திருக்குறள்

27/04/2014

இந்தியாவில உங்க செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம்

இந்தியாவில உங்க செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம். எப்படியும் அது உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். 
அதுக்கு நீங்க செய்ய வேண்டியவை :
1. உங்கள் செல்போனிலிருந்துக்கு*#06# டயல் செய்யுங்க
2. உங்க மொபைல்ல ஒரு 15 டிஜிட் நம்பர் வரும்
3, இதுதான் உங்க போனின் IMEI No (அப்படின்னா?) அதனை உடனே பத்திரமா நோட் பண்ணி வைச்சுக்குங்க..
4. செல்போன் தொலைஞ்சு போச்சுன்னா உடனே இந்த நம்பரை cop@vsnl.netக்குமெயில் பண்னுங்க!
5. போலீஸூக்கெல்லாம் போக வேண்டாம்.
6. உங்க மொபைல் போனை 24 மணி நேரத்தில் GPRS மற்றும் internet மூலம் கண்டுபிடிச்சுடுவாங்க.
7. உங்க மொபைல் போன் நம்பரை மாத்தினால் கூட போன் எங்கிருந்து ஒர்க் ஆகுதுன்னு ஈஸியா தெரிஞ்சுக்கலாம

ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பம் ( பழையது )


மே 28 வரை அதிகாரிகளை சந்திக்க கூடாது: முதல்வர், அமைச்சர்களுக்கு பிரவீன்குமார் தடை

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூறியதாவது: ''தேர்தல் விதிமீறில்கள் குறித்த புகாரின் அடிப்படையில் இதுவரை 2,518 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். போட்டியிட முடியாது இந்த தேர்தல் விதிமீறல்கள் நிரூபிக்கப்பட்டால், குற்றச்சாட்டப்பட்டவர் 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.செலவு கணக்கு ஏப்ரல் 24ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது செலவு கணக்குகளை ஜூன் 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அந்த செலவு கணக்குகளை சரிபார்க்க ஜூன் 8ஆம் தேர்தல் பார்வையாளர்கள் தமிழகம் வருவார்கள். வாக்கு எண்ணிக்கை வாக்கு எண்ணிக்கையின்போது 42 மையங்களும் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். முதல்வருக்கு தடை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அரசு அலுவலகங்களுக்கு வழக்கம் போல் செல்லலாம். ஆனால், அவர்கள் மே 28ஆம் தேதி வரை அதிகாரிகளை சந்தித்து பேசக்கூடாது. புதிய அறிவிப்புகளையும் அரசு வெளியிடக் கூடாது'' என்றும் அவர் கூறியுள்ளார்

திமுக ஆட்சியில் நடந்த பள்ளி ஆசிரியர் இடமாற்றம் குறித்து திடீர் கணக்கெடுப்பு

திமுக ஆட்சியின்போது அரசு பள்ளிகளில் நடந்த ஆசிரியர் இடமாற்றங்கள் குறித்து தமிழகம் முழுவதும் கணக்கெடுக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் 23,522 அரசு தொடக்கப் பள்ளிகள், 7,651 அரசு நடுநிலைப்பள்ளிகள், 2,844 அரசு உயர்நிலைப்பள்ளிகள், 2,488 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த அரசு பள்ளிகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான
இடமாறுதல் மே அல்லது ஜூன் மாதம் நடைபெறுவது வழக்கம். இடமாறுதல் கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்களில், பணிமூப்பு உள்ளவர்கள், மாற்றுத் திறனாளிகள், முப்படையினரின் வாழ்க்கை துணை, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர், இதய நோயாளிகள், கணவன்-மனைவி இருவரும் பணியாற்றுபவர்கள் போன்றோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆசிரியர் இடமாறுதல் பொது இடமாறுதலின்போது எந்தெந்த பள்ளிகளில் காலியிடங் கள் உள்ளன என்ற பட்டியல் வெளியிடப்பட்டு ஆசிரியர்கள் தங்களுக்குப் பிடித்தமான இடங்களை தேர்வுசெய்வார்கள். வருடாந்திர பொது இடமாறுதல் நீங்கலாக, நிர்வாக நலன் கருதி அவ்வப்போது இடமாற்றங்கள் செய்யப்படும். சென்னை உள்பட முக்கிய இடங்களில் ஆசிரியர் காலியிடங் கள் மறைக்கப்பட்டு அரசியல், நிர்வாக சிபாரிசு அடிப்படையில் வேண்டியவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படுகிறது என்றும், இதற்கு லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுகிறது என்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகி றார்கள். தென்மாவட்டங்களுக்கு இடம் மாறிச்செல்ல எவ்வளவு பணம் கேட்டாலும் கொடுக்க ஒரு சில ஆசிரியர்கள் தயாராக இருப்பதாகவும் கூறப் படுகிறது. ரகசிய கணக்கெடுப்பு இத்தகைய சூழலில், கடந்த திமுக ஆட்சியி்ல் (2006-2011) தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் நடந்த ஆசிரியர், தலைமை ஆசிரியர் இடமாறுதல் குறித்து ரகசிய கணக்கெடுப்பு நடத்த அரசு ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். திமுக ஆட்சிக்காலத் தில் நடந்த ஆசிரியர் இட மாறுதல் குறித்த விவரங்களை கணக்கெடுக்குமாறு மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கள் அறிவுறுத்தப்பட்டிருப்பதா வும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த திடீர் கணக்கெடுப்பு தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குனர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோரிட மிருந்து அதிகாரப்பூர் வமாக உத்தரவு ஏதும் அனுப்பப்பட்டதா? என்பது தெரியவில்லை.

21/04/2014

2013-14ம் ஆண்டுத் தேர்வு தேர்ச்சி சுருக்கம், தரநிலை தேர்ச்சி அறிக்கை, மதிப்பெண் அறிக்கை, மக்கள் தொகை கணக்கெடுப்பு, ஆசிரியர்கள் விடுப்பு விவரம், பள்ளி வேலை நாட்கள் விவரம் படிவங்கள்

தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான முக்கிய குறிப்புகள்

தொடக்கக் கல்வி - அரசு அனுமதி / அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 723 மழலையர் மற்றும் துவக்கப் பள்ளிகளில் 2014-15ம் ஆண்டுக்கான சேர்க்கை இரத்து செய்து இயக்குனர் உத்தரவு

ஆசிரியர் தகுதித் தேர்வு : பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ் சரிபார்ப்பு மே 6 முதல் மே 12 தேதி வரை தமிழகம் முழுவதும் 29 மையங்களில் நடைபெறுகிறது

ஆசிரியர் தகுதித் தேர்வு பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ் சரிபார்ப்பு மே 6 முதல் மே 12 தேதி வரை தமிழகம் முழுவதும் 29 மையங்களில் நடைபெற உள்ளது.இதில் 25333 நபர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க உள்ளனர்.

தேர்தல் பணி தொடர்பான சில விவரங்கள்!

ஒருவரே இரண்டு முறை ஓட்டுபோடலாம்!

PROXY VOTE:
ராணுவத்தில் பணியாற்றுபவர்கள், தங்களது பெயர் உள்ள வாக்குச்சாவடி பகுதியில் அவரது வாக்கைப் மற்றொருவர் மூலம் பதிவு செய்யலாம். வாக்குரிமை வீரர் ஏற்கெனவே இதுகுறித்த விதிமுறையை கடைபிடித்து உரிய மனு செய்திருந்தால் தொடர்புடைய வாக்குச்சாவடிக்கு வாக்குப் பதிவு செய்யும் உரிமை வழங்கப்படுகிறது.

யார் மூலம் (மனைவி அல்லது குடும்பத்தினர்) தனது வாக்கைப் பதிவு செய்ய விண்ணப்பித்தாரா அவர் முதலில் அவருடையை வாக்கைப் பதிவு செய்து விட்டு மீண்டும் வந்து ராணு வவீரரின் வாக்கைப் பதிவு செய்யலாம்.

49M RULE:
ஓட்டுச்சாவடிக்குள் தகராறு செய்பவரையும், யாருக்கு ஓட்டுப்போகிறேன் என வெளிப்படையாக அறிவித்தவரையும், 'ஓட்டளிக்க மறுக்கப்படுகிறது' என, பதிவு செய்து (17A) வெளியேற்ற வேண்டும்.

சேலஞ்ச்' ஓட்டு:
ஓட்டுப்போட வாக்காளர் வரும்போது, பூத் ஏஜன்ட் ஆட்சேபனை தெரிவித்தால், 'சேலஞ்ச்' ஓட்டு பதிவு செய்யலாம்.
அதற்கு 'பூத் ஏஜன்டிடம்' 2 ரூபாய் பணம் பெற்று, ஓட்டுப்போடுபவரின் ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும்.
ஆவணம் சரியாக இருந்தால் ஓட்டளிக்க அனுமதிக்கலாம்.
சேலஞ்ச் ஓட்டு பதிவு செய்யப்பட்டால், 2 ரூபாய் அரசுக்கு சொந்தம்;
சரியான ஆவணங்கள் இல்லாவிட்டால், 2 ரூபாயை பூத் ஏஜன்ட்டிடம் திரும்ப கொடுத்து, ஓட்டு போட
முயன்றவரை போலீசில் ஒப்படைக்க வேண்டும்.

TENDER VOTE:
சரியான ஆவணங்களுடன் ஓட்டுப்போட வரும்போது, அவரது ஓட்டு ஏற்கனவே பதிவு செய்திருந்தால், ஓட்டுப்போட வந்தவருக்கு 'டெண்டேடு' ஓட்டளிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
இதற்காக ஓட்டுச்சாவடிக்கு 20 'பேலட் பேப்பர்கள்' வழங்கப்பட்டிருக்கும். 'பேலட் பேப்பரில்' முத்திரை வைத்து ஓட்டளிக்க அனுமதிக்க வேண்டும்.
இவர்களை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்களிக்க அனுமதிக்க கூடாது.

BLINDER's VOTE:
கண் பார்வையற்றவரை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
மின்னணு இயந்திரத்தை தடவிப் பார்த்து, ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும்.

ஓட்டுப்பதிவு அலுவலர்கள், அந்தந்த சட்டசபை தொகுதிக்குள் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தால், அவர்களுக்கு வழங்கியுள்ள 'யுனிகோடு' எண்களை பயன்படுத்தி, பணியாற்றும் ஓட்டுச்சாவடியில் ஓட்டுப்போட்டுக்கொள்ளலாம்.
வேறு தொகுதியில் தேர்தல் பணியமர்த்தப்பட்டால், தபால் ஓட்டு போட வேண்டும்.

தேர்தல் அலுவலர்களுக்கு தேவையான காலை, மதிய, இரவு உணவை சொந்த பொறுப்பில் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
கட்சியினரிடம் இருந்து உணவு, குடிநீர், குளிர்பானங்கள், நொறுக்குத்தீனி பெறுவது சட்டப்படி குற்றம்.

சிறந்த ஆசிரியருக்கான தேசிய விருது: தமிழகத்தில் இருந்து 22 பேர் தேர்வு

சிறந்த ஆசிரியருக்கான, தேசிய விருதுக்கு, தமிழகத்தில் இருந்து, 22 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி, ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான, செப்., 5, தேசிய அளவில், ஆசிரியர் தின நாளாக கொண்டாடப்படுகிறது. அந்நாளை ஒட்டி, ஆசிரியர் பணியை சிறப்பாக செய்பவர்கள், தேசிய மற்றும் மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டு, செப்., 5ல், விருது வழங்கப்படுகிறது. தேசிய விருதுக்கு உரிய ஆசிரியரை தேர்வு செய்ய, மத்திய அரசு சார்பில், மாநிலத்திற்கு ஒரு கல்வியாளர் நியமிக்கப்படுகிறார். இவர், மாநில குழுவுடன் சேர்ந்து, சிறந்த ஆசிரியரை தேர்வு செய்து, மத்திய அரசுக்கு பட்டியல் அனுப்புவார். பட்டியல் இறுதியானதும் பெயர் அறிவிக்கப்படும். கடந்த 2013ம் ஆண்டுக்கான விருது, வரும், செப்., 5ல் வழங்கப்பட உள்ளது. உத்தரகண்ட், ராஜஸ்தான், டில்லி உள்ளிட்ட, பல மாநிலங்களில், தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர் பட்டியலை, மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. தமிழகத்திற்கான பட்டியல், இன்னும் வெளியாகவில்லை. கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், 'தமிழகத்திற்கு, 22 விருதுகள் வழங்கப்படுகின்றன. சிறந்த ஆசிரியர் பட்டியலை இறுதி செய்து, மத்திய அரசுக்கு அனுப்பி விட்டோம். மத்திய அரசு ஒப்புதல் அளித்ததும், விரைவில், பட்டியல் வெளியாகும். தமிழக அரசு வழங்கும் விருதுக்கான தேர்வுப் பணி, ஜூனில் துவங்கும்' என, தெரிவித்தது.

18/04/2014

மறக்க முடியாத மாணவர்கள்: திருமதி.சித்ரா குமரேசன் அவர்கள் உரை, இன்றைய சுட்டி விகடனின் தொலைபேசியில்! மறக்காம கேளுங்க ஆசிரிய நண்பர்களே!


அன்பு மிக்க ஆசிரிய நண்பர்களுக்கு வணக்கம்!

சுட்டி விகடன் இதழ் வழங்கும் மறக்க முடியாத மாணவர்கள் என்னும் தலைப்பிலான தொலைபேசி வழி பகிர்வில் இன்று (18.04.2014) 17,அஸ்தினாபுரம் அரசு உயர் நிலைப்பள்ளி ஆங்கில பட்டதாரி ஆசிரியை திருமதி.சித்ரா குமரேசன் அவர்கள் உரை நிகழ்த்துகிறார்.

ஆசிரியை திருமதி.சித்ரா குமரேசன் பற்றி...

1.மாணவர்களுக்கு கற்பித்தலுடன் தனது பணி முடிந்தது என கருதுபவர் அல்ல. மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுபவர்.மாணவர்களிடம் தன்னம்பிக்கை விதையை விதைப்பவர்.

2.இவரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி இவரின் மாணவர்கள், கணினிவழிக் கற்பித்தலுக்கேற்ற வகையில் பாடப் பொருளை வடிவமைத்ததுடன், ஆசிரியர்களுக்கு கருத்தாளர்களாக செயல்பட்டுள்ளனர். இவரின் இந்த சாதனைக்காக இந்திய குடியரசு தலைவர் மேதகு.பிரணாப் முகர்ஜி இவருக்கு ஐ.சி.டி. ICT தேசிய விருது வழங்கி பெருமை படுத்தியுள்ளார்.

3.கணினியை திறம்பட கற்பித்தலுக்கு பயன் படுத்தியதற்காக மைக்ரோ சாப்ட் நிறுவனம் சிறந்த ஆசிரியர் என்ற விருதை அளித்து,இவருக்கு வாஷிங்டனில் நடைபெற்ற அகில உலக கருத்தரங்கத்தில் கலந்து கொள்ள அழைத்து இவரது திறமையை பாராட்டியுள்ளது.

4.சூரிய ஒளி ஆற்றலை எந்தெந்த வழிகளில் ஆக்கப் பூர்வமாக பயன்படுத்தலாம் என்ற தலைப்பின் கீழ் இவரது வழிகாட்டுதலின் படி செயல் பட்ட இவரது மாணவர்கள் தேசிய அளவிலான விருதை Design for Change – காக அகமதாபாத்தில் பெற்றனர்.

5.தமிழக அரசின் 3,4, 5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தக ஒருங்கிணைப்பாளராக சிறப்பாக பணிபுரிந்து வருகிறார்.

6.மாணவர்களை மட்டுமல்லாமல் ஆசிரியர்களின் படைப்பாற்றலை ஊக்குவிப்பவர். ஆசிரியர்களின் படைப்பு திறனை வெளிக்கொணர வழிகாட்டுவதுடன், அவர்களின் சிறந்த படைப்புகளை தனது இணைய தளத்தில்http://teachmicroinnovative.wikispaces.com/ வெளியிட்டு ஊக்கப்படுத்தி வருகிறார். ஆசிரியர்கள் தங்கள் படைப்புகளை இவரின் மின்னஞ்சலுக்கு chitra71pums@rediffmail.com அனுப்பினால் அவற்றை தனது இணையதளத்தில் வெளியிட ஆர்வமாக உள்ளார்.

7.இவரிடம் பயின்ற மாணவர்கள், இன்று அரசின் பொறுப்பான பதவிகளில் உள்ளனர் என்பது குறிப்பிட தக்கது .

இவரின் உரையை கேளுங்கள்! பயன் பெறுங்கள்!!

இவரின் உரையை கேட்க 044-66802905 என்ற எண்ணிற்கு டயல் செய்யுங்கள்.

உரையின் கால அளவு: 3 நிமிடங்கள்.(Depression – என்பது நோயல்ல )

இவரின் முகநூல் பக்கம் https://www.facebook.com/apraveen89

புதிய இணையதளம் தொடங்கியது தேர்தல் ஆணையம


17/04/2014

ஏப்ரல் 17: பாரத ரத்னா சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் நினைவு தின சிறப்பு பகிர்வு


சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் செப்டம்பர் ஐந்து 1888 இல் திருத்தணியில் பிறந்தார்.அப்பா வீராசாமி அவர்கள் ஜமீன்தாரிடம் தாசில்தாராக இருந்தார்.பள்ளிக்காலம் திருத்தணியிலும்,திருப்பதியிலும் கழிந்தது.
குடும்பம் வறுமையில் இருந்ததால் அப்பா இவரை கோயில் குருக்களாக போக சொன்னார்.ஆனால் ,கல்வி கற்க வேண்டும் என்கிற ஆர்வம் உந்தித்தள்ளியது இவரை.புத்தகம் வாங்க காசில்லாமல் இவரின் உறவுக்காரர் தத்துவம் படித்து வைத்து இருந்த பழைய புத்தகங்கள் மட்டுமே இருந்ததால் வேலூர் வுர்கிஸ்(VOORHEESE )கல்லூரியில்,பின் சென்னை கிறித்துவ கல்லூரியில் தத்துவம் பயின்றார்.
சென்னை கிறித்துவ கல்லூரியில் பயில்கிற பொழுது ஹாக் எனும் புகழ் பெற்ற பேராசிரியரின் கீழ் "வேதாந்தத்தின் ஒழுக்கவியல் மற்றும் அதன் கருத்தியல் நம்பிக்கைகள் "என்கிற தலைப்பில் ஆழ்ந்த ஒரு கட்டுரையை சமர்ப்பித்தார். மேற்கத்திய தத்துவங்களில் நம்பிக்கை கொண்ட ஹாக் அதை நிராகரிப்பார் என இவர் எதிர் பார்த்தார்.ஆனால் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு பிரமாதம் என்றார் ;முதுகலை பட்டம் இவ்வாறு வந்து சேர்ந்தது.
வறுமை வாட்டி எடுத்ததால் கல்லூரியில் பெற்ற பதக்கங்களை அடமானம் வைத்து செலவுகளை சமாளித்து இருக்கிறார் ; தத்துவம் படித்து முடித்த பின் சென்னை மாநில கல்லூரியில்  உதவி பேராசிரியராக சேர்ந்ததும் தட்டு வாங்க காசு இல்லாமல் வாழை இலையில் தான் தினமும் உண்டு இருக்கிறார்.வெகு விரைவிலேயே அவரின் இந்தியா தத்துவங்கள் சார்ந்த கட்டுரைகள் உலகம் முழுக்க கவனம் பெற்றன.ஒன்பதே ஆண்டுகளில் மைசூர் பல்கலைகழகம் பேராசிரியராக இவரை பணியமர்த்தியது.மாணவர்களிடம் தலைசிறந்த ஆசிரியர் என பெயர் பெற்றார்
பின் கொல்கத்தாவில் பெருமை மிகுந்த ஐந்தாம் ஜார்ஜ் இருக்கை பேராசிரியர் பதவியில் அமர கிளம்பும் பொழுது குதிரை வண்டியின் குதிரைகளை அவிழ்த்துவிட்டு பிள்ளைகளே வண்டியை இழுத்து சென்றது இவர் எத்தகு ஆசிரியர் என்பதற்கு சான்று..அங்கிருந்து ஹார்வர்ட் ,ஆக்ஸ்போர்ட் முதலிய பல்கலைகழக கூட்டங்களில் இவர் பேசியதை பார்த்து உலகம் வியந்தது.பெர்ட்ரண்டு ரசல் முதலிய உலக மேதைகள் இவரின் மேற்கத்திய மற்றும் கிழக்கின் தத்துவ அறிவை பற்றிய ஆளுமையை கண்டு சொக்கிபோனார்கள்
ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தின் பேராசிரியர் பதவியில் நாற்பது வயதிற்குள் அமர்த்தப்பட்டார்.ஆந்திராவின் துணை வேந்தாரகவும் பணியாற்றினார்.பின்பு பனராஸ் ஹிந்து பல்கலைகழக துணை வேந்தர் ஆன பொழுது தான் இவரின் விடுதலை பற்று பலர்க்கு தெரிந்தது.மாரிஸ் ஹல்லேட் எனும் கவர்னர் பனராஸ் ஹிந்து பல்கலைகழக மாணவர்கள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஈடுபட்டதால் அதை போர் மருத்துவமனையாக மாற்ற முயற்சித்த பொழுது அப்பொழுதைய வைஸ்ராயை சந்தித்து அதை தடுத்தார் ;ஆனால் அரசு நிதியுதவி தராது என அறிவித்ததும் தெருத்தெருவாக சென்று நிதி திரட்டி பல்கலைகழகத்தை நடத்தினார்
விடுதலை பெறுவதற்கு முன்னேயே யுனெஸ்கோவுக்கான இந்திய பிரதிநிதி ஆனார் ;இந்திய விடுதலை பெற்றதும் கல்வி கமிஷன் தலைவர் ஆனார் ;கல்வியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து பல்வேறு யோசனைகளை இவரின் குழு வழங்கியது.விடுதலைக்கு பின் அரசாங்கம் வழங்கிய சர் பட்டத்தை துறந்தார் ;தன்னை முனைவர் என்றே அழைத்தால் போதும் என ஆசிரியர் என்கிற பெருமிதத்தோடு சொன்னார்
ஸ்ரீனிவாச ராமனுஜம் இங்கிலாந்து கிளம்பும்முன் கப்பலில் இவரை சந்தித்து ஆசி பெற்று இருக்கிறார்;மீண்டும் இருவரும் சந்திக்கவே இல்லை.சர்ச்சில்லின் வெள்ளையின திமிருக்கு குட்டு வைத்து இருக்கிறார் ;"நாங்கள் ஒரே நிறம் ;நீங்கள் பல நிறம் என சர்ச்சில் சொன்ன பொழுது "கழுதைகள் ஒரே நிறம் ,குதிரைகள் பல நிறம் !"என்றார் ;:ஸ்பூனில் சாப்பிடுவதே நாகரீகம் என சொன்ன பொழுது ,"உங்கள் ஸ்பூனில் யார் வேண்டுமானலும் சாப்பிடலாம் ,என் கையில் நான் மட்டுமே சாப்பிட முடியும் "என்றாரே பார்க்கலாம்
சோவியத் ரஷ்யவின் இந்திய தூதர் ஆனார் ;அப்பொழுது ஸ்டாலினை நேருக்கு நேர் பார்த்து ,"ரத்தம் வழியும் போர் புரிந்து பின் துறவறம் பூண்ட இந்திய அரசர் உண்டு ;நீங்களும் அவ்வாறே ஆவீர்கள் !"என்றார் சிலவருடம் கழித்து கூப்பிட்ட ஸ்டாலின் ,"என்னை மனிதராக நடத்திய முதல் ஆத்மா நீங்கள் தான் !நீங்கள் பல காலம் வாழவேண்டும் !"என வாழ்த்தினார்
கற்பிப்பதில் தீராத ஆர்வம் கொண்டவர் -ரஷ்யாவின் தூதராக இருந்த காலத்திலும் ஆக்ஸ்போர்ட் பல்கலையில் ஆறுமாதம் போய் பாடம் நடத்தி வந்தார்.இந்தியாவின் முதல் குடியரசு துணை தலைவர் ஆனார்.அப்போது அவர் விவாதங்களின் நடுவே தலையிட்டு இந்து புராணங்களில் இருந்தும் ,பைபிளில் இருந்தும் வாசகங்கள் சொல்வார் ,"குடும்ப  நிகழ்வு போல சிறப்பாக நடத்துகிறார் என நேரு புகழாரம் சூட்டினார்
ஜனாதிபதியாக ராஜேந்திர பிரசாத்திற்கு பின் ஆனார் ;தன் சம்பளமான பத்தாயிரத்தில் 2,500 மட்டும் பெற்றுக்கொண்டு மீதத்தை பிரதமரின் நிவாரண நிதிக்கு கொடுத்து விடுவதை வழக்கமாக கொண்டு இருந்தார்.
இவரின் பிறந்தநாளை அரசு கொண்டாட ஆசைப்பட்ட பொழுது அதை ஆசிரியர் தினமாக கொண்டாடலாம் என சொன்னார் .அவ்வாறே ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர் உயிருடன் இருக்கும் பொழுதே அரசு அதை செய்தது தன்னை ஒரு ஆசிரியர் என்பதிலேயே பெருமை கொண்டு இருந்தார்.இந்தியாவின் முதல் பாரத ரத்னாவை சி.வி.ராமன், ராஜாஜி ஆகியோருடன் இவரும் பெற்றுக்கொண்டார்
இவரை நேரு சொன்ன வரிகளில் ஓரளவிற்கு அடக்கலாம் ;"இந்தியாவிற்கு பல்வேறு பதவிகளில் சேவை புரிந்து இருக்கிறார் ;எனினும் ,அவர் ஒரு மாபெரும் ஆசிரியர் அவரிடம் இருந்து கற்றுக்கொண்டோம் ,இனியும் கற்றவண்ணம் இருப்போம் ஒரு தத்துவஞானி ,மனிதாபிமானி,கல்வியாளரை இந்த நாடு ஜனாதிபதியாக பெற்றதற்கு பெருமை கொள்கிறது.அதுவே பெரிய மதிப்பு மற்றும் கவுரவம் !"
சமூக சேவை செய்வதில் ஆர்வம் கொண்டு இருந்தார்.ஜி.டி.பிர்லாவுடன் கிருஷ்ணார்பன் தொண்டு நிறுவனத்தை தொடங்கினார்.இன்றுவரை அது சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது.இறுதி ஆறு வருடங்களை அமைதியாக தன் சென்னை வீடான கிரிஜாவில் கழித்தார்.ஏப்ரல் பதினேழு 1975 அன்று மறைந்தார்

TRB:Special TNTET நுழைவுச்சீட்டு வெளியீடு

16/04/2014

பாடப்புத்தகம், நோட்டு புத்தகம், சீருடையுடன் இலவச பஸ் பயண அட்டை ஜூன் 2–ந் தேதி பள்ளிக்கூடம் திறக்கும் அன்று அரசு பள்ளி மாணவ–மாணவிகளுக்கு வழங்கப்படும்

எந்த ஆண்டும் இல்லாத வகையில் ஜூன் 2–ந் தேதி பள்ளிக்கூடம் திறக்கும் அன்று அரசு பள்ளி மாணவ–மாணவிகளுக்கு அரசு சார்பில்
வழங்க கூடிய பாடப்புத்தகம், நோட்டு புத்தகம், சீருடையுடன் இலவச பஸ் பயண அட்டையும் வழங்கப்படும். இதற்கான அனைத்து முயற்சிகளையும் கல்வித்துறை செய்து வருகிறது.

தமிழக அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப் படுகிறது. அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12–ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் வழங்கப்படுகிறது. வழக்கமாக இலவச பாஸ் பள்ளிக்கூடம் திறந்து ஜூன் மாதம் இறுதி அல்லது ஜூலை மாதம் முதல் வாரத்தில்தான் வழங்கப்படும். போக்குவரத்து கழகம் தரும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பள்ளிகள் ஒப்படைப்பதில் ஏற்படும் தாமதத்தால் இலவச பாஸ் பள்ளி திறந்தவுடன் வழங்க முடியவில்லை. சில நேரம் போக்குவரத்து கழக மூலமும் இந்த கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. இலவச பஸ் பாசை மாணவர்கள் கையில் கிடைப்பதற்கு ஒரு மாதத்திற்கு மேல் ஆகி விடுகிறது. ஆனால் இந்த ஆண்டு இலவச பஸ் பாஸ் பள்ளிக்கூடம் திறக்கும் முதல் நாள் அன்றே வழங்க பள்ளிக் கல்வித்துறை முழுமையான ஏற்பாடுகளை செய்து வருகிறது. 

இலவச பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் பள்ளி தொடங்கும் அன்று அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுவது போல பள்ளி தொடங்கும் அன்று பாசையும் வழங்க திட்டமிட்டுள்ளது. பஸ் பாஸ் வழங்க வேண்டிய மாணவ–மாணவிகளின் எண்ணிக்கையை மாவட்ட வாரியாக தொகுத்து என்.எஸ்.எஸ். இயக்குனருக்கு வருகிற 30–ந் தேதிக்குள் அனுப்புமாறு அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக் கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார். போக்குவரத்து கழக அலுவலகங்களில் இலவச பஸ் விண்ணப்ப படிவங்களை முன்கூட்டியே பெற்று பூர்த்தி செய்து அனுப்ப அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் ஜூன் 2–ந் தேதி பள்ளிக்கூடம் திறக்கும் அன்று அரசு பள்ளி மாணவ–மாணவிகளுக்கு அரசு சார்பில் வழங்க கூடிய பாடப்புத்தகம், நோட்டு புத்தகம், சீருடையுடன் இலவச பஸ் பயண அட்டையும் வழங்கப்படும். இதற்கான அனைத்து முயற்சிகளையும் பள்ளிக் கல்வித்துறை செய்து வருகிறது

குழந்தைகளை பராமரிக்க அரசு பெண் ஊழியர்களுக்கு 2 ஆண்டு விடுப்பு: உச்ச நீதிமன்றம் அனுமதி

குழந்தைகளை பராமரிப்பதற்காக அரசு பெண் ஊழியர்கள் தொடர்ந்து 2 ஆண்டுகள் விடுப்பு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியது.

ககாலி கோஷ் என்ற அரசு பெண் ஊழியர் தனது மகனை மேல் நிலைத் தேர்வுக்கு தயார் படுத்துவதற்காக 730 நாள்கள் விடுப்பு கேட்டார். அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் முறையிட்டார். அவரது கோரிக்கையை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் ஏற்று அனுமதி அளித்தது. ஆனால் அந்த அனுமதியை கொல்கத்தா உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

இதையடுத்து ககாலி கோஷ் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள் எஸ்.ஜே.முகோபாத்யாய, வி.கோபால கெளடா ஆகியோர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்தனர்.

அவர்கள் அளித்த தீர்ப்பில், ""சட்டப்பிரிவு 43-சி யின் படி அரசு பெண் ஊழியர்களுக்கு 18 வயதுக்கு குறைவான குழந்தைகள் இருந்தால், அவர்கள் தனது பணிக்காலத்துக்குள் 2 குழந்தைகள் வரை 2 ஆண்டுகள் (730 நாள்கள்) தொடர்ச்சியாக விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.

இந்த விடுப்பை அவர்கள் குழந்தைகள் பராமரிப்புக்கு மட்டுமல்ல அவர்களின் மேற்படிப்பு மற்றும் உடல்நலக்குறைவின்போதும் எடுத்துக்கொள்ளலாம்'' என்று தீர்ப்பு அளித்தனர்.

டிடிஎட் தேர்வு எழுதுவதற்கு 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

அரசு ஆசிரியர் பள்ளிகளில் டிடிஎட் தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்களுக்கு ஜூன் மாதம் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் தேர்வுத் துறை இணைய தளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக் கம் செய்து பக்கம் 3 வரை பூர்த்தி செய்ய வேண்டும். அந்த விண்ணப்பத்துடன் ஏற்கனவே தேர்வு எழுதி பெற்ற மதிப்பெண் சான்றுகளின் நகல்களை கண்டிப்பாக இணைத்து அந்தந்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். தேர்தலை முன்னிட்டு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் கடைசி தேதி நீட்டிக்கப்பட்டு, 26ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இணையதளத்தில் ஓய்வூதிய விபரங்களை அறியும் வசதி

ஓய்வூதிய விபரங்களை இணையதளத்தில் அறியும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஓய்வூதியர்கள், www.tn.gov.in/karuvoolam என்ற முகவரியில் விபரம் பெறலாம். கம்ப்யூட்டரில் மேற்கண்ட முகவரியை டைப் செய்தவுடன், பென்ஷனர் 'ஹோம் பேஜ்' என்ற விபரம் திரையில் தெரியும். அதை 'கிளிக்' செய்தால், 'செக் யுவர் இ.சி.எஸ்., ஸ்டேட்டஸ்' என்ற விபரம் வரும். அதில் ஓய்வூதியம் பெறும் கருவூல அலுவலகம், ஓய்வூதிய கொடுப்பாணை எண் (பி.பி.ஓ.,), எந்த தேதி முதல் எந்தத் தேதி வரை என்பதை பூர்த்தி செய்தால், ஓய்வூதியரின் கணக்கில், எந்தெந்த தேதிகளில், எந்த வகையில் பணம் வங்கியில் சேர்க்கப்பட்டுள்ளது, என்ற விபரம் தெரியும். இதற்காக, கருவூலங்களுக்கு அலைய வேண்டியதில்லை. இதில் 2013 செப்டம்பர் முதல் உள்ள விபரங்களை பெறலாம்

அரசின் எச்சரிக்கையை மீறி பள்ளி மாணவர்களை கொண்டு வகுப்பறை மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வி செயலர் உத்தரவு

சிறப்பு டி.இ.டி., தேர்வு: 22க்குள் 'ஹால் டிக்கெட்'

'சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (டி.இ.டி.,), 'ஹால் டிக்கெட்' 22ம் தேதிக்குள், ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) இணையதளத்தில் வெளியிடப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. டி.ஆர்.பி., அறிவிப்பில், 'மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு டி.இ.டி., தேர்வு, மே 21ம் தேதி, 32 மாவட்ட தலைநகரங்களிலும் நடக்கும். தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட், டி.ஆர்.பி.,யின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், வரும், 22ம் தேதிக்குள் வெளியிடப்படும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதலில், வரும், 28ம் தேதி தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. தேர்தல் காரணமாக, மே 21ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. தேர்வுக்கு, 5,300 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

பள்ளி திறக்கும் நாளில் இலவச பஸ் பாஸ்

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 2014-15 ல் முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் நாளான ஜூன் 2ல் இலவச பஸ் பாஸ் பெற்று தர பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தெரிவித்திருப்பதாவது: பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் பெற்று தருவதில் கால தாமதம் ஏற்படக்கூடாது. அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும், தங்கள் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, இலவச பஸ் பாஸ் விண்ணப்பங்களை விடுமுறை தினங்களிலேயே பூர்த்தி செய்து, அந்தந்த மாவட்ட அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் வழங்க வேண்டும். இலவச பஸ் பாசை போக்குவரத்து அதிகாரிகளிடமிருந்து பெற்று, பள்ளி திறக்கும் நாளான ஜூன் 2 ல் அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும், என தெரிவித்துள்ளது.

EXPECTED 7TH CPC PAY SCALE

6th CPC PAY STRUCTUREEXPECTED PAY STRUCTURE OF 7TH CPC
Pay BandPay BandsGrade PayPay in the Pay BandPay ScalePay BandGrade PayPay in the Pay BandPay Scale
PB-15200-2020018005200700015000-6000050001500020000
PB-15200-2020019005830773015000-6000055001700022500
PB-15200-2020020006460846015000-6000065002000026500
PB-15200-2020024007510991015000-6000075002300030500
PB-15200-20200280085601136015000-6000085002600034500









PB-29300-34800420093001350030000-100000100003000040000
PB-29300-348004600125401714030000-100000135003500048500
PB-29300-348004800133501815030000-100000150004000055000









PB-315600-391005400156002100050000-150000165005000066500
PB-315600-391006600187502553050000-150000200006000080000
PB-315600-391007600219002950050000-150000230007000093000









PB-437400-6700087003740046100100000-20000026000100000126000
PB-437400-6700089004020049100100000-20000027500110000137500
PB-437400-67000100004300053000100000-20000030000120000150000

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்: 2014ம் ஆண்டுக்கான பி.எட்., சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு, நுழைவு தேர்வு கிடையாது

09/04/2014

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறை~2014-2015ஆம் கல்வியாண்டிற்கு உண்டான பள்ளி மாணவ மாணவியர் பயண அட்டைகள் கால தாமதமின்றி வழங்கிட மேற்கொள்ள வேண்டியது- சார்பு




தொடக்கக் கல்வி - ICT திட்டத்தின் கீழ் 2013ம் ஆண்டில் கணினிவழிக் கல்வியில் ஆர்வமுடன் செயல்படும் ஆசிரியர்களுக்கான தேசிய விருது அளித்தல் - விவரம் கோரி இயக்குனர் உத்தரவு

தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வித் துறையில் உள்ள தனியார் / அரசு / ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி பள்ளிகளுக்கு 2013-14ம் ஆண்டிற்கான சுழற்கேடயங்கள் வழங்க பள்ளிகளின் பட்டியல் கோரி இயக்குனர் உத்தரவு

06/04/2014

தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு, வசதிகள் ஏற்படுத்த ‌தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அரியலூர் வட்டாரக் கிளை க‌ாேரிக்கை :

*தொகுதியில் பதட்டமான ஓட்டுச் சாவடிகளில் பெண் ஊழியர்கள் பணியமர்த்தப்பட கூடாது.
*நகர் புறம் மற்றும் அதிக போக்குவரத்து வசதி உள்ள பகுதிகளில் பெண் ஊழியர்கள்  தேர்தல் பணிக்கு நியமிக்கப்படவேண்டும்.
*தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு, பணிமுடிந்து ‌இல்லம் செல்ல  ‌அல்லது நகர்புறத்திற்கு செல்ல இரவு நேர சிறப்பு பஸ்கள் இயக்கப்படவேண்டும்.
*கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு தொடக்கப்பள்ளி மாணவர் நலன்கருதி தேர்தல் பயிற்சி நாளையும் தேர்தல் நாளையும் வேளைநாளாக கணக்கிட ஆணை‌ப்பிறப்பிக்க வேண்டும்.

'நம்ம பள்ளி, நம்ம குழந்தை': துவக்கப் பள்ளிகளுக்கு கையேடு தர முடிவு

அரசு துவக்கப்பள்ளியில் வரும், கல்வியாண்டில் மாணவ, மாணவியரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு, அழகிய வண்ணப்படங்களுடன் கையேடு வழங்கப்பட உள்ளது.

மத்திய அரசு மூலம் கடந்த, 2001ல், ஆறு முதல், 14 வயதுடைய அனைத்து வயது குழந்தைகளும், ஜாதி, மதம் மற்றும் சமூக வேறுபாடின்றி அனைவரும் கல்வி கற்கும் நோக்கத்துடன், 'அனைவருக்கும் கல்வி இயக்கம்' (எஸ்.எஸ்.ஏ) என்ற திட்டம், மாநிலம் முழுவதும் துவங்கப்பட்டது.

மாணவர் சேர்க்கை:

நவீன வசதி, புதிய வடிவில் கல்வி வழங்குதல், இதர திறன் வளர்த்தல் மூலம், தனியார் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை அதிகரிப்பால், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்தது. தனியார் பள்ளிகளில் கட்டணம் அதிகரிப்பு மற்றும் அரசு பள்ளிகளிலும் தரமான, இலவச கல்வி வழங்கும் நடவடிக்கையால், மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.

அரசு பள்ளி:

தனியார் பள்ளியில் கல்வி பயிலும் குழந்தைகளில், குறிப்பிட்ட சதவீதத்தினர் நடுநிலை கல்விக்குப்பின், அரசு பள்ளிகளை நாடுகின்றனர். தற்போது அரசு பள்ளிகளில், தமிழக அரசு சார்பில், 14 இலவச பொருட்கள் வழங்குவதால், மாணவர்கள் ஊக்கம் பெறுகின்றனர். இங்கு, ஆறு முதல், 14 வயது வரையுள்ள, பள்ளி வயது குழந்தைகளை, பள்ளியில் சேர்ப்பதற்கும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தவும், கிராமக்கல்விக்குழு மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு, சிறப்பான பயிற்சி வழங்குவது, எஸ்.எஸ்.ஏ.,வின் முக்கிய குறிக்கோள். எஸ்.எஸ்.ஏ., சார்பில், 'நம்ம பள்ளி, நம்ம குழந்தை' என்ற தலைப்பில், அழகிய வண்ணப்படங்களுடன், கையேடு தயாரிக்கப்பட்டு உள்ளது.

கட்டாய கல்வி:

கிராமக்கல்வி குழு செயல்பாடுகள், குழந்தைகளில் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம், சட்டத்தில் பெற்றோர் மற்றும் ஆசிரியர் பங்கு, உள்ளூர் அதிகார மையத்தின் பங்கு, மேலாண்மை குழுவின் பங்கு மற்றும் கூட்டம், மேம்பாட்டு திட்டத்தில் இருக்க வேண்டியவை, பள்ளி கல்வித்துறைக்கு உதவும் பிற துறைகள் உள்ளிட்ட விவரங்கள், இந்த கையேட்டில் அடங்கி உள்ளன. இந்த கையேடு, தமிழகத்தில் உள்ள, இரண்டு லட்சத்து, 65, 284 கிராமக் கல்விக்குழு மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட உள்ளது. பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள், ஆசிரியர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களாக இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் இந்த கையேடு வழங்கப்படும்.

தனியார் பள்ளிக்கு நிகராக, அரசு துவக்கப்பள்ளியில், வரும், 2014- - 15ம் கல்வியாண்டில், பள்ளி மேலாண்மை குழு மூலம், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த, எஸ்.எஸ்.ஏ., திட்டமிட்டுள்ளது.

கையேடு:

இதற்காக, தொடக்க கல்வி இயக்கம், சென்னை யுனிசெப் மற்றும் மதுரை மனித உரிமை கல்வி நிறுவனமும் இணைந்து, இக்கையேட்டை தயாரித்து உள்ளன.

இடைநிலை ஆசிரியர் ஊதியம் 9300+4200 வழங்க முடியாது என நிதித்துறை கூறிடும் காரணம்

இடைநிலை ஆசிரியர் ஊதியம் 9300+4200 வழங்க முடியாது என நிதி துறை கூறிடும் காரணம் அ .ஆ .எண் ;1383 கல்வி .நாள்.23.8.1988.ன் படி தொடக்க கல்வி சார்நிலை பணி விதிகள் .விதி 6 ன் படி இடை நிலை ஆசிரியர் கல்விதகுதி SSLC, மற்றும் சான்றிதழ் கல்வி என உள்ளது ,விதி 9 ன் படி நியமனம் ஒன்றிய அளவிலானது என உள்ளது.

இதை கல்வி உரிமை சட்டம் 2009 ன் படியும் ,உச்ச நீதி மன்ற தீர்ப்பு படி மாற்றி அமைத்திட மனு அனுப்ப பட்டது .மீண்டும் வரும் 8.4.14.அன்று நேரில் இயக்குனரிடம் கொடுக்கப்பட உள்ளது .

இந்த அ .ஆ .எண் ;1383 கல்வி .நாள் ;23.8.1988 மாற்றி தற்போதைய உண்மை நிலை படி இடை நிலை ஆசிரியர் கல்வி தகுதி +2 , டிப்ளமா என மாற்றம் செய்ய பட்டால் நமது ஊதியம் 9300+4200 என நிதி துறை மாற்றம் செய்துதான் ஆக வேண்டும்.

வானாளவிய அதிகாரம் படைத்ததா தேர்தல் ஆணையம்?


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்தல் பணியை மறுக்காமல் ஏற்க வேண்டும் என்பதில் வேறுபட்ட கருத்துகள் இருக்க முடியாது. ஏனெனில் தேர்தல், மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்றவை தேசியப்பணிகள் என்பதால், தற்பொழுது தேசியப்பணிகள் என்பவை ஆண்டு முழுவதும் ஏதோவொரு வகையில் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கிறது.
எனவே இது போன்ற தேசியப்பணிகளுக்கு நிரந்தரமாக பணியாட்கள் நிரந்தரம் செய்யப்பட்டு ஆசிரியர்கள் கல்விப் பணியை மட்டுமே கவனிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஆனாலும் தேர்தலுக்கு முதல் நாள் காலையில் தேர்தல் வகுப்பு பிறகு அப்படியே நேராக முந்தைய நாள் மதியம் 12 மணிக்கே தேர்தலில் பணிபுரியும் இடத்திற்குச் செல்ல வேண்டும் என்பதும் அடுத்த நாள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஏறத்தாழ 11 மணி நேரம் ஓய்வில்லாமல் இடைவிடாத தொடர்ந்த பணி...

இந்திய அரசியல் சட்டம் என்ன சொல்கிறது?
ஒரு தொழிலாளிக்கு 8 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து வேலை கொடுக்கக் கூடாது என்கிறது. ஆனால் அரசாங்கமே இதனை மீறுகிறது. வயதானோரும், பெண்களும் தொடர்ந்து இரண்டு நாட்கள் வீட்டை விட்டு வெளியேறி தேர்தல் நாளன்று தொடர்ந்து இடைவிடாமல் 11 மணி நேரம் தேர்தல் பணி பார்ப்பது என்பதும் தனி மனித சுதந்திரத்தை பறித்தல் மற்றும் அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பதும் இதுவரையிலும் யாருக்குமே தெரியாமல் போனதெப்படி? 

மேலும் தேர்தல் பணிபுரியும் அலுவலர்களுக்கு தொகுப்பூதியம் வழங்காமல் அவர்கள் பெற்று வரும் அடிப்படை ஊதியத்தை கணக்கிட்டு ஊதியம் வழங்கிட வேண்டுமெனவும் கோரிக்கைகள் ஏன் எழுப்பப்படவில்லை?

இது குறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாமக்கல் மாவட்டக் கிளை இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கும் கடிதம் அனுப்பியுள்ளது




04/04/2014

பாரதிதாசன் பல்கலை: தொலைதூரக் கல்வியில் இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு

திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின், தொலைதூரக் கல்வி 

இயக்ககத்தில் இளங்கலை பட்டப் படிப்புக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளனகடந்த நவம்பர் மாதத்தில் பி.எஸ்சி, பி.காம் ஆகிய படிப்புகளில் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில வெளியிட்டுள்ளன.இளங்கலை தேர்வு முடிவுகளை அறிய www.bdu.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்

சேமநல நிதியை கணக்கிடுவது எப்படி?

சேமநல நிதி ஒரு பணியாளரின் சம்பளத்தில் 12 சதவீதத்தை நிறுவனவனத்திற்கு செலுத்த வேண்டும் என்பது பழைய முறை. தற்போது அந்த முறை மாற்றப்பட்டுள்ளது. ஒரு பணியாளரின் சம்பளம் மற்றும் கிராக்கிப்படி எனப்படும் DAவும் இணைந்து 12 சதவிதாம் செலுத்த வேண்டும்.

உதாரணம் ஸ்ரீநிவாஸ் என்னும் நபர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார் இவரின் அடிப்படை சம்பளம் மாதம் 30,000 ரூபாய், போக்குவரத்து படியாக 5,000 ரூபாய் மற்றும் மருத்துவ படியாக 5,000 ரூபாய். இவரின் சேமநல நிதிஎவ்வளவு என்பதை இப்போது பார்போம்
பழைய முறை பழைய முறைப்படி ஸ்ரீநிவாஸின் மாத வருமானத்தில் சேமநல நிதி 30,000 ரூபாய்க்கு மட்டுமே கணக்கிடப்படும், ஆதாவது அவரின் அடிப்படை சம்பளத்தில் மட்டுமே கணக்கிடப்படும். இதனால் இவர் மாதம் 3,600 ரூபாய் வரை செலுத்த வேண்டும். இபிஎஃப் = 30,000*12/100= 3,600 ரூபாய்

