திருக்குறள்

20/10/2013

ஆசிரியர்கள் நேரம் தவறாமல் பணிக்கு வருகிறார்களா என்பதைக் கண்டறிய மாவட்டத்தில் 300-க்கும் அதிகமான அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் தினமும் காலை 9.10 மணிக்கு தொடங்கி மாலை 4.10 மணிக்கு முடிவடைகிறது. ஆனால் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் சிலர், காலையில் வகுப்புகள் தொடங்கிய பின்னர் பணிக்கு வந்துவிட்டு, மாலையில் வகுப்புகள் முடிவதற்கு முன்னதாகவே சென்று விடுவதாகவும் அதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் அரசுக்குப் புகார்கள் சென்றன.

இந்த புகார்களைத் தொடர்ந்து அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் வருகையைக் கண்காணிக்க மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
அதன் பேரில் அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தலைமையில் உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், வட்டார வளமைய ஆசிரியர்கள் அடங்கிய ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்தக் குழுவினர் எந்தெந்த நாளில் எந்தெந்தப் பள்ளிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்பது பற்றி குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு முந்தைய நாளில் செல்போன் எஸ்எம்எஸ் மூலம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிடுகிறார். 

அதன்படி அந்தக் குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளுக்கு காலையில் 9 மணிக்கு முன்னதாகவே செல்கிறார்கள், அப்போது விடுமுறைக் கடிதம் கொடுக்காத, காலை 9.10 மணிக்குள் பணிக்கு வராத ஆசிரியர்களுக்கும், பள்ளிக்கு வந்துவிட்டு மாலை 4.10 மணிக்கு முன்னதாகவே பள்ளியை விட்டுச் சென்ற ஆசிரியர்களுக்கும் வருகைப் பதிவேட்டில் பணிக்கு வரவில்லை என குறிப்பிடுகின்றனர். இந்த ஆய்வின் போது ஒரே ஆசிரியர் தொடர்ந்து 3 முறை பணிக்கு வராமல் இருந்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment