திருக்குறள்

13/06/2013

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்றும் (13-06-2013)விசாரணைக்கு வரவில்லை

காவல்துறையினரால் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் வழக்கறிஞர்கள் இரண்டு நாள்(10,11-06-2013 )போராட்டம் நடத்தினர்.
சென்னை எம்.கே.பி. நகர் போலீஸ் நிலையத்தில் காவலர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 4 காவலர்கள், எழும்பூர் வழக்கறிஞர்கள் சங்கதலைவர் மைக்கேல், வழக்கறிஞர் ரஞ்சித் ஆகியோர் காயம் அடைந்தனர்.

இந்த நிலையில், வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றம், சைதாப்பேட்டை, எழும்பூர் நீதிமன்றங்களை சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

வழக்கறிஞர்களின் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டதோடு, நீதிமன்றத்திற்கு வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்றும் விசாரணைக்கு வரவில்லை

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு மே மாதம் நீதிமன்றம் விடுமுறைக்கு பின்பு கடந்த 10ம் தேதி விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. பின்னர் ஜூன் 12ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.ஆனால் இன்றும் விசாரணைக்கு வரவில்லை, ஆகையால் நாளையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை எனில் வருகிற திங்கட்கிழமை மனு ஒன்று தாக்கல் செய்து விசாரணைக்கு கொண்டுவரப்படும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




No comments:

Post a Comment