புதிய முறை பழைய முறைப்படி ஸ்ரீநிவாஸின் மாத வருமானத்தில் சேமநல நிதி போக்குவரத்து படி மற்றும் மருத்துவ படியையும் சேர்த்து 40,000 ரூபாய்க்கு கணக்கிடப்படும். இதனால் இவர் மாதம் 4,800 ரூபாய் வரை செலுத்த வேண்டும். இபிஎஃப் = 40,000*12/100= 4,800 ரூபாய்

வாக்குப் பதிவு அலுவலர் I,II,III-இன் பணிகள்



2013-2014 ஆம் ஆண்டிற்க்கான சிறந்த பள்ளிகளுக்குண்டான கேடயம் வழங்கிட மாவட்டத்திற்கு-3 பள்ளிகள் தேர்ந்தெடுத்து அனுப்ப இயக்குனர் சுற்றறிக்கை




தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் வாக்களிக்க, உரிய படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டுகோள்

தேர்தல் பணியில் இருப்ப வர்கள் வாக்களிப்பதற்கு படிவம் 12 மற்றும் படிவம் 12ஏயில் விண்ணப் பிக்க வேண்டும் என்று சிதம்பரம் பாராளு மன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் சரவண வேல் ராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறி இருப்பதாவது

பணியாற்றும் தொகுதியில்தேர்தல் நாளன்று, தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், காவல்துறை அலுவலர்கள், தீயணைப்புத்துறை அலு வலர்கள், முன்னாள் ராணுவத் தினர், ஓய்வு பெற்ற காவலர்கள், ஊர்க் காவல் படையினர் மற்றும் ஓட்டு நர்கள் ஆகியோர் சிதம்பரம் பாராளு மன்றத் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் உள்ளவராக யிருப்பின் தேர்தலின்போது பணிபுரியும் சாவடியில் தேர்தல் பணி சான்றுடன் வாக்களிக்கலாம். இதற்கு இவர்கள் படிவம் 12ஏ–வில் விண்ணப்பிக்க வேண்டும்.வேறு தொகுதியில் தங்களது பெயர் வேறு பாராளுமன்ற தொகுதியின் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டிருந்தால் அஞ்சல் வாக்குச் சீட்டு மூலம் வாக்களிக்கலாம். இதற்கு இவர்கள் படிவம் 12–ல் விண் ணப்பித்தினை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவல ருக்கு அனுப்பி வைக்க வேண் டும்.படிவம் 12 மற்றும் 12ஏ ஆகியவற்றை அரியலூர் மாவட்ட கலெக்டர் அலு வலகத்தில் அறை எண்:114–ல் பெற்றுக் கொள்ளலாம். 

தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள விவரத்தினை அறிந்து கொள்வதற்கு வசதி யாக தேர்தல் பயிற்சி நடை பெறும் இடங்கள், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட கலெக்டர் அலு வல கத்தில் வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்பட்டுள் ளது.

வாக்காளர் பட்டிய லில் பெயர் இடம் பெற்றுள்ள விவரத்தை அறிந்து கொள்ள epic இடைவெளிவிட்டு வாக்காளர் அடையாள அட்டை எண்ணை டைப் செய்து என்ற குறுஞ்செய்தியை 94441 23456 எனும் கைபேசி எண்ணிற்கு அனுப்பி வாக்காளர் பெயர், பாகம் எண், வரிசை எண் போன்றவை அறிந்து கொள்ளலாம்.

படிவம் 12 மற்றும் 12ஏபூர்த்தி செய்து, வாக்காளர் பட்டியல் பாகம் எண், வரிசை எண் ஆகியவற்றை சரியாக குறிப் பிட்டும், சரியான வசிப்பிட முகவரியை பின் கோடு எண் ணுடன் தெளிவாக குறிப்பிட் டும், தேர்தல் பணி ஆணையின் நகலினையும் இணைத்து அஞ்சல் வாக்கு பிரிவு, அறை எண்:114, மாவட்ட கலெக்டர் அலுவலகம், அரியலூர் என்ற முகவரியில் வருகிற 17–ந் தேதி க்குள் நேரடியாக சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 10% அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை வெளியீடு

02/04/2014

ஒருங்கிணைந்த பி.எஸ்சி., பி.எட். படிப்பு: விண்ணப்பிக்க மே 2 கடைசி தேதி

மத்திய அரசு கல்வி நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எஸ்சி.,பி.எட். படிப்பு மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வு (சி.இ.இ.-2014) அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க மே 2-ஆம் தேதி கடைசி நாளாகும். மத்திய அரசின் மண்டல கல்வி நிறுவனங்கள் (ஆர்.ஐ.இ.) சார்பில் இந்த படிப்புகள் வழங்கப்படுகின்றன. ஆஜ்மிர், போபால், புவனேஸ்வர், மைசூர், ஷில்லாங் ஆகிய 5 இடங்களில் மத்திய கல்வியியல் நிறுவனம் அமைந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பள்ளிக் கல்விக்கான மேம்பாடு மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்.சி.இ.ஆர்.டி.) கீழ் இந்தக் கல்வி நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. இந்த 5 கல்வி நிறுவனங்களில் மட்டுமே ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எஸ்சி., பி.எட். படிப்பு வழங்கப்படுகிறது. பிசிக்கல் சயின்ஸ், பயோலஜிக்கல் சயின்ஸ் ஆகிய இரண்டு பிரிவுகளில் இந்தப் படிப்பு வழங்கப்படுகிறது.

இந்தப் படிப்பை முடிப்பவர்கள் கேந்திரிய வித்யா பவன், தில்லி பப்ளிக் பள்ளி உள்ளிட்ட மத்திய அரசுப் பள்ளிகளிலும், மாநில அரசுப் பள்ளிகளிலும் அறிவியல் ஆரிசிரியர்களாக பணியில் சேர முடியும். மேலும், எம்.எஸ்சி. மற்றும் எம்.எட். படிப்புகளையும் மேற்கொள்ள முடியும். பிளஸ்-2 தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுபவர்கள் இந்தப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். 2012, 2013-ஆம் ஆண்டுகளில் பிளஸ்-2 தேர்வை முடித்தவர்களும், 2014-ல் பொதுத் தேர்வு எழுதியிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். தமிழகம், புதுவை, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் மற்றும் லட்சத் தீவுகளைச் சேர்ந்த மாணவர்கள் மைசூரில் உள்ள ஆர்.ஐ.இ. கல்வி நிறுவனத்தில் மட்டுமே படிப்பில் சேர முடியும்.

இங்கு இந்த படிப்புகளில் மொத்தம் 60 இடங்கள் உள்ளன. நுழைவுத் தேர்வு மே 31-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு ஆன்-லைன் மூலமும், தபால் மூலமும் விண்ணப்பிக்கலாம். ஆன்-லைன் மூலம் பதிவு செய்து விண்ணப்பத்தைப் பெற ஏப்ரல் 25 கடைசி தேதியாகும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க மே 2 கடைசி தேதி. நுழைவுத் தேர்வு முடிவு ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும். சேர்க்கை ஜூலை 7-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறும். மேலும் விவரங்களை www.rieajmer.ac.in, www.ncert.nic.in ஆகிய இணையதளங்களில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.