திருக்குறள்

16/06/2013

2028ஆம் ஆண்டு இந்தியா சீனாவை முந்தும்... ஜனத்தொகையில்... - ஐநா வெளியிட்டுள்ள புதிய அறிக்கை

width="200"

கி.பி. 8-ம் நூற்றாண்டில் 50 லட்சம் மக்களும் 1805-ம் ஆண்டு 100 மக்கள் மட்டுமே உலகில் வாழ்ந்தனர். ஐக்கிய நாடுகள் சபையின் அறிவிப்பின்படி 2011-ம் ஆண்டில் உலக மக்கள் தொகை 700 கோடி என தெரிய வந்தது.

2100-ல் (இன்னும் 87 ஆண்டுகளில்) உலக மக்கள் தொகை ஆயிரத்து நூறு கோடியாக உயரும் என வாஷிங்டன் பல்கலைக்கழக புள்ளிவிவர அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த மக்கள் தொகை உயர்விற்கு ஏற்கனவே கணிக்கப்பட்டவாறு ஆப்பிரிக்க நாடுகளில் மக்கள் தொகை உற்பத்தி வீழ்ச்சியடையாததே காரணம் என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

தற்போது 110 கோடியாக உள்ள ஆப்பிரிக்க மக்கள் தொகை 2100-ம் ஆண்டு 420 கோடியாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதைப் போன்ற மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த ஆப்பிரிக்க பெண்களுக்கு கல்வியறிவை ஏற்படுத்த வேண்டும். குடும்ப கட்டுப்பாட்டை கட்டாயமாக்க வேண்டும்.

பெருகி வரும் மக்கள் தொகையினால் பெரிய நகரங்களில் மக்கள் நெருக்கம் அதிகரிக்கும். இதனால், சுற்றுச்சூழல் பாதிப்படையும் அபாயம் அதிகம் எனவும் அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.

2100-ம் ஆண்டில் உலக மக்கள் தொகையானது 900 கோடியில் இருந்து ஆயிரத்து 300 கோடிக்கு இடைப்பட்ட நிலையில் ஆயிரத்து நூறு கோடிக்கு நெருக்கமாக இருக்கும் என பேராசிரியர் ஆட்ரியன் ராப்ட்டெரி தலைமையிலான அந்த ஆய்வுக் குழுவின் அறிக்கை கூறுகிறது.

உலகின் அதிக ஜனத்தொகை கொண்ட நாடாக சீனாவை விஞ்சி 2028ஆம் ஆண்டு வாக்கில் இந்தியா உருவெடுக்கும் என ஐநா வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.

வருகிற 2028 ஆம் ஆண்டில் மக்கள் தொகை எண்ணிக்கையில், இந்தியா 145 கோடியை தொட்டு, சீனாவை முந்திவிடும் என்றும் ஐ.நா. சபை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உலக மக்கள் தொகை அடுத்தமாதம் 720 கோடியாக இருக்கும் என்றும், இன்னும் 12 ஆண்டுகளில் அதாவது 2025 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 810 கோடியாகவும், 2050 ஆம் ஆண்டு 960 கோடியாகவும் உயரும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வளர்ந்த நாடுகளில் உள்ள மக்கள் தொகை இந்த காலக்கட்டத்தில் பெரிய அளவில் உயராது.

தற்போதிருக்கும் மக்கள் தொகையை விட, 2050 ஆம் ஆண்டில், ஆப்ரிக்கா, இந்தியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் மக்கள் தொகை சற்று அதிகமாகவே இருக்கும் என்றும் அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment