தீபாவளி பண்டிகையை விபத்தில்லாத பண்டிகையாக அனைவரும் கொண்டாட வேண்டும் என்று அரிய லூர் கலெக்டர் சரவணவேல்ராஜ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரியலூர் மாவட்டத் தில் தீபாவளி பண்டிகையை யாருக்கும் பாதிப்பின்றி, அனைவருக்கும் நன்மை பயக்கும் வகையில் கொண்டாட வேண்டும். வெடியினால் ஏற்படுத்தும் தீய விளைவுகளை உணர வேண்டும். குறிப்பாக, வெடிகளின் தாக்கத்தால் தற்காலிக மற்றும் நிலை யான செவிட்டுத்தன்மை ஏற்படும் அபாயம் உள் ளதை உணர வேண்டும். எனவே 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசையை ஏற்படுத்தும் வெடிகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். பட்டாசுகளை வெடிக் கும் போது கந்தக டை ஆக்சைடு, நைட்ரஜன், நைட்ரஜன் ஆக்ஸைடு, கன உலோக ஆக்ஸைடு, மிதக்கும் நுண் துகள்கள் ஆகியவை காற்றில் கலந்து சுற்றுச்சூழலை மாசுபடுத்தும். இதனால் கண் எரிச்சல், ஒவ்வாமை, சுவாசக் கோளாறு மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், உச்சநீதிமன்ற உத்தரவின்படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.அதேவேளையில் ஒளி மற்றும் வண்ணங்களை ஏற்படுத்தும் மத்தாப்புக்களை வெடிக்கலாம், இருப்பினும், போக்குவரத்து அதிகமுள்ள சாலைகள், நெரிசல் மிக்க இடங்களில் வெடிகள் வெடிக்கக் கூடாது. மேலும் மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள் போன்ற அமைதி யான சூழல் தேவைப்படும் பகுதிகளில் வெடிகளை வெடிக் கக் கூடாது. இதே போல, குடிசைகள் உள்ள பகுதிகளில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் உள்ள இடத்தில் ராக்கெட் வெடிகள் வெடிப்பதை முற் றிலும் தவிர்க்க வேண்டும். எனவே பட்டாசுகள் வெடிப்பதை குறைத்து அந்த பணத்தைக் கொண்டு ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கு உதவ லாம். ஒளித்திருநாளான தீபாவளி பண்டிகையை ஒலி மாசை ஏற்படுத்துகின்ற பட்டாசு களை தவிர்த்து வண்ணமிகு ஒளி ஏற்படுத்தும் பட்டாசுகளை குறைந்த அளவில் உபயோகித்து வழக்கமான உற்சாகத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி சுற்றுச்சூழலை பேணி காக்க வேண்டும். ஒளிப் பண்டிகையான தீபா வளியை ஒலி மாசற்ற பண்டிகையாக நாம் அணை வரும் கொண்டாட வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment