கள் (Secondary Grade Teachers) மற்றும் இளங்கலைப் பட்டப்படிப்புடன் பி.எட் முடித்தவர்கள் ஆசிரியர்(Graduate Assistants) மட்டுமே தகுதித் தேர்வை எழுத வேண்டும்.

கல்வித்தகுதி

* ஆசிரியர் கல்விக்கான தேசியக் குழுவின் (என்.சி.டி.இ.,) அறிவிக்கை நாள், 23.8.2010க்குப் பின், அரசு மற்றும் தனியார் உட்பட அனைத்து வகை பள்ளிகளிலும், பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் அனைவரும், டி.இ.டி., தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.

* இந்த தேதிக்குப் பின், பணி நியமனம் பெற்றிருந்தாலும், பணி நியமன நடவடிக்கைகள், மேற்கண்ட தேதிக்கு முன் துவங்கியிருந்தால், அவர்கள், டி.இ.டி., தேர்வை எழுத தேவையில்லை.

* குறிப்பிட்ட தேதிக்குப் பின், பணி நியமன வேலைகள் துவங்கி, வேலையில் சேர்ந்திருந்தால், சம்பந்தப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், ஆர்.டி.இ., விதிப்படி, ஐந்து ஆண்டுகளுக்குள், டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்றாக வேண்டும்.

* நடப்பு கல்வி ஆண்டில், ஆசிரியர் கல்வி பட்டய தேர்வு மற்றும் பட்டதாரி ஆசிரியர் கல்வி நிறுவனங்களில் இறுதித் தேர்வை எழுதுபவர்களும், டி.இ.டி., தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு டி.என்.டி.இ.டி (TNTET -Tamil Nadu Teachers Eligibility Test) என்பது இரண்டு தாள்களைக் கொண்டது. 3 மணி நேரம் கொண்ட இந்தத் தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி (TRB-Teachers Recruitment Board) நடத்துகிறது.

* தாள்-I: 1- 5 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர் களுக்கானது. டீ.டி.எட் (D.T.Ed) எனப்படும் ஆசிரியர் பட்டயத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்தத் தேர்வினை எழுத தகுதியானவர்கள். இத்தேர்வில் குழந்தை மேம்பாடும் கற்பித்தலும், தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல் என மொத்தம் 5 பாடங்களில் இருந்து தலா 30 மதிப்பெண்கள் வீதம் 150 மதிப்பெண்களைக் கொண்டது.

* தாள்-II: 6 - 8 வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு இது. கலை அல்லது அறிவியல் பட்டப்படிப்போடு பி.எட் கல்வியியல் படிப்பை முடித்தவர்கள் இந்தத் தேர்வை எழுத தகுதியானவர்கள். இத் தேர்வில் அறிவியல் பிரிவை சேர்ந்தவர்களுக்கு குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும், தமிழ், ஆங்கிலம் இவற்றில் தலா 30 மதிப்பெண்களுடன், கணிதம், அறிவியல் இவற்றை உள்ளடக்கி 60 மதிப்பெண்கள் என மொத்தம் 150 மதிப்பெண்களைக் கொண்டதாக வினாத்தாள் அமைந்திருக்கும். கலைப்பிரிவு ஆசிரிய பட்டதாரிகளுக்கு இதே வினாத்தாளில் கணிதம் அறிவியல் வினாக்களுக்கு பதிலாக சமூக அறிவியலிலில் இருந்து 60 வினாக்கள் அமைந்திருக்கும்.

* முதல் தாளினை 1 முதல் 5 வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களும் அதாவது ஆசிரியப் பயிற்சி முடித்தவர்கள், இரண்டாம் தாளினை 6 முதல் 8 வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களும் அதாவது இளங்கலைப் பட்டப்படிப்புடன் பி.எட் முடித்தவர்கள் எழுத வேண்டும். இரண்டிலும் தகுதிப் பெற விரும்புபவர்கள் இரண்டு தாளினையும் எழுதலாம். இறுதித் தேர்வு எழுதக் காத்திருப்பவர்களும் இத்தேர்வில் கலந்து கொள்ளலாம். தேர்ச்சிப் பெற 60% மதிப்பெண் (90 மதிப்பெண்) பெற வேண்டும் வினாக்கள் அப்ஜெக்டிவ் முறையில் இருக்கும்.

* ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் வினாக்கள் அமைந்திருக்கும் (மொழிப் பாடங்கள் தவிர). நெகடிவ் மதிப்பெண் வழங்கப் படமாட்டாது. முதல் தாளானது 1 முதல் 5 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத காத்திருப்பவர்களுக்கு, குழந்தை வளர்ப்பு மற்றும் கற்பிக்கும் பகுதி-I (6 முதல் 11 வயது); மொழி பகுதி-II (தமிழ்/ தெலுங்கு/ மலையாளம்/ கன்னடம்/ உருது); மொழி பகுதி -III (ஆங்கிலம் - இதில் அடிப்படைகள், கம்யூனிகேஷன், காம்ப்ரிகென்சன்); கணிதம் பகுதி-IV; சுற்றுச்சூழல் கல்வி பகுதி-V(இதில் கோட்பாடுகள், தீர்வு காணும் திறன், கற்பிக்கும் முறை) ஆகியவற்றில் 30 கேள்விகள் வீதம் 150 வினாக்கள் கேட்கப்படுகிறது.

* இரண்டாம் தாளானது 6-வது முதல் 8-வது வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதக் காத்திருப்பவர் களுக்கு, குழந்தை வளர்ப்பு மற்றும் கற்பிக்கும் முறை பகுதி-I (11 முதல் 14 வயது); மொழி II (தமிழ்/தெலுங்கு/ மலையாளம்/ கன்னடம்/ உருது), மொழி III (ஆங்கிலம்- இதில் அடிப்படைகள், கம்யூனிகேஷன், காம்ப்ரிகென்சன்) இந்த 3 பிரிவும் அனைவருக்கும் பொதுவானது. இதிலிருந்து தலா 30 வினாக்களும், கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்களுக்கு இவற்றில் 60 வினாக்களும்; சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு அதில் 60 வினாக்களும் மற்ற பாட ஆசிரியர்கள் இதில் (கணிதம்-அறிவியல் அல்லது சமூக அறிவியல்) ஏதாவது ஒன்றினைத் தெரிவு செய்ய வேண்டும்.

தகுதி சான்றிதழ்

இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்தச் சான்றிதழில் பதிவு எண், தேர்வெழுதிய ஆண்டு, மாதம், மதிப்பெண் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றிருக்கும். அது 7 ஆண்டுகளுக்குச் செல்லத்தக்கதாக இருக்கும். ஒருவர் இந்தத் தேர்வில் தனது மதிப்பெண்ணை அதிகரித்துக் கொள்ள மீண்டும் தேர்வு எழுதலாம். ஆனால் தகுதித் தேர்வு சான்றிதழ் பெற எத்தனைமுறை தேர்வை எழுதலாம் என எதுவும் குறிப்பிடவில்லை. ஒருவர் இந்தத் தகுதித் தேர்வில் வெற்றிப் பெற்றால், மீண்டும் தகுதித் தேர்வை எழுதி தனது மதிப்பெண்ணை அதிகரித்துக் கொள்ளலாம்.

விண்ணப்பம்

வரும், ஜூன், 17-ஆம் தேதி, காலை, 10 மணி முதல், ஜூலை, 1-ஆம் தேதி, மாலை, 5:30 மணி வரை அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் விண்ணப்பங்கள் வழங்கப்படும். 50 ரூபாய் கொடுத்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். இரண்டு தாள்களுக்கும் விண்ணப்பிப்பவர்கள் தனித்தனி விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

தேர்வு கட்டணம்

* எஸ்.சி.,- எஸ்.டி., பிரிவு தேர்வர்கள், மற்றும் மாற்றுத் திறனாளிகள் 250 ரூபாயும், இதர பிரிவு தேர்வர்கள், 500 ரூபாயும் தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும்.

* தேர்வுக்கட்டணத்தை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளைகளில் அல்லது இந்திய ஓவர்சீஸ் வங்கி அல்லது கனரா வங்கி வங்கிகளில் ஏதேனும் ஒன்றில் செலுத்தலாம்..

* விண்ணப்ப தகவல் கையேட்டில் உள்ள சலான் (Challan) மூலமே தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

* பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, ""ஆன்-லைன்' வழியாகவோ, தபால் மூலமாகவோ, பேக்ஸ் மூலமாகவோ தமிழ்நாடு ஆசிரியர் வாரியத்திற்கு அனுப்பக்கூடாது. நேரடியாக அந்தந்த டி.இ.ஓ., (District Educational Office)அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

* பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை நகல் (ஜெராக்ஸ்) எடுத்துக்கொண்டு அனுப்பி வைக்கவும். அது பின்னர் தகவலுக்கு தேவைப்படும்.

தேர்வு மையங்கள்

மாநிலம் முழுவதும், 66 கல்வி மாவட்ட தலைநகரங்களில் (Educational District Headquarters), தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, தேர்வுகள் நடத்தப்படும் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

முக்கிய தேதிகள்

* பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை டி.இ.ஓ., அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 1-7-2013

* தேர்வு தேதிகள்: இடைநிலை ஆசிரியர் பணிக்கான, டி.இ.டி., முதல் தாள் தேர்வு ஆகஸ்ட், 17-ஆம் தேதி (17-8-2013); பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாள் தேர்வு ஆகஸ்ட், 18-ஆம் தேதி (18-8-2013) நடக்கின்றன.

* இரு தேர்வுகளும், காலை, 10:00 மணி முதல், நண்பகல், 1:00 மணி வரை நடக்கும்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி /நலத்திட்டம் வழங்கப்படுவதை உறுதி செய்திடுமாறு.. தமிழ் நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை.

அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும், "இனிமே நாங்க தான்' எனும் சினிமாவை திரையிட்டு காட்ட வேண்டும்

அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும், "இனிமே நாங்க தான்' எனும் சினிமாவை திரையிட்டு காட்ட வேண்டும் எனவும், அதற்காக, 10 ரூபாய் கட்டணம் வசூலித்துக்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் வைப்பு நிதி கணக்குத் தணிக்கையை விரைவு படுத்துமாறு தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை.

பள்ளிகல்வி இயக்குனர் பள்ளிகளுக்கு திடீர் விசிட்அரசாணை எண் 264 ன் விவரம் கோரி தலைமைஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தேர்வு .

தமிழ்நாடு பள்ளி பள்ளிகல்வி இயக்குனர் அவர்கள் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மேனிலை பள்ளிக்கு 14.06.2013 அன்று திடீர் விசிட் செய்து அரசாணை எண் 264 ன் விவரம் கோரி தலைமைஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தேர்வு வைத்தார் .இத்தேர்வில் தலைமைஆசிரியர் உட்பட எந்த ஒரு ஆசிரியரும் விவரங்களை சரிவர தெரிவிக்கவில்லை.
எனவே இவ் அரசணை உட்பட அணைத்து விவரங்களையும் தலைமைஆசிரியர் மற்றும்  ஆசிரியர்களும் தெரிந்து வைத்து கொள்ளுமாறு வேண்டப்படுகிறார்கள் .

இரண்டு ஆண்டு ஆசிரியர் பயிற்சி பட்டய படிப்பில், அரசு ஒதுக்கீட்டின் கீழ், 20 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில், வெறும், 4,500 பேர் மட்டும், விண்ணப்பித்துள்ளனர்.ஆசிரியர் பயிற்சி படிப்பின் பரிதாப நிலை?

தமிழகத்தில், 550 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன. அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், அரசு ஒதுக்கீட்டின் கீழ், 20 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த இடங்கள், கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். நடப்பு கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்காக, மே, 27 முதல், கடந்த, 12ம் தேதி வரை, மாநிலம் முழுவதும், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. கடைசி நாள் வரை, 5,000 விண்ணப்பங்கள் விற்பனை ஆனபோதும், 4,500 விண்ணப்பங்கள் மட்டுமே, பூர்த்தி செய்த நிலையில், திரும்ப பெறப்பட்டன. விண்ணப்பித்த அனைவருக்கும், "சீட்' உறுதி என்ற நிலை உள்ளது. எனினும், 4,500 பேரும், கலந்தாய்வுக்கு வருவார்களா என்பது தான், ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் துறைக்கு, சந்தேகமாக உள்ளது. 10 சதவீதம் முதல், 20 சதவீதம் வரை, "ஆப்சென்ட்' ஆவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, 3,000 மாணவர்கள், ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்தாலே, பெரிய சாதனையாக இருக்கும் என, துறை வட்டாரங்கள் கருதுகின்றன.குறைந்த மாணவர்கள் விண்ணப்பித்திருப்பதால், அனைவருக்கும், "ஆன்-லைன்' மூலம், கலந்தாய்வை நடத்த, இயக்குனரகம் திட்டமிட்டுள்ளது. விண்ணப்பித்த மாணவ, மாணவியரை, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு வரவழைத்து, கலந்தாய்வை நடத்தி, சேர்க்கை உத்தரவை வழங்க, இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.